Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

42. மதிமுகம் கண்டேனடி (நிறைவு பகுதி)

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
மிருதுளா தன் நாத்தனார் மாதங்கியிடம், கைப்பேசியில் காணொளி மூலம் மதுவை மித்ரனுக்கு பேசி முடித்துவிட்டார். அத்தோடு அதைப் பற்றி மகனிடம் சொல்ல வேண்டாம் என்றும், தாங்கள் சொல்லும் பெண்ணைத்தான் கட்ட வேண்டும் என்று நிபந்தனை போடுமாறும் கேட்டுக் கொண்டார். மாதங்கியும் மகனின் திருமணம் நிச்சயமாகிவிட்ட மகிழ்ச்சியில் சரி என்றுவிட்டார். இது எதுவும் அறியாத மித்ரன் பெற்றோரை காண வெளிநாடு சென்றான்.

அவன் மதுமதியை விரும்புவதாக சொல்ல, அவர்கள் பார்த்தவளைத்தான் கட்ட வேண்டும் இல்லை என்றால் அவனை வீட்டைவிட்டு போகச் சொன்னார்கள். அவன் ஒரே பிள்ளை, ஒரு பெண்ணிற்காக பெற்றவர்களை விடக்கூடிய அளவுக்கு அவன் சுயநலவாதி இல்லை. ஆனாலும் அவள் யாரோ என்றால் விட்டுவிடலாம். ஆனால் அவனில் பாதியாகிப் போனவளை எப்படி விலக்குவது என்று தவித்தான்.. அதனால் மதுவிடம் பேசுவதை தவிர்த்தான்.. மீறி பேசினாலும் இயல்பாக பேச முடியாது என்று தோன்றியது.. உண்மையை சொல்லவும் அவன் பயந்தான்.. இரண்டு ஆண்களும் இந்நேரம் அவனை என்னவென்று நினைப்பார்கள்?

இந்நிலையில் மகதியின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று திருமணத்திற்கு ஒரு வாரம் இருந்த நிலையில் மாதங்கி மகனை கிளம்பச் சொன்னார். "மித்ரா, எங்களோடு மகதி திருமணத்திற்கு கிளம்பு. அங்கே பாவம் மதனகோபால் உடம்புக்கு முடியாத மனுஷன், ஒத்தை ஆளாக எல்லாம் செய்து கொண்டிருப்பார். நாம் முன்னதாக போனால் கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும் கண்ணா", என்றார் அப்பா முத்துராமன்.

"எப்படி அப்பா வருவது? எந்த முகத்தை வைத்துக் கொண்டு என்னை வரச் சொல்றீங்க? அந்த வீட்டுப் பெண்ணை நான் விரும்புகிறேன் என்று சொன்னேன் இல்லையா? அவளை நான் எப்படி எதிர்கொள்வது? நீங்க இரண்டு பேரும் போய் வாங்க.. நான் இனிமேல் இந்தியாவிற்கு வரவில்லை.. என்னை விட்டுவிடுங்க"ஆத்திரமாக தொடங்கி, கொஞ்சுதலாக கை எடுத்து கும்பிட்டான்.

"என்னங்க, அவன் அவங்க வீட்டுக்கு வரவேண்டாம்.. மாலதிக்கு தெரிஞ்சவங்க கெஸ்ட் ஹவுஸில் தான் தான் தங்கப் போறோம். அதனால் அவன் அங்கே இருக்கட்டும், நடுவில் ஒரு நாள் அந்த பெண்ணையும் பார்க்க போகணும்" என்றார் மாதங்கி.


"அம்மா ப்ளீஸ்.. என்னை விட்டு விடுங்கள்.. எனக்கு கல்யாணமே வேண்டாம்.. கடைசி வரைக்கும் உங்களுக்கு பிள்ளையாக இருந்து கொள்கிறேன்.."

"டேய், நீ சென்னை வந்து முதலில் அந்த பெண்ணை பார். அப்புறம் பிடிக்கவில்லை என்றால் அவளிடமே சொல்லிடு.. நாங்க உன்னை அதுக்கு அப்புறம் வற்புறுத்த மாட்டோம்.." என்றதும் மித்ரனுக்கு கொஞ்சம் நம்பிக்கை எட்டிப் பார்த்தது. ஆனால் ஒரு பெண்ணின் மனதை வருத்துவதும் அவனுக்கு உவப்பாக இல்லை. என்ன செய்வது, அவன் மதுவை பாராமல் இருந்திருந்தால் இது தவிர்க்க பட்டிருக்கும்.. அவளை பார்த்து மறுப்பு சொன்ன பிறகு தான் மதுவை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்..

