Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

30. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
மங்களத்தையும் அழைத்துக்கொண்டு மதனகோபால் வீட்டிற்கு அவர்கள் சென்றபோது, மாலதி வரவேற்று அமர வைத்தாள்.

தொலைபேசியில் விவரம் சொல்லியிருந்ததால் முதலில் வந்தவர்களுக்கு குடிக்க பழரசம் கொடுத்து உபசரித்தாள். சற்று நேரம் பொதுவாக பேசியிருந்துவிட்டு, "அண்ணி நீங்கள் இன்னும் எங்கள் வீட்டை சுற்றி பார்க்கவில்லையே... மாப்பிள்ளையும் வந்துபோய் தான் இருக்கிறார். சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. வாருங்கள் முதலில் மாடியை பார்த்துவிட்டு அப்புறமாக கீழே பார்க்கலாம். ஏன் சொல்கிறேன் என்றால் கீழே வீட்டைப் பார்த்தபிறகு தோட்டத்தில் நடந்தால் நன்றாக இருக்கும்" என்றவாறு மாலதி படிகளில் ஏற, மற்ற மூவரும் தொடர்ந்தனர்.

என்னதான் சுமூகமாக பேசினாலும், எல்லோரும் ஒருவித இறுக்கத்துடன் காணப்பட்டனர்.

முதலில் மதுமதியின் அறையை பார்க்க போனார்கள். அது பூட்டியிருந்தது. மாலதி கையோடு கொணர்ந்திருந்த சாவிகொத்தின் உதவியால் அவளது அறையை திறந்தாள்.

மியூசிக் சிஸ்டம், டிவி என்று ஆடம்பரமாக காணப்பட்டது. மோகன் அறை முழுவதும் தேடியதில் ஆதாரமோ வித்தியாசமாகவோ ஏதும் தென்படவில்லை. எதையும் கலைக்காமல் அறையை திரும்ப பூட்டிவிட்டு மகதியின் அறைக்குள் சென்றான். உள்ளே நுழையும் போது எதிரே புத்தக அலமாரி தென்பட்டது. இந்த அறை முற்றிலும் எதிராக காணப்பட்டது. டிவி, மியூசிக் சிஸ்டம், அலங்காரங்கள் எதுவும் இல்லாமல் எளிமையாக இருந்தது.

படிக்கும் விளக்குடன் ஒரு மேசை அங்கேயும் எழுதுவதற்காக நோட் இருந்தது. அதை எடுத்துப் பார்த்துவிட்டு உடனே மூடி வைத்துவிட்டு, "தங்கச்சி கவிதை எல்லாம் எழுதுவாளா மகி? என்றான் மோகன்

"அப்படியா? என்கிட்ட சொன்னதில்லைடா" என்று ஆவலாக அந்த நோட்டை எடுத்துப் பார்த்தான். ஆசையை எல்லாம் கவிதையில் கொட்டியிருந்தாள் மகதி. அவன் மனம் தவித்தது"

புத்தக அலமாரியில் ஒர் இடைவெளி இருப்பதை கவனித்த மோகன் இரண்டு புத்தகங்களை விளக்கிப் பார்த்தான். "இங்கே பாருங்கள் ஆன்ட்டி, இங்கே ஒரு கேமரா இருக்கிறது" என்று அதை ஒரு கைக்குட்டையால் கையில் எடுத்தான்.

மூவருமே அதிர்ந்து போனார்கள்.

"மகதியின் நடமாட்டங்களை அறிந்து கண்காணித்து இந்த கடத்தல் நடந்திருக்கிறது ஆன்ட்டி"

மாலதி பதற்றத்துடன், "கடவுளே,மது இந்த அளவுக்கு தரம் இறங்கிவிட்டாளா?" என்றாள்.

"மதுமதி தான் என்பதற்கு நமக்கு வலுவான ஆதாரம் கிடைக்கவில்லை ஆன்ட்டி ".

