நால்வரும் வெளியே வந்தபின் மோகன், "மதுமதியை மகதி காட்டிக்கொடுக்கவில்லை. Of course அவள் சொல்வது போல மதுமதியை கண்ணால் பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் சந்தேகத்தின் பெயரில் மதுமதியின் பெயரை தெரிவித்திருக்கலாம். அப்போதும் கூட அவள் சொல்லவில்லையே. ஷீ இஸ் கிரேட்". என்றான் வியப்புடன்...
"மகதி அப்படி இருக்கிறதாலதான் தம்பி மதுமதி அவளை கஷ்டப்படுத்துகிறாள். முன்னாடி அவள் செய்த தப்புக்கு அன்றைக்கு மகதியும் விலகிப் போகாமல் திருப்பி கொடுத்திருக்க வேண்டும். தங்கை அவளை அப்பொழுதேனும் புரிந்து கொள்ள மாட்டாளா என்று ஒரு ஆசை. ஆனால்.. இப்போது என்ற மாலதிக்கு மேலே பேசமுடியாமல் அழுகை வந்துவிட, சட்டென்று கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
மற்ற மூவருக்கும்கூட மாலதி சொல்ல வந்தது,"இன்றைக்கு மோகன் மட்டும் அங்கே பார்க்க சொல்லாதிருந்தால்.. அவளை இழந்திருக்கூடும் என்பது சொல்லாமல் புரிந்தது.
மகேந்திரன் அந்த மனநிலையை மாற்றுவதற்காக,"சரி ஏதோ திட்டம் என்று சொன்னாயே மோகன்? அதை சொல்லு" என்றான்.
"மோகன் தன் திட்டத்தை சொன்னதும், இரண்டு பெண்மணிகளும் முதலில் மறுத்தனர். ஆனால் மகேந்திரன் அதை உற்சாகமாக வரவேற்றான். ஒருவாறு இரு இளைஞர்களும் பெரியவர்களை பேசி சம்மதிக்க வைத்தனர்.
அதன் பிறகு,"நான் கிளம்பவேண்டும். முக்கியமாக மதுமதிக்கு, மகதி விஷயம் தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்திவிட்டு இரு அன்னையரிடமும், விடைபெற்று கிளம்பினான் மோகன்.
அப்போது தான் மகேந்திரனுக்கு அவன் திரும்பிச் செல்ல வாகனம் இல்லை, என்பதோடு அவனது உடைகளும் அவனது வீட்டில் இருப்பதும் நினைவிற்கு வந்தது. "இருடா, உனக்கு டீயூட்டி முக்கியம்தான். அதற்கு
யூனிபார்ம் இல்லாமல் எப்படி போவாய்? கொஞ்சம் பொறுப்பு நான் போய் ஹாஸ்பிடல் பார்மாலிடிஸ் முடிச்சுட்டு வர்றேன். மகதியையும் அழைத்துக்கொண்டு போய்விடலாம்டா" என்றதும் மோகனும் நண்பனுடன் வரவேற்பிற்கு சென்றான்.
💜💜💜
மாலதி மிருதுளாவிடம் பேசிவிட்டு வருவதாக வெராந்தாவில் நின்று கொள்ள, இளைஞர்கள் இருவரும் அந்தப்பக்கமாக செல்ல, மங்களம் மகதியிடம் சென்றார்.
மகதிக்கு பெரியம்மா இதை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று கவலையாக இருந்தது. கூடவே தங்கையை எண்ணி மிகுந்த வேதனையும் உண்டாயிற்று. சென்ற முறை மதுமதிக்கு இரண்டும் கெட்டான் வயது, அதனால் அறியாமல் செய்துவிட்டாள், என்று எல்லாருமே எண்ணினார்கள். இப்போது அறிந்தே செய்திருக்கிறாள். ஆனாலும், பெற்ற மகளை குற்றவாளியாக பார்க்கும் போது அம்மாவின் மனம் வேதனைப்படும் என்று எண்ணினாள். அத்தோடு தகுந்த ஆதாரம் இல்லை என்பதாலேயே அவள் சந்தேகத்தின் பெயரில் அவள் பெயரை சொல்லவில்லை. அவளுக்கு இனி மது திருந்தக்கூடும் என்ற நம்பிக்கை அறவே இல்லை, மனமும் உடலும் சோர, விழிகளில் நீர் கோர்த்தது, அதை ஒரு கை இதமாக துடைக்க, திடுக்கிட்டு திரும்பினாள். மங்களம் தான் அவளருகில் அமர்ந்திருந்தார்.
அவளது முகத்தில் தெரிந்த வருத்தத்தை பார்த்துவிட்டு, "மகதி, நீ வருத்தபடாதேம்மா. எல்லாம் நல்லபடியாக நடக்கும். சீக்கிரமே மதுமதி உன்னை புரிந்து கொள்வாள்" என்று ஆறுதல் சொன்னார் மங்களம்.
மகதி புன்னகைக்க முயன்றாள். அவள் மனது தேற சற்று காலம் ஆகும் என்று எண்ணிக்கொண்டார் மங்களம்.