மகதி-மகேந்திரன் திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போது, மதனகோபால் வீட்டிற்கு மித்ரனின் பெற்றோர் மற்றும் மணிவாசகம், வந்தனர். மித்ரன் வரவில்லை. மதுமதியும் தினப்படி வழக்கமாக மோகன் வீட்டிற்கு சென்றிருந்தாள். மகதியை தோட்டம் பார்க்க என்று மங்களம் அழைத்து சென்றிருந்தார்.

இருவீட்டாரும் தாம்பூலம் மாற்றிக் கொண்டதோடு, மகதி-மகேந்திரன் திருமணத்தன்று மதுமதி-மித்ரன் திருமணத்தை நடத்துவதாக திட்டமிட்டனர். மாலதிக்கும் மதனகோபாலுக்கும் மனம் நிறைந்து போயிற்று..

அதன்பிறகு விரைவாக, முத்துராமனின் உறவினருக்கு தகவல் சொன்னார்கள். அப்படியே எல்லோருமாக கிளம்பிச் சென்று தாலி மற்றும் இதர நகைகளும் , மகதி-மகேந்திரனுக்கு வாங்கியதைப் போலவே அதே வண்ணங்களில் டிசைகளில் வாங்கி வந்தார்கள்.


மகேந்திரனுக்கு சொந்தமான விருந்தினர் இல்லத்தில் மித்ரனும் அவனது பெற்றோரும் தங்கியிருந்தனர். அதை மகன் அறியாமல் மங்களம் ஏற்பாடு செய்திருந்தார்.

மித்ரன் மதுமதியை சந்திக்க தயங்கி வீட்டோடு கிடந்தான். அவனது பெற்றோர் வந்த விபரம் இளையவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.

மூன்றாம் நாள்..

"மித்ரா, சீக்கிரம் கிளம்பு, அந்த பொண்ணை இன்னைக்கு பார்க்க வர்றதாக சொல்லியிருக்கிறோம்.. பேச்சு மாறாமல் போய் வரணும் என்று மாதங்கி மகனை கிளப்பினார். வேறு வழியின்றி மித்ரன் கிளம்பினான்..

அதே நேரம் மதனகோபால் வீட்டில்..


"மது உன்னை இன்றைக்கு பெண் பார்க்க வர்றாங்க, சேலை நகை எல்லாம் வச்சிருக்கிறேன்.. சீக்கிரம் இதை எல்லாம் போட்டுட்டு கிளம்புமா.. கோவிலுக்கு அவங்க வந்துடுவாங்க.. என்று மாலதி சொல்ல அதிர்ந்து நின்றாள் மதுமதி.

"என்னாச்சு ஏன் அப்படி திகைச்சுட்டே? உனக்கும் கல்யாண வயசு ஆயிடுச்சில்ல.. நல்ல வரன் அமைஞ்சிருக்கு, கொஞ்சம் நாளாக நீ நல்லவிதமாக நடந்துக்கிறே.. இப்ப அதெல்லாம் நிஜம்னு நாங்க நம்பனும்னா, நீ உடனே எங்ககூட கிளம்பு, இல்லைன்னா, நீ இன்னும் மாப்பிள்ளையை கட்டிக்கிற நினைப்பில தான் இருக்கிறேனு தான் நான் நினைப்பேன்.. "என்றாள் மாலதி சற்று கடினமான குரலில்..

"இல்லை அம்மா.. சே சே அத்தானை கட்டிக்கிற எண்ணம் எல்லாம் எனக்கு சுத்தமா இல்லை அம்மா. நம்புங்கம்மா, நிஜமாகவே நான் மாறிட்டேன்..ஆனால்.. இப்ப எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் அம்மா.. ப்ளீஸ்..ப்ளீஸ் மா..