"மகதியை வெறுப்பவள் அவள்தான் தம்பி. இரண்டு அறைகளோட வித்தியாசத்தை நீங்களே பார்த்தீர்கள் தானே? மகதிக்கும் பழைய இளையராஜா பாடல்கள் பிடிக்கும். இங்கேயும் ஒரு சிஸ்டம் வைப்பதாக சொன்னேன். வேண்டாம் அம்மா நான் என் மொபைலில் கேட்டுக் கொள்கிறேன் என்றுவிட்டாள். எதிலும் மகதி எளிமையானவள். வம்பு வேண்டாம் என்று மதுவிடம் ஒதுங்கி போகிறவள். அப்படிப்பட்ட என் தங்கத்தை பாவீ என்ன பண்ணினாளோ? அவளை பெற்றது தான் நான் செய்த பெரிய பாவம் தம்பி" என்று அழுதவளை," மூவருமாக தேற்றினர்.

மற்ற அறைகளையும் காட்ட முடியுமா ஆன்ட்டி? நாளை பார்க்காமல் போனோமே என்று வருந்தும்படி ஆகிவிடக்கூடாது பாருங்கள் அதனால் தான் கேட்கிறேன் " என்றதும் மூவருக்கும் சற்று பரபரப்பு

விருந்தினர் அறைகளை ஒவ்வொன்றாக பார்த்துவிட்டு வந்தனர் கோடியில் இருந்த அறையை திறந்தபோது மோகன் எல்லோரையும் உள்ளே செல்லவிடாமல் தடுத்து, கூர்ந்து கவனித்தான். அங்கே தூசி படிந்திருந்தது. சோபாக்கள் எல்லாமும் அழுக்காகாமல் இருக்கு போர்த்தி வைக்கப்பட்டிருந்தது. வாசல் புறத்தில் மட்டும் கால் தடங்கள் தென்பட்டது. இழுத்துச் செல்லப்பட்ட தடயங்கள் காணப்பட்டது.

"இந்த அறையை சமீபத்தில் திறந்தீர்களா ஆன்ட்டி?"

"இல்லை தம்பி, வழக்கமாக பொங்கலுக்கு செய்வதுதான் தம்பி. திருமணத்தின்போது சுத்தம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து

இந்த வருடம் செய்யவில்லை. தவிர இந்த அறையோட சாவி என்கிட்டதான் இருக்கும். என்னாச்சு தம்பி?

"சமீபத்தில் திறக்கப்பட்ட அடையாளம் இருக்கிறது ஆன்ட்டி. யாரோ வந்திருக்காங்க".

"என்ன அதிசயமா இருக்கு? என்ற மாலதியின் முகம் கோபத்தில் சிவக்க, "இதுவும் அவள் வேலைதான்" என்றாள்.

"எப்படி சொல்றீங்க அத்தை? என்றான் மகேந்திரன்.

"கொஞ்ச நாள் முன்னாடி மது என்கிட்ட அவளோட அறை சாவியை எங்கோ மிஸ் பண்ணிட்டதாக சொல்லி மாஸ்டர் கீ சாவி கொத்தை வாங்கிப்போனாள். அப்புறம் கொஞ்சம் நேரத்தில் ரூமிற்குள் தான் சாவி இருந்ததாக சொல்லி மாஸ்டர் கீயை திருப்பி கொடுத்துவிட்டாள். அவளோட அறை கதவு தானாக மூடிக்கொள்ளும் வசதியுள்ளதால் நானும் அப்போது அதை இயல்பாக எடுத்துக்கொண்டேன். ஆனால் பொய் சொல்லி வாங்கியிருக்கிறாள் என்று இப்போது தான் விளங்குகிறது , "என்றாள்.

