Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

28. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
கொடைக்கானல்_

மனோகரியிடம் இன்னும் நாலு நாள் கழித்து கிளம்பலாம் என்று பிறைசூடன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவள் மும்பை செல்வதில் பிடிவாதமாய் இருந்தாள். வேறு வழியில்லாது விமான டிக்கெட்டிற்கு முயன்றால் கிடைக்கவில்லை. ரயிலிலும் கிடைக்கவில்லை. மேலும் இரண்டு தினங்கள் இப்படியே கழிய, சந்திரமௌலி தனக்கு தெரிந்தவர் மூலமாக சென்னையிலிருந்து செல்ல ரயிலில் டிக்கெட் ஏற்பாடு செய்ததோடு நல்ல காரோட்டியுடன் தன் காரில் சென்னை வரை செல்லவும் உதவினார். அவர்கள் மும்பையை நெருங்கிக் கொண்டிருக்கையில் மதுவந்தியிடமிருந்து அந்த செய்தி கிடைத்தது.

மும்பை..

கோடை முடிந்து மும்பையில் மழைக்காலம் தொடங்கியிருந்தது. அன்று அதிகாலையில் சுமதி வலியில் துடிக்கும் குரல் கேட்டு ஒருகணம் திடுக்கிட்ட மதுவந்தி, அப்போதுதான் எழுந்து பல்துலக்கி முடித்து குளிக்க உடைகளை கையில் எடுத்திருந்தாள். சுமதியின் குரல் கேட்டதும் துணிகளை அப்படியே போட்டுவிட்டு விரைந்தாள். அங்கே, நிகிலன் பதற்றத்துடன் நின்றிருந்தான். அவனுக்கு முந்தைய சம்பவம் மனதுக்குள் ஓடிற்று அதை உணர்ந்தவளாக,"அண்ணா நீங்கள் கார் ஸ்டார்ட் பண்ணி வையுங்கள். நான் ஏற்கனவே எல்லாம் ரெடியா எடுத்து வச்சுட்டேன். பதற்றப்படாதீங்க அண்ணிக்கு சுகப் பிரசவம் தான் ஆகும்" என்றபடியே சுமதியிடம் ஓடினாள்! அவளது வார்த்தையில் சற்று திடம் பெற்றவனாக நிகிலன் வெளியேறினான்.

அதற்குள் சத்தம் கேட்டு ரவீந்தரனும் ஓடிவந்தான். "அக்காவை கைத்தாங்கலாய் காருக்கு கூட்டிப்போங்க. நான் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு வந்துவிடுகிறேன்" என்று மதுவந்தி அவனை பணித்துவிட்டு பரபரவென்று செயல்பட்டாள்.

அவள் சொன்னபடியே தமக்கையை அழைத்துக்கொண்டு ரவீந்தரன் வெளியேற,மதுவந்தி நிகிலனின் அறையை பார்த்துவள், அங்கே சார்ஜரில் இருந்த கைப்பேசியை எடுத்துக்கொண்டு, அடுத்த அறையில் இருந்து ரவீந்தரனின் கைப்பேசியையும் எடுத்து கைப்பைக்குள் போட்டுக்கொண்டாள். அடுத்து ப்ளாஸ்க் மற்றும் தேவையான பொருட்களுடன் அடங்கிய கூடையை எடுத்துக்கொண்டு, கதவைப் பூட்டிவிட்டு காருக்கு விரைந்தபோது சுமதியை பின் இருக்கையில் அமர வைத்துவிட்டிருந்தான் அவளது தம்பி. மறுபுறமாய் அவளும் ஏறிக் கொள்ள, நிகிலன் இருக்கும் நிலையில் காரை ஓட்டுவது சிரமம் என்று உணர்ந்தவனாக ரவீந்திரன் அவனை மனைவியுடன் அமரச் சொல்லி விட்டு, வண்டியை கிளப்பினான்.

மதுவந்தி கைப்பேசியில் பிறைசூடனுக்கு தகவல் அனுப்பிவிட்டு, சுமதியின் மறுபுறத்தில் அமர்ந்தபடி, முதுகை வருடியபடியே "அண்ணி தைரியமாக இருங்கள் இன்னும் கொஞ்சம் நேரம் தான் அப்புறமாக ராஜா மாதிரி மகன் வரப் போகிறான் பாருங்க,” என்று மெல்லிய குரலில் அவளிடம் பேச்சுக் கொடுத்தவாறு வந்தாள்.

