*அத்தியாயம் – 32*
சாரகேஷுடன் காரில் கிளம்பிய மலர்வதனிக்கு அத்தான் சீக்கிரம் தேறிவிடுவான் என்று நினைக்கையில் நிம்மதியாக இருந்தது. அத்தோடு
உள்ளூர அவளை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது. முன்தினம் சும்மாவே மகனைக் காணவில்லை என்ற தவிப்பும், மாமியார் அழைத்து வந்திருந்தவர்கள், கல்யாண பேச்சை எடுத்து விடுவார்களோ என்ற பதற்றமுமாக இருந்த அத்தைக்கு துணையாக இருக்க வேண்டிய நேரத்தில், அந்த நர்ஸ் போன் செய்ததும் மாமாவை மட்டுமாக அனுப்பாமல், கண்ணும் மனமும் ஒருசேர கலங்கியதோடு அவனை உடனே பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் உடன் கிளம்பிவிட்டாள், பாட்டியோடு சேர்ந்து அவளை ஒதுக்கி வைத்தவன் என்று அவன் மீது இருந்த அந்த கோபம்,வருத்தம் எல்லாம் போன இடம் தெரியவில்லை. இத்தனை காலமாக இல்லாமல் இப்போது என்ன அத்தான் மேலே திடீர் அக்கறை? ஒருவேளை அவனுக்கு ஒன்று என்றால் அத்தையின் நிலை என்னவாகும் என்ற கவலையில் அப்படி துடித்துக்கொண்டு கிளம்பி விட்டாள் போலும்? மற்றபடி அத்தான் மேல் தனிப்பட்ட முறையில் அவளுக்கு பெரிதாக எந்த பற்றும் இல்லை, என்று எண்ணும் போதே, மனம் மருத்துவமனைக்கு தாவியது.
ஏனோ அந்த ஜாஸ்மின் அத்தானை நன்றாக கவனித்துக் கொள்ள மாட்டாள் என்று தோன்றியது. அதனால்தான் அவளை அத்தானோடு விட்டு வர அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அந்தப் பெண் வந்தது முதல் அவனோடு தனிமையில் சிரித்துப் பேசி இருந்ததை பார்க்கவில்லை. அன்றைக்குகூட அத்தையை வீட்டிற்கு அழைத்து வந்தபோது மகாராணி காரில் ஏரிப்போய் விட்டாளே! அவ்வளவு ஏன் முன்தினம் அவனை கட்டுக்களுடன் பார்த்தபிறகும் பதற்றமோ கவலையோ படக்காணோம், அவள் பாட்டுக்கு வீட்டிற்கு கிளம்பியதும் இல்லாமல் இவளுக்கு அல்லவா ஆறுதல் சொல்லிவிட்டு போனாள். இத்தனைக்கும் அவள் யாரோ அல்ல அத்தானுக்கு வருங்கால மனைவி. வாழ்க்கை துணையாகப் போகிறவனை அந்த நிலையில் பார்க்கிற எந்த பெண்ணும் இப்படி செய்ய மாட்டாள்... அதை, நர்ஸ் பணியில் சேர்ந்தது முதல் அவ்வப்போது அவளே கண்கூடாக பார்த்திருக்கிறாள், அப்படியானால்...அத்தான் இந்த பெண்ணின் குணத்தை அறியாமல் அழகில் மயங்கி ஏமாந்து போய் விட்டாரோ என்று தோன்ற, வேதனையோடு, ஒருவித தவிப்பும், உண்டாயிற்று. அப்படி ஒருத்தியிடம் அத்தானை விட்டு வந்ததை நினைத்து தன்னையே நொந்து கொண்டாள் மலர்வதனி.
"சிஸ்டர், என்ற சாரகேஷ் சற்று உரத்த குரலில் அழைக்கவும் அவள் திடுக்கிட்டு நிகழ்விற்கு திரும்பி, "என்னாச்சு? என்றாள் சற்று பதற்றத்துடன்.
