Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

09. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
அன்று மாலையில் மாணிக்கம் கண்விழித்தார். அந்த அறையின் வசதியை பார்த்தவருக்கு மனது மருட்டியது. மகள் எப்படி சமாளிப்பாள்? கையிருப்பு என்று ஒரு சில ஆயிரங்கள் வங்கிக் கணக்கில் இருக்கிறது. மகள் எப்படி சமாளிப்பாள்?? அவருக்கு பதற்றத்தில் கண்களை இருட்டிக் கொண்டு வர அருகில் இருந்த நர்ஸ் ஓடிச் சென்று மருத்துவரை அழைத்து வந்தாள். அவசரமாய் சிகிச்சையை ஆரம்பித்தார்.

ஆனால் மாணிக்கத்தின் ரத்த அழுத்தம் உயர்ந்ததே தவிர குறையவில்லை. மருத்துவருக்கு சற்று கவலையாகிப் போயிற்று. நர்ஸிடம் யாரும் வந்தார்களா என்று விசாரித்து அவள் இல்லை என்று தெரிவிக்க குழம்பினார்.
தற்காலிகமாய் பெரும் முயற்சி செய்து அவரது உடல்நிலையை கட்டுக்குள் கொணர்ந்த மருத்துவர், மதுவந்தியை அழைத்து விபரம் சொன்னார்.

"அவருக்குள் ஏதோ பெரும் கவலை இருக்கிறதம்மா. அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை. இப்போதைக்கு மருந்து கொடுத்து தூங்க வைத்திருக்கிறோம். அவர் கண் விழிக்கையில் இதே நிலை நீடித்தால் காப்பாற்றுவது மிகவும் சிரமம்மா! மருத்துவர் சொன்னதும் மதுவந்திக்கு மீண்டும் மனதில் கனம் ஏறிப்போயிற்று. கடவுளிடம் சரணடைந்து கண்ணீர் வழிய பிரார்த்திக்கலானாள்.

கெட்டதிலும் ஒரு நல்லது உண்டு என்பார்கள், இறைவன் அப்படிப் பட்ட நிகழ்வுகளை நமக்கு காட்டத்தானே செய்கிறான் .....?

மருத்துவர் சொன்னது அவளுக்கு திகைப்பாகத் தான் இருந்தது. இப்போது அப்படி என்ன கவலை அப்பாவிற்கு? ஒருவேளை பணியிடத்தில் பிரச்சனையாக இருக்குமோ என்று எண்ணினால் அதுவும் இல்லையே அவள் தகவல் சொன்னபோது தந்தை பற்றி வருந்தினார்களே தவிர வேறு எதையும் கூறவில்லை. அவரைப் பார்க்க ஒன்று இரண்டு பேர் உடன் பணிபுரிபவர்கள் வந்தபோதும் கூட ஏதும் தெரிவிக்கவில்லை. அப்படி என்றால் வேறு என்னவாக இருக்கும் ?அவள் மனதுக்குள்ளாக வேதனையுடன் நினைத்தபடி இருக்கையில் அதைவிட பெரும் தலைவலியாக வந்து சேர்ந்தாள் சரளா. கூடவே அவளது அருமை மகன் மருதமுத்து.

மதுவந்திக்கு எப்போதுமே மருதமுத்து என்றால் ஒதுக்கம் தான். கிராமத்திற்கு கோவில் விசேஷங்களுக்கு போனாலும் கூட அதிகமாய் அவன் முன்பு போகமாட்டாள். முதல் காரணம் அவனது முரட்டு தோற்றம். இரண்டாவது காரணம் அவனது பார்வை.

பாட்டி இருந்த வரையிலும்தான் கிராமத்திற்கு போக வர இருந்தது எல்லாம். அதன் பின் தந்தை மட்டுமாக எப்போதேனும் முக்கியம் என்றால் போய்வந்தார்.
சரளாதான் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்தாள். வந்தாலும் கூட காலையில் வந்து மாலையில் கிளம்பிவிடுவாள்.

ஆனால் இப்போது மகனும் வந்திருக்கிறான். முன்பே மதுவந்திக்கு அவனைக் கண்டால் ஆகாது. இப்போது அவனது தோற்றம் காண உண்மையில் நடுக்கமாக இருந்தது.

"கண்ணு அண்ணாக்கு என்னாச்சு இப்ப எப்படி இருக்கிறாரு கண்ணு? என்றாள் சரளா வராத கண்ணீரை வரவழைத்தபடி.

மதுவந்திக்கு ஒருகணம் பேச்சே
வரவில்லை. தன்னை சமாளித்துக் கொண்டு சுருக்கமாக சொன்னாள்.

"அண்ணாவுக்கு என்ன பெரிய கவலை கண்ணு? எல்லாம் உன்னைப் பத்தின கவலையாத்தான் இருக்கும், வேறென்ன? அதுக்கு தான் நாங்க இருக்கோமே கண்ணு, இப்போ அப்பாவப் பார்க்கலாமில்ல?? சரளாவின் பேச்சுப் புரிந்தும் புரியாமல் குழப்பியது.

எதிர்பாராதது நடப்பதே வாழ்க்கை! சூழ்நிலைகள் மாறும் போது சுயமாய் முடிவுகள் எடுக்க இயலுமா??

அதனால் தானோ அவர்கள் சூழ்நிலை கைதிகள்?


 

Attachments

  • FB_IMG_1726239566167.jpg
    FB_IMG_1726239566167.jpg
    42.7 KB · Views: 0
Back
Top