Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

16. அத்தியாயம் ( இறுதி பகுதி)

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
ப்ரியரஞ்சன் வருவது குறைந்ததால் சாருமதி உள்ளூர உடைந்து போயிருந்தாள். அதை பகிரவும் ஆள் இல்லாது தவித்துக்கொண்டிருந்தாள். மூன்றாம் மாதம் சாருமதிக்கு உடலில் மாற்றங்கள் உண்டாக, சாருலதா வற்புறுத்தி மருத்துவரிடம் அழைத்துப் போனாள்.

மருத்துவர் அவளை பரிசோதித்துவிட்டு விஷயத்தை சொல்லவும் அதிர்ச்சியில் மயங்கிச் சரிந்தாள். மயக்கம் தெளிந்த போதோ சாருமதி சுயநினைவை இழந்து பிரம்மை பிடித்தாற் போல் இருந்தாள். மருத்துவர்கள் அவளுக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூற சாருலதா செய்வதறியாது திகைத்தாள். திருமணமின்றி பிள்ளை உண்டானதற்காக கவலைப்படுவதா? பைத்தியமானதற்காக கவலைப்படுவதா? ஆனால் அழுவதற்கும்கூட அவளுக்கு அவகாசம் இல்லையே?

ஏற்கனவே சித்தரஞ்சன் சென்றபிறகு முதல் இரண்டு தினங்கள் தான் அவளிடம் பேசினான். வெளிநாடு சென்றபின் அவளை அழைத்து பேசுவதாக தெரிவித்ததோடு சரி. மற்றபடி அவன் பேசவில்லை. இவள் தொடர்பு கொண்டாலும் உபயோகத்தில் இல்லை என்று தகவல்தான் வந்தது. அதனால் வருத்தமும் ஏமாற்றமும் அடைந்திருந்தாள்.

தன்னிலேயே இருந்த காரணமாக தங்கையை ஊன்றி கவனிக்காது விட்டுவிட்டாள். அதற்காகத்தான் இந்தச் சோதனை போலும்?? ஒரு பெருமூச்சுடன் அடுத்து செய்ய வேண்டியதை நினைத்துப்பார்த்தவளுக்கு விரைந்து செய்ய வேண்டிய வேலைகளில் முக்கியமாக முதலாவதாய் இருந்த பிரச்சனை குழந்தைதான். இந்தக் குழந்தையை எப்படி வளர விடுவது? தங்கையிடம் அவன் யார் எவரென்று கூட அறியமுடியாத சூழலில் குழந்தை வளர்ந்தால் சமூதாயம் கேலி செய்யும், குற்றவாளியாய் பார்க்கும். குற்றம் செய்தவனை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவருக்கு தண்டனை வழங்கும் விசித்திர சமூகத்தில் அல்லவா வாழ்கிறோம்? வெகுவாக யோசித்து கடைசியில் குழந்தையை கலைத்துவிட முடிவு செய்தாள்,சாருலதா.

ஆனால் சாருமதியின் உடல்நிலை மிகவும் பலவீனமாக இருப்பதால் குழந்தை வளர்வதே சிரமம். இப்போது அதை கலைக்கப் போனால் அவளது உயிருக்கு ஆபத்தாகிவிடக் கூடும், என்று மருத்துவர்கள் கூறிவிட மேற்கொண்டு செய்வதறியாது சாருலதா தவித்துக் கொண்டிருக்கையில், அவர்கள் தங்கியிருந்த விடுதியின் காப்பாளர் சந்திரிகா சாருமதியை நலம் விசாரிக்க வந்தார்.

அவரிடம் சாருலதா நிலமையை எடுத்துச் சொன்னாள். இருவரையும் நன்கு அறிந்தவர் என்பதால் உதவி செய்ய முன் வந்தார். தனக்கு தெரிந்த ஆசிரமத்தின் விலாசம் தந்து குழந்தை பெற்று மேலும் இரண்டு மாதங்கள் வரை தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்து தந்தார்.

சாருலதாவிற்கு கலக்கம் நீங்கிற்று. அவளது படிப்பும் முடியும் தருவாயில் இருந்தது. அதற்கும் பாதகமின்றி அந்த ஆசிரமத்தின் உரிமையாளர் அவளுக்கு அங்கேயே ஒரு வேலை போட்டுக் கொடுத்தார்.

சாருமதியின் உடமைகளை ஆராய்ந்த போது அதில் கிடைத்த விசிட்டிங் கார்டு மற்றும் புகைப்படங்களை கண்டு அதிர்ந்து போனாள். ஆக அவளை ஏமாற்றிய கையோடு அவளது தங்கையை சீரழிக்கத்தான் வெளிநாடு போவதாக நாடகம் ஆடினான் போலும் என்று எண்ணி கொதித்துப் போனாள். குழந்தை பிறந்ததும் அவனை கண்டுபிடித்து சாருமதியை அவனோடு சேர்த்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

பிரசவம் என்பது சாதாரணப் பெண்களுக்கே பெரும் சவாலான விஷயம் எனும்போது, மனநலம் சரியில்லாத பெண்ணின் நிலைமை?

சாருமதிக்கு உடல் பலவீனமாக இருந்தது. அதனால் பிரசவத்தில் சிக்கல் உண்டானதில் சின்ன உயிரை மட்டும்தான் காப்பாற்ற முடிந்தது. தங்கையின் இழப்பை சாருலதாவால் தாங்க முடியவில்லை. அப்போதும் குழந்தையை கையில் வாங்கியவளுக்கு உடல் சிலிர்த்தது.

