*அத்தியாயம் - 30*
வடிவுக்கரசி பொறுமையை இழுத்து பிடித்தபடி நடமாடிக் கொண்டிருந்தாள். அழையா விருந்தாளியாக வந்துவிட்ட நாத்தனாரையும் அவளது மகளையும் பிடிக்காத போதும்,வீடு தேடி வந்து விட்டவர்களை கவனிக்காமல் விடவும் மனம் வராததால் சித்தையனை அனுப்பி பாதாம் அல்வாவும் வெங்காய பக்கோடாவும் வரவழைத்து வந்தவர்களுக்கும் மாமியாருக்கும், டீயுடன் வைத்து பரிமாறினாள்.
அவள் மனது முழுவதும் மகனிடம் இருந்தது. முன்பெல்லாம் வந்தால் விவரம் சொல்லாமல் கிளம்பி சென்று விடுவதும், நேரம் கெட்ட நேரத்தில் வீடு திரும்புவதுமாக, இருந்த மகன், இப்போது நாடு திரும்பியதில் இருந்து வந்தது முதல் இணக்கமாக நடந்து கொண்டதில் அவளுக்கு, மகனிடம் இயல்பான எதிர்பார்ப்புகளும் உண்டாகிவிட்டது. இன்றைக்கு மறுபடியும் வெளியே சென்ற அவனிடமிருந்து ஒரு தகவலும் இன்றிப் போகவும் மகனுக்கு என்னவாயிற்றோ என்ற தவிப்பு தான் அதிகமாக இருந்தது. சரி அவன் கைப்பேசி தான் சார்ஜ் இல்லாமல் போயிற்று என்றால் உடன் போயிருக்கும் பெண்ணிடம் போன் இருக்குமே, அதில் இருந்து அழைத்து பேசியிருக்கலாமே? இப்படி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடமாடும் துன்பமாவது குறையுமே, மனதுக்குள் உரையாடிக் கொண்டிருந்தவளுக்கு மாடிக்கு சென்று சற்று படுத்துக் கொண்டால் தேவலாம் போலத் தோன்றியது,மற்ற சமயமாக இருந்தால் பரவாயில்லை. இப்போது வந்தவர்கள் முன்பாக மாமியார் எதையாவது பேசி வைத்தால் அவளால் தாங்க முடியாது. இதோ வருகிறேன் என்ற கணவரையும் காணவில்லை. இந்தப் பொண்ணு மலர் இருந்திருந்தால், எதையாவது பேசி மனசை சாந்தப்படுத்திவிடுவாள். அவளுக்கும் இன்றைக்கு என்று வேலை வரவேண்டுமா?
மலர்வதனியைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கையில், இன்றைய வேலை விஷயம் உறுத்தியது. இதற்கு முன்னாள் இது போல விடுமுறை நாளில் அவள் அடுத்தவருக்காக பணியை ஏற்றுச் செய்ததே இல்லை என்பது நினைவுக்கு வர, அப்படி என்றால் எதையோ மறைக்கத்தான் அவள் பொய் சொல்லியிருக்கிறாள், அது என்ன? ஆனால் அவள் மட்டுமாக சொல்லவில்லையே, அவளது கணவரும் அல்லவா அதை உறுதிபடுத்தினாரே."சே, சும்மா கிடக்கும் மனசு, கண்டதையும் நினைக்க வச்சு,குழப்பிடுது, பேசாமல், போய் தோட்டத்தில் உலவலாம் என்று அவள் முடிவு செய்து எழுந்த போது, முன்புறம் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்க, ஆவலோடு அங்கே விரைந்தோடி சென்றாள்.
சத்யமூர்த்தியுடன் ஜாஸ்மின் வருவதைக் கண்ட வடிவுக்கரசி துணுக்குற்றாள். அவள் பேசத் தொடங்கும் முன்பாக,
"உங்க பிள்ளை ரொம்ப மோசம் ஆன்ட்டி" என்றாள் ஜாஸ்மின்.
வடிவுக்கரசி சற்று திகைத்து போனவளாக,"எ..என்னம்மா சொல்றே? ரஞ்சி என்ன பண்ணினான்?" கேட்டாள்.
"என்னை ஷாப்பிங் பண்ண சொல்லிட்டு நிரஞ்சன் காரை பார்க்கிங்கில் விட்டு வருவதாக போனான் ஆன்ட்டி. ரொம்ப நேரமாகியும் அவன் வரக்காணோம், போன் பண்ணினால் சுவிட்ச் ஆஃப்னு வருது. எனக்கு ஒரே டென்ஷன். உடனே பார்க்கிங் ஏரியாவுக்கு ஓடினேன். அங்கே நாலு பேர்கூட நின்று பேசி சிரிச்சுட்டு நிற்கிறான். எனக்கு கோபமா வந்துச்சு, ஆனால் அவனோடு நின்றவர்களை பார்த்தால் பலகாலமாக பழகியவர்கள் போல தெரிஞ்சதால் நான் பக்கத்தில் போய் நின்னேன். அப்பதான் அவனுக்கு என்னோட நினைவே வந்திருக்கு. உடனே சாரி சொல்லிட்டு, பக்கத்துல இருந்தவங்க எல்லாம் அவனுடைய பழைய நண்பர்கள் என்று எனக்கு அறிமுகப்படுத்தினான். அவனோட போன் என்னாச்சு என்று கேட்டேன், அது திடீர்னு ஹேங்க் ஆயிடுச்சு. பக்கத்து கடையில் கொடுத்து ரிப்பேர் பாக்கணும் என்று சொன்னான். ஆன்டிக்கிட்ட லஞ்ச்க்கு வீட்டுக்கு வர்றதாக சொன்னீங்களேனு சொன்னேன், சரின்னு அவனும் கிளம்பினான், என்றவளிடம், அட என்னம்மா நீ, கொஞ்சம் மூச்சு விட்டுத்தான் பேசேன்" என்றார் சத்யமூர்த்தி.
