*அத்தியாயம் – 28*
சத்யமூர்த்திக்கு மைத்துனன் மகளின் அழுகையை எப்படி நிறுத்துவது என்று புரியவில்லை. அவர் யூகித்த விவரம் சரிதானா? ஆனால் இத்தனை காலமும் அவனை நேரில் பாராமல் பழகாமல் இருந்தவளின் மனதுக்குள் இப்படி ஒரு எண்ணம் எப்படி வந்தது? அல்லது ரசாயன மாற்றம் என்று சொல்கிறார்களே அது இதுதானா? சீதையும் ராமனும் ஒரே பார்வையில் உள்ளத்தை பறிகொடுத்ததாக அவர் படித்திருக்கிறார். அதுபோல கூட இருக்கலாம், என்று நினைக்கையில்.. முன் தினம் தோட்டத்தில்.. நிரஞ்சன் அவளை இழுத்து அணைத்தபடி உருண்டது, அதற்கு அவள் கோபமாக கேள்வி கேட்டாளே தவிர அவனை திட்டவோ அடிக்கவோ இல்லை. அடுத்ததாக அவன் தன் கைப்பேசியில் எதையோ காட்டி ஏதோ சொல்ல, பதிலுக்கு அவளும் கலகலவென்று சிரித்து எதையோ சொல்ல, எல்லாம் மனக்கண்ணில் காட்சியாக விரிந்தது. பொதுவாக திருமணம் ஆகாத ஒரு பெண்ணை ஆடவன் தொட்டால் உடனே அறைந்து விடுவாள் என்பது தானே இயல்பு? ஆக, அவன் மீது அவளுக்கு இருப்பது நேசம் தான்,என்று தீர்மானித்தவராக, மலர்வதனியின் தலையில் கையை வைத்து, அழாதேமா மலர், அவனுக்கு ஒன்றும் ஆகாது" என்று அவளுக்கு ஆறுதல் சொல்வது போல தனக்கும் சொல்லிக்கொண்டார். மலர்வதனியின் அழுகையும் சற்று குறைந்தது.
அதே நேரம்,நிரஞ்சன் அனுமதிக்கபட்டிருந்த அறைக்குள் மருத்துவர்கள் நுழைந்தனர். அதைப் பார்த்திருந்து நேரம் செல்ல செல்ல இருவருக்குமே மனம் கலங்க ஆரம்பித்தது. கால்மணி நேரம் கடந்ததும், உள்ளே சென்றவர்கள் திரும்பினர்.
"மாமனும் மருமகளும் உயிரைக் கையில் பிடித்தவாறு பேச்சு வராமல் பெரிய மருத்துவரை நோக்க,"நாங்களே எதிர்பார்க்கவில்லை இவ்வளவு சீக்கிரம் அவருக்கு உணர்வு திரும்பும் என்று, இனிமேல் அவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. எதற்கும் காலையில் ரிப்போர்ட்ஸ் வரட்டும், அதுவரை இங்கே எங்கள் கண்காணிப்பில் தொடர்ந்து இருக்கட்டும்"
"தாங்க்யூ டாக்டர். வந்து...அவரை பார்க்கலாமா டாக்டர்? என்றாள் மலர்வதனி.
"இப்போது இருக்கும் நிலையில் அவர் உணர்ச்சி வசப்படக்கூடாது, அதனால் தொந்தரவு செய்யாமல் பார்த்து விட்டு வந்திடுங்க" என்றுவிட்டுப் போனார்.
"மாமா, முதலில் நீங்கள் போய் பார்த்துவிட்டு, வாங்க! என்று சத்யமூர்த்தியை அனுப்பி வைத்தாள்.
"தந்தையைப் பார்த்ததும் புன்னகைத்தான் நிரஞ்சன். அவருக்கு அது மிகுந்த தெம்பை அளித்தது.
"கவனமாக ஓட்டக்கூடாதா ரஞ்சி, என்றார் வருத்தமான குரலில்.
"நான் ரொம்ப கவனமாகத்தான் அப்பா வந்தேன். எவனோ ஒரு குடிகாரன் திடீரென்று வண்டியின் குறுக்கே வந்துவிட்டான். அவன் மீது மோதாமல் இருக்க, பக்கவாட்டில் திருப்பினேன், அங்கு இருந்த பெரிய மரத்தில் தவிர்க்க முடியாமல் மோதிவிட்டது. எனக்காக வாங்கிக் கொடுத்தீர்களே,புதிய கார் வீணாகிவிட்டது அப்பா."
