Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

27. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
மதுவந்திக்கு அன்றிரவு தூக்கமே வரவில்லை. சிலருக்கு சந்தோஷத்தில் தூக்கம் வராது என்பார்கள். ஆனால் மதுவந்திக்கு அன்று இருவிதமான உணர்வுகள் அலைக்கழித்தது. ரவீந்தரனை நேருக்கு நேராய் கண்டுவிட்ட சந்தோஷம் அதை முழுதாய் அனுபவிக்க முடியாமல் மருதமுத்துவின் ஆத்திரமான பேச்சு. அவனால் தன்னை அனுக முடியாது என்று எண்ணமிருந்தாலும் ஏதோ ஒருவித உள்ளுணர்வு அவளை நிம்மதியாக இருக்க விடவில்லை.

பேசாமல் ஊர் திரும்பிவிடலாம் என்றால் வந்த வேலை இன்னும் முடியவேயில்லை. சுமதிக்கு எந்த நேரத்திலும் வலி எடுத்துவிடலாம் என்ற நிலை. அங்கே பிறைசூடன் இவள் இருக்கும் நினைப்பில் நிம்மதியாக இருக்கிறார். யாரோ ஒரு கயவனுக்காக நம்பியவர்களை அம்போவென்று அவளால் விட முடியாது. என்னதான் செய்து விடுவான் அந்த மருதமுத்து? அஞ்சினால் துரத்துவார்கள். துணிந்தால் மிரளுவார்கள் ! மருதமுத்து என்ன செய்யக் கூடும் என்பதை அறிந்திருந்தால் மதுவந்தி, இப்படி நினைத்திருக்க மாட்டாள்.

பிறைசூடனுக்கு இப்போது ஒரே யோசனையாக இருந்தது. மருத்துவர் மனோகரியை மும்பைக்கு அழைத்துச் செல்ல அனுமதி தந்துவிட்டார். அங்கே மதுவந்தி இருக்கிறாள். அவளை இங்கே அழைக்க கொஞ்சம் சங்கடமாக இருந்தது. எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் தானே உதவ முன் வந்தவளிடம் எப்படி இந்த விவரத்தை சொல்வது என்று இருந்தது.

ஆதனால் பேசாமல் கொடைக்கானலில் தங்கிவிடுவதே நல்லது என்று ஒர் புறம் தோன்றினாலும், இன்னொரு புறம் எந்த நேரமென்றாலும் சுமதிக்கு பிரசவம் நேரலாம் என்பதால் ரொம்ப காலம் இங்கே தங்கவும் இயலாது. ஆகவே இரண்டொரு நாளில் மதுவந்தியிடம் விஷயத்தை எடுத்து சொல்லி கிளம்பிவிட முடிவெடுத்தார்

மழை பெய்வதும் (மகப்பேறு) பிரசவம் ஆவதும் நம் கையிலா இருக்கிறது?

மறுநாள்..

சீக்கிரமாய் அலுவலகம் கிளம்பத் தயாராகி வந்த ரவீந்தரன் காலை உணவை வெளியே பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்த போதே வெண்பொங்கல் மணம் நாசியை துளைத்தது. எவ்வளவு காலம் ஆகிவிட்டது வீட்டில் பொங்கல் வடை சாப்பிட்டு? ஆவலாய் சாப்பாட்டு மேசைக்கு வந்தான். மதுவந்தி, அவசரமாய் தட்டை கொணர்ந்து வைத்துவிட்டு சமையலறையில் தஞ்சமாகிவிட்டாள். நிகிலன் அப்போதுதான் எழுந்து வந்தான்.

"மது, காபி கொடும்மா என்றவாறு ரவீந்தரனின் எதிரே அமர்ந்தான்.

"இதோ கொண்டு வர்றேன் அண்ணா" என்றபடியே காபியை கொணர்ந்து வைத்தாள், மதுவந்தி.

"மாப்பிள்ளே பொங்கல் எப்படி?" என்றான் நிகிலன் குறும்புப் பார்வையுடன்.

