தந்தை திடுமென கலங்கவும் நிரஞ்சன் திடுக்கிட்டான். அவனே உள்ளூர ஒருவகையில் குற்றவுணர்வில்
தவித்துக்கொண்டு இருந்ததால் அப்பாவை தேற்றும் வகை தெரியாமல் ஒருகணம் செய்வதறியாது விழித்தான். உடனேயே தந்தை வருந்துவது கருத்தில் பட," அப்பா எதுக்கு வீணாக மனசை குழப்பிக்கிறீங்க? சொல்லப்போனால் இதற்கு காரணம் என்று பார்த்தால், நானும் கூடத்தான். அம்மாவிற்கு இப்படி ஆகியிருக்க வேண்டாம். கடவுள் அருள் அம்மா பிழைச்சுட்டாங்க. இனிமேலாவது அவங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வோம் அப்பா. இவ்வளவு நாளும் பாட்டியின் விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்தது போதும். அதற்காக அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதில்லை. பாட்டி கெட்டவர்கள் ஒன்றும் இல்லை. ஆனால் அவர்களாகவே வகுத்து வைத்திருக்கும் கோட்பாடுகள் தவறு என்பதை அவர்களுக்கு புரிய வைப்போம்"
"நீ சொல்றது சரி ரஞ்சி. அப்படியே செய்வோம், என்றவர் "ஆனால் நீ அழைத்து வந்திருக்கும் பெண்? அவளை ஒருநாளும் உன் பாட்டி ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதற்கு என்ன செய்யப்ப் போகிறாய்? "
"அதைப்பற்றி இப்போது என்ன அப்பா? முதலில் அம்மா குணமாகி வீட்டிற்கு வரட்டும். அத்தோடு இன்னும் ஒரு விஷயம் முக்கியமாக இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும். இப்போது நீங்கள் நகர்ந்து உட்காருங்கள். நான் காரை செலுத்துகிறேன்"என்றான்.
"பரவாயில்லை நானே ஓட்டுகிறேன் ரஞ்சி, என்றபடி வண்டியை கிளப்பிக்கொண்டே,"காலையில் வரை உன் உடம்பை அலட்டிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மலர் சொல்லித்தான் அனுப்பினாள். இன்னிக்கு அவள் சமயோசிதமாக நடந்ததால் தான், உன் அம்மா உயிரோடு
இருந்திருக்க மாட்டாள்" என்றபோது அவரது குரல் கரகரத்தது.
அப்பாவின் கையில் தட்டி கொடுத்துவிட்டு,"சங்கரன் தாத்தா சொன்னார் அப்பா. எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க, நம்ம நிறுவனத்தில் எவ்வளவு பேருக்கு நாம் வேலை கொடுத்திருக்கிறோம்? அப்படி இருக்க அவள் ஏன் வேலைக்கு போகிறாள்? அதற்கு என்ன அவசியம்?" என்றான் தீவிரமான குரலில்.
"நானும் அதைத்தான் உன் அம்மாக்கிட்டே கேட்டேன். "அதெல்லாம் தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க? அவள் படிப்பை முடித்து விட்டாள். அறைக்குள் எவ்வளவு நேரம் தான் சும்மாவே இருப்பாள்? வேலைக்கு போனால் ஏதோ நாலு காசு கிடைக்கும். அது அவளோட கைச்செலவுக்கு ஆகும் தானே? அதனால் அவளுக்கு ஒர் நல்ல இடத்தில் வேலை வாங்கி கொடுத்திருங்க,
அப்படின்னு முடிச்சுட்டா. நானும் அதுக்கு மேலே கேட்கவில்லை. ஆனால் உன் அம்மா சொன்னது உண்மையான காரணம் இல்லை என்று எனக்கு தெரியும். சொல்லப்போனால் அதை மலர்கிட்டே தான் கேட்கணும் ரஞ்சி. எனக்கு அவள் கிட்டே கேட்க துணிவில்லை"
"என்னப்பா சொல்றீங்க? இதை கேட்க துணிச்சல் எதுக்கு?"என்று நிரஞ்சன் குழப்பத்துடன் கேட்க,
"வீடு வந்திருச்சு மகனே, உள்ளே என்ன பஞ்சாயத்து காத்திருக்குதோ தெரியலை. அதனால் இந்த விஷயத்தை அப்புறமா கேளு. சொல்கிறேன்"என்றவாறு வண்டியை போர்டிகோவில் நிறுத்திவிட்டு, இறங்கி உள்ளே செல்ல, அவர் பின்னோடு நிரஞ்சனும் இறங்கி வீட்டினுள் நுழைந்தான். வீடு நிசப்தமாக இருந்தது.