"போனால் போகட்டும் ரஞ்சி, உன்னை விட அது பெரிதில்லை. இன்னொரு கார் வாங்கிவிட்டால் போயிற்று. நீ மனதை அலட்டிக்கொள்ளாமல் இருப்பா, சரி நான் வெளியில் இருக்கிறேன். ஓய்வெடு"என்று எழுந்த தந்தையின் கையைப் பற்றி,''அம்மா எப்படி தாங்கினார்கள்? நீங்கள் எப்படி வந்தீர்கள் அப்பா? மயக்கத்திற்கு போகுமுன்பாக நான் வதனியின் எண்ணைத்தான் நர்ஸிடம் சொன்னதாக நினைவு"என்றான்.
மகனுடைய பேச்சில் சத்யமூர்த்திக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் தீர்ந்துபோயிற்று."அவள் தான் என்கிட்டே சொன்னாள். அம்மாவுக்கு இன்னும் சொல்லவில்லை. அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ இதை எல்லாம் யோசித்து கவலைப்படாதே ரஞ்சி"என்று அவனது கையை ஆறுதலாக அழுத்திவிட்டு வெளியேறினார்.
மலர்வதனி உள்ளே வந்தபோது அவன் சோர்வுடன் கண்களை மூடிப்படுத்திருந்தான். ஓசைப்படாமல் அருகில் சென்று நின்றவளுக்கு, தலையிலும் வலது கையிலும் கட்டுக்களுடன் அவனது தோற்றத்தை காணவும் கண்ணீர் ததும்பியது, புடவை தலைப்பை வாயில் பொத்திக்கொண்டு அழுகையை கட்டுப்படுத்த முயன்றும் விசும்பல் ஒலி வெளிப்பட்டுவிட, நிரஞ்சன் கண்களை திறந்து அவளை வியப்புடன் பார்த்தான், தந்தை அவள் வந்ததைப் பற்றி ஏதும் சொல்லாததால் அவள் வரவில்லை என்று நினைத்து இருந்தான். இப்போது அவளது அழுகையை காணவும், மனமும் உடலும் இனம்புரியாத உணர்வில் தவித்தது.
ஆனால், அதற்குள்ளாக,"ப்ளீஸ் மேடம், பேஷண்ட்டை தொந்தரவு செய்யாதீங்க, கொஞ்சம் வெளியே போய் இருங்க"என்றதும் மலர்வதனி அங்கிருந்து வேகமாக வெளியௌறினாள்.
நிரஞ்சனுக்கு அடிபட்ட வலியிலும் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. நர்ஸிடம் சொல்லி அவளை உள்ளே அழைக்கலாமா என்று நினைத்தவன், இந்த நிலையில் நடுவில் அந்த நர்ஸை வைத்துக்கொண்டு எதுவும் பேசுவதற்கில்லை, என்று அந்த யோசனையை கை விட்டான்.
☆☆☆
நிரஞ்சன் பாட்டிக்கு பிடிக்காது என்று அறிந்தே அந்தப் பெண்ணை அழைத்து வந்திருக்கிறான். அப்படி என்றால் ஏதோ திட்டத்துடன் தான் வந்திருக்கிறான். அதனால் தான் இத்தனை வருடங்களாக கண்ணில் படாத மாமன் மகள் மேல் இப்போது அக்கறை காட்டுகிறான். இருப்பவர்கள் எல்லோரும் முட்டாள் என்றே நினைத்துவிட்டான் போலும். அல்லது அம்மாவின் உடல் நிலையை சாக்காக வைத்து அவன் செயல்பட்டதால் யாருக்கும் சந்தேகம் வராது என்றும் நினைத்திருக்கலாம். முதலில் அவருக்கும் அவரது மனைவிக்கும் அப்படித்தானே தோன்றியது. வடிவு அதை நினைத்து வேறு வருந்தினாளே, ஆனால் எல்லாவற்றையும் கோர்த்து பார்த்தபிறகு இப்போது மகன் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றது புரிந்து போயிற்று. அது மட்டுமில்லை, அவனோடு வந்தவள், வருங்கால கணவனின் மாமன் மகளுக்காக உடைகள் வாங்குவதில் தேர்வு செய்வதும் அதை பிறர் அறியாமல் அவளது அறையில் அடுக்கி வைப்பதும், எந்தப் பெண்ணும் செய்யக்கூடிய காரியமில்லை. அது போக, அவள் தனியாக எங்கோ சென்று விட்டு வருகிறாள். மகன் உடன் போவதாக பெயர் பண்ணிக் கொண்டு அவளுக்கு டிரைவர் வேலை பார்க்கிறான் போலும், போலும் என்ன?அப்படியே தான். இப்போது கூட அவனோடு அவள் வரவில்லை தானே?ஆக,வேறு ஏதோ ஒரு விஷயமும் இதற்கு பின்னால் ஒளிந்திருக்கிறது. அது என்ன? என்று சத்யமூர்த்தி தீவிரமாக யோசனையில் ஆழ்ந்திருந்தார். அப்போது மலர்வதனியின் விசும்பல் ஒலி கேட்டு திடுக்கிட்டு திரும்பினார்.