"நான் நம்புகிறேன் மது, ஆனால் இப்ப பெண்தானே பார்க்கிறாங்க. பார்த்துட்டு போகட்டும். நீ வந்து எங்க திருப்திக்கு பையனை பார், அப்புறம் உனக்கு, பிடிச்ச கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லைன்னா நான் கட்டாயப்படுத்த மாட்டேன்..நான் மோகனையும் கூப்பிட்டு இருக்கிறேன். பெரிய மாப்பிள்ளை வீட்டிலும் வருவாரகள்.."

"கடவுளே! வெறும பெண் பார்க்கனு சொல்றீங்க, அப்புறம் அவங்களை எல்லாம் எதுக்கு அம்மா அழைச்சீங்க?" என்றாள் மதுமதி பதற்றமாக. அவளைப் பற்றி மகேந்திரனும் மோகனும் என்ன நினைப்பார்கள்? இத்தனை நாட்கள் அவள் நடித்தாள் என்றல்லவா நினைப்பர்..

"ஏய்.. ஏதோ மூனாம் மனுஷங்களை கூப்பிட்டது போல எதுக்கு டென்ஷன் ஆகுறே? அவங்க உன் மேல் அக்கறை உள்ளவங்க..அதனால கூப்பிட்டேன்.. சரி சரி நேரமாகுது சீக்கிரம் ட்ரஸ் மாத்திட்டு வா.. நான் கீழே போகிறேன்"

"மோகனும்,மகேந்திரனும் con-call ல் அவளை அழைத்தனர்.."என்ன மது இதெல்லாம்? இன்னிக்கு உன்னை பெண் பார்க்க எவனோ வர்றானாமே? நீ எப்படி இதுக்கு ஒத்துக்கிட்டே.. உண்மையை சொல்ல வேண்டியது தானே? என்றான் மோகன் ஆத்திரத்தை அடக்கிய குரலில்..

"அண்ணா ப்ளீஸ்.. நான் எப்படி உண்மை சொல்றது? மித்ரன் தான் காணாமல் போய்ட்டாரே.. அவர் என்கூட இருந்தால் நிச்சயம் அம்மாக்கிட்டே எடுத்து சொல்லி இந்த, விஷயத்தை நிறுத்தி இருப்பேன். அதுக்கு வழியில்லை. அத்தோடு எனக்கே இப்பத்தான் அம்மா சொன்னாங்க, இது சம்பிரதாயம்தான்.. எனக்கு பிடிச்சா தான் கல்யாணம்னு அம்மா சொல்லிருக்காங்க, அதனால நீங்க டென்ஷன் ஆகாதீங்க.. சரியா? என்றதும்..

"மித்ரன் இந்தியா வந்துட்டான்னு எனக்கு தகவல் வந்திருக்கு, நான் இரண்டு நாட்களாக கொஞ்சம் ஒர் கேஸில் மும்முரமாகிட்டேன். அதனால் இந்தியா வந்தபிறகான ரிப்போர்ட் இன்னும் பிரிச்சு பார்க்கலை.. அநேகமாக இன்னிக்கு சாயங்காலம் நான் ஃபிரியானதும், அவன் எங்கிருக்கிறான் என்று தெரிந்து விடும். அதனால தைரியமா பிடிக்கலைன்னு சொல்லு.. "

"அப்படியா அண்ணா, இப்பத்தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. சரி அண்ணா. மீட் பண்ணலாம் பை பை...என்று அவசரமாக உடையை உடுத்த தெடங்கினாள் மதுமதி.

கோவிலில்...

அன்று அதிக கூட்டம் இருந்தது. மித்ரனின் குடும்பத்தினர் சற்று முன்னதாக வந்து விட்டனர். அதன்பிறகு மதனகோபால் குடும்பத்தினர் வந்தனர். தூரத்தில் இருந்தே மித்ரன் மதுமதியை பார்த்துவிட்டு, " அம்மா சீக்கிரம் கிளம்புங்க,நாம் உடனே இங்கே இருந்து கிளம்பணும்.. என்று அவசரப் படுத்தினான்..


"டேய் இன்னும் பெண்ணையே பார்க்கலை அவருக்குள்ளே எப்படி கிளம்ளறது.. இங்கயே இரண்டு பேரும் இருங்க.. நான் போய் பெண் வீட்டார் எங்கே இருக்காங்கன்னு பார்த்து வர்றேன்" என்று முத்துராமன் சொல்லிவிட்டு நகர... மித்ரன் தவிப்புடன் நின்றான்.

