ரவீந்தரனுக்கு என்ன சொல்வது என்று புரியாத நிலை. மதுவை அனுப்ப கொஞ்சமும் மனமில்லை. ஆனால் அப்பா சொல்லும் காரணங்களை மறுக்கவும் முடியவில்லை. இப்போதுதான் அம்மா தேறி வருகிறாள், இந்த நிலையில் அது கெட்டுவிடக்கூடாது. காலையில் வரையிலும் அவனுக்கு மதுவந்தியைப் பற்றி நல்ல அபிப்ராயம்தான் என்றாலும் அவள் மனதை அறிந்துவிட்ட இப்போது அவளை பிரிவதை அவனால் ஏற்கமுடியவில்லை. ஒருவித தவிப்புகூட உண்டாயிற்று எனலாம்.
மகன் மனதுக்குள் போராடிக் கொண்டிருப்பது புரிந்தாலும் இப்போதைக்கு இது ஒன்றுதான் வழி. அவர் மனோகரி பற்றி சொன்ன காரணங்கள் எதுவும் உண்மை இல்லை. இப்போது அவள் மதுவைப் பார்த்துவிட்டால் எப்படி வந்தாள், என்ற காரண காரியங்களை அறியக்கூட விளையமாட்டாள். மாறாக மிகுந்த சந்தோஷமே அடைவாள். ஆனால் ரவி அவனது உயிரை காப்பாற்றியவள் என்ற பட்சாதாபத்தில் மதுவை துணையாய் ஏற்றுக் கொள்வதை அவர் விரும்பவில்லை. மதுவந்தி சொன்னது போல அவளுக்காகவே அவன் விரும்பி ஏற்கவேண்டும். அப்படியானால் தான் அந்த வாழ்க்கை இன்பமானதாக முழுமை பெறும். அதற்கு இந்த சிறுபிரிவு மிகவும் அவசியம் என்று பிறைசூடன் கருதினார்.
சந்திரமௌலியின் வீடு ஒன்றும் மகன் அறியாதது அல்லவே??
தந்தை போட்ட திட்டம் எதுவும் அறியாமல் ரவீந்தரன் பலத்த யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
மதுவந்திக்கு அழைப்புமணியின் ஓசையிலேயே விழிப்பு வந்துவிட்டிருந்தது. தந்தையும் மகனும் முதலில் உரையாடியது அவளது காதில் சரிவர விழவில்லை. மெல்ல எழுந்து அறைவாசலுக்கு வந்தவள் பிறைசூடன் மகனுக்கு சொன்ன பதிலைக் கேட்டு உள்ளூர முறுவல் விரிந்தது. "பலே கில்லாடிதான் இந்த அங்கிள் என்று தனக்குள்ளாக மெச்சிக் கொண்டாள் அவள்.
இந்த நிலையில் அவளுமே அங்கே இருக்க விரும்பவில்லை. உதவிக்காக வந்தவளுக்கு மற்றவர்கள் ஊழியம் செய்வதில் உடன் பாடும் இல்லை. அதிலும் ரவீந்தரனின் கை அணைப்பில் இருந்து விட்டபிறகோ அவனை நேராய் பார்க்ககூட முடியாது. நினைக்கையிலேயே முகம் சிவந்தது. ஒருவகையில் மானசீகமாய் மருதமுத்துவிற்கு அவள் நன்றி சொன்னாள் எனலாம். அவனால் அல்லவா அவள் மனதை ரவீந்தரன் அறியச் செய்துவிட்டாள். சும்மா என்றால் அவள் எப்போதும் அவளாக சொல்லிருக்க மாட்டாள் என்பது நிச்சயம்.
அதனாலேயே அவன் மீது மெய்யான குற்றத்தை அவள் சுமத்தாமல் முறைப்பையன் என்பதால் அவளை அடைவதற்காக கடத்தி வந்ததாக கூறிவிட்டிருந்தாள்.
பிறைசூடன் அறை நோக்கி வருவதை உணர்ந்தவளாய் கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள்.
"என்னம்மா மது? இப்போது வலி பரவாயில்லையா? என்று கேட்டபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
"பரவாயில்லை அங்கிள். ஆன்ட்டி எப்படி இருக்காங்க? அக்காவும் பாப்பாவும் நல்லா இருக்காங்கள்ல??என்று வினவினாள்.
இதுதான் மதுவந்தி என்று எண்ணிக் கொண்டார். "எல்லாரும் நலம்தான் மதும்மா" என்றுவர் "ஆமாம் நீ என்ன காரியம் செய்துவிட்டாய்?? உனக்கு ஏதேனும் ஆகியிருந்தால் நாங்கள் என்னம்மா செய்வது?? என்று வருத்தத்துடன் கேட்டார்.
பதில் சொல்லாமல் அவள் முறுவலித்தபோது அவர்களுக்கும் தனக்கும் சேர்த்து அருந்த சூடான பானத்துடன் வந்தான் ரவீந்தரன். அவனைப் பார்ப்பதை தவிர்த்தபடி நன்றி சொல்லி எடுத்துக் கொண்டாள் மதுவந்தி.
"பயப்படாதேம்மா ரவி நல்லாவே காபி ,டீ எல்லாம் தயாரிப்பான் தைரியமாய் குடிக்கலாம்" என்று அவருக்கானதை எடுத்துக் கொள்ள கட்டிலில் சற்று இடைவேளை விட்டு அமர்ந்தான்.