"ஒன்றும் ஆகவில்லை சிஸ்டர், இரண்டு முறை அழைத்தும் உங்களிடமிருந்து பதிலே காணோம். அதனால் சற்று சத்தமாக அழைத்தேன் என்றவன், தொடர்ந்து,"உங்கள் வீடு இருக்கும் தெருமுனை வந்துவிட்டது. வீட்டிலேயே இறக்கி விடவா? என்றதும் அவசரமாக சுற்றுப்புறத்தை பார்த்துவிட்டு,,"அந்த பூங்கா அருகில் இறக்கி விடுங்க. நான் போய்க் கொள்கிறேன், ஐம் வெரி ஸாரி, அத்தான் ஞாபகமாகவே இருந்ததால் நீங்கள் அழைத்ததை கவனிக்கவில்லை.. அது.. வந்து.. அத்.. அவர் சொன்ன பேச்சு கேட்க மாட்டார், ஜாஸ்மினைக்கூட ஏய்த்துவிடுவாரோ என்று தோன்றுகிறது. அதனால் நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? என்றாள் மலர்வதனி.
அவள் சொன்னது போலவே பூங்காவை நோக்கி வண்டியை செலுத்திய சாரகேஷ்,"ஷ்யூர் சிஸ்டர், என்ன செய்யட்டும்?"என்றான்.
"வந்து....முடிந்தால் அத்.. அவரை நீங்களும் நடுவில் போய் கொஞ்சம் பார்த்துக் கொள்கிறீர்களா ?என்றவள் அவசரமாக நீங்... நீங்கள் அவரோட நண்பர் என்பதால் உங்கள் பேச்சை கேட்பார் என்று தோன்றியது, அதனால் தான், நான் எப்படியும் உடனே மருத்துவமனைக்கு செல்ல முடியாது, அதனால் தான் கேட்டேன்"என்றாள். அன்றைக்கு தான் சில நிமிடங்களுக்கு முன்னதாக சந்தித்த ஒருவனிடம் அவளா அப்படி கேட்டாள் என்று உள்ளூர, ஒரு கணம் திகைத்தாலும், அவளது அத்தான் நன்றாக இருந்தால் தான் அத்தையும் நிம்மதியாக சந்தோஷமாக இருப்பாள். அதற்காக அவள் யாரிடமும் உதவி கேட்க தயங்கமாட்டாள் என்று தன்னை சமாதானம் செய்து கொண்டாள் மலர்வதனி.
சாரகேஷ் கூட அவள் அப்படி ஒரு விண்ணப்பத்தை வைப்பாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிரஞ்சன் சொன்ன அளவில், மலர்வதனிக்கு அத்தான் மீது வெறுப்பு இல்லை. ஏதோ ஒருவிதமான தார்மீக கோபம் தான் என்று கணித்திருந்தான். அது முற்றிலும் சரிதான் என்று தோன்றியது, அத்துடன் நிரஞ்சனை அத்தான் என்று குறிப்பிடுவதை அவள் தவிர்த்ததையும் கவனிக்கவே செய்தான். அவனது பதிலுக்கு காத்திருந்தவளிடம்,"ஷ்யூர் சிஸ்டர், நான் இப்போது அங்கே போய் உங்கள் அத்தானை பார்த்துவிட்டு,மாமா வந்ததும் ஜாஸ்மின்னை அழைத்துக்கொண்டு வீடு பார்க்க கிளம்புகிறேன், என்றவன்,"நிரஞ்சன் ரொம்ப அதிர்ஷ்டசாலி சிஸ்டர்" என்றுவிட்டு போனான் சாரகேஷ்.
மலர்வதனிக்கு அவன் எதற்காக அப்படி சொன்னான் என்று ஒன்றும் புரியாதபோதும், அவன் உங்கள் அத்தான் என்று குறிப்பிட்டானே, நிரஞ்சன் உறவு முறைப்படி தான் அத்தானே தவிர அவனிடம் அவளுக்கு வேறு எந்த உரிமையும் இல்லையே? அன்றைக்கு சந்திரா ஆன்ட்டி சொன்னது போல அந்த ஜாஸ்மினோ அல்லது பாட்டி வரவழைத்திருக்கும் பெண்ணோ, வேறு ஒருத்தி, அந்த வீட்டிற்கு மருமகளாக வந்துவிட்டால் அவளது நிலை என்ன? இத்தனை காலம் போல அவள் ஒற்றை அறையில் இருந்தாலும், வீட்டினுள் இருந்தாலும் வருகிறவளின் பார்வையில் சற்று கீழே தானே அவளது நிலை? கையில் தொழில் இருக்கிறது. ஆனால் அத்தைக்கு சத்தியத்தை செய்து தந்துவிட்டு அதை எப்படி மீறுவது? என்று யோசித்தபடி வீட்டினுள் நுழைந்தபோது கூடத்தில் பேச்சு குரல் கேட்டு வாசல்புறமாக நின்றுவிட்டாள்.
