Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

31. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
மங்களமும் மாலதியும் மெதுவாக நடந்து வர, மோகனுடன் மகேந்திரன் பின்னால் இருந்த அந்த அறைக்கு ஓட்டமும் நடையுமாக விரைந்தனர்.

மகேந்திரனுக்கு பதற்றத்தில் கைகள் நடுங்கிற்று. சாவியை மோகனிடம் கொடுத்துவிட்டு அவனது தோளை இறுகப் பற்றியவாறு நின்றிருந்தான்.

அதே நேரம் மகதி யாரோ வரும் அரவம் உணர்ந்து ஒலி எழுப்ப முயன்றாள். ஆனால் ஒரு நாளுக்கு மேலாக நீரோ, உணவோ உட்கொள்ளாமல் அத்தனை நேரம் போராடியவளின் உடல் சோர்ந்துவிட, மயக்கத்திற்கு போய்விட, சரியாக மோகன் கதவைத் திறந்தான்.

"மதீ, என்ற கூவலுடன் மோகனை முந்திக்கொண்டு உள்ளே புகுந்தான் மகேந்திரன். அவளது கன்னத்தில் தட்டி, "மதி, மதிம்மா", என்று கலங்கிய குரலில் அவளை எழுப்ப முயன்றான். அதற்குள்ளாக மோகன் அவளது கட்டுக்களை நீக்கினான். மகேந்திரனின் சத்தத்தில் பின்னோடு உள்ளே நுழைந்த இரு பெண்களும் ஒரு கணம் அதிர்ந்து நிற்க முதலில் சுதாரித்து கொண்டுவிட்ட மங்களம், மகதியை நெருங்கி அவளது கைகளை தேய்க்கத் தொடங்க, ஒருவாறு நிகழ்வுக்கு திரும்பிய மாலதியும் அருகில் சென்று, கால்களை தேய்த்துவிட தொடங்கினாள்.

மகேந்திரன் அந்த அறைக்கு வெளியே சற்று தூரத்தில் இருந்த குழாயில் தன் கைக்குட்டையை நனைத்து எடுத்து வந்து மகதியின் முகத்தில் தெளிக்க, அவளிடம் அசைவு தெரிந்தது. மெல்ல அவளை எழுப்பி அமர வைத்து தன்மீது சாய்த்துக்கொணடு கைக்குட்டையால் அவளது முகத்தை துடைத்துவிட, அவளுக்கு உணர்வு வந்தது, ஆனால் கண்களை திறக்க முடியவில்லை.

"சாப்பிடாததால் உண்டான மயக்கமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது என்ற மோகன், மகி உன்னோட வண்டி சாவியை கொடு" என்று கேட்டு வாங்கிக்கொண்டு வேகமாக வெளியேறினான்.

பத்து நிமிடங்களில், கதவை திறந்து கொண்டு உள்ளே திரும்பிய மோகன், "மகி, தங்கச்சியை தூக்குடா, சீக்கிரம் பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய்விடலாம்" என்றான் மோகன்.

மகேந்திரன் குழப்பத்துடன் "மோகன் நாம் இவளை வீட்டிற்குள் கொண்டு போய்விடலாமே?"என்றான் மகேந்திரன்.

"எல்லாம் காரணமாகத்தான்,என்ற மோகன், வேகமாக பேச ஆரம்பித்தான்,"மகதி கிடைத்துவிட்டது இப்போதைக்கு யாருக்கும் தெரியக்கூடாது. முக்கியமாக மதுமதிக்கு, இங்கே பின்புறமாக வாசல் இருப்பதை பார்த்தேன். இப்படியே இவளை மருத்துவமனைக்கு அழைத்துப் போய்விடலாம். அதன்பிறகு என்ன செய்வது என்பதை யோசிக்கலாம் என்றவன் தொடர்ந்து, "இன்னும் அவள் தான் குற்றவாளி என்பதற்கு நம்மிடம் ஆதாரம் ஏதுமில்லை. மகதி கண்விழித்த பிறகு தான் எல்லாம் தெளிவாகும், என்றவாறு பின் வாசல் வழியாக சென்று காரில் ஏறிக்கொள்ள, மகதியை தூக்கிச்சென்று காரின் பின் சீட்டில் கிடத்தினான் மகேந்திரன்.

