அத்தியாயம் - 26
நிரஞ்சன் சொன்னதை கேட்டு ஜாஸ்மின் அதிர்ந்து போனாள் என்று தான் சொல்ல வேண்டும்.
"ஐயோ உன்னை நம்பி வந்ததுக்கு என்னை வம்பில் மாட்டிவிடுவாய் போல இருக்கிறதே நிரஞ்சன்?"என்றாள் அவள் படபடப்பு நீங்காதவளாக.
"ஹா ஹா ஹா.. என்று வாய்விட்டுச் சிரித்தான் நிரஞ்சன்.
"ஏய்ய்.. சிரிக்காதே நிரஞ்ச், எனக்கு இப்பவே பயமாக இருக்கிறது"என்றாள்.
"அட அப்படி எல்லாம் அவ்வளவு எளிதாக என் காதலை விட்டுக்கொடுத்து விடுவேனா ஜாஸ் பேபி?"
"அப்பாடி... இப்பத்தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. நான் இன்றைக்கே மலருக்கு எங்கே சீட் இருக்கு என்று பார்த்துவிடுகிறேன்" என்றாள்.
"தட்ஸ் குட்" என்றவாறு இருவரும் அந்த பெரிய வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூமுக்குள் நுழைந்தனர்.
"ஹலோ நிரஞ்சன்,என்ற குரலில் இருவரும் திரும்பினர்.
"ஹலோ சாரு, எப்படி இருக்கீங்க? என்று கேட்டான்.
"நான் நல்லா இருக்கிறேன். மினி இங்கே வர்றதா சொன்னாள். அதான் பார்த்துவிட்டு போகலாம்" என்று அசடுவழிய புன்னகைத்தான் சாரு என்ற சாரகேஷ்.
"அது நீ சொல்ல வேறு வேண்டுமாக்கும்? என்று கிண்டலாக சிரித்தவன்,"என்ன ஜாஸ் உள்ளே வர்றியா? இல்லை சாரு கூட பேசணுமா?
"இல்லை நிரஞ்சன், முதலில் நீங்கள் வந்த வேலை முடியட்டும்,மற்றதை அப்புறம் பார்ப்போம்"என்றதும்,
"சரி வாருங்கள்"என்று உள்ளே நடந்த நிரஞ்சனோடு மற்ற இருவரும் சென்றனர்.
இருசக்கர வாகனங்களின் விற்பனை கூடம் அது. பெண்களுக்கான வாகனங்களை பார்த்தனர். விற்பனையாளர் வந்து வாகனங்களின் விவரங்களை தெரிவித்தார்.
நிரஞ்சன் எல்லா வண்ணங்களையும் பார்த்தான். எதை தேர்வு செய்வது என்று திணறினான்.
"நிரஞ்சன், எதற்கு இந்த குழப்பம்? பேசாமல் வண்டியை ஓட்டப் போகிறவரிடம் கேட்டால் சொல்லிவிட்டுப் போகிறார்கள்" என்றான் சாரகேஷ்.
"ம்க்கும்..ஃபோன் செய்து கேட்டால் உடனே சொல்லிவிடுவாளாக்கும்? வதனியை பற்றி நீ தெரியாமல் பேசுகிறாய் சாரகேஷ். முதலில், ஏன் எதற்கு, எனக்கு என்ன பிடித்தால் என்ன? பிடிக்காவிட்டால் என்ன? என்று கேள்வி மேல் கேள்வி கேட்பாள். விஷயத்தை சொன்னால், நான் வண்டி வேண்டும் என்று உங்களிடம் கேட்டேனா? என்று எகிறுவாள். சொல்லப்போனால் அவளுக்கு பிடித்த நிறம் என்ன என்று தெரிந்ததால் தான் குழம்பிக் கொண்டிருக்கிறேன்" என்றதும் இருவரும் அவனை வினோதமாக பார்த்தனர்.
"ஹோ.. அப்படி என்றால் அவளுக்கு பிடித்த நிறம் எது என்று உனக்கு தெரியுமா நிரஞ்ச்? எப்படி எப்படி தெரியும்? என்று வியப்பு குரலில் கேட்டாள் ஜாஸ்மின்.