"சித்தி, நாங்க மருமகனை பார்த்துவிட்டு போகலாம்னு வந்த நேரத்தில் அவன் உல்லாச பயணம் போய்விட்டான் என்றால் என்னால நம்பவே முடியவில்லை, அவன் அப்படி போகிறவனா? அதுவும் மாத்து துணி கூட எடுத்துக்காம எப்படி போவான் சொல்லுங்க?எனக்கென்னவோ அண்ணி மேல தான் சந்தேகம்"என்று காந்திமதியிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள் செந்திரு.
ஒட்டு கேட்பது தவறு தான், என்றாலும் அப்படி அவளது அத்தை என்ன செய்து விட்டாள் என்று தெரிந்து கொள்ள நினைத்தாள் மலர்வதனி.
"நீ என்ன சொல்றே செந்திரு? வடிவு அப்படி என்ன செய்திருப்பாள்னு நினைக்கிறே?என்றாள் காந்திமதி குழப்பத்துடன்.
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சற்று குரலை தணித்துக் கொண்டு அந்த செந்திரு தொடர்ந்தாள்,"நாங்க வந்திருக்கிறதை சொல்லி அவனை வெளியூருக்கு போகச் சொன்னதே அண்ணியாகத்தான் இருக்கணும் சித்தி. ஏன் சொல்றேன்னா, அவன் சாப்பிட வருவான் என்று அவங்க தான் சொன்னாங்க. அப்புறம் சாயந்திரம் கூடப் போனவள் வந்துதானே விவரத்தை சொன்னாள். சரி எல்லாம் போகட்டும் வெளியூர் போறவன் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லாத போவானா? அங்கதான் எனக்கு சந்தேகமே வந்துச்சு சித்தி, என்றதும்
அதை கேட்டுக் கொண்டிருந்த மலர்வதனிக்கு, அவளது அத்தையை பற்றி அபாண்டமாக பேசுகிறாளே இந்த பெண்மணி, என்று சுறுசுறுவென்று கோபம் கொப்பளிக்க,
"ஆன்ட்டி என் அத்தையைப் பற்றி எதுக்கு பாட்டிக்கிட்டே இப்படி அநியாயமாக பொய் சொல்றீங்க? என்றாள். அன்றுவரை அவள் உயர்ந்த குரலில் பேசியது கிடையாது. சொல்லப்போனால் என்ன பேசினாலும் காதே கேளாதது போல இருந்து விடுகிறவள். இன்றைக்கு அவள் அப்படி பேசவும் காந்திமதிக்கு கோபம் உண்டானது, ஆனால் அவள் வாயை திறப்பதற்கு முன்னதாக, மருத்துவமனைக்கு செல்ல கிளம்பி படிகளில் இறங்கிக் கொண்டிருந்த சத்யமூர்த்தியின் காதிலும் அவளது பேச்சு விழ அவசரமாக அங்கே வந்துவிட்டார்.
"என்னம்மா மலர் ? என்னாச்சு? என்றார்.
அவரைக் கண்டதும், அருகில் சென்று,"பாருங்க மாமா, அத்தையை பத்தி இல்லாததை எல்லாம் சொல்றாங்க, இந்த ஆன்ட்டி, அத்தானை வேணும்னு வெளியூருக்கு அனுப்பினது அத்தைதானாம், என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் அழுகை வந்துவிட, சத்யமூர்த்திக்கு கொஞ்சம் தர்மசங்கடமான நிலைதான். ஆனால்,. சின்னக் குழந்தை போல மலர்வதனி புகார் செய்து விட்டு அழுவதை காண ஒரு புறம் சிரிப்பு வந்தது, அதே நேரம் காந்திமதியின் முகத்தில் தெரிந்த கோபத்தையும் உணர்ந்தவராக, "என்ன செந்திரு இதெல்லாம்? வடிவைப் பற்றி உனக்கு தெரியாதா என்ன? உன் அண்ணி இப்போது தான் உயிர் தப்பி வந்திருக்கிறாள். அவள் காதில் விழுந்தால் தாங்கமாட்டாள். அன்றைக்கு மட்டும் மலர் சரியான சமயத்தில் அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போயிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்று என்னால் நினைக்கக்கூட முடியவில்லை. இது உன்னோட பிறந்த வீடு, வந்தால், நாலு நாட்கள், என்ன பத்து நாட்கள்கூட இருந்து விருந்தாடிட்டு போ, அதைவிட்டு விட்டு குடும்பத்திலே குழப்பத்தை உண்டு பண்ற வேலை எல்லாம் வச்சுக்காதே"என்றவர்,"மலர் நீ ராத்திரி பூராவும் கண் முழிச்சிருப்பே, போய் சாப்பிட்டு கொஞ்சம் தூங்குமா"என்று வாசல் பக்கம் நடந்துவிட, மலர்வதனி மாடிக்கு விரைந்தாள்.