சின்னக் குழந்தை போல தேம்பி அழுதவளைப் பார்த்து பதறிப்போனவராக,"மலர் என்னாச்சும்மா? ரஞ்சிக்கு தவிப்போடு மேல கேட்க அஞ்சியவராக நிறுத்த,
வாயில் சட்டென வார்த்தை வராமல், இல்லை என்று தலை அசைத்துவிட்டு,"அத்தானை அப்படி பார்க்க முடியவில்லை மாமா. மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது,"முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
அவளது தலையை ஆறுதலாக வருடிவிட்டு"போதும்மா மலர், இத்தனை காலமும் நீ அழுதது எல்லாம் போதும். இனி நீ எப்பவும் சிரிச்சுட்டு இருக்கனும். உன் அத்தானை ரத்தம் கொடுத்து நீதான் காப்பாற்றிவிட்டாயே மா. அப்புறம் எதுக்கு கவலைப்படறே? போய் முகத்தை கழுவிக்கொண்டு வா. நாம் இருவரும் போய் ஏதாவது சாப்பிட்டு வரலாம், என்று எழுந்தார்
"நீங்கள் போய் சாப்பிடுங்கள் மாமா, எனக்கு மனசே சரியில்லை ஒன்றும் வேண்டாம்" என்றாள்.
"நான் உன்னை இங்கே அவனுக்கு துணையாக விட்டுவிட்டு வீட்டுக்கு போகலாம் என்று நினனத்தேன் மலர். நீ இப்படி சாப்பிடாமல் கொள்ளாமல் இருப்பதானால் நானே இங்கே தங்கிக்கொள்கிறேன். நீ பேசாமல் வீட்டிற்கு போ. உன்னோட அத்தைதான் உனக்கு லாயக்கு" என்றார் சற்று கடுமையான குரலில்.
"இல்லை மாமா நா...நான் சாப்பிட வர்றேன். இருங்க"என்று மலர்வதனி எழுந்து போய் முகம் கழுவி வந்தாள்.
இருவருமாக சிற்றுண்டி விடுதிக்கு சென்று சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், வடிவுக்கரசியிடம் இருந்து கைப்பேசி அழைப்பு வந்தது, சத்யமூர்த்தி எடுத்து, "சொல்லுமா, என்றார்.
"என்னங்க ரஞ்சி இன்னும் வீட்டுக்கு வரலை. அத்தை வேற என்னை துளைக்கிறாங்க? இந்த பையன் அப்படி எங்கே தான் போயிருக்கிறான்? மலர் போன் ரிங் போகுது, அவளும் எடுக்க மாட்டேங்கிறாள், என்னதான் நடக்குதுங்க, நீங்க எதையாவது என்கிட்ட மறைக்கிறீங்களா?" என்றதும் திக்கென்று இருந்தது.