"மாயா சேர்வாக இருக்கிறது என்று வரவில்லை. மோகன் மட்டும் வந்திருந்தான். அவனுக்கு உள்ளூர மித்ரன் மீது ஆத்திரம் கணன்று கொண்டிருந்தது. அவன் வாழ்வில் எத்தனையோ பேரை சந்தித்து இருக்கிறான். அவன் கணிப்பு இதுவரை தவறியதே இல்லை.. முதல் முறையாக ஒருவன் அதை பொய்யாக்கி விட்டான் என்ற கோபமும் சேர்ந்துவிட்டது.. மகேந்திரன் மித்ரன் மோகன் ஒரே அளவு உயரம் கொண்டவர்கள்.. மகேந்திரன் மகதியை காணும் ஆவலில் வந்திருந்தாலும், மதுமதியை பார்த்து அந்த மாப்பிள்ளை பிடித்திருக்கிறது என்று ஏதும் சொன்னால் அவள் நிலை என்னாகும்? என்று அவனுக்கு கவலையாக இருந்தது.

மதுமதியும் மகதியும் கடவுளை வணங்கப் போவதாக சொல்லிப் போக, மித்ரனும் கூட, தன்னை மறைத்துக்கொள்ள எண்ணி, சந்நிதானத்திற்கு சென்றான்.
மோகன், அவனைப் பார்த்துவிட," டேய் மாப்பிள்ளை சிக்கிட்டான்டா, என்று மகேந்திரனின் காதில் சொன்னதோடு அவனை அழைத்துக் கொண்டு உள்ளே விரைந்தான்.


உள்ளே சற்று கூட்டம் குறைந்திருக்க, சகோதரிகள் இருவரும் மனமுருகி பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்க, மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் வழிய நின்ற மதுமதியை பார்த்துவிட்டான் மித்ரன். அவ்வளவுதான்.. அவனால் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை. இனி என்ன ஆனாலும் சரி, பெற்றோரிடம் அழைத்துப் போய் பேசிவிட வேண்டும் என்று நினைத்தவன் இறைவனிடம் தன் வேண்டுதலை நிறைவேற்றும்படி கோரிக்கையை வைத்து வணங்கிவிட்டு, மதுமதியின் கையைப் பற்றினான்.

திடுக்கிட்டு விழித்தவள்,"நீங்க, நீங்களா? என்றவளுக்கு வார்த்தை வராமல் தடுமாற..

அதற்குள் அங்கே வந்த நண்பர்கள் அந்த காட்சியை பார்த்ததும் நிம்மதியாக ஒதுங்கிவிட, மகதி இருவரையும் ஆச்சர்யமாக பார்த்து நின்றாள்.. உடனடியாக, இறைவனிடம் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும்படி வேண்டிக் கொண்டாள்..

"வா, மது, என் அம்மா அப்பா வந்திருக்காங்க, உன்னை அறிமுகப்படுத்துறேன் என்று பற்றிய கையை விடாது அழைத்துப் போக, மற்ற மூவரும் அவனை பின் தொடர்ந்தனர்.. இத்தனையும் பார்த்திருந்த மதனகோபால், மணிவாசகம் மாலதி மிருதுளா, மங்களம் ஆகியோர் தங்களுக்குள் பேசி சிரித்தபடியே அவர்கள் பின்னே சென்றனர்,

"முத்துராமன், மாதங்கி இருவரும் ஓர் இடத்தில் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தனர்..
"என்னங்க சம்பந்தி வீட்டில் வந்துவிட்டார்களா?


"வந்துட்டாங்க, பொண்ணுங்க, சாமி கும்பிட சந்நிதானத்துக்கு போயிருக்காங்க, வந்ததும் கூட்டிட்டு வர்றதா சொன்னார்.." என்று அவர் சொல்லி முடிக்குமுன்பாக அங்கே மதுமதியுடன் போய் நின்ற மித்ரன், "அம்மா, நீங்க என்ன சொன்னாலும் சரி, நான் இவளைத்தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்.." என்றான் உறுதியான குரலில்.

அவர்கள் பின்னோடு வந்தவர்கள் எல்லோரும் அங்கே குழுமிவிட்டனர்.