அப்போது உள்ளறையில் இருந்து காபி கோப்பையுடன் வந்த வடிவுக்கரசி, "என்னங்க காபி கேட்டீங்க, போட்டுவிட்டு வர்றதுக்குள்ளே கிளம்பறீங்க, அப்படி. என்னங்க அவசரம்? என்றாள்.
"கேட்டேன் தான் வடிவு, போகிற இடத்தில் பார்த்துக்கிறேன். இப்பவே ரொம்ப தாமதமாகிட்டது. அதை மலருக்கு கொடு, நான் போய் வர்றேன், மதியம் சாப்பாடுக்கு வரமாட்டேன்" என்று நில்லாமலே பதிலளித்துவிட்டு போய்விட்டார் சத்யமூர்த்தி.
வடிவுக்கரசிக்கு சற்று முன் அங்கே நடந்த சம்பாஷணை எதுவும் தெரியாது. மலர் வந்து விட்டாள் என்றதில் மகிழ்ந்தவளாக கணவன் சொன்னதை செய்ய மாடிப்படிகளில் ஏறினாள்,
காந்திமதி அது எதையும் கருத்தில் வாங்காமல் சிலகணங்கள் வாயடைத்துப் போய் அமர்ந்து இருந்தாள். மலர்வதனி உரிமையோடு மாமா என்று அழைத்ததையும், நிரஞ்சனை அத்தான் என்று குறிப்பிட்டதையும் அவளை பலமாக தாக்கியிருந்தது. அவளது கனவு கோட்டை எல்லாம் சரிவது போல ஒரு பிரம்மை உண்டாயிற்று.
"பார்த்தீர்களா சித்தி, அண்ணன் என்னைப் போய் குடும்பத்தில் கலகம் பண்றவள்னு சொல்றாரு? எனக்கு இதெல்லாம் தேவையா? என் பெண்ணுக்கு நிரஞ்சனை கட்டி வைக்கிறேன்னு சொல்லி நீங்கள் கூப்பிட்டதாலே தானே இங்கே வந்தோம் சித்தி? என்று அழுகைக் குரலில் சிந்திரு சொல்ல... மேலே ஏறிக்கொண்டு இருந்த வடிவுக்கரசியின் காதுகளில் தெளிவாக விழுந்தது. முதலில் செந்திரு சொன்னது அவளுக்கு புரியவில்லை. அடுத்ததாக சொன்னதை கேட்டு ஒருகணம் அதிர்ந்த போதும், நல்ல காலமாக மகன் வெளியூர் கிளம்பிவிட்டான் என்று நிம்மதியடைந்தவளாக மலர்வதனியின் அறைக்குள் சென்றாள்.
அங்கே,"மாமா இப்போது தான் கிளம்பினார்"என்று மலர்வதனி சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டபடி,
"போனில் யாரு மலர்? மாமாவை பத்தி என்ன கேட்கிறாங்க? என்ற அத்தையின் குரலில் திடுக்கிட்டு நின்றாள் அவள்.
*அத்தியாயம் – 33*
செந்திரு சொன்னது எதுவும் காந்திமதியின் கருத்தில் படவேயில்லை. ஆனாலும் அவளுக்கு இப்போது நிறைய யோசிக்க வேண்டி இருந்ததால்,"செந்திரு, உன் அண்ணன் என்ன சொன்னாலும், அதெல்லாம் பெருசா நினைக்காதே, நான் உன் கிட்டே சொன்னதை செய்யத்தான் போறேன். நீ போய் மூஞ்சியை கழுவிட்டு வா"என்று அவளை உள்ளே அனுப்பி வைத்தாள்.