💜💜💜
மாலதி மிருதுளாவை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்த போது, அவருக்கு மிகுந்த ஆத்திரம் உண்டாயிற்று. ஆனால் அதை அடக்கிக்கொண்டு, "நடந்ததை மாற்ற இயலாது மாலதி, இந்த மட்டிலுமாக மகதி பிழைத்ததே போதும். வேறு வழி இல்லை,இனி திருமணம் வரை அவள் இங்கே இருக்கட்டும். எங்களுக்கு அவள் எத்தனை நாட்கள் உடன் இருந்தாலும் மகிழ்ச்சி தான். அவள் கிளம்பியபோதே மணிக்கு சற்று வருத்தம்தான். சரி, அதை விடு, ஆனால் மாப்பிள்ளை வீட்டில் தங்க வைப்பது அவ்வளவு சரியாக படவில்லை. அதனால் நம்பகமான கார் ஓட்டுனர் இருந்தால் அவரோடு அனுப்பிவிடு. அல்லது மதுரைக்கு விமானத்தில் ஏற்றி அனுப்பி வை. இங்கே மித்ரன் இருக்கிறான். அவன் போய் அவளை அழைத்து வந்து விடுவான்" என்றார்.
"நான் மாப்பிள்ளையிடம் பேசுகிறேன் அக்கா. அப்புறமாக விவரம் சொல்கிறேன்" என்று பேச்சை முடித்தபோது பில்லை கட்டிவிட்டு மோகனும் மகேந்திரனும் வந்து சேர, அவர்களிடம் விவரத்தை சொன்னாள் மாலதி.
மகேந்திரனின் முகம் ஒரு கணம் மாறி மீண்டது. ஆனாலும் அது நல்ல யோசனையாகத் தோன்றியது. கூடவே அவர்கள் போட்டிருக்கும் திட்டத்தை நிறைவேற்றும் போது மகதி தொலைவில் இருப்பதோடு பாதுகாப்போடு இருப்பதும் முக்கியம். அவன் சிந்திக்கையில்,
"மகதி என் தங்கை, அவள் இனி என் பொறுப்பு. நானே அவளை பத்திரமாக கொடைக்கானலுக்கு அனுப்பி வைக்கிறேன். என்னை நம்புகிறீர்கள் தானே ஆன்ட்டி?
"என் மகளை எனக்கு மீட்டு தந்திருக்கிறீர்கள் தம்பி. என்றைக்கும் இந்த நன்றியை நான் மறக்கவே மாட்டேன். உங்களை நான் முழுமையாக நம்புகிறேன்"
"தட்ஸ் ஓகே ஆன்ட்டி. உங்களை காணோம் என்று மதுமதி தேடுமுன்பாக நீங்கள் முதலில் வீட்டிற்கு கிளம்புங்கள் ஆன்ட்டி. மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் "
"சரி தம்பி" என்றுவிட்டு மகதியை போய் பார்த்து விடைபெற்று கொண்டு கிளம்பினாள் மாலதி. வழிநெடுகிலும் மதுமதியின் செயலை எண்ணி வருந்திக்கொண்டே சென்றாள் அந்த தாய்.
மகதியை அழைத்துக்கொண்டு எல்லாருமாக மகேந்திரனின் வீட்டிற்கு சென்றனர். அங்கே ஏற்கனவே மோகன் வரச்சொல்லி இருந்த ஒரு பெண் காவலாளி காத்திருந்தாள்.
"வந்து ரொம்ப நேரமாயிடுச்சா, மாளவிகா? "
"இல்லை சார். இப்போது தான் வந்தேன். நீங்களும் பின்னோடு வந்துவிட்டீர்கள்".
"சரி உள்ளே போய் பேசலாம், என்று எல்லோரும் உள்ளே சென்றனர். மகதியை ஓர் அறையில் படுத்து ஓய்வெடுக்க சொல்லி அழைத்துப் போனார் மங்களம்.
அதற்குள்ளாக மோகன் சென்று சீருடையில் திரும்ப, மகேந்திரனும் அவனை பின்பற்றி உடையை மாற்றிவிட்டு வந்தான். மங்களத்தின் உத்தரவின் பெயரில் அனைவருக்கும் பணியாள் தண்ணீர் மட்டும் சிற்றுண்டியை கொணர்ந்து வைத்துவிட்டுப் போனான்.
உண்மையில் அப்போது சாப்பிடும் மனநிலையில் யாரும் இல்லை. வந்திருந்த மாளவிகாவிற்கு வேறுபாடாக தோன்றாது இருக்க, பெயருக்கு கொரிக்க, மோகன் பேசினான்.
"அதன்படி, மாளவிகா மற்றும் நம்பிக்கையான ஓர் வயதான ஓட்டுனர் துணையுடன் மகதியை இரவு கொடைக்கானலுக்கு அனுப்பி வைக்க முடிவாயிற்று.
💜💜💜
விளக்கு வைக்கும் வேளையில் வீட்டிற்கு திரும்பிய மதுமதி, "அம்மா மகதி கிடைத்து விட்டாளா? என்று விசாரித்தாள். அவளை கோபமாக முறைத்து விட்டு பூஜை அறையில் சென்று அமர்ந்து கொண்டாள்.
"நான் என்ன செய்தேன் அம்மா? அவள் காணாமல் போனதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் என் மேல் ஏன் கோபப்படுறீங்க? சொல்லப்போனால் நான் வெளியே போகும்போது அவள் வீட்டில் தானே இருந்தாள்?? அப்படி பார்த்தால் நீங்கள் அவளை ஏதோ செய்துவிட்டதாக நானும் சொல்லலாம் தானே? என்றாள் எரிச்சலும் ஏளனமுமாக
"ஏய்ய்ய், பேசாமல் இங்கிருந்து போடி. என் மகதி கிடைக்கிற வரைக்கும் நீ என்கிட்ட பேசாதே." என்றுவிட்டு அவள் பணியை தொடர, அன்னையை வெறித்தபடி நின்றாள் மதுமதி..!