மதுமதியும் அங்கே வந்த தன் பெற்றோரிடம்,"அம்மா, அப்பா, என்னை மன்னிச்சிடுங்க.. நான் இவரை தவிர, வேற யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்டேன்.. என்றாள்.. அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

சட்டெனறு மகதி, தங்கையின் கண்களை துடைத்துவிட்டு,"மது அழாதேடா, உனக்கும் மித்ரனுக்கும் நிச்சயம் கல்யாணம் நடக்கும். அதுக்கு நான் பொறுப்பு" என்றதும், அவளது கன்னத்தில் முத்தமிட்டு,"ரொம்ப தாங்க்ஸ் அக்கா" என்று அவளை அனைத்து கொள்ள, மித்ரன் உட்பட, சுற்றி நின்ற அனைவருமே ஒருகணம் ஸ்தம்பித்து நின்றனர்.


"முதலில் சுதாரித்த மோகன் கையை தட்ட, அவனை தொடர்ந்து அனைவரும் கையை தட்டினர்.. எல்லோரது முகத்திலும் மகிழ்ச்சி பரவியிருக்க, மாலதி மற்றும் மதனகோபால் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியிருந்தது.

அடுத்து அதிரடியாக,"அத்தை,உங்க பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நீங்க எவ்வளவு ஆசைப் பட்டீங்க? இப்ப சொல்லுங்க, உங்க பிள்ளையை என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதமா ? என்றாள் மகதி.

"பேஷா பண்ணி வச்சிடலாம். யார் மாட்டேன்னு சொன்னது? என்றாள் மாதங்கி.


"அம்மா என்னம்மா இப்படி அந்தர் பல்டி அடிக்கிறீங்க? நான் வந்து சொன்னப்போ அவளை கட்டி வைக்க முடியாது, நான் பார்த்த பெண்ணைத்தான் கட்டிக்கணும்னு சொன்னீங்களே? இப்ப மகதி கேட்டதும் சம்மதம் சொல்றீங்க? என்று மித்ரன் படபடத்தான்.

மோகன், மகேந்திரன் மற்றும் மதுவிற்கு அப்போது மித்ரன் மாயமானதற்கு காரணம் விளங்கியது..

"ஆமாடா, அப்படித்தான் சொன்னேன். இப்பவும் சொல்றேன், நாங்க பார்த்து நிச்சயம் செய்த பெண்ணைத்தான் நீ கட்டிக்கப் போறே.. என்று முத்துராமன் சொல்ல..

"டேய் மாப்பிள்ளை நீ என்ன இவ்வளவு ட்யூப் லைட்டா இருக்கிறே? நீ மதுவை அழைச்சிட்டு வந்து சொன்னதும் அவங்க கோபப்படலையே? அப்போதே புரிஞ்சிக்கலை.. இப்ப அவங்க தெளிவாக சொல்றதும் உனக்கு புரியலையே.. மதுமதிதான் அவங்க உனக்காக பார்த்த பெண்.. என்றான் மோகன் சிரிப்புக் குரலில்..

"பெரியவர்கள் எல்லோரும் சிரிக்க தொடங்க, மித்ரன் அது கோவில் என்பதையும் மறந்து, ஹுர்ரே.. என்று துள்ளிக் குதித்தான்..

"ஒரு நிமிஷம்"என்ற மோகன், லஞ்ச் டைம் ஆயிடுச்சு, அதனால நாம் ஏதாவது ஒரு ஹோட்டலில் சாப்பிட போகலாம்..

"அட என்னப்பா நீ, மாமாவோட ரெஸ்ட்டாரண்ட் இருக்கே.. அங்கே போய்டலாம்.. என்று மகேந்திரன் எழ, எல்லோரும் கிளம்பினர்.

மாதங்கி,முத்துராமன்,மகதி,மதுமதி,மதனகோபால், மணிவாசகம்,ஆகியோர் ஒரு காரில் சென்று விட,

மாலதி, மங்களம், மிருதுளா மோகன், மித்ரன், மகேந்திரன் ஆகியோர் மற்றொரு காரில் கிளம்பினர்.