"அட என்னம்மா நீ, எதுக்கு இப்படி பதற்றப்படறே? அவள் போன் சைலண்ட் மோடில இருக்கு. நான் இன்னும் கொஞ்சம் நேரத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன். நீ கவலைப்படாதே, இரு மலர்கிட்ட பேசு" என்று ஃபோனை மலர்வதனியிடம் கொடுத்தார். அவளுக்கு இருந்த மனநிலையில் பேசுவது சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் அத்தைக்கு சந்தேகம் வராமல் பார்த்து கொள்வது இப்போது மிகவும் அவசியம் என்று தோன்ற,
"ஹலோ அத்தை,எனக்கு ஒன்றுமில்லை. மாமா ஜூஸ் வாங்கிக் கொடுத்தாங்க. அப்புறம் சாரி அத்தை. உங்ககிட்ட சொல்லாமல் வந்துவிட்டேன். இன்னிக்கு இன்னொரு நர்ஸ் வராததால் நான் நைட் ட்யூட்டி பார்க்க வேண்டியதாகிட்டது. நாளைக்கு லீவு போட்டுறேன் சரியா அத்தை"என்று சொல்லவும் எதிர்முனையில் சிலகணங்கள் மௌனம் நிலவ,"ஹலோ, அத்தை, அத்தை,கோச்சுக்காதீங்க ப்ளீஸ், ப்ளீஸ்.. இனிமேல் உங்ககிட்ட சொல்லாமல் டூட்டி ஒத்துக்கமாட்டேன் சரிதானா? பேசுங்க அத்தை"
"ம்..ம் இதுதான் கடைசி உனக்கு, இன்னொரு தடவை இப்படி ஏதாவது பண்ணினால் உன்னோட நான் பேசவே மாட்டேன் என்ற வடிவுக்கரசி ஆனால் எனக்கு என்னவோ மாமனும் மருமகளும் எதையோ மறைக்கிறீங்கனு தோனுது. உன் அத்தான் வரட்டும், அவன்கிட்ட சொல்லி எல்லாம் கண்டு பிடிக்கிறேன்"
"ம் ம்.. நானும் பார்த்துட்டு தான் இருக்கிறேன் அத்தை, உங்க பிள்ளை வந்தப்புறம் ரொம்பத்தான் பண்ணுறீங்க,என்றாள் பொய்க் கோபத்துடன் சொல்ல,
"அப்படி என்னடி பண்ணிட்டேன்? நீதான் எப்பவும் என் செல்லம்டி, உனக்கு அப்புறம் தான் அவன்,என்று குழைந்தவள், பாட்டி கூப்பிடுறாங்க, காலையில் வா,அப்போது பேசிக்கிறேன். சரி ராத்திக்கு நல்லா சாப்பிடுடி, கட்டாயம் பால் வாங்கி குடிக்கணும் சரியா? என்றாள்.
"குடிக்கிறேன் அத்தை. அப்புறம் உங்க மருந்து எல்லாம் எடுக்க வசதியாக கவரில் எழுதி வச்சிருக்கிறேன். மறக்காமல் ராத்திரி சாப்பிட்டு படுக்கணும்"என்றுவிட்டு, பேச்சை முடித்தாள்.
அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த சத்யமூர்த்தி,
"என்னம்மா சொல்றா உன் அத்தை? என்றார்.
"அத்தை பார்க்கத்தான் அப்பாவி மாதிரி இருப்பாங்க மாமா. ரொம்ப புத்திசாலி. அவங்களுக்கு நாம சொன்னதில் நம்பிக்கை இல்லை. ஏதோ ரெண்டு பேரும் மறைக்கிறீங்க, என் பையன்கிட்டே சொல்லி கண்டு பிடிக்கிறேன் சொன்னாங்க"
"அது என்னவோ நிசம்தான். நான் நிறைய தடவை பொய் சொல்ல தெரியாமல் மாட்டியிருக்கிறேன்மா"என்று சிரித்தார்.
"நானும் தான் மாமா"என்று அவரோடு இணைந்து சிரித்தாள் மலர்வதனி.
அப்போது சத்யமூர்த்தியின் கைப்பேசி மீண்டும் ஒலித்தது.
☆☆☆
ஜாஸ்மின் ஷாப்பிங் முடித்ததும் சாரகேஷ், அவளை கால் டாக்ஸியில் ஏற்றி அனுப்பி விட்டு, நிரஞ்சனுக்கு தெரியப்படுத்த தொடர்பு கொண்டான். அது சுவிட்ச் ஆப் என்று வரவும், ஜாஸ்மினுக்கு தெரிவித்து அவளை போன் செய்யச் சொன்னான். ஜாஸ்மின்னுக்கும் அதே தான் பதிலாக வந்தது. அப்படி எல்லாம் வைப்பவன் இல்லையே என்று நினைத்தவள் ஒருவேளை சார்ஜ் போடாமல் மறந்து தூங்கிவிட்டானோ? என்று நினைத்தாள்.
