Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

31. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
மருத்துவமனை...

மனோகரி மெல்ல கண் விழித்தாள். மருத்துவமனைச் சூழல் கண்டு ஒருகணம் மிரண்டாள். ஆனால் உடனேயே மகளின் நினைவில் கண்கள் கலங்கியது. உடன் இருந்த நர்ஸ், "என்ன செய்யுது அம்மா? ஏன் அழறீங்க? என்று வினவினாள்.

“என் கணவரை கொஞ்சம் கூப்பிட்டுவாம்மா என்றாள் மனோகரி.

பிறைசூடன் உடனேயே வந்தார் அவர் இருவித பதற்றத்தில் இருந்தார். மதுவந்தி பற்றி தகவல் இல்லாதது ஒருபுறம் மனைவிக்கு நினைவு திரும்புமா அல்லது இருந்த முன்னேற்றமும் பாழாகிப் போகுமா என்று தவிப்பு ஒருபுறம். அதிலும் மனைவியே அழைக்கவும் கூடுதல் கவனத்துடன் தான் சென்றார்.

மனோ "என்னம்மா ஏன் உன் கண் கலங்கியிருக்கிறது? என்று பரிவாய் தலை வருடி வினவினார்.

"சுமதி... சுமதி... பாவம்ங்க எவ்வளவு ஆசையா இரண்டு வருஷம் கழிச்சு இந்தப் பிள்ளை கிடைச்ச சந்தோஷத்துல இருந்தா? இப்போ அவளுக்கு என்ன பதில் சொல்றது? என்றதும் அவருக்கு மனைவியின் பழைய நினைவுகள் திரும்பிவிட்டது புரிந்தது.

அதற்குள்ளாக மருத்துவரை நர்ஸ் அழைத்து வந்துவிட, அவர் மனோகரியை பரிசோதனை செய்தவாறு சில கேள்விகள் கேட்டு திருப்தி அடைந்தவராக...

"ஷீ இஸ் ஆல் ரைட் மிஸ்டர் பிறைசூடன்" நீங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம். கொஞ்சம் நாள் நான் தர்ற மெடிசன்ஸ் கன்டினியூ பண்ணுங்க போதும். "டேக் கேர்" என்று விடைபெற்று செல்ல நிகிலன் உள்ளே வந்தான்.

"வாங்க, மாப்பிள்ளை சுமதி எப்படி இருக்கிறாள்?? என்று மனோகரி வரவேற்க பிறைசூடனை, அவன் கேள்வியாய் நோக்க, புரிந்தவராய் பழசெல்லாம் உங்க அத்தைக்கு நியாபகம் வந்திருச்சு மாப்பிள்ளை’’என்றார் பிறைசூடன்.

இப்போது குழப்பத்துடன் "என்னங்க சொல்றீங்க புரியலையே? என்றாள் மனோகரி.

"எல்லாம் சொல்றேன் மனோ. முதலில் நீ மாப்பிளளை கூட போ நான் போய் ரிஷப்ஷன்ல பில் செட்டில் பண்ணிட்டு வந்துடுறேன்" என்று மனைவியை மருமகனுடன் அனுப்பி வைத்தார்.

"என்ன விஷயம் மாப்பிள்ளை? உங்க மாமா ஒரே புதிர் மன்னன் மாதிரி பேசறாரே" என்று மனோகரி வினவியபடியே உடன் சென்றாள்,

"அதெல்லாம் இல்லை அத்தை, ஒரு சின்ன சர்பிரைஸ் பாருங்க" என்று ஒரு அறையின் கதவை திறந்து அவளை உள்ளே செல்லுமாறு பணித்தான். உள்ளே அவள் கண்ட காட்சியில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. சுமதியின் அருகில் இருந்த தொட்டிலில் அழகாய் தூங்கிக் கொண்டிருந்தது குழந்தை. அன்னையை கண்டதும் முறுவலித்த சுமதி கையை நீட்ட ஓடிச் சென்று பற்றிக் கொண்டாள் பெரியவள்.

"என்ன மாயம் இது. நான் காண்பது கனவா? இல்லை நனவா? என்ற போது பிறைசூடன் வந்து சேர்ந்தார்.

"நிஜம் தான் மனோ என்ற பிறைசூடன் தொடர்ந்து, சுமதிக்கு முதல் குழந்தை தவறிப் போனது முதல் அன்றுவரை நடந்தவற்றை சுருக்கமாக சொல்லி முடித்தார்.