"சின்னவங்க நீங்க திட்டம் போட்டால், எங்களுக்கு தெரியாமல் போய்விடுமா? நாங்களும் பதிலுக்கு திட்டம் போட்டோமில்லே...எப்படி இருந்துச்சு ஷாக் ட்ரீட்மெண்ட்? என்று பேச்சை ஆரம்பித்தார் மிருதுளா..
"மாமி இதெல்லாம் உங்க வேலைதானா? என்றான் மித்ரன் பொய் கோபத்துடன்..

"பின்னே என்னடா, இங்கே ஒருத்தி ஆசையா உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பார்கணும்னு காத்துட்டு இருக்கா, நீ என்னடான்னா கமுக்கமா வேலையை முடிக்கலாம்னு பார்த்தியே? நானும் அந்த காலத்தில் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. எனக்கு தெரியாமல் எப்படி போகும்? ஆமா நீ என்னடா சொன்னே, படவா ராஸ்கல் இப்ப கல்யாணம் வேண்டாம் மாமின்னு சொன்னியே இப்ப வந்து அவளைத்தான் கட்டுவேன்னு சொல்றே? என்று மித்ரனின் காதைப் பிடித்தார் மிருதுளா.

"ஆ.. ஐயோ வலிக்கிறது மாமி..

"ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதுடா மாப்பிள்ளை என்ற மோகன் தொடர்ந்து "ஆன்ட்டி நாங்க எதையும் திட்டம் போட்டு செய்யவில்லை. மதுமதி மாறிட்டதா நான் சொன்னாலோ , இல்லை அவளே சொன்னாலோ நீங்க யாரும் நம்பப்போறது இல்லை.. கல்யாணம் முடிகிற வரை என் வீட்டுக்கு மதுமதியை வரச் சொன்னதுக்கு காரணம் மகதி நிம்மதியாக இருக்கட்டும் என்றுதான். மது - மித்ரன் திருமணம் கூட நாங்க முதலில் யோசிக்கலை.. மகதி நிம்மதியாக இருக்கணும் என்றால் அதற்கு என்ன வழி என்று யோசித்தோம்.. ஒன்றுமே புலப்படவில்லை. மகதிக்கு இருக்கிற பயம் தெளியணும் எனாறால்.. கல்யாணம் பண்ணி வைக்கிறது மட்டும் தான் என்று.. மாயா தான் யோசனை சொன்னாள்,என்றவன் அதன் பின் நடந்தவற்றை சுருக்கமாக தெரிவித்தான்.

ஆனால் எங்களைவிட நீங்க செம பயங்கரமா ஐடியா பண்ணியிருக்கீங்க, எப்படி இந்த யோசனை உங்களுக்கு வந்தது அத்தை? என்றான் மகேந்திரன்.

"இல்லையா பின்னே? நீங்க மெஜாரிட்டி கம்மி மாப்பிள்ளை.. நாங்க கூடுதல், என்றவர் அவர்கள் திட்டமிட்டு நடத்தியதை விளக்கமாக சொல்லி முடித்ததும்..


"பெரிய அத்தை..என் அம்மாவையும் கூட சேர்த்துக்கிட்டீங்க பாருங்க அங்கே நிற்கிறீங்க நீங்க.. என்றதும் எல்லோரும் சிரித்தனர்..

"மித்ரனை மதுமதிக்கு என்று கடவுள் முடிச்சு போட்டு வைத்திருந்தது தெரியாமல் நான் மகதிக்காக வரச்சொல்லி விட்டேன். ஆனால் எனக்கு இதில் புரியாதது ஒரு விஷயம் தான், ஆமா இரண்டு பேருமே பார்க்க ஒரே மாதிதானே இருக்கிறாங்க, அப்படியிருக்க மகதியை வேண்டாம்னு சொன்னவன், எப்படி மதுவை கட்டிக்க ஒத்துக்கிட்டே? என்றார்..

"அதானே, குட் கொஸ்டீன் ஆன்ட்டி, என்றான் மோகன்.

இன்னும் எதுக்கு ஆன்ட்டினு கூப்பிடுறே மோகன், நீயும் இந்த குடும்பத்தில் ஒருத்தன் ஆகிட்டே, பெரியம்மான்னே கூப்பிடு, என்ற மிருதுளா, சொல்லு மித்ரா.. என்றார்..