"அப்பா, இப்போதைக்கு எனக்கு வார்த்தை போர் நடத்த தெம்பு இல்லை. அதனால் நான் என்னோட அறைக்குப் போகிறேன். அப்படியே பாட்டி எதாவது சொன்னால் காலையில் பேசிக்கலாம்னு சொல்லிடுங்க. நீங்க சாப்பிட்டு அப்புறம் படுங்க அப்பா ப்ளீஸ்"என்று தந்தையின் கரத்தை பற்றி அழுத்திவிட்டு வேகமாக அவனது அறைக்கு சென்றுவிட்டான்.
காந்திமதி சாப்பாட்டு அறையில் காத்திருந்தாள். சாப்பிட்டு கொண்டிருந்த சந்திரமதியும், நிகிதாவும்,
சத்யமூர்த்தியை கேள்வியாக பார்க்க,"வாப்பா சத்யம், வடிவுக்கு என்னாச்சுனு விசாரிக்கலாம்னு நிகிதா உனக்கு போன் பண்ணிட்டே இருந்தாள். அப்புறம் தான்,நீ போனை இங்கேயே வச்சிட்டுப் போயிட்டேனு, தெரிஞ்சது, சாந்தமாக கேட்ட தாயை விசித்திரமாக பார்த்துவிட்டு,
"அவளுக்கு மாரடைப்பு அம்மா, சரியான நேரத்தில் போனதால் உயிர் பிழைத்தாள் என்று டாக்டர் சொன்னார்" என்று கரகரத்த குரலில் சொல்ல,
"மூவருமே அதிர்ச்சியுடன் அவரைப் பார்க்க,"ஐயோ, என்னப்பா சொல்றே சத்தியம்? நல்லாதானே இருந்தாள்? என்று பதற்றத்துடன் காந்திமதி வினவ,
"அப்படித்தான் நானும் நினைச்சேன் மனஅழுத்தம் காரணமா நெஞ்சு வலி வந்திருக்கு, இனி அவளுக்கு அதிர்ச்சி தர்றாப்ல எந்த விஷயமும் சொல்லக்கூடாது, அதிகமாக வேலை எதுவும் செய்யக்கூடாது என்று டாக்டர் சொன்னார்"
"கடவுளே, இதென்ன சோதனை? ஆமா,மருமகள் கூடவே இருக்காமல் நீ ஏன் கிளம்பி வந்துட்டே சத்யம்? அங்கே கூட இருந்து யார் பார்த்துக்கிறது? வேணும்னா சந்திராவை, என்றவளின் பேச்சில் குறுக்கிட்டு,
"அதெல்லாம் வேண்டாம் அம்மா. மலர் இருக்கிறாள். அங்கே அறை என்று இல்லை. வெராண்டாவில் தான் உட்கார்ந்து இருக்கனும் எனக்கு நேரத்துக்கு மாத்திரை போடனும்னு போகச் சொல்லிவிட்டாள். காலையில் போனால் போதும்"
காந்திமதிக்கு சற்று கடுப்பு தான். ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாமல், "சரிப்பா நீ போய்க் கை கால் கழுவிட்டு வந்து சாப்பிடு," என்ற தாயை புதிதாகப் பார்த்துவிட்டு, பக்கவாட்டில் தோட்டத்திற்கு செல்லும் வாசல் நோக்கி சென்றார்.
"அம்மாவிற்கு என்னவாயிற்று ? வழக்கமாக ஆர்ப்பாட்டம் செய்பவள், இன்றைக்கு இத்தனை அமைதியாக பேசுகிறாளே? உன் மனைவி என்றுதான் குறிப்பிடுவாள், இன்று அவள் மருமகள் ஆகிவிட்டது எப்படி? யோசனையுடன் கைகால்களை கழுவிவிட்டு சாப்பிடப் போனார்.
☆☆☆
நிரஞ்சன் அவனது அறையில் சென்று உடை மாற்றக்கூட தோன்றாமல் அப்படியே கட்டிலில் விழுந்தான். ஆனால் தூக்கம் வரவில்லை. அவன் மனதுக்குள் ஏதேதோ எண்ணங்கள் வந்து அலைக்கழித்தது.
அவனது கைப்பேசி திடுமென ஒலித்தது. எடுத்தான் ஏதோ புது எண், அசுவாரசியமாக உயிர்பித்து, "ஹலோ" சொன்னான்.