"இருங்க அங்கிள் நான் சொல்லி முடிச்சிடுறேன்.. என்றுவிட்டு தொடர்ந்து,"அதுக்குள்ள ஒருத்தன்,"டேய், இன்னிக்கு ராத்திரி பாண்டிச்சேரி ட்ரிப் போகிறோம், அங்கே இரண்டு நாட்கள் ஸ்டே பண்ணிட்டு, திரும்ப வர்றப்போ, மகாபலிபுரம் ஒருநாள் சுற்றி பார்க்கிறோம். நாம எல்லோரும் ஒன்றாக இருந்து எவ்வளவு நாளாகிட்டது. நீயும் எங்களோடு ஜாயின் பண்ணுடா"என்று சொன்னான். மத்தவங்களும் வற்புறுத்தினாங்க, உடனே சரின்னு சொல்லி ஒத்துக்கிட்டான்.
அப்புறமாக எல்லோரும் ஒரு பெரிய ஓட்டலில் லஞ்ச் சாப்பிட்டோம், என்னை ஷாப்பிங் முடிஞ்சதும், அங்கிளுக்கு ஃபோன் பண்ணி ஆட்டோ வரவழைச்சு வீட்டுக்கு போகச் சொல்லிவிட்டு அவங்களோட நிரஞ்சன் கிளம்பிப் போய்விட்டான். நீங்களே சொல்லுங்க ஆன்ட்டி அவன் செஞ்சது சரியா? என்று ஜாஸ்மின் மூச்சுவிடாமல் சொல்லி நிறுத்தினாள்.
வடிவுக்கரசிக்கு அத்தனை நேரம் இருந்த தவிப்பு அடங்கி, மனம் லேசாகிவிட, அத்தோடு ஏற்று இறக்கத்தோடு ஜாஸ்மின் சொன்னவிதத்தில் சிரிப்பும் பொங்கியது, அதை கட்டுப்படுத்தி,"தப்புத்தான் மா, அவன் டூர் முடிச்சுட்டு வரட்டும், அவன் காதைப் பிடிச்சு,நல்லா திட்டிவிடுறேன், சரிதானா?"
"ம் ம்.. சோ ஸ்வீட ஆன்ட்டி, ஆனால், போகட்டும், பரவாயில்லை, ஆன்ட்டி உங்களுக்காக மன்னிச்சு விடுறேன்"என்றாள் ஜாஸ்மின்.
அவளது கன்னத்தில் தட்டி விட்டு,"நல்ல பொண்ணுமா நீ, நான் என்னவோ ஏதோ என்று பயந்தே போனேன்"என்று லேசாக சிரித்த வடிவுக்கரசி," சரி சரி, இரண்டு பேரும் உள்ளே வாங்க, பலகாரம் சாப்பிடலாம்" என்று உள்ளே செல்ல,
கட்டை விரலை உயர்த்திக் காட்டிவிட்டு ஜாஸ்மின் மாடிப்பக்கம் செல்ல,
அதுவரை மூச்சைப் பிடித்தபடி நின்ற சத்யமூர்த்தி அவளுக்கு பதிலாக ஒரு புன்னகையை சிந்திவிட்டு, சிறு பெருமூச்சுடன் மனைவியை தொடர்ந்தார்.
☆☆☆
மருத்துவமனையில்...
வருங்கால மனைவி என்று அத்தை மகன் அறிமுகம் செய்து வைத்த பெண், நடந்து கொண்ட விதம் மலர்வதனியை குழப்பத்தில் ஆழ்த்தியது. இன்னொரு விதமாக ஏதோ பெரிய சுமை நீங்கியது போல உணர்ந்தாள். அது என்னவென்று அவளுக்கு பிடிபடாத போதும், மனதில் ஜாஸ்மின்னை பற்றிய நினைப்புதான் வெகுவாக ஆக்கிரமித்து இருந்தது.
அத்தானுடன் வாழப் போகிறவள், கொஞ்சமும் பொறுப்பு இல்லாமல், அவனை இந்த மாதிரி நிலையில் பார்த்தபிறகும் கிளம்பி போக எப்படி மனம் வந்தது? தன்னால் சரியாக சாப்பிடக்கூட முடியவில்லை. இத்தனைக்கும் மதியம் சாப்பிடாததோடு ரத்தமும் கொடுத்திருப்பதற்கு, அள்ளி விழுங்கியிருக்க வேண்டும், ஆனால் மாமா கோபப்படுகிறாரே என்று ஒவ்வொரு கவளத்தையும் தண்ணீரை குடித்து அல்லவா உள்ளே தள்ளினாள்? ஆனால் அந்தப் பெண் எந்த பாதிப்பும் இல்லாமல், இவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு போகிறாளே?? இவளை கட்டிக்கொண்டு அத்தான் என்ன பாடுபடப் போகிறாரோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது, நிரஞ்சன் அறையில் இருந்த நர்ஸ் வந்து உள்ளே அழைத்துப் போனாள்.