மலர்வதனி, அத்தனை உரிமையோடு பேசியதை கேட்ட பிறகு, காந்திமதி உண்மையில் உள்ளூர அதிர்ந்தே போனாள். எந்த காரியம் நடந்து விடக்கூடாது என்று நினைத்து நினைத்திருந்தாளோ, அது இப்போது நடந்து விடுமோ என்று அச்சம் உண்டாயிற்று. அதனால் எப்படி மலரை அந்த வீட்டில் இருந்து அப்புறப்
படுத்துவது என்று சிந்திக்கலானாள். அதுவும் பேரன் திரும்பி வருவதற்கு முன் செய்துவிட வேண்டும் என்று எண்ணினாள். இன்னும் ஒருநாள் அவகாசம் இருப்பதால் அது எளிதாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்று தான் அவளுக்கு புரியவில்லை. அவளாக வீட்டை விட்டுப் போகச் செய்ய வேண்டும். அது யாருக்கும் தெரியவும் கூடாது முக்கியமாக பேரனுக்கோ மகனுக்கோ தெரியவே கூடாது என்று நினைத்தாள். முன்பெல்லாம் அவளை எவ்வளவு வருந்த பேசினாலும் மலர்,கேட்காதது போலவே பாவித்து கடந்துவிடுவாள். இப்போது அவளது அத்தையை பேசவும் அவளுக்கு ரோஷம் வந்து இருக்கிறது. இதையே சாதமாக பயன்படுத்தி அனுப்பி விடலாம் என்று முடிவு செய்தாள். எப்படியும் அவள் இரவு பணிக்குச் செல்வதற்கு முன்பாக அதை செயல்படுத்த வேண்டும். அப்போது வீட்டில் வடிவுக்கரசி இல்லாமல் செய்ய வேண்டும், என்ன செய்யலாம் என்று நினைத்தபோது, பேரன் நல்லபடியாக வந்ததும், கோவிலுக்கு வந்து காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் வந்தது முதல் எதுவும் சரியாக இல்லை. அதனால் இது நினைவுக்கு வரவேயில்லை. வேண்டுதல் படி அவன் வந்து சேர்ந்துவிட்டானே, ஆகவே செந்திருவுடன் கோவிலுக்கு போய் காணிக்கையை செலுத்தி வர சொன்னால் வடிவுக்கரசி மறுக்காமல் சென்று வருவாள். ஆனால் அதை மாமியாராக அவள் சொன்னால், மருமகளுக்கு சந்தேகம் வரக்கூடும். அதுவே கணவன் சொன்னால் கேள்வியே கேட்காமல் கிளம்பி விடுவாள் என்று தோன்ற சத்யமூர்த்தியை கைப்பேசியில் அழைத்தாள்.
☆☆☆
மலர்வதனியின் அறைக்குள் நுழைந்த வடிவுக்கரசி, அவள் தன் கணவனைப் பற்றி கைப்பேசியில் குறிப்பிட்டதை கேட்டுவிட்டு விசாரிக்க, செய்வதறியாது திகைத்தாள். எதிர்முனையில் இருந்த நிரஞ்சனுக்கு அவள் பதில் சொல்ல முடியாமல் திணறுவது புரிய, ஒரு புறம் சிரிப்பு வந்தாலும் அவளை அம்மாவிடம் இருந்து காப்பாற்ற,"வதனி, பயப்படாமல் சொல்லு, நான்தான் என்று, அம்மா போனுக்கு கால் போகாததால் உனக்கு பண்ணினேன் என்று சொல், சீக்கிரம்", என்றான்.
நிரஞ்சன் சொன்னதை அப்படியே மலர்வதனி ஒப்பிக்க, கொஞ்சமும் சந்தேகப்படாமல்,"ரஞ்சிதானா?
நீ இந்த காபி ஆறுவதற்குள் குடித்துவிடு, போனை என்கிட்டே கொடு நான் பேசுகிறேன்,என்று வாங்கிப் பேச,தப்பித்தோம் என்று அவள் ஆசுவாசத்துடன் சிட்டவுட் பக்கமாக சென்றாள்.
பொதுவான விசாரிப்புகள் முடிந்ததும்,"ரஞ்சி, என்று மாமியாரைப் பற்றி சொல்ல நினைத்தபோது எதிர்முனையில்,"சார் ஒரு இன்ஜெக்ஷன் போடனும் என்ற ஒரு பெண் குரல் கேட்டு அதிர்ந்தவளாக, "ரஞ்சி, நீ எங்கே இருக்கிறே? உனக்கு என்னாச்சு? என்று பதறினாள் வடிவுக்கரசி.