சற்று நேரத்தில் அவளது கைப்பேசி ஒலிக்க, அவசரமாக எடுத்தாள். அது அவர்கள் சென்று வந்த வாகனக்கூடத்தில் இருந்து
அழைத்திருந்தனர். எதற்கும் இருக்கட்டும் என்று தொடர்புக்கு அவளது எண்ணையும் நிரஞ்சன் கொடுத்திருந்தான்.
"மாலை வணக்கம் மேடம்,
"மாலை வணக்கம்,"வண்டியை டெலிவரி கொடுத்துட்டிங்களா?
"அது விஷயமா தான் மேம் கால் பண்ணினேன். நிரஞ்சன் சாருக்கு கால் போகவில்லை. அதனால் தான் உங்களை தொடர்பு கொண்டேன்,என்று சொல்லிவிட்டு, இப்போதுதான் வண்டியை டெலிவரிக்கு எடுத்துப் போகிறார்கள் மேடம். அதை inform பண்ணத்தான் கூப்பிட்டேன் மேம்"
"Oh, that's fine thank you,"என்றாள் ஜாஸ்மின்.
"Have a nice day mam" என்று முடித்துக்கொண்டாள் விற்பனை பெண்மணி.
இப்போது டெலிவரி செய்ய போனவர்கள், அவளிடம் வழி கேட்டால் என்ன செய்வது என்று யோசித்தவள், அன்றைக்கு சங்கரனிடம் இருந்து எதற்கும் தேவைப்படும் என்று சத்யமூர்த்தியின் எண்ணை வாங்கி வைத்தது நினைவிற்கு வந்தது, சட்டென்று அவரது எண்ணிற்கு தொடர்பு கொண்டாள் ஜாஸ்மின்.
* அத்தியாயம் - 29*
சத்யமூர்த்தியின் கைப்பேசி ஒலிக்கவும், எடுத்து பார்த்தார் ஏதோ எண், எடுப்பதா வேண்டாமா என்று யோசித்தவர் கட் செய்துவிட்டார். காரணம் அடிக்கடி வங்கியில் இருந்தோ அல்லது சிம் கம்பெனியில் இருந்தோ அழைப்புகள் வந்து கொண்டிருக்கும். இதுவும் அப்படித்தான் என்று தோன்றியது,
ஆனால் மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வர, அதை ஏற்று பேசினார்." ஹலோ யார்?"
"ஹலோ அங்கிள் நான் ஜாஸ்மின்",
"நீயாமா என்ன விஷயம்? என்றார்.
"ஸாரி டூ டிஸ்டர்ப் யூ அங்கிள். நிரஞ்சன் ஃபோன் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது. அதனால் தான் உங்களை அழைக்கும்படி ஆகிவிட்டது"
"அது.. பரவாயில்லை, என்றவர் ஏதோ நினைவு வந்தவராக,"ஆமாம் நீ எங்கே இருக்கிறாய் மா? என்று வினவினார்.
"நான் இப்போது தான் வீட்டிற்கு போய்க்கிட்டு இருக்கிறேன். இன்றைக்கு டூவீலர் புக் பண்ணினோம், அதை இன்னும் கொஞ்சம் நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்ய ஆட்கள் வருவார்கள், அவர்கள் வீட்டிற்கு வழி கேட்கக்கூடும் என்று உங்கள் எண்ணை கொடுத்திருக்கிறேன் அங்கிள், அதை சொல்லத்தான் அழைத்தேன்" என்றதும்
"ஓ! சரிம்மா, நீ இப்போது உடனே வீட்டிற்கு போகவேண்டாம் ஜாஸ்மின். நான் சொல்கிற இடத்திற்கு வந்துவிடு. ஏன் என்பதை நீ இங்கே வந்து அறிந்து கொள்ளலாம் மா, என்றதும்
"அங்கிள், Anything serious? நிரஞ்சன் உங்ககூட இருக்கிறானா? என்றாள் பதற்றத்துடன்!