என்னவோ என்று பதறிய மனதையும், இதோ இதோ என்று துருத்திய கண்ணீரையும் அடக்கியபடி, மலர்வதனி உள்ளே சென்றாள். நிரஞ்சன் அவளைப் பார்த்து புன்னகைக்க, பதிலாக புன்னகைக்க முயன்று தோற்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
"இங்கே வா,என்று இடது கையை நீட்டவும், அவசரமாக நெருங்கி வந்து அதில் தன் கையை வைத்தபடி,"எல்லாம் என்னால் தான் அத்தான்" என்றாள் கேவலுடன்.
"ஷ்..ஷ்.. அழக்கூடாது, முதலில் கண்ணை துடைத்துக்கொள் வதனி," என்று அழுத்தமான குரலில் நிரஞ்சன் சொல்ல, உடனே சொன்னபடி செய்தாள். ஆனால் அப்புறமும் கேவல் நின்றபாடில்லை. அவளது கையை லேசாக அழுத்தி விட்டு, "நீ ரொம்ப தைரியசாலி என்று நினைத்தேன். இப்படி அழுகிறாயே வதனி? எதுக்கு இப்ப அழறே? நான்தான் பிழைச்சுட்டேனே?"
"கடவுள் அருளால் நல்லவேளையாக பிழைத்துவிட்டீர்கள் அத்தான். இல்லாவிட்டால்... என்னாகியிருக்கும்? எனக்கு எப்படி... என்றவள் சட்டென்று உதட்டை கடித்து, நிறுத்தினாள்.
"சொல்லு வதனி, என்ன?"என்று கேட்டான்.
"அது, ஒன்றுமில்லை, அத்தையைப் பற்றி நினைத்தீர்களா என்று கேட்க வந்தேன்"என்று சமாளித்தாள்.
"இல்லையே எனக்கு என்று என்னமோ சொல்ல வந்தியே?"
"சரியான பாம்பு காது என்று முணுமுணுத்துவிட்டு,"ஒன்றுமில்லை அத்தான், என்னால் தான் உங்களுக்கு இப்படி ஆகிவிட்டது என்று சொல்ல வந்தேன். வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல் அப்படி சொல்லிவிட்டேன். ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும்னு சொல்வாங்க, என்னோட வார்த்தை பலிச்சு இப்படி ஆகிவிட்டதே,"என்றாள் ஆற்றாமையோடு,
"ஏய், நீ படித்தவள்தானே இதையெல்லாம் கூட நம்புவாயா என்ன? என்று கடிந்தவன்,"சரி உன் வழிக்கே வர்றேன்,"எல்லாம் நன்மைக்கு என்றும் கூட சொல்வாங்க, அப்படி இதுவும் நன்மைக்கு என்று நினைச்சுக்கலாமே" என்றவனின் குரலில் சிரிப்பு இருந்தது.
"ம்க்கும், இப்படி அடிபட்டு வந்து படுத்திருக்கிறதில் யாருக்கு நன்மையாம்?"
"ஏன் எனக்குத்தான் நன்மை என்று வைத்துக்கொள்ளேன்"
"ச்சு, என்ன இது அத்தான்,தத்துபித்து என்று எதையாவது சொல்லாதீர்கள். ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இப்படி எல்லார் மனசும் கஷ்டப்படுகிறது போல படுத்திருப்பதில் என்ன நன்மை?என்றாள், கோபமும்,கவலையும் போட்டி போட,
"என்னை பார்த்தாலே உனக்கு கடுப்பாக இருந்ததே? இப்போது பார் அதெல்லாம் மாறி நீ எனக்காக அழறே அப்போ அது நன்மை தானே? என்று நிரஞ்சன் சிரிப்புடன் சொல்ல, மலரின் முகம் லேசாக சிவக்க,"தலையில் அடிபட்டதுல உங்களுக்கு என்னமோ ஆகிவிட்டது, வாய்க்கு வந்தபடி உளறிக் கொண்டு இருக்கிறீர்கள்,என்றவாறு பின்னால் திரும்பி பார்த்தவள், அங்கே நர்சை காணோம். சற்றே ஆசுவாசத்துடன் மீண்டும் நிரஞ்சன் புறமாக திரும்பியபோது அவள் முகத்தில் கோபம் இருந்தது.
"அவங்க நீ உள்ள வந்த உடனே போயிட்டாங்க,"என்று புன்னகைத்தவன்
" நீ ஏன் கோவப்படுற வதனி, நான் என்ன தப்பா சொல்லிட்டேன், நீயே சொல்லு, நான் உன்கிட்டே பேச வந்தபோதெல்லாம் வெட்டிவிட்டு ஓடத்தானே செய்தாய்?
அவளது கை இன்னமும் நிரஞ்சனின் கையில் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தவளாக விடுவித்துக் கொள்ள முயன்றாள். ஆனால் அவன் விடாமல் பற்றிக் கொண்டு,"இப்போது தான் நாம் ராசியாகிவிட்டோமே வதனி? அப்புறம் ஏன் விலகி ஓடப்பார்க்கிறாய்? என்று கேலியாக கேட்டான்.