"தெரியும், எப்படி என்று சொல்ல மாட்டேன். எல்லா வண்ணங்களும் அவளுக்கு பிடிக்கும், அதில் வெள்ளை ரொம்ப பிடிக்கும். இப்போது வெள்ளையோடு, இந்த தங்க நிறமும் நன்றாக இருக்கிறது, அதுதான் எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.
"உங்களுக்கு தங்க நிறம்தான் பிடித்தமாக உள்ளது போல, ஒன்று செய்யுங்கள், இரண்டு வண்டிகளையும் படம் பிடித்து மலர்வதனிக்கு அனுப்புங்கள். எது நன்றாக இருக்கிறது என்று கேளுங்கள். நீங்கள் சொன்னதை வைத்து பார்த்தால் இதற்காக அனாவசியமாக கேள்வி கேட்கமாட்டார்கள் என்று எண்ணுகிறேன்" என்றான் சாரகேஷ்.
நிரஞ்சன் முகம் பளிச்சிட,"கரெட்க் சாரகேஷ். இதோ கேட்டு விடுகிறேன், என்று அவன் சொன்னபடியே செய்ய, தங்க நிறம் நன்றாக இருப்பதாக பதில் வர, அது பொது இடம் என்பதையும் மறந்து மூவரும் "ஹே.. என்று சற்று சத்தமாக தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.
வண்டியை பதிவு செய்து, விதிமுறைகளை முடித்து, பணமும் கட்டிவிட்டு, வெளியே வந்தபோது மணி இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
"வாருங்கள் மூவரும் சென்று உணவருந்தலாம்"என்று சாரகேஷ் அழைக்க,
"இல்லை சாரகேஷ், அம்மாவிடம் சாப்பிட வருவதாக சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். வேண்டுமானால், நீங்கள் ஜாஸ்மினை அழைத்துப் போங்க,"என்றான் நிரஞ்சன்.
சாரகேஷை முந்திக்கொண்டு, "தாங்க்யூப்பா நிரஞ்ச்,எனக்கும் ரொம்ப பசிக்கிறது, நான் சாருகூட போய் சாப்பிட்டு விட்டு, அப்படியே கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிட்டு ஈவ்னிங் வந்துவிடுகிறேன்"என்றாள் ஜாஸ்மின்.
நிரஞ்சன் சிரித்துவிட்டு,"சரி, சரி ரொம்ப தாமதம் பண்ணிடாதே, என்றவன்"கொஞ்சம் சீக்கிரம் அனுப்பி வச்சிடுப்பா, இது இந்தியா"என்றான்.
"ஓ! ஷ்யூர் நிரஞ்சன், பை"என்று அவர்களது வாகனம் நோக்கி நடக்க, நிரஞ்சன் அவனுடைய காரில் ஏறி, பிரதான சாலையில் மற்ற வாகனங்களோடு கலந்போது, திடுமென அவனது கைப்பேசி ஒலித்தது.
☆☆☆
நிரஞ்சன் சென்றபிறகு அத்தையுடன் சேர்ந்து சமையலை முடித்துவிட்டு , மலர்வதனி அறைக்கு சென்று முகம் கைகால் கழுவிவிட்டு, சற்று நேரம் ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்தாள். அப்போது நிரஞ்சனிடம் இருந்து வாட்ஸ்அப்பில் புகைபடமும் ஒரு கேள்வியும் வர, ஆச்சர்யத்துடன் பதில் மட்டும் அனுப்பிவிட்டு மணியை பார்த்தாள். ஒன்றை தாண்டியிருந்தது. கீழே வந்தாள்.
காந்திமதி அப்போது தான் சாப்பிட்டு விட்டு கூடத்திற்கு போவதை பார்த்தாள். அத்தையை அமர செய்து சாப்பிட வைத்தாள் மலர்வதனி. தன்னோடு மருமகளையும் சாப்பிடச் சொன்னவளிடம்,"பழச்சாறு குடித்தது வயிறு கும்மென்று இருக்கிறது. இன்னும் மாமாவும் சாப்பிட வரவில்லையே அத்தை. அவர் வந்துவிடட்டும். எனக்கு இன்றைக்கு லீவுதானே? அதனால் அப்புறமாக சாப்பிடுகிறேன்,"என்றாள். வடிவுக்கரசி சாப்பிட்டு முடிக்கவும், நீங்கள் போய் கொஞ்சம் படுத்திருங்கள் அத்தை, என்று அனுப்பிவிட்டு, சாப்பாட்டு மேசையை ஒதுங்க வைத்தபடி, அத்தான் அவளிடம் எதற்கு அபிப்ராயம் கேட்டான், ஜாஸ்மின் தான் கூடவே போயிருக்கிறாளே? அப்புறம் அவளிடம் கேட்பானேன்? என்று உள்ளூர குறுகுறுப்புடன் எண்ணும் போதே கூடத்தில் காந்திமதியின் உற்சாக குரல் கேட்டது, அப்படி யார் வந்திருப்பார்கள் என்று யோசித்தபடி, மெல்ல சென்று, யார் கண்ணிலும், முக்கியமாக பாட்டியின் கவனத்தை கவராதவாறு நின்று கொண்டாள்.