"மகி, நீ அம்மாவுடன் முன்பக்கம் வந்து நில்லு. நான் வண்டியுடன் வர்றேன், என்றுவிட்டு, மாலதியிடம் "ஆன்ட்டி, வீட்டில் குளுக்கோஸ் இருந்தால் தண்ணீரில் கலந்து ஒரு பாட்டிலில் கொடுத்து அனுப்புங்கள்."என்று காரை கிளப்பிக் கொண்டு போனான்.

அவர்கள் கிளம்பிச் சென்ற சற்று நேரத்தில் மாலதியும் ஆட்டோ ஒன்றை வரவழைத்து கிளம்பிவிட்டாள்.

மருத்துவமனையில்...

மகதிக்கு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருக்க, அவளுக்கு பூரண ஓய்வு தேவை என்று மருத்துவர் சொல்லிவிட்டு மருத்துவர் சென்றுவிட, எல்லோரும் அறையை விட்டு வெளியே வந்தனர். அப்போது மோகன் பேசினான்.

"மகதியை இன்றைக்கு ஒரு நாள் மட்டும் உங்கள் வீட்டில் தங்க வைத்துக்கொள்ளுங்கள் அம்மா, நாளைக்கு கொடைக்கானலுக்கு அனுப்பி விடுங்கள்" என்றவன் தொடர்ந்து மாலதியிடம்," ஆன்ட்டி என்னை தவறாக எண்ண வேண்டாம். இப்போது மகதிக்கு தேவை பாதுகாப்பு மட்டுமில்லை, மனநிம்மதியும் தான்"

"இதில் தவறாக நினைப்பதற்கு என்ன இருக்கிறது தம்பி? இப்போது என்னோட பெரிய கவலை, இனி அவளோட கல்யாணத்தை எப்படி நடத்தி முடிக்கப் போகிறேன் என்பதுதான். மதுமதியை என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை. எனக்கு இரண்டு பேரும் முக்கியம்தான். சொல்லப்போனால் மகதி மீது இருக்கும் இந்த வெறுப்பை ஒதுக்கி பார்த்தால் மதுமதி நல்லவள்தான். முன்பு இருந்த பிரச்சினை வேறு. இப்போது அவளோட பிரச்சினை வேறு, என்ற மாலதி மாப்பிள்ளை உங்ககிட்ட சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன் தம்பி ".

அவள் எதை குறிப்பிடுகிறாள் என்று புரிந்தவனாக, "ஆமாம் ஆன்ட்டி. இவர்கள் திருமணம் நடக்கனும்னா அதுக்கு ஒரே வழி மதுமதியே மகேந்திரனை வேண்டாம்" என்று சொல்ல வேண்டும்"

"அவளாக எப்படி சொல்லுவாள்? நேற்று தான் நான் கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல எடுத்து சொன்னேன். அப்படியும் கேட்கவில்லையே." என்றாள் மாலதி.

"சரி அவளே வேண்டாம் என்று சொல்லனும் என்றால் என்ன செய்யலாம் என்று உங்களில் யாருக்கேனும் யோசனை தோன்றினால் சொல்லுங்கள்" என்றான் மோகன்.

"நீ ஏதோ யோசித்து விட்டாய் போலிருக்கிறதே, மோகன்? அதை நீ சொல்லு, அது சரி வராது என்றால் வேறு யோசிக்கலாம்" என்றான் மகேந்திரன்.

"நான் ஒரு காவல் அதிகாரியாக இருந்து கொண்டு இதை சொல்லக்கூடாது. ஆனாலும் நண்பனின் வாழ்க்கைக்காகவும், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதாலும் துணிந்து சொல்கிறேன். அத்தோடு இது நாடகம் என்பது நம்ம நான்கு பேரைத் தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது. மகதிக்கு கூட தெரியக்கூடாது" என்றான்

"டேய் பில்டப் எல்லாம் ரொம்ப பலமாக இருக்கிறது. ஐந்து பேர் என்கிறாய் அப்புறம் மகதிக்கு தெரியக்கூடாது என்றும் சொல்கிறாய், கொஞ்சம் புரியும்படியாக சொல்லுடா, என்றான் மகேந்திரன்.

அப்போது நர்ஸ் வந்து பேஷண்ட் கண்முழிச்சுட்டாங்க," என்று சொல்லவும், முதலில் நீங்கள் இரண்டு பேருமாக போய் பார்த்துவிட்டு வாருங்கள். அப்புறம் மகி போய் பார்க்கட்டும் என்று நண்பனை அர்த்தமாக பார்த்தான் மோகன். புரிந்து கொண்டு புன்னகைத்தான் மற்றவன்.