"இரண்டு பேருக்கும் வித்தியாசம் இருக்கு,மகதி ரொம்ப சாந்தம், இவள் படபட ரகம்.. மகதியின் உடைகளே அவளை அடக்க ஒடுக்கமான பெண் என்று காட்டும் மதுமதிக்கிட்டே நடை உடை பாவனையில் ஒருவித மிடுக்கு இருக்கும்.. அவள் ஒரு மார்டன் பொண்ணு என்று சொல்லாமல் சொல்லும். சேலை கட்டினாலும் கூட அவளிடம் ஒரு ஸ்டைல் தெரியும்.. கூட்டத்தில் இருந்தாலும் அவள் தனித்துவமா தன்னை காட்டிக்குவா. அவளை நான் பார்த்த அன்றைக்கும் எனக்கு மகதி நினைவுக்கு வரவில்லை. அவள் புதுசாதான் தெரிஞ்சா.. என்றான்.

"அடேங்கப்பா.. இரண்டே நாளில் இவ்வளவு தூரம் அவளை அப்ஸர்ப் பண்ணிருக்கியா.. கிரேட் சகலை.. நான் இரண்டு பேருக்கும் வித்தியாசம் தெரியணும்னு அவசரமா கூட்டிட்டு போய் மூக்கு குத்திவிட்டேன்.. அது அவளுக்கு அழகா இருக்கிறதுதான்.. உன்னை போல நான் இவ்வளவு நுணுக்கமா கவனிக்கலை.. என்றான் மகேந்திரன்..

"எல்லோருக்கும் சிரிப்பு வந்தது..

ஒருத்தியை வளர்த்து ஒருத்தியை பெற்று, இருக்கிறேன். ஆனால் எனக்கு இதெல்லாம் தெரியலை மாப்பிள்ளை. இப்ப நீங்க இரண்டு பேரும் சொன்னப் பிறகு தான்.. அதெல்லாம் ரொம்பவே சரின்னு புரியுது..என்று மாலதி சொல்லும்போதே உணவகம் வந்துவிட,

"இந்த பேச்சு இத்தோடு நாம் மறந்து விட வேண்டும். மகதி மது முன்னாடி மறந்தும் பேசக்கூடாது என்று மோகன் எச்சரித்தான்.


அன்றைக்கு எல்லோரும் உணவை முடித்த பின் அவரவர் இருப்பிடம் சென்றனர்.

அதன் பின் இதோ மணமேடையில் தான் எல்லோரும் கூடியிருக்கிறார்கள்..

இதோ...அதன்படி இரண்டு ஜோடிகளும் மணக்கோலத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.. ஐயர் ஹோமம் வளர்த்து மந்திரங்களை உச்சரித்து கொண்டிருக்க.. சுற்றிலும் நெருங்கிய உறவுகளும் சுற்றத்தாரும், நட்புகளும் சூழந்திருந்தனர்..

மகதி ஆனந்த கண்ணீர் ததும்ப மகேந்திரனை பார்த்திருந்தாள்.... அவளது நிம்மதிக்காக.. தங்கையின் மனதை மாற்றி அவளுக்கும் ஒரு நல்வாழ்வை உண்டாக்கி கொடுத்துவிட்டு ஒன்றும் அறியாதவனைப் போல.. அமர்ந்திருக்கிறானே.... இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இவனே எனக்கு துணையாக வேணும் இறைவா.. என்று மனதார அவள் வேண்டிக்கொள்ள... அதே நேரம் அவளது பார்வையை சந்தித்த மகேந்திரன் என்ன என்பதாய் ஒற்றை புருவம் உயர்த்தினான்.. இதழில் புன்னகையும், கன்னத்தில் செம்மையும் படர,ஒன்றுமில்லை என்பதாக தலையயசைத்தாள்... அந்த முகம் அவனது மனதில் பதிய... "ஷ்.. மதி கண்ணில் நீர் வழிந்தால் நான் இங்கேயே கிஸ் பண்ணிவிடுவேன்" என்று கண்ணடித்தான்..

"அவசரமாக கண்களை கைக்குட்டையால் ஒற்றிவிட்டு,"நான் ஒன்றும் அழவில்லையே".. என்றாள் மிடுக்குடன்...


"ம்ம்... அந்த பயம் இருக்கட்டும்.. என்றவனுக்கு அவளது விரைப்பான முகத்தை பார்த்து பொங்கி வந்த சிரிப்பை அடக்க சிரமப்பட வேண்டியதாயிற்று...

