Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

10. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
சித்ரஞ்சன் நிழல் போல் ஒருவனை நியமித்திருப்பதை அறியாத சாரு மகளை அழைத்துக் கொண்டு பெங்களூருக்கு பயணமானாள். மஞ்சரி கிளம்பமாட்டேன் என்று அடம் பிடித்தாள். அவளை ஒருவாறு சாமாதானம் செய்து உடன் அழைத்துப் போனாள்.

ஆனால் ....

மறுநாள் காலை அவள் பெங்களூரை அடையுமுன்பாக சித்ரஞ்சன் அங்கே இருந்தான். அதுவும் அவள், வந்து இறங்கிய வண்டியின் அருகிலேயே காருடன் காத்திருந்தான்.

பஸ்ஸிலிருந்து இறங்கிய சாரு, அவனைப் பார்த்ததும் அப்படியே திகைத்து நிற்க.. மஞ்சரியோ, குதூகலத்துடன்,"ஹைய்ய்ய், அங்கிள்.. என்று தாவி குதித்து ஓடிச் சென்றாள்!

அவனும் வாரி எடுத்து அணைத்து ஒரு பூச் செண்டைப் போல தூக்கிக் கொண்டான். அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள். பதிலுக்கு சித்ரஞ்சனும் முத்தமிட்டான்.

"அங்கிள் உங்களுக்கு மேஜிக் தெரியுமா?" என்றாள் கண்கள் விரிய ,

"ம்ம்..கொஞ்சூண்டு தெரியும்டா ஏஞ்சல், ஆமா இப்போ என்னாச்சு?"குழந்தை முகத்தில் முன்புறம் வந்து விழுந்த முடிக்கற்றையை ஒதுக்கிவிட்டவாறு வினவினான்.

"நாங்க வர்றது உங்களுக்கு எப்படி தெரிஞ்சுச்சு அங்கிள்?" தன் இரு பிஞ்சுக் கைகளால் அவனது முகத்தை தாங்கிக் கொண்டு கேட்க வாய்விட்டு சிரித்தான்.

“அதுதான் நீயே சொல்லிட்டியே செல்லம் மேஜிக்லதான் தெரிஞ்சது”என்றுவிட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டு காரின் முன்புறம் அமர வைத்துவிட்டு காரோட்டியிடம் சைகை செய்ய அவன் சாருவின் பெட்டியை எடுத்துக் கொண்டு போக,

வேரோடியவளாய் வெறித்த பார்வையுடன் நின்றவளிடம் சென்று "இங்கேயே எல்லாருக்கும் இலவச காட்சிப் பொருளாக நிற்பதாக வேண்டுதலா?" என்றான் குரலில் ஏளனம் தொனிக்க..

சாரு, சிலைக்கு உயிர் வந்தது. கண்களில் கனல் தெறித்தது."என்னை நிம்மதியா இருக்க விடமாட்டீர்களா?"என்றாள் ஆத்திரத்தை அடக்கிய குரலில்.

"ஷ் ஷ், லதா நாம எதுவானாலும் நம் வீட்டிற்குப் போய் வைத்துக் கொள்வோமே" என்றவன் அவளின் கையைப் பற்றியபடி நடக்க முயல,

பல்லை கடித்தபடி,"நான் சாருமதி கையை விடுங்கள் நானே வருகிறேன்"என்று அடிக்குரலில் சீற,

"எத்தனை நாள் இதே பொய்யை சொல்வாய் என்று நானும் பார்க்கிறேன்" என்றவன் அவள் கைகளை விடுவித்துவிட்டு காரின் பின்பக்கம் சென்று ஏறிக் கொள்ள,

"அங்கிள் நான் உங்ககிட்ட உட்கார்ந்துக்கிறேனே" என்று பின்புறம் தாவினாள்.

"வாடா செல்லம், என்று தன் மடியில் இருத்திக் கொண்டான். இருவரும் சலசலத்தபடி வர சாரு,வேண்டா வெறுப்பாக கதவருகில் ஒட்டி அமர்ந்து வெளியே வெறித்தபடி வந்தாள்!

சாருவிற்கு, விஷயம் அப்போது தான் விளங்கிற்று. இரண்டும் இரண்டும் நாலு என்பது போல அன்று கடற்கரைக்கும் அடுத்து மருத்துவமனைக்கும் அவன் எதேட்சையாக வரவில்லை. இன்றும் அப்படித்தான், அவளுக்கு பின்னால் ஒற்றன் வைத்திருக்கிறான். செய்வதையும் செய்துவிட்டு எதற்காக இந்த வேவு பார்க்கும் வேலை? நேராய் பேச தைரியமில்லை தானே? இப்போது குழந்தையை வளைத்துப் போட்டு அவளை மடக்க எண்ணுகிறானா? அது ஒருக்காலும் நடவாது. மனம் உலைக்களமாக கொதித்தது.

கார் சிறிய பங்களாவினுள் நுழைந்தது. அழகான தோட்டத்தின் நடுவே அந்த பங்களா நின்றிருந்தது. குழந்தையுடன் உறவாடியவாறே சித்ரஞ்சன் இறங்கி வீட்டினுள் செல்ல பிரமை பிடித்தாற்போல அமர்ந்திருந்த சாரு, காரோட்டி கதவைத் திறந்துவிட சுதாரித்துக் கொண்டு இறங்கினாள்.

பங்களாவினுள் நுழைந்தவளை ஒரு பணிப் பெண் வந்து அழைத்துப் போய் மாடியில் இருந்த அறையைக் காட்டி "இதுதான்மா உங்க அறை, என் பேரு மகிளா, எதுவும் வேணும்னா என்னைக் கூப்பிடுங்கம்மா, என்ன சாப்பிடுறீங்க காபியா டீயா? டிபனுக்கு என்ன செய்யட்டும்மா? இப்பவே சொன்னா நீங்க குளிச்சிட்டு வர்றதுக்குள்ளார தயார் பண்ணிடுவேன்மா"

சாருவிற்கு அவள் அங்கிருந்து போனால் போதும் என்றிருந்தது. பொறுமையை இழுத்து பிடித்தபடி "எனக்கு தலை வலிக்குது. இப்போதைக்கு காபி மட்டும் போதும். டிபன் எல்லாம் உன் அய்யாவைக் கேட்டு செய்மா"என்று அவளை அனுப்பிவிட்டு அங்கிருந்த சோபாவில் பொத்தென்று அமர்ந்தாள்.

மனம் இப்போது குழப்பத்தில் இருந்தது. அவன் எதற்காக பின் தொடர்ந்து வந்திருக்கிறான்? இங்கே அழைத்து வந்த நோக்கமென்ன? இத்தனை பணியாளர்களுடன் இருக்கும் வீட்டிற்கு அவளையும் குழந்தையையும் தைரியமாய் அழைத்து வருவதென்றால்? அவன் தவறை ஒத்துக் கொள்ளத் தயாராகிவிட்டானா? ஆனால் அவளின் இழப்பு அதை ஈடு செய்ய முடியாதே? அதற்கு என்ன பதில் சொல்வான்? விழிகளில் நீர் பெருக யோசனையில் ஆழ்ந்து போனாள்.
 
Back
Top