ஏனோ மலர்வதனிக்கு இதயம் வேகமாக படபடத்தது,"ச்சு,கைய விடுங்க அத்தான் யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?"என்று மீண்டும் கையை விடுவித்துக் கொள்ள முயன்றபோது, கையை விடுவித்து,
"யாரேனும் பார்ப்பார்கள் என்பதற்காக விடவில்லை வதனி. எனக்கு ஒரு காரியம் உன்னால் ஆகவேண்டும், என்றவன் "என்னோட ஃபோன் எங்கே? அதை எடுத்து வா வதனி, நான் சில கால்கள் செய்ய வேண்டும்" என்றான் நிரஞ்சன்.
"இப்போது அதெல்லாம் தரமுடியாது அத்தான். காலையில் டாக்டர் வந்து பரிசோதித்து பார்த்து உங்களுக்கு வேறு ஏதும் பிரச்சினை இல்லை என்று சொன்ன பிறகு தான்"என்றாள் கறாராக.
அவள் பேசும் தோரணை,சின்னப் பிள்ளையிடம் ஒரு அன்னை சொல்வது போல இருந்தது. நிரஞ்சன் அதை ரசித்தவாறு,"நர்ஸம்மா நீ சொல்கிறபடி கேட்கிறேன். ஆனால் அங்கே உன் அத்தையம்மாள், அதுதான் என்னை பெற்ற மகராசி, நீயும் அங்கே இல்லை. இருந்திருந்தால் மகன் அவங்களை மறந்து நண்பர்களோடு ஊர் சுற்றப் போய்விட்டான் என்று உன்னிடத்தில் புகார் சொல்லி, நீயும் என்னை ரெண்டு வார்த்தை திட்டினால் கொஞ்சம் சமாதானம் ஆகியிருப்பார்கள். ஆனால் இப்போது அதற்கும் வழியில்லாமல் மனசுக்குள் புலம்பிக்கொண்டிருப்பார்கள். அதனால் அவர்களிடம் மட்டும் இரண்டு வார்த்தை பேசிவிட்டு உன்னிடமே தந்து விடுகிறேன்,சரிதானா? என்று அவன் நீளமாக பேசிக் நடிக்க,
"உலக மகா நடிப்புடா சாமி, என்று முணுமுணுத்துவிட்டு கைப்பையில் இருந்த அவனது கைப்பேசியை எடுத்து ஆன் செய்து கொடுத்துவிட்டு,"நீங்கள் பேசுங்கள் அத்தான். நான் வெளியே நிற்கிறேன். ஆனால் ஐந்து நிமிஷம்தான். அதற்கு மேல் பேசக் கூடாது சரிதானா?" என்றாள்.
"ஆகட்டும் தாயே, ஆனால் நீ வெளியே போக வேண்டாம். உனக்கு மறைத்து நாங்கள் ஒன்றும் பேசிவிட போவதில்லை" என்றதும்
"ஆஹாஹா, இந்த டயலாக்குக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை, காலையில் அம்மாவும் பிள்ளையும் எனக்கு தெரியக்கூடாதுன்னு ஜாடையாக பேசினதை நானும் பார்த்துட்டுதானே இருந்தேன். அம்மாவுக்கும் பிள்ளைக்கும் நடுவில் வந்த பாவம் எனக்கு வேண்டாம் சாமி, அத்தோடு அந்த நர்ஸ் என்னத்தையாவது கற்பனை பண்ணித் தொலைக்கப் போறாங்க" என்றவாறு வாசல் புறமாக நடந்தவளிடம்,
"பண்ணினால் பண்ணிக்கட்டுமே, உனக்கு என்ன அதுல கஷ்டம்? என்றான் கிண்டலாக.
"ம்க்கும், என்றவள் இவன் வேண்டும் என்றே வம்புக்கு இழுக்கிறான் என்று எண்ணியபடி,"இப்பவே அரை நிமிடம் காலி, நாலரை நிமிடம் தான் பாக்கி சீக்கிரம் பேசுங்கள்" என்றுவிட்டு மலர்வதனி வெளியேற, அன்னையை தொடர்பு கொண்டு பேசினான் நிரஞ்சன்.
சரியாக ஐந்தாவது நிமிடம் அந்த நர்ஸ் உள்ளே வந்தாள். "சார், ப்ளீஸ் இவ்வளவு நேரம் நீங்க பேசினதே அதிகம். இனி பேசாமல் ஓய்வு எடுங்கள். அந்த ஃபோனை எனக்கிட்டே கொடுங்க, நான் மலர்கிட்டே கொடுத்து விடுகிறேன்" என்று கைப்பேசியை வாங்கிச் சென்று தந்துவிட்டு வந்தாள்.
"சரியான கறார் கண்ணாத்தாள், என்று தனக்குள் சிரித்துக்கொண்டான் அவன்.
🌺🌺🌺
அங்கே வீட்டில்...
மகனைக் கண்டதும்,"சத்யம் எங்கே உன் மகன்? உன் பெண்டாட்டிக்கிட்டே கேட்டால் வெளியே போயிருக்கான், இப்போது வந்துவிடுவான் என்று கிளப்பிள்ளை போல சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்கிறாள். செந்திருவும் அவள் மகளும் அவனை பார்க்கணும் என்று வந்திருக்கிறார்கள். எங்கே போயிருக்கிறான்? எப்ப வருவான்?"என்று கேட்டாள் காந்திமதி.