இவளும் பாசக்காரிதான் போல. என்னவோ, ஏதோ என்று யூகித்து கேட்கிறாளே,என்று நினைத்துவிட்டு,
"கொஞ்சம் அப்படித்தானம்மா, என்று விலாசம் தெரிவித்து பேச்சை முடித்துக் கொண்டார் சத்யமூர்த்தி.
மலர்வதனிக்கு மாமா ஜாஸ்மின்னை இங்கு அழைப்பதின் காரணம் புரிந்தது, என்றாலும் அவள் இங்கே வந்தால் வருங்கால மனைவி என்ற நினைப்பில் வீடு திரும்ப சம்மதிப்பாளா என்ற சந்தேகம் வந்தது. அப்படியே அவள் வீட்டிற்கு போனாலும் அத்தை கேள்வி கேட்பாள், அதனால் ஜாஸ்மின் வீட்டிற்கு போகாமல் இருப்பதே நல்லது. அத்தோடு மருத்துவமனையின் விதிமுறைப்படி ஒருவர் தான் இருக்க முடியும். இப்போது என்ன செய்வது? அவளாலும் அத்தானை விட்டுவிட்டுப் போக இயலாது.
போன் பேசி முடித்து விட்டு பாதி சாப்பாட்டில் சற்று திகைத்தாற் போல இருந்த மலர்வதனியை பார்த்தவருக்கு காரணம் கொஞ்சம் புரிந்தது,
என்றாலும் அதை காட்டிக் கொள்ளாமல், "என்னம்மா மலர், சாப்பிடாமல் இருக்கிறாய்?" என்றதும் சுதாரித்து அவசரமாக அள்ளி போட்டுக் கொண்டு, எழுந்து கைகழுவ சென்றாள்.
"சிலகணங்களில் திரும்பி வந்தவள், "மாமா நான் அத்தான் அறைப் பக்கம் போய் இருக்கிறேன்" என்று பதிலுக்கு கூட காத்திராமல் நகர்ந்துவிட்டாள்.
சத்யமூர்த்தி போனில் எதையும் விளக்க முடியாது என்று தான் ஜாஸ்மின்னை வரச் சொன்னார். மனைவியின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது சொதப்பி விடக்கூடாது என்பதும் முக்கிய காரணம். சாப்பிட்டதற்கு பில்லை கொடுத்துவிட்டு, அவரும் தீவிர சிகிச்சை பிரிவை அடைந்த போது மலர்வதனி அழுது சிவந்த முகத்துடன் காணப்பட்டாள். அவருக்கே உறுதி தேவைப்படும்போது, அவளை என்ன சொல்லி தேற்றுவது என்று புரியவில்லை. அவள் தலையை வருடியபடி, அமைதியாக அருகில் அமர்ந்திருந்தார்.
மலர்வதனிக்கு ஏனோ அத்தையின் நினைவு வந்தது. அவளும் இப்படித்தானே வாய் பேச்சு இல்லாமல் அவளை ஆறுதல் படுத்துவாள். அப்படி என்றால் மாமாவுக்கும் அவள் மீது அத்தையை போலவே பிரியம்தானா? என்று ஆச்சரியமும் ஆனந்தமுமாக முகத்தை துடைத்து கொண்டாள்.
