அன்று இரவு மதுவந்தி தூக்கமின்றி புரண்டு கொண்டிருந்தாள். பிறந்த வீட்டை விட்டு திருமணம் செய்து போகும் பெண்ணைப் போல அவள் நிலை இருந்தது. மணப்பெண்ணுக்கு, வேறு நல்ல சந்தோஷக் கனவுகளும் இருக்கும். ஆனால் மதுவந்திக்கு அப்படி இல்லை. மாறாக ஒருவித திருப்தி இருந்தது! ஒருவாறு பழைய நினைவுகளை எல்லாம் அசைப் போட்டுவிட்டு கண்ணயர்ந்தாள்.
மறுநாள்...வெகு சீக்கிரம் எழுந்து குளித்து மதுவந்தி வெளியே செல்லத் தயாராகி வரவும் யோசனையாய் பார்த்தபடி காபியை கையில் தந்தாள் சரளா. மருதமுத்து இன்னும் தூக்கத்தில் இருந்தான். காபியை நிதானமாய் குடித்துவிட்டு, கையில் நாலு புத்தகங்களை எடுத்துக்கொண்டு, அத்தை, இந்த புத்தகத்தை இன்னிக்கே லைப்ரரில கொடுக்கனும்! அப்படியே என் தோழி வீடு வரை போய்ட்டு வர்றேன். இங்கே அப்பா ஞாபகமாவே இருக்கு",என்றவள் அத்தையின் பதிலுக்குக்கூட காத்திராமல் மதுவந்தி வெளியேறினாள்.
தெருமுனையில் ஆட்டோவில் ஏறும் வரை கொஞ்சம் உதைப்பாகத்தான் இருந்தது. நேராய் தோழியின் வீட்டில் போய் இறங்காமல் நூலகம் ஒன்றில் இறங்கினாள். ஆட்டோ கிளம்பிச் செல்லவும், அடுத்த தெருவில் இருந்த தோழியின் வீட்டிற்கு நடந்து சென்றாள், தோழி கீதாவின் தந்தை சபாபதி அவளை வரவேற்றார்.
"வாம்மா மது, உனக்காகத்தான் காத்திருக்கேன், என்று வரவேற்றவர் “சந்தியா, டிபன் ரெடியாம்மா? என்று உள்ளே குரல் கொடுத்தார்.
அவரது மனைவி சந்தியா,“ரெடியா இருக்குங்க, என்றவாறு கூடத்திற்கு வந்து மதுவந்தியை வரவேற்றாள்.
“வணக்கம் அங்கிள், வணக்கம் ஆன்ட்டி! நான் அப்புறமாக சாப்பிடுகிறேன் ஆன்ட்டி, என்றதும்
“சரிம்மா மது, நீ அங்கிள்கூட பேசிக்கிட்டு இரு உள்ளே கொஞ்சம் வேலை இருக்கு, நான் போய் கீதாவை அனுப்புறேன்மா என்று சந்தியா செல்ல...
சபாபதியிடம் திரும்பி, “கீதா எல்லாம் சொன்னாளா அங்கிள்? என் முடிவு சரிதானே அங்கிள்?“ என்றாள் மதுவந்தி.
“உன் நிலையில் நீ எடுத்த முடிவு சரிதானம்மா! பத்திரம் எல்லாம் பக்காவா இருக்கு மது, நான் வக்கீல்கிட்ட எல்லாம் பேசிட்டேன். அவர் எல்லாம் ரெடி பண்ணிடுவார். ஆனால், அந்த சொத்து உன் பேரிலேயே இருக்கட்டுமே அம்மா. உன் பூர்வீக வீடு இல்லையாம்மா? நாளை உனக்கென்று ஒரு குடும்பம் அமையும் போது உன் தலையின் மேல் ஒரு கூரை வேண்டாமா அம்மா? சபாபதி கேட்கவும் ஒரு கணம் ரவீந்தரனின் முகம் மனதில் வந்து போனது.
மெலிதாக புன்னகைத்துவிட்டு, “எனக்காக என்னை ஏற்க ஒருவர் வந்தால் தான் எனக்கு குடும்ப வாழ்வெல்லாம். ஆனால் அங்கிள் இந்த ஏற்பாட்டில் துளியும் வருத்தமில்லை எனக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. எப்போ நான் வந்து கை எழுத்து போடனும் மட்டும் சொல்லுங்க நான் போடுறேன்" என்றவளை சிறு வியப்பும்! பரிவுமாகப் பார்த்தார் பெரியவர்.
சற்று நேரம் பேசியிருந்துவிட்டு காலை உணவை முடித்துக் கொண்டு சபாபதி பணிக்கு கிளம்பிச் செல்ல தோழிகள் இருவரும் கடைகளுக்கு கிளம்பிச் சென்று சில பொருட்களை வாங்கிக் கொணர்ந்து தோழியின் வீட்டிலேயே வைத்துவிட்டு மதுவந்தி விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினாள். வீடு நிசப்தமாக காணப்பட்டது. சரளா அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருப்பாள் போலும் முடியை உலர்த்திக் கொண்டிருந்தவள் சின்னவளை பார்த்ததும்,
“வந்துட்டியா கண்ணு, கை கால் கழுவிட்டு வா சாப்பிடலாம்" என்று அழைத்தாள். மறுக்காமல் சொன்னதைச் செய்தாள், மதுவந்தி. அவளுடன் சரளாவும் சாப்பிட்டு முடிக்கையில் மருதமுத்து வந்து சேர்ந்தான்.
"அம்மா அவகிட்ட கேட்கச் சொன்னேனே கேட்டியா என்றான், அதிகாரத்தோரணையில். "அட,இப்போதான் வந்து சோத்த சாப்பிட்டா. நீதான் வந்துட்டியே கேட்டுக்க மருது, அதுக்கு முன்னால சோத்தப் போடுறேன் சாப்பிட்டியானா எனக்கு வேலை முடியும்,நானும் செத்த அப்படியே கண்ணசருவேன்" என்றாள்.
"சரி சரி எடுத்து வை நான் முகம் கழுவிட்டு வர்றேன்” என்று தாயிடம் சொன்னவன் ,சாப்பிட்ட தட்டை கழுவி வைத்துவிட்டு தன் அறைக்கு செல்லப் போன மதுவந்தியிடம்,“இந்தா புள்ள இந்த வீட்டுப் பத்திரத்த எடுத்தா" என்றதும் மதுவந்திக்கு ஒருகணம்" திக்" கென்றது!
முந்தியவன் கை மந்திரவாள் அல்லவா.? புரிந்திருக்குமே உங்களுக்கு...?!