அந்தப் பக்கம்....மதுமதியும், மித்ரனை ஓரக்கண்ணால் பார்த்திருந்தாள்.. உயரமும், கம்பீரமுமாக, மாநிறத்திலும் ஒரு கவர்ச்சியோடு காணப்பட்டான். பத்து நாட்களுக்கு முன்புவரை இவன் யாரென்றே தெரியாது... இப்போது இவன் இல்லாவிட்டால் அவளால் வாழவே முடியாது... என்ற நிலைமை. இதுதான் காதலின் மகிமையோ.. அவளது பார்வையை சந்தித்துவிட்டு,"இத்தனை பேர் முன்னாடி இப்படி எல்லாம் பார்த்து வைக்காதேடி மதூ... அப்புறம் நான் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உன்னை....என்று அவன் சொல்லும்போதே,"யாரும் அறியாமல் அவனது கையை மெல்லத்தான் கிள்ளி வைத்தாள்.. ஆனால் அவனோ வேண்டுமென்றே எல்லோரும் கேட்கும்படி, "ஆ.... " என்று கத்தி வைக்க,


"என்னாச்சு என்னாச்சு. மாப்பிள்ளை .. என்று ஆளாளுக்கு பதறி...விசாரிக்க.. மதுமதிக்கு சிரிப்பு வர...கூடவே வெட்கத்தில் முகமும் சிவந்துவிட, அதை யாரும் காணாமல் தலையை நன்றாக குனிந்து கொண்டாள்.

"அ..அது ஒன்றுமில்லை.. ஒன்றுமில்லை.. அது.. ஒரு லேடி கொ... கொசு .. கடித்துவிட்டது... என்று சமாளிக்க..

"என்னடா அம்பி சொல்றே ? இங்கே ஹோமம் வளர்த்து இருக்கிறச்சே.. பகலில் கொசுவா? அது எப்படி லேடி கொசு என்று சொல்றே?.. என்றார் ஐயர்..

"ஆமா ஐயரே...ராத்திரி கடிக்காமல் விட்டுவிட்டதால்.. இப்போது பகல் டூட்டி பார்க்க வந்திருக்கும் போல .நிச்சயமாக அது லேடி தான், சுருக்குனு வலிச்சதே ,சரி சரி நீங்கள் என் வாயை பார்க்காமல் சீக்கிரம் மந்திரத்தை சொலுங்கோ.. என்று மித்ரன் சொல்ல அங்கே மெலிதாக சிரிப்பலை பரவிற்று...

மித்ரனுகுகு மாப்பிள்ளை தோழனாக மோகனும், மகேந்திரனுக்கு மாப்பிள்ளை தோழனாக அவனது தங்கை மல்லிகாவின் கணவன் மாதவனும் அருகில் இருந்தனர்.

"சிலகணங்களில் ஐயர் மந்திரங்களை முடித்து விட்டு, கெட்டி மேளம், கெட்டி மேளம் என்று குரல் கொடுக்க, மங்கல இசையில் நாற்புறமும் எதிரொலிக்க... தாலிகள அவரவர் ஜோடிக்கு அணிவித்தனர் மாப்பிள்ளைகைள்.
நாத்தனார் முடிச்சை மகேந்திரனின் தங்கை மல்லிகா, மகதிக்கு போட,மாயா மதுமதிக்கு போட்டாள்.

எல்லோரது கண்களிலும் ஆனந்த கண்ணீர் பெருகியது. மங்களத்திற்கு மகனை மணக்கோலத்தில் பார்த்ததும், கண்கள் மூடி இறைவனிடம் இந்த நான்கு குழந்தைகளும் வாழ்வில் எந்த குறைவுமின்றி சந்தோஷமாக பல்லாண்டு வாழவும், விரைவில் வம்சம் தழைக்கவும் வேண்டிக்கொண்டார்.


அதுபோலவே மாலதி - மதனகோபால், மாதங்கி - முத்துராமன் , மிருதுளா - மணிவாசகம் , அனைவருமே மனதார வேண்டிக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்...

நீங்களும்..வாழ்த்துங்களேன !. நால்வரும் நல்வாழ்வு வாழ.. !!



" சுப மங்களம். "
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top