சத்யமூர்த்தி வெகு நாட்களாக மனதில் உள்ளதை மலர்வதனியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்,ஆனால் சொல்வதற்கு சரியான சந்தர்ப்பம் அமையவே இல்லை. இன்றைக்கு அதை சொல்லிவிட்டால் அவரது மனபாரமும் குறையும், மலர்வதனிக்கு அவர் மேல் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மனக் குறையும் அகலும் என்று தோன்ற,
"மலர், நான் எப்போதும் பாட்டி வார்த்தைக்கு ஏன் மதிப்பு தர்றேன்னு உன் அத்தை உன்கிட்ட சொன்னாளான்னு தெரியாது. இப்போ நான் சொல்றேன், என்று ஆரம்பித்தார். "எங்கப்பா நான் பத்து வயதாக இருந்தப்போவே காலமாகிட்டார். சந்திரமதிக்கு அப்போது 3 வயசு. என்னோட பெரியப்பா எங்க சொத்தை பிரிச்சு கொடுத்து அனுப்பிவிட்டார். அப்பாவோட சொத்தை எல்லாம் வித்துட்டு, எங்களை தாத்தா, அதாவது என் அம்மாவோட அப்பா கூட்டிட்டு வந்துவிட்டார். அவரோட வீடுதான் இப்ப நாம் இருக்கிறது. என் தாத்தாவுக்கு ஒரே செல்ல பொண்ணு என்னோட அம்மா. அவள் வாழ்க்கை இப்படி பட்டுப்போச்சுன்னு தாத்தாவுக்கு ஒரே கவலை, ஆனாலும் மகளோட எதிர்காலம் பற்றின பயமும் இருந்தது. கையில் பெண் குழந்தை வேறு இருக்கிறதே, கரை சேர்க்க வேண்டும் என்று. அவருக்கும் சொத்து இருந்தது. ஆனால் உட்கார்ந்து சாப்பிட்டால் எவ்வளவு நாளைக்கு காணும்? உடையவன் பார்க்காவிட்டால் ஒரு முழம் கட்டைம்பாங்க, அதனால் குடும்ப தொழில் விவசாயத்தை தாத்தாகூட அம்மாவும் செய்தாங்க, அவ்வளவு காலம் சௌகரியமாக வாழ்ந்துட்டு எங்களை வளர்க்க என்று கஷ்டப்பட்டாங்க. படிக்கிற நேரம் போக நானும், அவங்களோட விவசாயத்தை கத்துக்கிட்டேன்.
எனக்கு 15வயசு இருக்கும் போது தாத்தாவும் காலமாகிவிட்டார். அப்புறமாக அம்மா தனியாளாக உழைச்சு எங்களை வளர்த்து ஆளாக்கினாங்க. அம்மா வளர்ந்த சூழ்நிலை காரணமாக, ஜாதியை பெரிசா நினைக்கிறாங்க,சில மூடநம்பிக்கைகளும் உண்டு. அதை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை. அம்மாவோட கஷ்டத்தை நான் கூடவே இருந்து பார்த்ததால், அம்மா சொல்லை பல நேரங்களில் என்னால் மீற முடியவில்லை. அதற்காக நியாயம், தர்மத்தை நான் விட்டுவிடவில்லை. என்னோட கருத்தை சொல்லி பார்ப்பேன். அதன் பிறகு அவர்கள் முடிவிற்கு விட்டு விடுவேன். பெரும்பாலும் நான் எதிர்த்து பேசியது இல்லை என்பதால், அம்மா நான் சொல்வதை ஏற்றுக்கொள்வார்கள். அப்படித்தான் நீ வந்தபோது உன்னை ஆதரவில்லாமல் விடக்கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருந்தேன். அத்தோடு நம்மோடு வைத்து வளர்ப்போம் என்று நான் சொல்லி இருந்தால் அம்மா ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் வேறு வழி இல்லாமல் நிகிதாவை எடுத்துக்காட்டி பேச நேர்ந்தது. அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. போகட்டும் என்று அந்த வெளி அறையில் தங்க வைக்க ஒத்துக்கொண்டாங்க, என்று நிறுத்தியவர், மீண்டும் தொடர்ந்தார், "பாட்டி வயதானவர்கள் மலர், அவர்கள் மனஅமைதியும் எனக்கு முக்கியம், அதேபோல் உன்னோட மன அமைதியும் முக்கியமாக இருந்தது. ஒருவேளை நான் வலுக்கட்டாயமாக உன்னை வீட்டிற்குள் வைத்திருந்தால், என் அம்மா தான் என்றாலும் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும், உன்னை நிம்மதியாக இருக்க விட்டிருக்க மாட்டார்கள், அதற்கு நீ அந்த தனியறையில் ஓரளவுக்கு சுதந்திரமாக இருப்பது மேல் என்று எண்ணினேன். அத்தையை போல என்னால் வெளிப்படையாக உன்னிடம் பாசத்தை காட்ட முடியவில்லை, என்றாலும் நான் உன்னை என்றைக்கும் கைவிடவில்லை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும் மலர்"என்று சத்யமூர்த்தி முடித்தார்.
மலர்வதனியிடம் அவர் இவ்வளவும் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை, என்றாலும் அவளது நன்மையை கருதியே அவர் அப்படி செய்திருக்கிறார் என்பதையும், அன்றைய அவரது சூழ்நிலையையும் புரிந்து கொள்ள முடிந்தது.