திருமணம் ஆகாமல் குடும்பம் நடத்தாமல் கையில் குழந்தை. வெளியுலகில் எப்படி வாழ்வது? சாருலதா அப்போது அந்த முடிவை எடுத்தாள். தான் சாருமதியாக மாறினாள். அதற்கு அவள் முதலில் அந்த ஊருக்குள் இருக்கக்கூடாது. இருப்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி மாளாது. ஆனால் கைக் குழந்தையுடன் அவள் எங்கே போவாள்?

அப்போதும் ஆசிரமத்தின் தலைவிதான் உதவினார். பெங்களூருக்கு அருகே இருந்த கிராமத்தில் தனலஷ்மி என்று ஒரு மூதாட்டிக்கு உதவி செய்ய ஆள் தேவை. நல்ல செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர். பிள்ளைகள் எல்லாம் தூர தேசம் போய்விட சொந்த மண்ணில் கடைசி காலத்தை கழிக்க விரும்பினார். அங்கே போனால் அந்தம்மாள் வழி நடத்துவார் என்று அனுப்பி வைத்தார்.

அவருக்கு துணையிருக்கப் போனதென்னவோ சாருலதா தான். ஆனால் உதவியது அந்தம்மாதான். 2வருடங்கள் போதே தெரிவில்லை. ஒருநாள் நித்திரையில் அவரது உயிர் பிரிந்துவிட்டது. அவரது இறதி சடங்கில் கலந்து கொள்ள வந்த தாமோதரன் சாருலதாவைப் பற்றி அம்மாள் முன்னரே சொல்லியிருப்பதாக கூறி தன்னோடு சென்னைக்கு அழைத்து வந்தார்.

சாருலதாவை அணைத்து ஆறுதல்படுத்த துடித்த கைகளை அடக்கிக் கொண்டு, "சாருமதியை மோசம் செய்தது நானில்லை என்பதை நீ இப்போதேனும் நம்புகிறாயா லதா? என்று சித்ரஞ்சன் வினவினான்.

விழிநீரை சுண்டிவிட்டவாறு,"நம்புகிறேன் ரஞ்சன்" நான்தான் பதற்றத்தில் அந்தப் படத்தில் இருந்தது நீங்கள் என்று எண்ணிவிட்டேன் மன்னிச்சிடுங்க"

"மன்னிக்க வேண்டியவள் நீதான் லதா. நானும்கூட உன்னை தவறாக எண்ணிவிட்டேன். ஆனாலும் மனதால் அதை ஒப்பத்தான் முடியவில்லை. குழந்தையை பார்த்த போது நான் ரொம்பவே ஆடிப் போய்விட்டேன். உன்னை அப்படியே நகல் எடுத்தாற் போலிருக்கிறதால் அவள் உனக்கு பிறந்தவள் என்றே எண்ணிவிட்டேன் என்று வருத்தத்துடன் சொல்லிவிட்டு ஒரு பெருமூச்சுடன் நிறுத்தினான்.

"அதுதான் இப்போ உண்மை தெரிந்துவிட்டதே ரஞ்சன்? ரெண்டு பேருமே தான் தவறாக எண்ணிவிட்டோம்" சரி, இந்தப் பேச்சு போதும். இது பற்றி இனி எப்போதுமே பேசக்கூடாது, சரிதானா?"

அவனும் ஆமோதிப்பாக தலையசைத்து யோசனையுடன் அவளை நேராய் நோக்கினான் சித்ரஞ்சன்.

அவள் புரியாமல் கேள்வியாய் அவனை பார்த்தாள். இன்னும் அவனுக்கு என்ன குழப்பம்? என்று எண்ணினாள்.

சிலகணங்கள் மௌனத்தில் கழிய மீண்டும் சித்ரஞ்சன் பேசிய போது எந்தவித உணர்வுமின்றி மரத்த குரலில் பேசினான்.

"இப்போது நான் கேட்பது உனக்கு பிடிக்காவிட்டால் சொல்லிவிடு. தயக்கம் வேண்டாம். நான் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன். நீ நன்றாக யோசித்தே பதில் சொல்...

"மஞ்சரியின் அம்மாவாக நீ இருப்பது போல நான் அவளுக்கு அப்பாவாக இருக்க ஆசைப்படுகிறேன். இந்த ஊனமுற்றவனை நீ உன் வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்வாயா?" இறுதியில் என்ன முயன்றும் குரலில் தடுமாற்றத்தை தவிர்க்க இயலவில்லை.

அவன் கேட்ட முதல் கேள்வியிலேயே சாருலதாவின் மனம் உருகிப்போயிற்று என்றால் அடுத்த கேள்வியில் துடித்துப்போனவளாய் அவசரமாக அவனது வாயை பொத்தியவள்,

"ஐயோ ரஞ்சன், ஏன் இப்படி எல்லாம் பேசி என்னையும் வருத்தி உங்களையும் வருத்திக்கொள்கிறீர்கள்? நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் என் மனதில் என்றுமே உங்களைத் தவிர வேறு எவருக்கும் இடமில்லை. இனியும் உங்களைப் பிரிந்து என்னால் வாழ முடியாது ரஞ்சன்" கண்ணீர் பெருக அவனை அணைத்துக் கொள்ள சித்ரஞ்சனும் தன் ஒற்றைக் கரத்தால் அவளை சுற்றி வளைத்து தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

இனி இந்த சாருலதா சித்ரஞ்சனுக்கு சொந்தம், மஞ்சரி அவர்களிருவருக்கும் சொந்தம்.
 
Back
Top