வந்தவர்களை மலர்வதனி அவசரமாக ஆராய்ந்தாள். ஒரு நடுத்தர வயது பெண்மணி,அவளுடன் ஒரு இளம் பெண், வந்திருந்தனர். இதற்கு முன்பு அவர்களை பார்த்த நினைவு இல்லை. ஆனாலும் அந்த முகங்கள் பரிச்சயமானது போல் தெரிந்தது. அந்த பெண்மணிக்கு கொஞ்சம் நிரஞ்சனின் ஜாடை தெரிந்தது. இளம் பெண் நேராக அழகு நிலையத்தில் இருந்து வருகிறாள் போலும்? தலை முதல் கால் வரை குறை சொல்ல முடியாத அளவிற்கு அலங்காரம் செய்திருந்தாள். சொல்லப்போனால் ஒப்பனை இல்லாமலேயே அவள் அழகாகத்தான் இருந்திருப்பாள் போல? அதிக ஒப்பனையில் வேற்று கிரகவாசி போலத் தோன்றினாள். சே என்ன மட்டமான நினைப்பு என்று தன்னையே குட்டிக்கொண்டவள், காந்திமதி ஏதோ பேச அதில் கவனமானாள்.
"வாம்மா வந்தனா, கொஞ்சம் வெள்ளன வரக்கூடாதா? இப்படி வேகாத வெயிலில் வந்திருக்கிறியே செஞ்திரு? என்றாள்.
"என்ன செய்யறது சித்தி, நாங்கள் வந்த ரயில் கொஞ்சம் தாமதமாகிட்டது. போன் போடலாம் என்றால் சார்ஜ் இல்லை, இல்லாவிட்டால் காலையில் வந்திருப்போம் "என்று அந்த பெண்மணி செந்திரு பதிலளிக்க,
"சரி சரி உட்காருங்க, என்றவள், சொக்கி, மஞ்சு யார்டி அங்கே? குடிக்க சொம்புல தண்ணீர் கொண்டு வாங்க" என்று குரல் கொடுக்க, சில கணங்களில் சொக்கி தண்ணீரை கொணர்ந்து கொடுத்தாள்.
"சரி, நீ போய் என் பெரிய மகள் செந்திரு வந்திருக்கிறாள்"என்று வடிவை கூட்டிட்டு வா" என்று அனுப்பினாள்.
"உன் மகள் ரொம்ப அழகு! படிப்பு இன்னும் முடியலையா? ஏதும் வரன் பார்த்து வச்சிருக்கிறியா? காலாகாலத்தில் கல்யாணம் பண்ணினால் தானே பேரப்பிள்ளையை கொஞ்ச முடியும்?"
"படிப்பெல்லாம் முடிஞ்சது சித்தி. எத்தனையோ பேர் கேட்டு வர்றாங்க. ஆனால் இவள்தான் எதையாவது சொல்லி தட்டிக் கழிச்சிட்டே இருக்கிறாள். சரி அவளுக்கு யாரையாவது பிடிச்சிருக்கானு கேட்டால் பதிலே சொல்ல மாட்டேங்கிறாள்",செந்திரு குறைப்படுகிறாளா, பெருமைப்படுகிறாளா என்று மலர்வதனிக்கு புரியவில்லை.
"சற்று நேரத்தில் வடிவுக்கரசி அரக்கபரக்க அங்கே வந்தாள். வந்தவர்களை முறைப்படி வரவேற்று குசலம் விசாரித்தாள்.