எல்லாமும் கேட்ட மனோகரி, "என்னால எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டிங்க" என்று வருந்தினாள். அவள் வருந்துவது பொறுக்காது "கஷ்டம்தான் உன்னோட நிலையை பார்த்தப்போ, ஆனால் உன்னால கஷ்டமில்லையம்மா" என்று சுமதி பற்றிய கையை ஆறுதலாய் வருடினாள்.

"ரவி எங்கே அவனைப்பற்றி சொல்லவே இல்லையே. இன்னும் அவன் வெளிநாட்டில் தான் இருக்கிறானா? என்று மனோகரி கேட்டுக் கொண்டிருக்கையில் நிகிலனின் கைபேசி ஒலிக்க அவசரமாய் வெளியே ஓடினான். சுமதி யோசனையாய் பார்த்திருக்க,

"ரவி வந்துட்டான் மனோ, இங்கேதான் வேலை கன்டினியூ பண்றான். அவசர வேலைன்னு போயிருக்கிறான் வந்துவிடுவான்." சுமதி ஏதோ கேட்க முயல பிறைசூடன் விழியால் தடுத்துவிட்டார்.

மதுவந்தியைப் பற்றித்தான் சுமதி கேட்க வருகிறாள் என்று அவருக்கு தெரியும். ஆனால் மனோகரிக்கு அவள் நினைவு தானாய் வரவேண்டும் என்று அவர் விரும்பினார்.

"என்னவோ இன்னும் ஒன்று முக்கியமான விஷயம் நினைவுக்கு வரமாட்டேங்குது. என்னானு சொல்ல தெரியலைங்க " என்றாள் மனோகரி யோசிக்க முயன்றவளாய்...

"எல்லாம் மெல்ல மெல்லத்தானே வரட்டும் மனோ. என்ன அவசரம் இப்போ? நீ மனசைப் போட்டு அலட்டிக்காம கொஞ்சம் படுத்து ஓய்வு எடு. நான் ஒரு போன் பேசிட்டு வந்திடுறேன்" என்று பதிலுக்கு காத்திராமல் வெளியேறினார்.

நிகிலன் அப்போதுதான் பேசி முடித்துவிட்டு கைபேசியை அனைத்தான்." என்னாச்சு மாப்பிள்ளை?? மதுவும் ரவியும் எங்கே இருக்காங்கன்னு தகவல் ஏதும் வந்துச்சா? கவலையுடன் வினவினார்.

"விஜய் தான் அழைத்திருந்தான், மாமா, என்ற நிகிலன் விவரம் தெரிவித்துவிட்டு, தொடர்ந்து "மதுவந்தியை அழைச்சிட்டு ரவி நேராக வீட்டுக்கு போயிட்டு இருக்கிறானாம் மாமா" காயம் ஆழமில்லை. ஆனால் நடந்த சம்பவத்தால மதுவந்தி ரொம்ப களைத்துப் போயிருப்பதால் அவளுக்கு கொஞ்சம் ஓய்வு தேவை என்று டாக்டர் சொல்லிவிட்டாராம்" என்றவன் "என்னமாதிரி பெண் மாமா இவள்? எனக்கு ஆச்சர்யமா இருக்கு. இரண்டு மூனு மாசப் பழக்கத்துல இவ்வளவு பாசம் காட்டமுடியுமா?? வியப்புடன் கேட்டான்.

"அதுதான் மாப்பிள்ளை எனக்கும். அவள் நமக்கு கிடைத்த வரம். மனோகரி அவளை நம் ரவிக்காக தேர்வு செய்தப்போ எனக்கு முழு உடன்பாடு இருக்கவில்லை. அழகாய் இருக்கிறாள். பொருத்தமானவளாய் இருப்பாளா என்ற நெருடல் லேசாய் இருந்தது. சின்னப் பெண் அப்போது. மனோகரியிடம் பிரியம் வைத்திருக்கிறாள். வரப்போகும் மருமகள் மாமியாரோடு ஒத்துப் போனால் மகன் நிம்மதியாய் இருப்பான் என்று எண்ணித்தான் சம்மதம் சொன்னேன். ஆனால் அவளை அறிந்த பிறகு இவளை விட சிறந்த மருமகள் கிடைக்கமாட்டாள் என்று உணர்ந்து கொண்டேன். இதோ இன்னொரு சான்றாக இன்று அவள் உயிரை கொடுக்க முன் வந்துவிட்டாளே? ரவிக்காக அவள் இதைவிட வேறென்ன செய்துவிட முடியும் மாப்பிள்ளை?? பிறைசூடனின் குரல் உணர்ச்சிவசத்தால் கரகரத்தது.
 

Attachments

  • 462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    106.5 KB · Views: 0
Back
Top