"அது அம்மா ரஞ்சி, பாண்டிச்சேரி வரை போயிருக்கிறான். இரண்டு நாட்கள் கழிச்சுதான் வருவான். என்கிட்டே சொல்லிவிட்டுத்தான் போனான்" என்றார் சத்யமூர்த்தி.
"அட, அவனை பார்க்கணும்னு அவ்வளவு தொலைவில் இருந்து வராதவள் வந்திருக்கிறாள். நீ என்னடாவெனறால், சர்வசாதாரணமாக ஊருக்கு போயிருக்கிறான் என்று சொல்றியேடா, அவன் போகிறேன் என்றால் வீட்டுக்கு பெரியவள் என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்னு தோணலையா உனக்கு?என்று படபடத்தாள் காந்திமதி.
"அதுக்கென்ன அம்மா இன்னும் இரண்டு நாட்கள் இருந்து பார்த்துவிட்டு கிளம்பட்டுமே, அவளும் வந்து போய் ரொம்ப வருஷமாச்சுல்லே? என்றார் சத்யமூர்த்தி.
"அதை நீ சொல்லணுமாடா? இப்ப அவளுக்கு இதுதானே தாய்வீடு, இரண்டு நாளு என்ன நாலு நாளுன்னாலும் இருந்துவிட்டு போகிறாள் என்றவள், "ஆமாம் உன் மகன் மட்டும் தனியாக போயிருக்கிறானா?அல்லது அந்த மேனாமினுக்கியும் கூடப் போயிருக்கிறாளா? என்றாள் கடுப்புடன்.
அப்போது அங்கே ஜாஸ்மின் வந்து உணவு மேசை முன்பாக ஒரு இருக்கையில் அமர்ந்தாள். அவளைப் பார்த்ததும் சட்டென்று வாயை மூடிக்கொண்டாள் காந்திமதி.
"ஹாய் பாட்டி, டிபன் காபி சாப்பிட்டீங்களா? என்றாள் ஜாஸ்மின்.
"ஏய்.. விருந்தாட வந்தமோ போனோமானு இருக்கணும்னு நேற்று தானே சொன்னேன்? ஆமாம் அதென்ன என் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு என்னை விசாரிக்கிறே?
ஜாஸ்மின் சற்றும் அசராமல்,"என்ன பாட்டி நீங்க? எத்தனை தடவை உங்களுக்கு ஞாபகப்படுத்தறது? நாளைக்கு உங்க பேரனுக்கு பெண்டாட்டியா வந்தப்புறம் நான்தானே உங்களை கவனிச்சுக்கனும்? அதைத்தான் இப்பவே செய்கிறேன். அதுல என்ன தப்பு?" என்றாள்.
காந்திமதி,"அதை எல்லாம் நீ முடிவு செய்தால் போதுமா? நான் சம்மதிக்காமல் என் பேரன் எவ கழுத்திலேயும் தாலி கட்டமாட்டான்" என்றவள் "இவளை பேசவிட்டுட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கிறீங்களே, ஏன்டா சத்யம் நீயும் உன் வீட்டுக்காரியும் என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க, என்று ஆத்திரமாக சொல்லும்போதே வடிவுக்கரசியின் கைப்பேசி ஒலித்தது.
அவள் அதை எடுத்துக்கொண்டு பின்புறம் செல்ல, அதே நேரம் ஜாஸ்மினுடைய கைப்பேசியும் ஒலிக்க, யார் என்று பார்த்தவள், சட்டென்று எழுந்து அவளுக்கான அறைக்குள் ஓடிச்சென்றாள்..
*அத்தியாயம் - 31*
வடிவுக்கரசியும் ஜாஸ்மினும் ஆளுக்கொரு பக்கம் கைப்பேசியுடன் சென்றுவிட, வாசலில் யாரோ அழைக்கும் குரல் வர, சத்யமூர்த்தி தப்பித்தோம் என்று எழுந்து விரைந்தார்.
நிரஞ்சன் பதிவு செய்திருந்த இருசக்கர வாகனத்தை இரண்டு நபர்கள் கொணர்ந்து இறக்கிக் கொண்டிருந்தனர்."சார் மலர்வதனிங்கிறவங்க வண்டியை புக் பண்ணியிருக்காங்க, இந்த வீடுதானே? என்றான் ஒருவன்.
"ஓ! வண்டியும் அவளுக்கு தானா? என்று எண்ணிவிட்டு ,"ஆமா இந்த வீடுதான், என்று அவனுக்கு கூலியை கொடுத்து அனுப்பி வைத்தார். யாரோ ஒரு பெண்ணை கொணர்ந்து வீட்டில் வைத்துவிட்டு, அந்தப் பக்கம் மாய்ந்து மாய்ந்து மாமன் மகளுக்கு சேவை செய்வதும், ஒவ்வொரு பொருளாக வாங்கிக் குவிப்பதும், என்ன மர்மம் இது? வந்தவளும் வாய் ஓயாமல் நான்தான் உன் பேரனுக்கு மனைவி என்கிறாள். யாரை ஏமாற்ற இந்த நாடகம்? அல்லது இதற்குள் மறைந்து இருக்கும் உண்மை அவருக்குத்தான் தெரியவில்லையோ? கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவிற்கு வந்துதானே ஆகவேண்டும், என்று நினைத்தவாறு அப்படியே பக்கவாட்டில் தோட்டத்திற்கு சென்றார்.
