மருதமுத்து பத்திரத்தை எடுத்து வரச் சொன்னதும் மதுவந்தி திகைத்து நின்றது ஒருகணம் தான். உடனேயே சுதாரித்துக் கொண்டு, "வீட்டு பத்திரமா?? என்றாள்!
சரளா மகனுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டு கூடத்தில் பாயை விரித்து படுத்துவிட்டாள். மருதமுத்து நக்கலாக,"இங்கன என்ன பத்து வீட்டுப் பத்திரமா கிடக்கு? எல்லா இந்த வீட்டுப் பத்திரம் தான்! போய் எடுத்தா! சொன்னவன், சாப்பிட அமர்ந்தான்.
"அப்பா ரூம்ல போய் நீங்களே எடுத்துக்கோங்க. எனக்கு அதுபத்தி எதுவும் தெரியாது" என்று தன் அறையினுள் புகுந்து கொண்டாள் மதுவந்தி. மருதமுத்துவிற்கு ஆத்திரம்தான். ஆனால் நல்ல பசியில் இருந்தான். அதனால் வேகமாய் சாப்பிட்டு முடித்தவன், மாணிக்கத்தின் அறைக்குள் நுழைந்தான். எல்லாவற்றையும் புரட்டி பார்த்துவிட்டு, கிடைக்காது போகவே பதற்றம் உண்டாக மதுவந்தியை அழைத்தான்.
"ஏய்…! இங்கன வா புள்ள என்றான் கடுப்பான குரலில்! "அங்கன பத்திரத்தை காணோம்! எனக்கு என்னவோ நீதான் மறைச்சு வச்சுக்கிட்டு பொய் சொல்றாப்ல படுது. அதனால, உன்னோட ரூம்புல இருக்குதான்னு பார்க்கனும், நீ கொஞ்சம் வெளியில வா, நா தேடிப் பாக்குறேன்" என்றதும்
"இங்கே எந்த பத்திரமும் இல்லை. என் புத்தகம்தான் இருக்கு”. என்றாள் எரிச்சலை அடக்கியபடி."
"அத நானே வந்து பார்த்து தெரிஞ்சுக்கிறேன். நீ விலகு” என்று அறைக்குள் நுழையவும் மதுவந்தி வெளியேறி கூடத்திற்கு சென்றாள்,
அவள் அறையில் ஒரே ஒரு அலமாரி மட்டும்தான். மேலே பரணில் பழைய மரசாமான்கள் பாத்திரங்கள் தான் இருக்கும். அலமாரியில் அவள் புத்தகங்கள் மற்றும் கதை புத்தகங்கள் அவ்வளவுதான். அவளுடைய துணிமணிகள் கொஞ்சம்! கழுத்து காது அணிகலன்கள் அதுவும் கவரிங்க நகைகள்தான். எல்லாவற்றையும் புரட்டி பார்த்துவிட்டு, ஆத்திரமாய் வெளிவந்தவன்,
"ஏய்… உண்மையைச் சொல்லு பத்திரம் எங்கே? நாளைக்கு வக்கீலு கொண்டாரச் சொல்லிருக்கான். பேங்க் லாக்கருல எங்கனயும் ஒழிச்சு வச்சிருந்தா மரியாதையா சொல்லிடு. இல்லைன்னா நா என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது" என்று மிரட்டினான்.
"எனக்கு தெரியாதுன்னு சொன்னேன்ல. நான் அதை கண்ணால கூட பார்க்க வில்லை. அப்பா அதுபத்தி எல்லாம் என்கிட்ட பேசுனதே இல்லை., அப்பா எங்கே வச்சிருக்கார்னு தெரியாது" என்று சாதித்தாள் மதுவந்தி.
"ஏய்ய்ய்... திரும்பத்திரும்ப சொன்னா பொய் உண்மை ஆகிடுமா? இந்த வீட்டுல இருக்கிறது இரண்டு அறைதான் இங்கன இல்லைன்னாக்க பத்திரம் கால் முளைச்சு நடந்து போயிருச்சாக்கும்? இதை நம்ப நா ஒன்னும் கேனையன் இல்லை. நீ இப்படி மயிலே மயிலே இறகு போடுன்னு கேட்டா தர மாட்டேடி, இரு இந்த மருதமுத்துவோட சுயரூபத்தைக் காட்றேன், அப்புறம் கதறிட்டு வந்து பத்திரத்தை எடுத்துக்கொடுப்பேடீ...ஆத்திரமாய் சட்டையை மாட்டிக் கொண்டு வேகமாய் வெளியேறினான்.