மருத்துவமனையை அடைந்தபோது மதுவந்தியின் கைபேசி ஒலித்தது.

கைபேசியில் அழைத்தது யார்? சுமதிக்கு என்ன குழந்தை???



மருத்துவமனையை நெருங்க நெருங்க நால்வருக்குமே உள்ளுர பதற்றம்தான். அதை காட்டிக்கொள்ளாது இயல்பாக இருக்க முயன்றார்கள். வலி அதிகரிக்க அதிகரிக்க வியர்வையில் நனைந்திருந்தாள் சுமதி.

ஏற்கனவே மருத்துவருக்கு தகவல் தெரிவித்திருந்ததால் அங்கே எல்லாமும் தயார் நிலையில் இருந்தது. மருத்துவமனையை அடைந்தபோது மதுவந்தியின் கைபேசி ஒலித்தது. அதை காதுக்கு கொடுத்தபடி கதவைத் திறந்து சுமதி இறங்க உதவி செய்தாள், அதற்குள் இரு ஆண்களும் அந்தப்பக்கம் வந்துவிட அவர்களிடம் சுமதியை ஒப்படைத்துவிட்டு மதுவந்தி பேசலானாள். பிறைசூடன்தான் அழைத்திருந்தார்.

அவர்கள் மும்பைக்குள் வந்துவிட்டதாகவும் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். மனோகரியின் முன்பு அவளை வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மதுவந்திக்கு அவர் சொல்வதின் அர்த்தம் புரிந்ததால் சரி என்றுவிட்டாள்.

லிப்டின் மூலமாய் மற்ற மூவரும் மேல் தளம் சென்றுவிட்டிருக்க மதுவந்தி வரவேற்பறையில் முன்பணம் கட்டிவிட்டு படிகட்டு வழியாய் மேல் தளம் அடைந்த போது சுமதியை அறையினுள் அழைத்துச் சென்றுவிட்டுருக்க,அவள் கொணர்ந்த பையையும் பணம் கட்டிய ரசீதையும் நிகிலனிடம் கொடுத்தாள். அப்போதுதான் அவன் தன் ஏடிம் கார்டு கைபேசி எதுவும் எடுத்துவராதது நினைவுக்கு வந்தது.

"நன்றிம்மா" என்றான் நிகிலன்

"எனக்கு போய் நன்றிலாம் எதுக்கு அண்ணா? என்றவள்,

"அண்ணா உங்க செல்போன் அப்புறம் உங்க மச்சான் செல்போன் அந்த கூடையில் இருக்கு. அங்கிள், ஆன்ட்டி மும்பைக்கு வந்து விட்டார்களாம். நேராக இங்கேதான் வருகிறார்களாம் நீங்க டென்ஷன்ல இருப்பீங்க என்று என்கிட்ட தகவல் சொன்னார். நான் இப்போது வீட்டுக்குப் போய் எல்லாருக்கும் லஞச் எடுத்து வர்றேன். காலை டிபன் நீங்கள் இங்கே கேண்டினில் பார்த்துக் கொள்ளுங்கள். சுமனாவும் வீட்டு வேலைக்காக வருவாள். ஆள் இல்லை என்றால் திரும்பிப் போயிடுவாள். நிறைய வேலை இருக்கு அண்ணா என்று மதுவந்தி சொல்லிக் கொண்டிருக்கையில்...

டாக்டர் பிரசவ அறையிலிருந்து வெளிப்பட்டார்!

புன்னகை தவழ,"மிஸ்டர் நிகிலன் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது, தாயும் சேயும் நலம் வாழ்த்துக்கள்" என்று ஹிந்தியில் மொழிய மூவரின் முகத்திலும் பிரகாசம்.

"நன்றி டாக்டர், நாங்கள் குழந்தையை பார்க்கலாமா? என்று நிகிலன் ஆவலாய் வினவ,

"இன்னும் கொஞ்சம் நேரம் பொறுங்கள் தனி அறைக்கு மாற்றியதும் போய் பார்க்கலாம் என்று சென்றுவிட,

"வாழ்த்துக்கள் மாமா" என்று ரவீந்தரன் நிகிலனைக் கட்டிக் கொண்டான்.

"வாழ்த்துக்கள் அண்ணா" என்ற மதுவந்தி அவளிடமிருந்த பணத்தை நிகிலனிடம் தந்தாள்.