அங்கே வடிவுக்கரசி அப்போது தான் மகனிடம் பேசிவிட்டு மாடிப்படியில் அமர்ந்து இருந்தவள், கணவனை கண்டதும்"என்னங்க நீங்க இந்தப்
பக்கமாக வர்றீங்க? என்று விசாரிக்க, விவரம் தெரிவித்தார்.
"ஓ வண்டி வந்திருச்சா, என்கிட்டே சொல்லிவிட்டு தான் போனான். ஆமாம் மலர் ஏதாவது சாப்பிட்டாளா?"
"சாப்பிட வச்சேன் வடிவு, இத்தனை நாள் அவளை என்னால் சரியாக கவனிக்க முடியாமல் போச்சு. இப்பத்தான் வீட்டுக்குள் இருக்கிறாளே, நல்லபடியாக பார்த்துக்கணும் வடிவு, நீ குறை இல்லாமல் தான் பார்த்துக்கிட்டே, ஆனாலும் அந்த பிள்ளை மனசு அப்பாவோட பாசத்துக்கு எவ்வளவு ஏங்கியிருக்கும்? எதையும் காட்டிக்காமல் இருந்தாளே, இனி அவளுக்கு அப்பாவாக செய்ய வேண்டியதை நான் செய்வேன் வடிவு" என்று உணர்ச்சிவசப்பட்டு பேசிய கணவனைக் கண்டு வியந்தாள். இதற்கு முன்பும் அவர் மலர்வதனியின் மீது அக்கறையோடு தான் நடந்து கொண்டார். அதை அன்னை அறியாதபடி பார்த்துக் கொள்வார். அவளது தம்பி மகளின் எதிர்காலம் பற்றி இனி அவளுக்கு கவலையில்லை. ஒருவருக்கு இரண்டு பேர் பொறுப்பு ஏற்றுக்கொண்டு விட்டதால் இப்போது அவளுக்கு என்ன நேர்ந்தாலும் நிம்மதியாக கண்ணை மூடுவாள்,
"நீங்க சொல்லணுமா என்ன? உங்க மனசு எனக்கு தெரியாதா? சொல்லப்போனால் அவளுக்கு உங்க மேலே என்றைக்கும் வருத்தமே கிடையாது"என்றவள்,"சரிங்க, பொழுது சாய்ஞ்சுட்டது, நீங்கள் உள்ளே வாங்க, நான் போய் ராத்திரி சமையலை கவனிக்கிறேன்"என்று எழுந்தாள்.
"இப்போது உள்ளே போனால் அம்மா திரும்ப ஆரம்பிக்கும், அதனால் நான் இப்படியே மாடிக்கு போய் கொஞ்சம் ஓய்வு எடுக்கிறேன் வடிவு, நீ அம்மா ஏதாவது சொன்னால் காதில் வாங்காதே, சரியா"என்று மனைவியின் தலையை கோதிவிட்டு மாடிக்கு சென்றவர் மலர்வதனியிடம் நடந்த விவரம் சொன்னார். ஆனால் மகன் அவளுக்காக வண்டி வாங்கியிருப்பது பற்றி ஏதும் காட்டிக் கொள்ளவில்லை. பிறகு மகனிடம் மலர்வதனியைப் பற்றி பெருமையாக இரண்டு வார்த்தை பேசிவிட்டு யோசனையில் ஆழ்ந்தார் சத்யமூர்த்தி.
☆☆☆
மருத்துவமனையில்...
மாலையில் வந்து பரிசோதித்த மருத்துவர், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் இனி உயிருக்கு ஆபத்தில்லை என்பதால், காலையில் தனியறைக்கு மாற்றிவிடுவதாக தெரிவித்துவிட்டு சென்றார்.
மலர்வதனிக்கு அதன்பிறகு தான் நிம்மதி உண்டாயிற்று. மாமாவிடம் சொல்ல வேண்டும், ஆனால் அவர் எங்கே இருக்கிறாரோ என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவரே போன் செய்து ஜாஸ்மின் அத்தையிடம் நிலைமையை சமாளித்த விதத்தை தெரிவித்தார். அப்போது அவளும் டாக்டர் வந்து சென்ற விவரத்தை அவரிடம் தெரிவித்து, காலையில், அவள் வீட்டிற்கு வழக்கமான நேரத்துக்கு திரும்பாவிட்டால் அத்தை சந்தேகப்படுவாள் என்று அவரை சற்று சீக்கிரம் வருமாறு கேட்டுக்கொண்டு பேச்சை முடித்துவிட்டு காபி குடித்துவிட்டு வரலாம் என்று சென்றாள்.
அன்றைய இரவு....