உள்ளே கொஞ்சம் உதறத்தான் செய்தது. ஆனால் என்ன செய்தாலும் அவள் முடிவில் எந்த மாற்றமுமில்லை. அடி உதைக்கு எல்லாம் பயப்படப் போவதும் இல்லை. மனதோடு அவள் உறுதியை வளர்த்துக் கொண்டவளாய் அவசரமாய் செயல்பட்டாள்.
இனி இங்கே அவளுக்கு வேலை இல்லை. அப்பாவின் காரியத்தை முடித்து கிளம்ப எண்ணியிருந்தாள். ஆனால் அதுவரை பொறுப்பதற்கு அவகாசம் இல்லை. கூடத்தில் சரளா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். தோள்பையுடன் அவசரமாய் வீட்டை விட்டு வெளியேறினாள்.
ஆனால்…. தெருமுனையில் அவள் ஆட்டோவில் ஏறிச் செல்வதை ஒருவன் பார்த்ததையோ அவன் மருதமுத்துவிற்கு தகவல் சொன்ன கையோடு அவளை பின் தொடர்ந்ததையோ மதுவந்தி அறியவில்லை.
ஆனால் உள்ளுர ஒரு எச்சரிக்கை உணர்வு தோன்ற ஆட்டோவை ரயில் நிலையத்திற்கு போகச்சொல்லி விட்டு தோழிக்கும் குறுஞ்செய்தியில் தகவல் அனுப்பினாள். ரயில் நிலையத்தை அடையும் போது பலத்த மழை பெய்யத் தொடங்கியது. என்னவோ மதுவந்தி ஊரைவிட்டுப் போகப் போகிறாள் என்று வானமே அழுவது போல...
தோழியின் அழைப்பு வர, தவிப்புடன் பேசினாள். "ஹலோ,கீதா Sms கிடைச்சதா?
"கிடைச்சதுப்பா, ஆனால் மழை இப்படி வெளுக்குதே. நான் எப்படி வர்றதுன்னு தெரியலையேப்பா. மழை நின்னதும் வந்துடுறேன் மது. நீ வெய்ட்டிங் ரூமில் போய் இருந்துக்கோ. கையில பணம் வச்சிருக்கியா?
"பாங்க்ல இருந்து எடுத்த பணத்துல பாதியை என் அலமாரியில் வச்சிட்டு வந்துட்டேன். அவர்கள் செய்த உதவிக்கு என்னாலான கைமாறு அவ்வளவுதான். மீதி கையில் இருக்கு. மழை நின்னுட்டா நீ அங்கிள்கூட வா கீதா. நான் வெய்ட்டிங் ரும்லதான் இருக்கேன்."என்றவள் மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு போனை கைப்பையில் போட்டு நிமிர்ந்த மதுவந்தி ,வெயிட்டிங் ரூமிற்கு வெளியே சற்று தொலைவில் மருதமுத்து நிற்பதை கண்டு அதிர்ந்தாள். படபடத்த மனதை அடக்க முயன்றவாறு தலையில் துப்பட்டாவை வட இந்திப் பெண் போல போர்த்திக் கொண்டாள். மருதமுத்து நாலாபுறமும் தீவிரமாய் யாரையோ தேடுவது புரிந்தது.
யாரையோ என்ன இவளைத்தான். அவன் கண்ணில் பட்டால் அதோ கதிதான். அவன் வேறுபுறமாய் அவசரமாய் நகர அப்போது அங்கே ஒரு ரயில் வந்து நின்றது. விடுமுறையை முடித்து ஊர் திரும்பும் குடும்பங்களின் கூட்டம் அலைமோதியது. வெளியிலோ மழையின் வேகமும் அதிகரிக்க...
தோழி இந்த மழையில் வருவது சாத்தியமில்லை. மருதமுத்து கையில் கிடைத்தால் இவள் வாழ்க்கைக்கு உத்திரவாதமில்லை. பாவை அவள் தேர்ந்தெடுத்தாள் அந்தவழி....
அது என்ன வழி??