"தொந்தரவுக்கு மன்னிக்கனும், ந.. நான் மலர்வதனி பேசறேன்" என்றதும் பதறிப்போனவனாக,
"அம்மா.. அம்மாவுக்கு? என்றவனுக்கு மேலே கேட்க வார்த்தை வராமல் தடுமாற,
"அத்தைக்கு ஒன்றுமில்லை. நன்றாக தூங்குகிறார்கள். நான் மாமாவுக்குத் தான் முதலில் போன் செய்தேன், அது ஸ்விட்ச் ஆஃப்னு வந்துச்சு. அப்புறமாக சங்கரன் தாத்தாவிற்கு போன் செய்தேன்,"அவர் சொன்னப் பிறகு தான், மாமாவும் நீங்களும் மட்டும் வீட்டுக்கு கிளம்பிப் போனது தெரிஞ்சது, அதனால் வேற வழியிலலாமல் உங்களை தொந்தரவு செய்ய வேண்டியதாகிவிட்டது. சாரி"அவள் குரலில் வருத்தம் தெரிய,
ஓஹோ மேடம் நேரடியாக என்னை தொடர்பு கொள்ள மாட்டிங்களோ? கடைசி Option நானாக்கும்? ம்ம் இருக்கட்டும், உன் அத்தை வரட்டும். அப்புறம் வச்சுக்கிறேன் கச்சேரி என்று உள்ளூர எண்ணியபடி,"It's ok வதனி, நீ போன் பண்ணினதுக்கு விளக்கம் எல்லாம் கொடுக்க வேண்டாம். அப்புறம் சாரி எல்லாம் கேட்க தேவையில்லை. நீ எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம், சரி, சொல் அம்மாவுக்கு ஒன்றுமில்லை என்றால், அப்புறம் என்ன விஷயத்திற்காக அழைத்தாய்?"
"அது நீஙகள் இருவரும் நல்லபடியாக வீடு போய் சேர்ந்தீர்களா? என்று கேட்கத்தான்... அத்தோடு காலையில் வரும்போது அத்தைக்கு மாற்றுத் துணி எடுத்துட்டு வரச் சொல்லத்தான்".
"ஓ! சரி, காலையில் எடுத்து கொண்டு வர்றோம். நாங்கள் நல்லபடியாக வந்து சேர்ந்து விட்டோம், அப்பா போனில் சார்ஜ் இருந்திருக்காது என்று நினைக்கிறேன். எனக்கும் இப்போது பரவாயில்லை, என்றவன் சரி நீ சாப்பிட்டாயா? என்றான்.
"அவள் கேட்காமல் விட்ட கேள்விக்கும் அவன் பதில் சொல்ல, மனதுக்குள் சிரித்துக்கொண்டு, சாப்பிடத்தான் கேண்டீன் வந்திருக்கிறேன்" என்று பதில் அளித்தாள்.
"ம்ம்.. குட் கேர்ள், தாங்க்ஸ் வதனி" என்றான்
" எதுக்கு தாங்க்ஸ்?"
"ம்ம் என்னவோ சொல்லனும்னு தோனுச்சு, சரி, நீ சாப்பிடு, குட் நைட், டேக் கேர்" என்றதும்
"எனக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்ல தேவையே இல்லை, என்று அவனைப் போலவே சொல்லிவிட்டு குட் நைட், டேக் கேர், சீ யூ" என்று பேச்சை முடித்துக் கொண்டாள்.
நிரஞ்சனுக்கு அவளிடம் பேசிய பிறகு அத்தனை நேரம் மனதில் இருந்த உளைச்சல் நீங்கி ஒருவித அமைதி பரவ, அப்படியே கண்ணயர்ந்தான்.
☆☆☆
ஒன்பது மணிக்கு மேல், ஜாஸ்மின் வீடு வந்து சேர்ந்தபோது, வீடு நிசப்தமாக, கூடத்துக்கு விளக்கு தவிர்த்து எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு இருந்தது. அழைப்பு மணியை அழுத்துவதா வேண்டாமா என்று யோசித்தவள், கதவைத் தள்ளி பார்த்தாள். அது திறந்தே இருக்கவும் நிம்மதி பெருமூச்சுடன் உள்ளே சென்றால், சத்யமூர்த்தி தொலைக்காட்சியை சத்தம் குறைவாக வைத்து பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
அவள் வந்த அரவம் கேட்டு திரும்பி,"நீ வந்துவிட்டாயா? சரி உன் அறைக்கு போம்மா" என்று தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு எழுந்து வாயிலுக்கு செல்ல,
அவர் அவளது வருகைக்காகத் தான் காத்திருந்தார், என்று புரிய ஜாஸ்மினுக்கு குற்றவுணர்வு உண்டாயிற்று. "அங்கிள் ஒரு நிமிஷம், ஆன்ட்டிக்கு உடம்பு சரியில்லை என்றார் டிரைவர். இப்போது எப்படி இருக்கிறாங்க? என்றாள்
"இப்போதைக்கு பிரச்சினை இல்லை. காலையில் டாக்டர் பரிசோதனை செய்தபின் சொல்கிறேன் என்றார், நாளை போனால் தான் விவரம் தெரியும் "
" ஓ! ஐம் வெரி சாரி அங்கிள்" என்றாள் ஜாஸ்மின்.
சத்யமூர்த்தி புரியாமல் அவளை பார்த்தார்.