"பாட்டிக்கு மறைத்து நீங்கள் எனக்காக உடைகள் மற்றும் வேற பரிசுப் பொருட்களை வாங்கி அத்தை மூலமாக தந்தபோதே எனக்கு உங்கள் பாசம் புரிந்துவிட்டது மாமா. அதனால் நான் என்றைக்கும் தவறாக நினைத்ததே இல்லை" என்றதும் சத்யமூர்த்தியின் முகம் தெளிந்தது.
அப்போது,"அங்கிள், என்று வந்து நின்ற ஜாஸ்மின்,"என்னாச்சு நிரஞ்சனுக்கு? என்றாள் பதற்றத்துடன்.
சத்யமூர்த்தி விவரம் சொன்னார்.
ஓ! மை காட்! இப்போது எப்படி இருக்கிறான்? டாக்டர் என்ன சொன்னார்? என்று பதறியவள்,
"ஆன்ட்டிக்கு தெரிந்தால் தாங்க மாட்டார்களே அங்கிள்? அவர்களிடம் எப்படி சொன்னீர்கள்? என்றாள் கவலையோடு.
"ஆமாம் மா. இன்னும் அவளுக்கு விஷயம் தெரியாது. அதனால் தான் உன்னை இங்கே வரச் சொன்னேன். புரிகிறது இல்லையா? நீயும் நிரஞ்சனும் ஒன்றாக வெளியே போனதால், நீ அவனோடு இருப்பதாகத்தான் ஆன்ட்டி நினைத்துக் கொண்டிருக்கிறாள். இந்த சூழ்நிலையை உன்னால் தான் சமாளிக்க முடியும் ஜாஸ்மின், என்ன செய்யலாம் நீயே சொல்லுமா"என்றதும் மலர்வதனிக்கு மாமாவின் திட்டம் புரிந்தது.
"நானா? என்று ஒருகணம் திகைத்தவள், சிலகணங்கள் யோசித்தாள். பிறகு, நான் இப்போது நிரஞ்சனை பார்க்கலாமா அங்கிள்? என்றாள்.
மலர்வதனிக்கு பற்றிக்கொண்டு வந்தது. இவளை யோசனை கேட்டால், சொல்லவேண்டியது தானே? அதை விட்டு அடிபட்டு கிடக்கிற மனுஷன்கிட்ட என்ன வேலை? என்று உள்ளூர குமுறினாள்.
"பார்க்கலாம் ஜாஸ்மின், அவன் உணர்ச்சிவசப்படக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருக்கார். அதனால் எது என்றாலும் யோசித்துப் பேசுமா, என்றார்.
"Don't worry Uncle, just 5mints dhan, என்றுவிட்டு உள்ளே சென்றாள். சொன்னது போல, உடனே திரும்பி வந்தவள்,"என்னை உங்ககூட வீட்டிற்கு போகச் சொன்னான். ஆன்ட்டி கேட்டால் நிரஞ்சன் அவரோட பழைய நண்பர்களை திடீரென்று சந்தித்ததால் அவர்கள் வற்புறுத்தி மகாபலிபுரம் அழைத்து போய்விட்டதாக சொல்ல சொன்னார். செல்ஃபோன் கீழே விழுந்து உடைந்து விட்டதால் பேசமுடியவில்லை, ராத்திரி பேசுவதாக சொல்லச் சொன்னான்".
அத்தான் சரியான ஆளுதான், என்று எண்ணிய மலர்வதனிக்கு, ஜாஸ்மின்னை தங்கச் சொல்லாதது வியப்பாக இருந்தது.
"சரிம்மா, நீ கவனமாக இரும்மா, ஜாஸ்மின், உன் ஆன்ட்டியை சாதாரணமாக நினைத்துவிடாதே" என்று எச்சரித்தார்.
"நிரஞ்சன் கூட அப்படித்தான் சொன்னான் அங்கிள், நான் பார்த்துக் கொள்கிறேன். வாங்க கிளம்பலாம், என்றவள் "Take Care மலர், நீ கவலைப்படாதே அவனுக்கு ஒன்றும் ஆகாது"என்று மலர்வதனியின் தோளில் தட்டிவிட்டு நகர,
ஜாஸ்மின்னுடன் விடைபெற்ற சத்யமூர்த்தி யோசனையுடன் அவளை பின் தொடர,குழப்பத்துடன் நின்றாள் மலர்வதனி.