அதிக துக்கமோ அதிக சந்தோஷமோ உண்டானால் தூக்கம் வராது என்பது போல, தந்தையிடம் பேசிய பிறகு, நிரஞ்சன் அன்றைக்கு காலை முதல் நடந்தவற்றை நினைத்தபடி, கண்களை மூடி படுத்திருந்தான். அன்றைய முற்பகலில்.. அன்னையுடன் மலர்வதனியின் அறைக்கு சென்றபோது சோபாவில் உடலை குறுக்கியபடி தூங்கிக்கொண்டிருந்தவளை தூக்கி படுக்கையில் கிடத்தியபோது ஒரு பூங்கொடி போலத்தான் தெரிந்தாள். அப்போதுதான் அவளது மெலிவு அவனது கவனத்திற்கு வந்தது. அவளது உயரம் சராசரி பெண்களை விட சற்று அதிகம். அந்த உயரத்திற்கு அவள் தன்னை சரியாக பேணுவதில்லை என்று புரிந்தது. அதை அன்னையிடமும் தெரிவித்தான். அடுத்து அவனைக் கண்டாலே கடுப்பாக முகத்தை வைத்தபடி பேசி, அருகில் வராதே என்பதை உணர்த்துவது போல தூர நிறுத்துகிறவள், இன்றைக்கு அவனுக்கு ஒன்று என்றதும் ஓடிவந்தது மட்டுமின்றி ரத்தம் வேறு கொடுத்திருக்கிறாள். அது அவள் செய்யும் பணியின் காரணமாக உண்டான மனிதாபிமானத்தில் கூட செய்திருக்கலாம். ஆனால் அவளது அழுகை? அவனுக்காக பொங்கி பொங்கி அழுதாளே! இது வெறும் அத்தை மகன் என்ற உறவு காரணமாக உண்டான பாசமில்லை, என்பதை அவன் இப்போது அப்பாவின் பேச்சில் தெரிந்து கொண்ட பிறகு அவனுக்கு தூங்குவதற்குகாக மருந்துகள் கொடுத்திருந்தும் தூக்கமே வராமல், ஏதேதோ நினைவுகளில் புரண்டிருந்தான்.
☆☆☆
மறுநாள் காலை
மருத்துவமனையில்..மருத்துவர்கள் ஸ்கேன் பரிசோதனை முடிவுகளை எல்லாம் பரிசீலனை செய்துவிட்டு, மருத்துவ கண்காணிப்பில் அன்று ஒருநாள் அங்கே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அத்தோடு இனி ஆபத்தில்லை என்பதால் அவனை வேறு அறைக்கு மாற்றிவிடுவதாக சொல்லிவிட்டு போனார்.
தனியறைக்கு மாற்றப்பட்ட சற்று நேரத்தில் கதவைத் தட்டும் ஓசை கேட்கவும், சத்யமூர்த்தி தான் வந்துவிட்டார் என்று எண்ணியவாறு சென்று திறந்தாள் மலர்வதனி.
ஆனால் அங்கே, ஜாஸ்மின் ஒரு இளைஞனோடு வந்திருப்பததைக் கண்டு துணுக்குற்றாள். யார் இவன்? அதுவும் இப்படி நெருக்கமாக நிற்கிறானே? என்று யோசனை ஓட, வந்தவர்களுக்கு வழி விட்டு நின்றாள்.
"வதனி, ஏன் அங்கேயே நின்னுட்டே? இங்கே வா, என்று நிரஞ்சன் அழைக்க கதவை மூடிவிட்டு உள்ளே சென்றாள்.
"இவன் என்னோட நண்பன். பெயர் சாரகேஷ். வெளிநாட்டில் வேலை. இப்போது விடுமுறையில் சென்னை வந்திருக்கிறான். ஜாஸ்மின்னுக்கும் அவனை தெரியும், என்று அறிமுகம் செய்தவன்,அவளையும் வந்வனுக்கு அறிமுகம் செய்தான்.
"இவள் என்னோட மாமா மகள், மலர்வதனி. நேற்று இவள் தான் எனக்கு சரியான சமயத்தில் ரத்தம் கொடுத்து காப்பாற்றானாள்" என்றான் நிரஞ்சன். அவன் குரலில் இருந்தது என்ன? பெருமையா, நிம்மதியா?? எதுவென்று மலர்வதனிக்கு புரியவில்லை. அதைவிட அதை கேட்டு அந்த ஜாஸ்மின் முகத்தில் எந்த பொறாமையும் தெரியவில்லை. மாறாக பூரண மகிழ்ச்சி தெரிய, வியப்பாக இருந்தது. தொடர்ந்து நிரஞ்சன் வந்வனிடம் பேச,அங்கே கவனமானாள்.
"சாரகேஷ் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். ஜாஸ்மின் அப்பா இங்கே வருவதாக சொன்னார். அவர் தங்குவதற்கு நல்ல வீடு ஒன்று வேண்டும், நானே ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். எனக்கு இப்படி ஆகிவிட்டது. அதனால் தான் உன்னிடம் சொல்கிறேன். கொஞ்சம் சிரமம் பாராமல் செய்யப்பா"
"வீடு தானே நிரஞ்சன்? எத்தனை நாட்களுக்குள் வேண்டும் சொல்லுங்க"
"இன்றைக்குள் கிடைத்தாலும் சரிதான். அவர் எந்த நேரமும் கிளம்பி வந்துவிடுவார். அவருக்கு பெண்ணை இத்தனை நாள் பிரிந்து இருந்ததே தாளவில்லையாம், அங்கே மழை பெய்வதால் உடனே கிளம்ப முடியாமல் போய்விட்டது என்று அவருக்கு சும்மாவே வருத்தம். மழை நின்றால் அடுத்த விமானத்தில் பறந்து வந்துவிடுவார்"என்றான் கேலியாக.