"தாங்க்ஸ் மாப்பிள்ளே, தாங்கஸ்மா தங்கச்சி என்ற நிகிலன் கேள்வியாய் அவளைப்பார்க்க"இது உங்க மாமா கொடுத்த பணம்தான் அண்ணா. அவசரத் தேவைக்காக இருக்கட்டும்னு சொன்னார். இப்போ நீங்க வீட்டுல இருந்தீங்க சரியாப் போச்சு. ஒருவேளை நீங்க இல்லாத நேரத்துல அண்ணிக்கு இந்த மாதிரி சமயம்னா நான் என்ன செய்யட்டும்? அதுக்காகத்தான் முன் எச்சரிக்கையா கொடுத்திருந்தார்" என்று விளக்கினாள்.

நிகிலனுக்கு அவளைப் பற்றி அறிந்துவிட்டிருந்த காரணமாய், அது அவளது பணம்தானோ என்று லேசாக சந்தேகம் தான். ஆனாலும் கேட்டுக் கொள்ளவில்லை. மாறாக மனம் அவள் பால் உருகிப்போயிற்று.

அத்தனை பதற்றத்திலும் சமயோசிதமாய் எல்லாமும் நினைவு வைத்து செயல்பட்டிருக்கிறாளே என்று ரவீந்தரனுக்கும் உள்ளூர அவளை எண்ணி வியப்பாகத்தான் இருந்தது. நிகிலனின் கருத்துதான் அவனுக்கும். ஆனால் பணவிஷயம் தான் சற்று இடித்தது. அப்பா கொடுக்கக்கூடியவர்தான் என்றாலும் முன்பின் அறியாதவரிடம் அது சாத்தியமில்லை. ஒன்று இவள் பொய் சொல்கிறாள் அல்லது அப்பாவிற்கு இவளை ரொம்ப கால பழக்கமாக இருக்கவேண்டும். அவன் யோசிக்கையில்... நர்ஸ் வந்து அறையின் எண்ணை தெரிவித்துவிட்டு ஒரு சீட்டையும் கொடுத்து பார்மஸியில் வாங்கிவருமாறு பணித்துவிட்டுப் போனாள்.

மதுவந்திக்கு குழந்தையையும் சுமதியையும் பார்க்கும் ஆவல்தான். ஆனால் எந்த வினாடியும் மனோகரி இங்கே வரக்கூடும் என்பதால் அவள் விடைபெற்றுக் கிளம்பினாள்.

ரவீந்தரனுக்கு அவள் இத்தனை தூரம் வந்துவிட்டு குழந்தையைப் பார்க்காமல் வீட்டிற்கு கிளம்பியது சற்று உறுத்தியது. அப்படி என்ன வீட்டில் வெட்டிமுறிக்கப் போகிறாள்? மதிய உணவையும் இங்கேயே பார்த்துக் கொள்ள மாட்டோமா? மாமாவும் கூட சரி என்றுவிட்டாரே. இதில் வேறு எதுவோ மர்மம் இருக்கிறது கண்டுபிடித்தாக வேண்டும் என்று எண்ணியபடியே நிகிலனுடன் பார்மஸிக்கு சென்றான்.

ஆனால் பார்மஸிக்கு செல்லும் போதுதான் நிகிலனுக்கு மதுவந்தியைப் பற்றி சுமதி எச்சரிக்கை செய்தது நினைவிற்கு வந்தது. ஒருகணம் பதற்றமாகிவிட்ட மனதை அடக்கியவன் மைத்துனனிடம், "ரவி, மதுவுக்கு மும்பை புதுசு அதனால் நீ அவளை வீட்டில் ட்ராப் பண்ணிவிட்டு வந்துவிடுகிறாயா? நிகிலன் கேட்க, மாமனின் குரலில் ஏதோ உணர்ந்தவனாய் குழந்தையை பார்க்கும் ஆவலை அடக்கியபடி கார் சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பினான் ரவீந்தரன்.

"ரவி அவள் ஃப்ளாட்ஸ்க்குள் போகிறவரை நின்று பார்த்துவிட்டு வா" என்றான் நிகிலன்.

ரவீந்தரன் மதுவந்தியை அழைத்துப் போனானா ? மனோகரியின் நிலையில் மாற்றம் வந்ததா??
 

Attachments

  • 462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    106.5 KB · Views: 0
Back
Top