"ஆனால் அப்பா மதுவந்தி அளவிற்கு என்னால் செய்ய முடியாது. அப்படியே அம்மாவைப் போலவே கைபக்குவம் அக்காவிற்குகூட வரவில்லை. நீங்கள் சாப்பிட்டுப் பார்த்தால் நிச்சயம் சொல்வீர்கள் அப்பா. ஆனால் நீங்கள் கொடுத்து வைக்கவில்லை. கையில் பெரிய வீராங்கனைப் போல காயத்தை வாங்கிக் கொண்டு இருக்கிறாளே? சிறு கேலியுடனும் வருத்தத்துடனும் ரவீந்தரன் சொல்ல பிறைசூடனுக்கு மகன் வருந்துகிறான் என்பது புரிந்தது.
மதுவந்திக்கும் புரிந்தது. மனதுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. உதட்டை கடித்தவாறு மௌனமாய் இருந்தாள்.
"அதற்கென்ன ரவி காயம் குணமாகட்டும் நாம எல்லாருமா போய் மதுவோட சமையலை ஒரு கை பார்த்துட்டு வந்துடலாம் என்றவர், சரி நீ எங்க ரெண்டு பேருக்கும் அடுத்த ப்ளைட் எப்போது என்று பார்த்து டிக்கட் புக் பண்ணிவிடுப்பா. நீ இன்னும் பாப்பாவை பார்க்கலையே அதனால் ஒரு நடை ஹாஸ்பிடலுக்கு போய் பார்த்துவிடு. மாப்பிள்ளையை கொஞ்சம் வீட்டுக்கு அனுப்பி வைச்சிடு, என்றார் தந்தை.
அரை மனதாய் ரவீந்தரன் மதுவந்தியை நோக்கியபடி கிளம்ப அவளோ பார்வையை தரையில் பதித்திருந்தாள். பிறைசூடனோ கண்டும் காணாதது போல "நீ வாம்மா உன் ட்ரஸ் பேக் பண்ணிடலாம் என்று பெட்டியை எடுத்து வைத்தார்.
அவளை மறுபடியும் பார்க்க இயலாமல் போய்விடும் என்ற எண்ணமே ரவீந்தரனுக்கு கசந்தது. அப்பாவிடம் இதற்கு மேல் அவனால் இப்போது உறுதியாக சொல்ல ஒரு பதிலும் இல்லாத நிலையில் பேச முடியவில்லை. அவள் மேல் அவனுக்கு உண்டானது நேசமா? அனுதாபமா? என்று அவனுக்கு சிறு ஐயம். ஆகவே அதை ஐயம் திரிபர அறிவது அவசியமாகப் பட்டது. மனதை திடப்படுத்தியவாறு கிளம்பிச்சென்றான்.
அன்று மாலையில் பிறைசூடனுடன் மதுவந்தி கொடைக்கானல் புறப்பட்டபோது வழியனுப்ப ரவீந்தரன் சென்றிருந்தான்.
இப்போது சுத்தமான தமிழ் பெண்ணாய் அவள் உடை அணிந்திருந்தாள். நீண்ட கூந்தல் அசைந்தாட அவள் நடந்து செல்வதைப் பார்த்திருந்தவனுக்கு அன்று ஹோட்டலில் பார்த்த பெண்ணின் தோற்றம் கண்முன் வர அதே சமயம் மதுவந்தி திரும்பி அவனைப் பார்த்தாள்.
கை அசைத்து விடை கொடுத்துவிட்டு வீடு திரும்பும் வழியில் யோசனையாய் இருந்தான். கொடைக்கானல் சென்றது முதல் நடந்தவற்றை எல்லாமும் நினைத்துப் பார்த்தான். ஏதேதோ கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் மனம் பரபரத்தது.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் சுமதி மற்றும் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வருவதும் அதற்காக வீட்டை தயார் செய்வதுமாக கழிந்தது. மனோகரிக்கு மதுவிடம் பேச வேண்டும் என்று ஆவல். ஆனால் பிறைசூடன் நடந்தவற்றை அவளிடம் மெல்ல எடுத்து சொல்லி புரிய வைத்து.. இப்போதைக்கு மதுவந்தியை அவள் அறிந்ததாக மகன் முன்பாக காட்டிக்கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டார். அவளுக்கும் கணவரின் கூற்று சரி என்று பட்டது. அது தவிர, பேரனையும் பெண்ணையும் கவனிக்கவே நேரம். போதவில்லை.
ரவீந்தரனுக்கோ மதுவந்தியுடன் செல்போனிலும் குறுஞ்செய்தியிலுமாக அவளது காயம் பற்றி கேட்க ஆரம்பித்து தொடர்பை வைத்திருந்தாலும் அவளை நேரில் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகிக் கொண்டிருக்க... அலுவலகத்தில் நகர முடியாத அளவிற்கு வேலைப் பளுவில் அதை தள்ளிப் போட வேண்டிய நிர்பந்தம்.
நிகிலனுக்கு மகனைவிட்டு விலகவே மனமில்லை அழகாய் சிணுங்குவதும் சிரிப்பதும். குட்டி கைகளையும் கால்களையும் அசைத்தபடி பார்ப்பவரை வசீகரித்தான் குழந்தை.
பிறைசூடன் ரகசியமாய் கொடைக்கானலில் குடிபெயர ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.