"ம்க்கும்.. உனக்கு கிண்டலாக இருக்கிறதாக்கும்? பெண்ணை பெத்து வளர்த்து அப்புறம் திடீரென்று பிரிந்தால் கஷ்டமாக இருக்காதா? என்றவளை நிரஞ்சன் நேர் பார்வை பார்க்க, அவள் சட்டென்று பேச்சை நிறுத்திவிட, மலர்வதனிக்கு தெரியக்கூடாத எதையோ அந்த பெண் சொல்லி விட்டாளோ என்று அவள் இருவரையும் பார்த்தபோது,
நிரஞ்சன்,"எனக்கு புரியாமல் என்ன ஜாஸ்? பொதுவாக பெற்றவர்கள் என்றாலே பிள்ளைகள் மீது அன்பும், அக்கறையும் அதிகமாக வைப்பவர்கள் தானே? அதிலும் பெண் பிள்ளை என்றால், அவள் அடுத்தவர் வீடு செல்ல போகிறவள் என்பதால் சற்று அதிக பற்றுதல் இருக்கும்,"என்று விட்டு, தொடர்ந்து,"நீ கொஞ்சம் சீக்கிரம் ஒரு வீட்டை பாரு சாரகேஷ். இரண்டு மாதத்திற்கு என்று ஒப்பந்தம் செய்து கொள். இல்லாவிட்டால் பின்னர் ஏதாவது பிரச்சனையாகிவிடும், எதற்கும் ஜாஸ்மின்னை உன்னோடு அழைத்து போ, அவளுக்கு பிடித்திருந்தால் அட்வான்ஸ் பணத்தை அவளே கொடுத்து விடுவாள்"
"ஓகே, நிரஞ்சன். பார்க்கிறேன், என்றவன் ஜாஸ்மின்னை பார்க்க, அவள் உடனே,"மலர், வந்ததும் சொல்ல நினைத்தேன், மறந்துபோயிற்று. அங்கிளுக்கு ஏதோ வேலை இருக்கிறதாம், அதனால் கொஞ்சம் லேட்டாக வருவேன் என்றார். அதுவரை நான் நிரஞ்சன் கூட இருக்கிறேன். நீ வீட்டுக்கு கிளம்பு. சாரகேஷ், உன்னை வீட்டில் கொண்டு விட்டுவிடுவான்" என்றாள்.
ஜாஸ்மினுடைய தந்தை ஏன் வருகிறார்? அதுவும் அவசரமாக, மகளே தைரியமாக வீட்டிற்குள் வந்து உட்கார்ந்து இருக்கையில் அவர் எதற்காக வெளியே வாடகை வீட்டில் தங்க வேண்டும்? அதென்ன இரண்டு மாத கணக்கு? அதற்குள் பாட்டியை சம்மதிக்க வைத்து விடலாம் என்று அத்தான் நினைக்கிறானோ? ஏற்கனவே அங்கே இன்னொரு ஏற்பாட்டில் பாட்டி இறங்கிவிட்டாள், ஒன்றுக்கு மூன்று பெண்கள் வரிசையில் நிற்கிறார்களே?
அத்தான் காட்டில் மழைதான், என்று எண்ணிக்கொண்டிருக்கையில், ஜாஸ்மின் அப்படி சொல்லவும் மலர்வதனி ஒருகணம் செய்வதறியாது திகைத்தாள்.
நிரஞ்சனோடு அந்த பெண்ணை விட்டுப்போக மனமே இல்லை. அதேபோல் ஒரு அந்நியனோடு செல்லவும் பிடிக்கவில்லை. அதை சொல்ல முடியாமல்,"நான் பஸ்ஸில் போய்விடுவேன், என்றவள் அவளது கைப்பேசியை எடுத்தாள். அப்போது தான் அவள் கைப்பையை எடுத்து வராதது நினைவிற்கு வந்தது. அதற்குள்,"வதனி, நீ இப்போது கிளம்பி போய் பஸ்ஸை பிடித்தாலும் தாமதமாகிவிடும். அம்மா வேறு என்னவோ என்று கற்பனை செய்ய ஆரம்பித்து விடுவாரகள். அதனால் இவனோடு செல்வது தான் உனக்கு நல்லது," என்று நிரஞ்சன் சொல்ல,
"வாங்க சிஸ்டர், உங்களை ட்ராப் பண்ணிட்டு அப்படியே நான் வீடு தேட கிளம்பிடுவேன்" என்று சாரகேஷ் எழுந்து மற்ற இருவரிடமும் விடைபெற்று கிளம்ப,
"வதனி, எங்கே இறக்கி விட சொல்கிறாளோ அங்கேயே இறக்கி விடு சாரகேஷ்"என்றான் நிரஞ்சன்.
"ஷ்யூர்,பை நிரஞ்சன், பை ஜாஸ்மின்" என்றுவிட்டு அவன் வெளியேற,"அத்தான் மருந்து எல்லாம் ஒழுங்காக சாப்பிடுங்க, போனில் அதிகம் பேசக்கூடாது சரியா? வீட்டுக்கு போனதும் போன் செய்கிறேன், என்றவள், ஒருதலையசைப்புடன் ஜாஸ்மின்னிடம் சொல்லி கொண்டு கிளம்பினாள் மலர்வதனி.
அவள் சென்றதும்,"அத்தானா? என்றாள் ஜாஸ்மின் வியப்புக்குரலில்.. அதற்கு பதிலாக நிரஞ்சன் முகத்தில் மர்ம புன்னகை ஒன்று தவழ்ந்தது.