Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

34. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
ரவீந்தரன் இத்தனை நாளில் மதுவந்தியிடம் அதிகம் ஒன்றும் பேசிவிடவில்லை. அவளும் கேட்டால் பதில் சொல்வாள். ஆனால் மறக்காமல் வீட்டில் அனைவரது நலம் விசாரிப்பாள். அவனுக்கோ அவள் குரல் கேட்டால் ஒரு திருப்தி. அவள் கிளம்பிச் சென்ற மறுநாளே அவனது மனது புரிந்து போயிற்று. ஆனாலும் அதை அவளிடம் நேரில் சொல்ல ஆசைப்பட்டான். அலுவலக வேலையால் அது தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.

ரவீந்தரன் அலுவலக வேலைகளை எல்லாம் ஒருவாறு முடித்தபோது ஒரு வாரத்திற்கு மேல் ஆகியிருந்தது.

கொடைக்கானலில்....

மதுவந்திக்கு கைக்காயம் ஓரளவிற்கு ஆறியிருந்தது. ஆனாலும் அவர்களது தங்கும் விடுதிக்கு அவளை காயம் ஆறும் வரை போக வேண்டாம் என்று சந்திரமௌலி கூறிவிட்டிருந்தார்.

வீட்டில் ரொம்பவே போரடித்துப் போயிருந்த மதுவந்திக்கு ரவீந்திரன் தினமும் இரண்டு வார்த்தை பேசுவதும் ஏதேனும் குறுஞ்செய்தி அனுப்புவதும் பெரும் மருந்தாக இருந்துது. அவைகளை நினைத்துப் பார்ப்பதும் திரும்ப திரும்ப படிப்பதிலும் பொழுது கொஞ்சம் இனிமையாய் கழிந்தது.

பிறைசூடனும் அவ்வப்போது நலம் விசாரித்தார். ரவீந்தரனிடம் பேசுவதை அவரிடம் மதுவந்தி தெரிவித்து வைத்திருந்தாள்.

குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்த திட்டமிட்டான் நிகிலன். ஆராவாரம் இல்லாது எளிமையாய் நடத்தலாம் என்று மதுவந்தியிடம் அவன் யோசனை கேட்டபோது சொன்னாள். ஒரு மாதம் கழித்து விழாவை நடத்துவதாக ஏற்பாடு.

அதற்குள்ளாக மதுவந்தி ரவீந்தரன் மனம்விட்டு பேசி ஒரு முடிவிற்கு வந்துவிட்டால் திருமண நிச்சயத்தையும் அதோடு சேர்த்தே செய்துவிடலாம் என்பது மனோகரியின் ஆசை.

இதற்கு இடையில் மனோகரி மதுவந்தியின் நினைவால் வாடுவது தாங்காது, பிறைசூடனே ரவீந்தரன் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் மதுவந்தியோடு பேசவைத்தார்!

இருவருக்கும் முதலில் பேச்சு வராமல் கண்ணீர் தான் வந்தது. " என் கண்ணம்மா சீக்கிரம் என்னிடம் வந்துவிடடி."என்று மனோகரி தழுதழுத்தாள்.

"எனக்கும் உங்களை பார்க்கனும்னு ஆசைதான் ஆனட்டி. "ஆனால் இன்னும் நேரம் கூடவில்லை போலும்" என்றாள் சிரிப்பும் அழுகையுமாக

"ஏய் என் புள்ளையை சோம்பேறின்னு சொல்லாம சொல்கிறயா என்றாள் மனோகரி சிரிப்புக் குரலில்.

"அச்சச்சோ அதெல்லாம் இல்லை ஆன்ட்டி" என்று பதறினாள்.

"ம்ம் அந்த பயம் இருக்கட்டும்" என்று போலியாக மிரட்ட

"அய்யோ பயமாய் இருக்கிறதே ஆன்ட்டி" என்று போலியாய் நடித்தாள் சின்னவள். இருவரும் சிரித்தனர். அதன் பிறகு மனோகரி விவரம் கூறினாள், "என் பிள்ளைக்கு அலுவலகத்தில் நிறைய வேலைம்மா"

"ஆமா அன்ட்டி சொன்னார். என்றாள்.

"ஓஹோ, ஓஹோ அப்போ என் பிள்ளை சமத்துதான்னு சொல்லு "என்றாள் மனோகரி.

"ம்ம், சமத்து ஆன்ட்டி பெற்ற பிள்ளை இல்லையா அப்படித்தானே இருப்பார்" என்றாள்

"ஐஸ்,ஐஸ், என்று சற்று நேரம் கலகலத்துவிட்டு போனை வைத்த மனைவியை பார்த்திருந்தார் பிறைசூடன். பழைய மனோகரி திரும்பிக் கொண்டிருக்கிறாள் என்பதில் அவருக்கு நிம்மதி. அதிலும் மதுவந்தியிடம் பேசிய பிறகு அவள் முகத்தில் அவ்வப்போது புன்னகை தவழ்ந்த வண்ணம் இருந்தது. அந்தக் கவலை நீங்கிவிட மகன் விஷயம்தான் அவருக்கு ஒன்றும் புரிவாதாக இல்லை. வேலைப் பளு காரணம் என்றாலும் அவனிடம் முன்னைவிடவும் அதிக அமைதி நிலவியது. அப்படி என்ன ஓடுகிறது அவன் எண்ணத்தில்??

மதுவந்திக்கு ரெட்டை போனஸ் போல அவளின் ஆன்ட்டி பேசியதில் மனதில் ஏக குதூகலம் என்றால் ரவீந்தரனிடம் தினம் பேசுவதில் அவள் கால்கள் நிலத்தில் பாவவில்லை. அதுவரை அவள் அப்படி இருந்து சந்திரமௌலி பார்த்ததில்லை. அவள் காலமெல்லாம் இப்படியே மகிழ்வோடு இருக்க வேண்டும் என்று மனதார வேண்டினார்.

வீட்டில் விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க அவரவர் தங்கள் பணியில் தீவிரமாக இருந்தனர்.
 

Attachments

  • 462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    106.5 KB · Views: 0
Back
Top