"மாலதிக்கு மகளிடம் பேச எத்தனையோ இருந்த போதும், மகேந்திரன் தவித்துக்கொண்டு இருப்பானே என்று ஒத்தமனதாக இரு தாய்மார்களும் சற்று விரைவாக திரும்பி வந்துவிட்டனர்.

அடுத்து மகேந்திரன் உள்ளே சென்ற போது இருவேறு உணர்வுகள் ஆட்கொண்டிருந்தது. ஒருபுறம் அவள் கிடைத்து நல்லவிதமாக இருப்பதில் நிம்மதி உண்டான போதும், இன்னொரு புறம் அவனை விட்டு போக முடிவு செய்தாளே என்று மிகுந்த வருத்தமும் ஆத்திரமும் உண்டாயிற்று.

"அவன் அருகில் வரவும் அருவியாய் கண்ணீர் வழிய,"ப்ளீஸ் மனு என்னை மன்னிச்சிடுங்க"என்று மேலும் அழுதவளை அணைத்து ஆறுதலாக முதுகை வருடியவாறு சிலகணங்கள் இருந்துவிட்டு, "ஷ் ஷ் போதும். இனி அழக்கூடாது" என்று அவளது கண்களை துடைத்துவிட்டு, "எனக்கு கோபம் தான் மதி, அதே சமயம் நீ இப்படி ஒரு முடிவை எடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாய் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், எப்போதும் ஒன்றை நினைவு வைத்து கொள் மதிம்மா, இனி எந்த பிரச்சனை வந்தாலும் சரி, என்னிடம் வந்து சொல்லிவிட, வேண்டும். அப்புறமாக நாம் இருவரும் சேர்ந்து எப்படி அதை தீர்ப்பது என்று முயற்சிக்கலாம். இப்படி கோழைத்தனமாக முடிவு எடுக்கக்கூடாது. சரியாடா?"

"ஆமோதிப்பாக தலையசைத்தாள். ஏதோ நினைவிற்கு வர," நீங்கள் எப்படி வந்தீர்கள் மனு? எப்படி அங்கே தான் இருப்பேன் என்று கண்டுபிடித்தீர்கள்?"என்றாள்.

"அதெல்லாம் பிறகு சொல்கிறேன். கொஞ்சம் இரு, என்று மோகனையும் அன்னையரையும் உள்ளே அழைத்து வந்த மகேந்திரன், அப்படியே மோகனை அறிமுகம் செய்து வைத்துதான்.

"ஹௌ டிட் யூ ஃபீல் நௌவ் சிஸ்டர்?

"ஐம் ஃபைன்"

"ஓகே, தட்ஸ் குட் சிஸ்டர். சரி சொல்லுமா யார் உன்னை கடத்தினார்கள்? உன்னால் அடையாளம் காட்ட முடியுமா?" போலீஸ்காரனாக விசாரணையில் இறங்கினான்.

"ம்ஹூம், எனக்கு தெரியவில்லை. திடீரென்று என் முகத்தில் மயக்கமருந்து அழைத்தியதுதான். அப்புறம் அந்த அறையில் தான் கண்விழித்தேன்" என்றாள் மகதி.

"உனக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்ககறதா மகதி? மதுமதியாக இருக்கும் என்று எல்லோருக்கும் சந்தேகம். உனக்கு என்ன தோன்றுகிறது?

"வெறும் சந்தேகத்தை வைத்து என்ன செய்துவிட முடியும்? தவிர நான் கண்ணால் யாரையும் பார்க்கவில்லையே "என்றாள் புன்னகையுடன்.

"ம்ம் நீ சொல்வதும் சரிதான்மா. வெல், டேக் கேர்மா" என்று மோகன் விடைபெறும் விதமாக எழ,

"நீ ரெஸ்ட் எடு மகதி, நாங்கள் இதோ வந்துவிடுகிறோம்" என்று நால்வரும் வெளியேறினார்.


ஒருவரேனும் அவள் அருகே இருக்காமல் போகிறார்களே, ஏன் பேசுவதானால் அதை இங்கேயே பேசலாமே? அவளுக்கு மறைத்து அப்படி என்ன பேசப்போகிறார்கள்?? மகதி யோசனையுடன் பார்த்திருந்தாள்
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top