saranyawrites
New member
கடந்து போ என்று இயல்பாய்
சொல்கிறேன்...
நீயோ..
சொல்வதைப் போல்
செய்வதொன்றும்
அத்துணை சுலபமில்லை
என்று மனம்கசந்து நிற்கிறாய்...
உன்னை பயன்படுத்தும்
ஒருவரை நீயும்
பயன்படுத்திக்கொள் என்கிறேன்.
என்னால் அது முடியாது
என்று மனம் உடைகிறாய்..
உன்னை வேண்டாம் என்பாருக்கு
உனக்கும் அவர்கள்
வேண்டாம் என்கிறேன்...
அது சாத்தியமில்லையென
அன்பின் பலிபீடத்தில்
உன் தலை கொடுக்க
எத்தனிக்கிறாய்...
கருணையின் நிமித்தம்
கூட உன்மீது வைக்காத
அன்பை
நீ மீண்டும் மீண்டும்
எதிர்ப்பார்க்காதே என்கிறேன்...
அன்பின் சிலுவைகளை சுமக்க
நான் கடமைப்பட்டு போனவள்
என்று உள்ளம் வெதும்பிப் போகிறாய்.
அத்தனைக்கு பின்னும்
நாந்தான் சொல்கிறேன்
கடந்து போவென...
ஆம்...
கடந்து போவதும்
சிலர் நம்மை கடத்திபோவதும்
மட்டுமே உயிர்ப்புடன் வைக்கும்
வாழ்வின் அறமென்பது
அவ்வளவே.
-ஆழ்.
#saranyawrites
26.02.23
சொல்கிறேன்...
நீயோ..
சொல்வதைப் போல்
செய்வதொன்றும்
அத்துணை சுலபமில்லை
என்று மனம்கசந்து நிற்கிறாய்...
உன்னை பயன்படுத்தும்
ஒருவரை நீயும்
பயன்படுத்திக்கொள் என்கிறேன்.
என்னால் அது முடியாது
என்று மனம் உடைகிறாய்..
உன்னை வேண்டாம் என்பாருக்கு
உனக்கும் அவர்கள்
வேண்டாம் என்கிறேன்...
அது சாத்தியமில்லையென
அன்பின் பலிபீடத்தில்
உன் தலை கொடுக்க
எத்தனிக்கிறாய்...
கருணையின் நிமித்தம்
கூட உன்மீது வைக்காத
அன்பை
நீ மீண்டும் மீண்டும்
எதிர்ப்பார்க்காதே என்கிறேன்...
அன்பின் சிலுவைகளை சுமக்க
நான் கடமைப்பட்டு போனவள்
என்று உள்ளம் வெதும்பிப் போகிறாய்.
அத்தனைக்கு பின்னும்
நாந்தான் சொல்கிறேன்
கடந்து போவென...
ஆம்...
கடந்து போவதும்
சிலர் நம்மை கடத்திபோவதும்
மட்டுமே உயிர்ப்புடன் வைக்கும்
வாழ்வின் அறமென்பது
அவ்வளவே.
-ஆழ்.
#saranyawrites
26.02.23