"ஒருவேளை உங்கள் யூகம் சரியாகக்கூட இருக்கலாம் ஆன்ட்டி. ஆனால் போலீசிற்கு ஆதாரம் தேவை ஆன்ட்டி. வெறும் யூகத்தில் யாரையும் குற்றவாளி ஆக்கிவிட முடியாது" என்றவன் மற்றவர்களை வெளியே நிற்க சொல்லிவிட்டு அவன் மட்டுமாக உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தான்.

ஆனால் ஆதாரம் எதுவும் கிடைக்காததால் அறையை பூட்டிவிட்டு எல்லோரும் கீழே இருந்த அறைகளை பார்வையிட்டு முடித்தனர்.

"ஆன்ட்டி எல்லா வேலையாட்களையும் இங்கே வரச் சொல்லுங்க. நான் முதலில் அவர்களை விசாரித்து விடுகிறேன்".

ஒவ்வொருவராக வந்தனர். மோகன் அவர்களிடம் கேட்டதற்கு பதில் சொன்னார்கள். கடைசியில் மேகலா வந்தாள். அவளிடமும் முடித்தபோது,

"நேற்று ஒரு பொண்ணு இருந்தாளே? அவள் தானே மகதியை கடைசியாக பார்த்ததாகச் சொன்னாள். அவள் எங்கே?

"அவளோட பிள்ளைக்கு அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாக சொல்லி இரவே ஊருக்கு சென்றுவிட்டாள். அவள் பல வருஷமாக இங்கே வேலை பார்க்கிறாள்" என்று தெரிவித்தாள் மாலதி.

"அவளோட மொபைல் நம்பர் இருந்தால் கொடுங்கள் ஆன்ட்டி, என்று எண்களை வாங்கி அழுத்தினான். அது ஸ்விட்ச் ஆஃப் ஆக இருந்தது". மேலும் இரண்டு முறை முயன்றும் அதே பதில் தான் கிடைத்தது.

"இந்த பெண்ணோட முகவரி எனக்கு வேண்டும் ஆன்ட்டி".

"தருகிறேன் தம்பி. நீங்கள் உட்காருங்கள். அண்ணி, மாப்பிள்ளை நீங்களும் உட்காருங்கள், என்று உள்ளே சென்று முகவரியை குறித்து வந்து கொடுத்தாள்".

"ஓகே, வெல் ஆன்ட்டி. இனி, பின்னால் வெறும் தோட்டம் மட்டும் தானா? அல்லது அங்கே ஏதும் கட்டிடம் இருக்கிறதா? என்றான் மோகன்.

"அங்கே பழைய சாமான்களை போட்டு வைக்கும் அறை மட்டும்தான் தம்பி. நேற்று மகதியை காணோம் என்றதும் முதலில் அங்கே தான் தேடினோம், என்று முன்பு நடந்த விபரத்தையும் தெரிவித்தாள் மாலதி.

"அப்படி என்றால் நான் அவசியம் அந்த அறையை பார்த்தே ஆகவேண்டும் ஆன்ட்டி, என்று மோகன் தோட்டத்திற்கு விரைய மற்றவர்களும் விரைந்தனர்.



அங்கே..

மகதி முந்தைய இரவில் நன்றாக தூங்கியிருந்தாள். காலையில் பசி எடுத்தது. காலையில் அந்தப் பக்கமாக வேலைக்காரி பெருக்க வருவாள் என்று எதிர் பார்த்தால் யாரும் வரக்காணோம். கைகளை அசைத்து அசைத்து கட்டை அவிழ்க்க முயன்றாள். கால் கட்டை அசைக்கக்கூட முடியவில்லை. கட்டை அவிழ்க்க முயன்று, தோற்று சோர்ந்து தூக்கமும் விழிப்புமாக பாதி நாள் கழிந்தது. பிற்பகலில் லேசாக பேச்சுக் குரல்கள் கேட்டது.. மகதி தன் பலத்தை திரட்டி ஓசை எழுப்ப முயன்றாள்.. ஆனால்...
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top