"அடடா,அம்மா எனக்கு ஒன்றும் இல்லை. இங்கே டிவியில் படம் ஓடிக்கிட்டு இருக்கு. என்றவன்,"அம்மா அந்த வண்டி வதனிக்கு பிடிச்சிருக்கிறதா? என்று கேட்டான்.
ஆனால் அவளுக்கு மனம் சமாதானம் ஆகவில்லை. என்னவோ என்று மனம் தவித்தது, மகன் வேண்டும் என்றே பேச்சை மாற்றுகிறான் என்று தோன்ற," வண்டி விஷயம் இருக்கட்டும் ரஞ்சி. அந்த குரல் டிவியில் சொன்னது போல தெரியவில்லையே ரஞ்சிமா. எதையாவது என்கிட்டே மறைக்கிறியா? என்றாள் கலக்கத்துடன்.
"அதெல்லாம் இல்லை அம்மா. நீங்கள் பயப்படறாப்ல எதுவும் இல்லை, என்றபோது, உள்ளே வந்தான் சாரகேஷ். அவனிடம் ஜாஸ்மின் நிலைமையை விளக்கவும்,
"அட என்னப்பா இன்னும் கிளம்பவில்லையா? எல்லோரும் அங்கே உனக்காக வெயிட்டிங். கேர்ள் பிரண்டுகிட்டே அப்புறமாக பேசலாம்ப்பா. சீக்கிரம், சீக்கிரம் நாம் எல்லாம் இப்படி ஒன்றாக இருந்து எவ்வளவு நாளாச்சு"
"கிளம்பிவிட்டேன்பா, அம்மாவிடம் பேசினால் அவர்கள் கொஞ்சம் கவலையில்லாமல் இருப்பார்களே என்று பேசிவிட்டு கிளம்ப நினைத்தேன். அதற்குள் நீயே வந்து விட்டாய், என்ற நிரஞ்சன்,"வெளியே கிளம்பிக் கொண்டிருக்கிறோம் அம்மா. நான் திரும்பி வந்ததும் ராத்திரியில் கூப்பிடுகிறேன்" என்று தொடர்பை துண்டித்துவிட்டான்.
மகனின் குரலில் ஏதும் வித்தியாசம் தெரியவில்லை என்றாலும் கண்ணால் அவனை ஒருமுறை பார்க்கும் வரை இந்த சஞ்சலம் தீராது என்று தோன்றியது. உண்மையில் வெளியூரில் இருந்தால் பார்க்க முடியாது தான். உள்ளூரிலும்தான் எங்கே இருந்தாலும் எப்படி பார்க்க இயலும்? என்று யோசித்தவளுக்கு முன்பு ஒருமுறை மாமியாரும் கணவரும் மகனுடன் கைப்பேசியில் நேருக்கு நேராகப் பேசியதை பார்த்தது நினைவு வர, பரபரப்புடன் மருமகளிடம் சென்றாள். "மலர், உன்கிட்ட ஒருவிஷயம் கேட்கணும்"என்றதும்,
காபியை அருந்தியவாறே கவனத்தை அத்தையிடம் வைத்திருந்த மலர்வதனிக்கு அத்தான் மாட்டிக் கொண்டு, அதை எப்படியோ சமாளித்துவிட்டான் என்று புரிந்தது. ஆனால் திடுமென அவளிடம் ஏதோ கேட்க வேண்டும் என்றதும், அவளது உள்ளுணர்வு ஏதோ அபாயம் என்று எச்சரிக்க, இல்லாத நிதானத்தை இருப்பதாக காட்டியபடி,"அத்தான் என்ன சொன்னார் அத்தை? ஏதோ வண்டினு சொன்னீர்களே? என்று பேச்சை திசை திருப்ப முயன்றாள்.
"வண்டியா என்று ஒருகணம் திகைத்துவிட்டு,"ஓ! அதுவா உனக்காக வண்டி வாங்கியிருக்கிறான். அது உனக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டான், என்றவளின் பேச்சில் குறுக்கிட்டு, "எனக்கா அத்தை? வீட்டிற்கு வந்துவிட்டதா? உற்சாகமாக வினவினாள். அத்தை அத்தானை பற்றி கேட்டு அவள் எதையும் உளறக்கூடாது என்பதற்காக அப்படி நடித்தாள் மலர்.
"ஏய், அதை விடுடி, நான் எவ்வளவு முக்கியமான விஷயம் பேச வந்திருக்கிறேன். உன் அத்தான் என்னிடம் மறைக்கப் பார்க்கிறான்டி, அதை கண்டுபிடிக்கணும். அதற்காக நீ எனக்கு ஒரு உதவி செய்கிறாயா? என்றாள்.