அதை சற்றும் கவனியாது சாப்பிட்டபடியே, "பொங்கல் மட்டுமில்லை, வடை கூட சூப்பர் மாமா, அம்மா கையால சாப்பிட்ட மாதிரியே நல்ல டேஸ்ட் மாமா! என்று பாராட்ட மதுவந்திக்கு சந்தோஷத்தில் கண்கள், கலங்கியது. மனோகரியின் நினைவும் வந்தது. அவள் மகனைப் பற்றி சொல்லி சொல்லி இவள் மனதில் பதிந்தவற்றுள் இதுவும் ஒன்றுல்லவா?

“மதுவோட கைப்பக்குவமே தனிதான் மாப்பிள்ளே! யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ தெரியலை.” என்றான் நிகிலன் பூடகமாய்.

ரவீந்தரனுக்கு நிகிலனின் பேச்சு புரியாமல் இல்லை. அதனால் பேச்சை மாற்றுபவனாக,’’அக்காவுக்கு டெலிவரி டைம் எப்போ மாமா?” என்று வினவ, அதை மற்றவனும் புரிந்தவனாய்,

“இந்த வாரத்துக்குள்ள ஆகிவிடும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார் மாப்பிள்ளை" என்றவன் “சரி நீ சாப்பிட்டுவிட்டு கிளம்பு நான் இன்றிலிருந்து லீவு போட்டிருக்கேன்" என்றவாறு செய்தித்தாளுடன் முன்புற சிட்டவுட்டிற்கு சென்றுவிட்டான் நிகிலன்.

மாமா சொன்னது போல் அந்த மதுவின் சமையல் என்னவோ அருமையாகத்தான் இருக்கிறது. கட்டிக்கொள்ளப் போறவன் அதிர்ஷ்டசாலிதான் என்று தனக்குள்ளாக எண்ணியவனாய் சாப்பிட்டு முடித்த போது காபி கொணர்ந்து வைத்தாள், மதுவந்தி. உள்ளுர வியந்த வண்ணம் மௌனமாய் அருந்தினான். ரவீந்தரன், கிளம்பு முன்பாக சமையலறை வாசலுக்கு வந்து, "லஞ்சுக்கு நான் வரமாட்டேன். Thanks for ur coffee and tiffin என்று சொல்லிவிட்டுப் போனான். மதுவந்தி இனிய படபடப்புடன் பேச்சின்றி நின்றாள்.

முன் தினம் கடைக்கு சென்றும் பாதி பொருட்களை கூட வாங்காமல் திரும்பியிருந்ததால் மதுவந்தி அன்று பகலில் மேல் வேலை செய்யும் வேலைக்காரி வந்து வேலை முடித்துக் கிளம்பியதும், டிவியில் ஏதோ சுவாரஸ்யமாக பார்த்திருந்த சுமதியிடம் கடைக்குப் போய் வருவதாக கினம்பினாள்.

சுமதிக்கு உள்ளுர பயமாக இருந்ததால்" மது, அண்ணா லீவில்தான் இருக்கிறார். அதனால் அவர்கூட போய்விட்டு வாம்மா" என்றவள், உள்ளே ஏதோ வேலையாய் இருந்த கணவனை அழைத்து மதுவந்தியுடன் துணைக்கு செல்லும்படி சொல்ல, மதுவந்தியும் மறுக்கவில்லை.

ஆனால் நிகிலன் காரணமாகவே அவள் மாட்டிக்கொள்ளப் போகிறாள் ,என்று அவர்கள் மூவருவருமே அப்போது அறியவில்லை.

கடையில் நிகிலனை அடையாளம் கண்டு கொண்ட பில் போடும் பெண் ஹிந்தியில் மதுவந்தியைப் பற்றி விசாரிக்க, நிகிலன் அவளின் பெயரையும் தன் தங்கை என்றும் அறிமுகம் செய்தான். அது வேண்டாத ஒரு ஜோடி செவியில் விழுந்ததை இருவரும் அறியவில்லை. இதற்குதான் பகலில் பக்கம் பார்த்து பேசு, இரவில் அதுவும் பேசாதே என்று மூத்தோர் சொன்னார்கள் போலும்..!
 

Attachments

  • 462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    106.5 KB · Views: 0
Back
Top