"அடடா, என்ன அத்தை இது உதவி அது இதென்று பெரிய வார்த்தை சொல்கிறீர்கள். மலர் இதை செய், என்றால் செய்துவிட்டு போகிறேன் என்றவள்,"அப்படி என்ன மறைக்கப் பார்க்கிறார் அத்தான்? என்றாள்.
"அப்படித்தான் தோணுதுடி. எனக்கு உடனே உன் அத்தானை பார்க்க வேண்டும், அவன் போன இடத்தில் ஏதும் ஆகிவிட்டதா? அல்லது இங்கேயே நேற்று அவனுக்கு ஏதும் ஆகியதை மறைக்கத்தான் வெளியூர் செல்வதாக அந்தப் பெண்ணிடம் சொல்லி அனுப்பினானோ? ஏன் சொல்றேன்னா, அவள் வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக படபடவென்று பேசினாள். நான் கூட அப்போது அதை நிஜம் என்று தான் நம்பிவிட்டேன். இப்போது நினைத்து பார்த்தால் அதெல்லாம் பொய்யோ என்று தோன்றுகிறது. இன்றைக்கு காலையில் கூட பலகாரம் வேண்டாம் என்று அவள் சீக்கிரம் கிளம்பிப் போய்விட்டாள். அதனால் உன்னோட போனில், அவனை நேரில் பார்த்து பேச முடியுமா?"
"அத்தையின் அறிவைக் கண்டு வியந்தபோதும், மலர்வதனிக்கு திக் கென்றது. இதுதான் அவள் அத்தை. பார்க்கத்தான் அப்பிராணி மாதிரி தெரிவாளே தவிர, அவளிடம் எதையும் மறைப்பது அத்தனை சுலபமில்லை. இப்போது அவளை எப்படி சமாளிப்பது என்று யோசித்தவள்,மனதுக்குள் "அத்தானையும் அத்தையையும் காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை, கடவுளே என்னை மன்னிச்சிடு,என்று வேண்டிக்கொண்டு,"ஐயோ அம்மா" என்று சட்டென்று வயிற்றைப் பிடித்தபடி அப்படியே தரையில் மடங்கி அமர்ந்தாள்.
வடிவுக்கரசிக்கு மற்றது மறந்து போயிற்று."ஏய்... என்னடி ஆச்சு? என்ன செய்யுது உனக்கு? என்று அருகே அமர்ந்து அவளை இழுத்து மடியில் போட்டுக்கொண்டு,"என்ன செய்யுது கண்ணம்மா"என்றாள் கண்ணீர் குரலில்.
"வயிறு ரொம்ப வலிக்குது அத்தை," என்ற மலர்வதனிக்கும், அத்தையின் கண்ணீரைப் பார்த்ததும், கண்ணில் நீர் பெருகியது.
"வலிக்காமல் என்னடி செய்யும்? ஒழுங்காக சாப்பிட்டால் தானே? இந்த லட்சணத்தில் நேற்று ரத்தம் வேறு கொடுத்திருக்கிறாய், உடம்பில் சூடு சேர்ந்து போயிருச்சோ, இல்லையென்றால் வயிற்றில் புண்ணாகிவிட்டதோ, என்று மருமகளை கடிந்தவள்,"நான் ஒரு கூறுகெட்டவள், முதலில் நீ போய் தலைக்கு குளி" என்று அவளை எழுப்பி கொண்டு போய் குளியலறையில் விட்டபோது, அறை வாசலில் பணிப்பெண் வடிவுக்கரசியை விளித்தாள், "இதோ வர்றேன் மஞ்சு, என்றவள், நீ குளிச்சிட்டு இரு மலர்,நான் போய் வெந்தயமும் தண்ணீரும் அனுப்பி வைக்கிறேன்" என்று வெளியேற, பெருமூச்சுவிட்டபடடி அப்படியே சரிந்து அமர்ந்தாள் மருமகள்.
"வெளியே நின்ற மஞ்சுளா,"அம்மா, ஃபோன் இரண்டு தடவை வந்திச்சு, அதான் கூப்பிட வந்தேன், என்று வடிவுக்கரசியிடம் கைப்பேசியை தந்தாள்,
வாங்கி பார்த்தவள்,"கணவன் என்று தெரிந்து எண்களை அழுத்தியவாறே, "மஞ்சு, ஒர் ஸ்பூன் வெந்தயமும் குடிக்க தண்ணீரையும் கொண்டு வந்து மலருக்கு சீக்கிரம் கொடு, நான் போன் பேசிவிட்டு வர்றேன்" என்று சொல்லிக் கொண்டிருக்கையில் சத்யமூர்த்தி தொடர்புக்கு வந்தார்.
"என்னங்க எதையாவது வச்சுட்டுப் போயிட்டீங்களா? என்றாள்.
"அதெல்லாம் இல்லை வடிவு, ரஞ்சி வந்ததும் கோயிலுக்கு காணிக்கை செலுத்தறதா அம்மா வேண்டிக்கிட்டாங்க. இப்ப அவங்க இருக்கிற மனநிலையில் வெளியே கிளம்பறாப்ல தெரியலை. இன்னிக்கு சாயந்திரம் நீ, செந்திருவை கூட்டிட்டு போய்விட்டு வா. மலர் வேலைக்கு கிளம்பிடுவா, அப்புறம் அம்மா தனியா இருப்பாங்க. அதனால கொஞ்சம் சீக்கிரமே கிளம்பி, கோவிலுக்கு போய் 7மணிக்குள்ளாற திரும்பிடுங்க" என்றார்.
வடிவுக்கரசிக்கு கோவிலுக்கு செல்வதில் பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால் அந்த செந்திருவுடன் செல்வதுதான் பிடிக்கவில்லை. ஆனால் அதை நேரடியாக சொல்லாமல்,"மலருக்கு கொஞ்சம் வயிற்றில் வலி. அதனால் நாளைக்கு போகிறேனே அத்தான்? என்றாள் வடிவுக்கரசி.
மனைவியை பற்றி அறிந்திருந்த சத்யமூர்த்திக்கு சிரிப்பு வந்தது, அதை அடக்கிகொண்டு,"இல்லை வடிவு, சாமி விஷயம் தள்ளிப் போடக்கூடாது, அதனால் இன்றைக்கே போய்விட்டு வந்திருங்க. வேணும்னா மலரையும் கூட்டிக்கொண்டு போயேன்" என்றபிறகு அவளால் மறுக்க இயலவில்லை.
"அதுவும் சரிதாங்க, போய்ட்டு வந்துடுறோம் என்று கணவனிடம் வடிவுக்கரசி சொல்லிவிட்டாலும் ஏனோ அவளுக்கு மனதே சரியில்லை. எதோ அவளுக்கு தெரியாமல் நடந்துவிட்டதா? அல்லது தனக்குத் தான் ஏதோ நடக்கப் போகிறதா? என்று மனது அலைபாய்ந்தது.
☆☆☆
அன்று மாலை
மருத்துவமனையில். ..
"என்ன சாரகேஷ் போன காரியம் காயா? பழமா? என்றான் நிரஞ்சன்.
சாரகேஷ் வீட்டை பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டதை தெரிவிக்க வந்திருந்தான். சத்யமூர்த்தி அங்கே அமர்ந்து டிவியில் செய்திகளை பார்த்துக்கொண்டு இருந்ததால் அதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. அதனால்,"பழம்தான் நிரஞ்சன், என்றான் சாரகேஷ்.
இரு இளைஞர்களும் பூடகமாகப் பேசிக்கொள்வதை கவனித்து சத்யமூர்த்தி,"என்ன விஷயம் ரஞ்சி, காயா பழமான்னு கேட்டுட்டு இருக்கிறே? என்றதும் சாரகேஷ் முழித்தான்.
"அதுவா அப்பா, ஜாஸ்மின் அப்பா இந்தியா வர்றாராம். அவருக்கு தங்கிறதுக்கு வீடு ஒன்று வாடகைக்கு பார்க்க சொன்னேன். அதுதான் பார்த்து அட்வான்ஸ் கொடுத்தாயிற்று என்கிறான்".
"ஓ! அவரை நம்ம விருந்தினர் வீட்டில் தங்க வைக்கலாமே ரஞ்சி? எதற்காக வெளியே தங்கிக்கிட்டு? சாப்பாடு மற்ற வசதிக்கு கஷ்டமாகிவிடுமே, அதனால் நீ அட்வான்ஸை திருப்பி வாங்கிக்கச் சொல்லு" என்றார்
நிரஞ்சன் என்ன பதில் சொல்வது என்று விழித்தான்.