"எல்லோரையும் கூட்டிட்டு போய் சாப்பிட வை வடிவு, என்ற காந்திமதி,"சொக்கி, சித்தையனை கூப்பிட்டு, பெட்டிகளை எடுத்துட்டு போய் அந்த கோடி அறையில் வைக்கச் சொல்லு" என்றாள்.
அத்தையை முந்திக்கொண்டு சமையலறைக்கு சென்ற மலர்வதனி, வந்தவர்களுக்கான உணவு வகைகளையும் பரிமாறத் தேவையானவற்றையும் எடுத்து வைத்திருந்ததால், அங்கே வந்த வடிவுக்கரசியின் முகத்தில் புன்னகை மலர மருமகளின் கன்னத்தில் செல்லமாக தட்டிவிட்டு, உணவை எடுத்துப் போனாள்.
மலர்வதனி மாமாவும், அத்தானும் சாப்பிட வருவார்களே என்று புதிதாக சமைக்க ஆரம்பித்தாள். உடனடியாக செய்யக்கூடியதாக புலாவ் செய்வதில் ஈடுபட்டாள். கோழிக்கறி குழம்பு ஏற்கனவே சமைத்தது இருந்தது, கூடவே கொஞ்சம் வெங்காய ரைத்தா செய்துவிடலாம் என்று வெங்காயம், கேரட், தக்காளி கொத்தமல்லி எல்லாம் பொடிசாக நறுக்கி, தயிரில் கலந்து எடுத்து வைத்தாள். அதற்குள் ஒரு சுற்று பரிமாறி முடித்து உள்ளே வந்த வடிவுக்கரசி,"என்னடி ஒரே கமகம வாசனை? என்றாள்.
"அது வெறும் சாதம் எதுக்கு என்று சிம்பிள் புலாவ் செய்தேன். இதற்கு தக்காளி எல்லாம் போடவேண்டாம். வெள்ளையாக கூடவே வாசனையாகவும் இருக்கும்" என்று மலர்வதனி தணிந்த குரலில் சொல்லும்போதே சாப்பாட்டு கூடத்தில், காந்திமதியின் குரல் ஒலித்தது.
"என்ன நீ இப்படி கோழி கொறிக்கிறாப்ல கொறிக்கிறே? நல்லா சாப்பிடு வந்தானா, நாளைக்கு கல்யாணம் கட்டி பெரிய குடும்பத்துக்கு போனால், எல்லாத்தையும் எப்படி சமாளிக்கப் போறே?"
"உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் சித்தி, ஆமாம் நானும் வந்த உடனே கேட்கனும்னு நினைச்சேன், ஆமாம் எங்கே என் மருமகன்? முக்கியமா நான் இப்ப கிளம்பி வந்ததே அவனைப் பார்க்கத்தான் சித்தி.
"எங்கனையோ கிளம்பி போனான். சாப்பாடு நேரத்துக்கு வந்திருக்கணும். இப்ப வந்திருவான், ஆமா செந்திரு உன் வீட்டுக்காரரையும் கூட்டிட்டு வந்திருக்கலாமில்ல?
"இவ அப்பாவுக்கும் வர ரொம்ப ஆசை தான் சித்தி. ஆனால் என்ன செய்யறது கடையில் இப்போது தான் வியாபார சமயம். இப்ப நாலு காசு பார்த்தால் தானே உண்டு? அதான் எங்களை அனுப்பி வச்சாரு, ஒத்தை பொம்பளைப் புள்ளையை பெத்து வச்சிருக்கிறேன். அவளை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுக்கிறவரைக்கும் அவரு இப்படி உழைச்சால்தானே, போகிற இடத்தில் எம்பொண்ணை மதிப்பாக நடத்தைவாங்க? ஏதோ இங்கே வந்த நேரத்தில் இவளுக்கு ஒரு நல்ல வரன் அமைஞ்சிடுச்சுன்னா, என் பாரமெல்லாம் இறங்கிடும் சித்தி?
"அதென்னவோ வாஸ்த்தவம் தான் செந்திரு, ஆனால் உன் பொண்ணு இருக்கிற அழகுக்கு பட்டும் நகையும் இல்லாமலே நல்ல மாப்பிள்ளை கிடைப்பான்" என்றாள் காந்திமதி.
அதை கேட்டுக்கொண்டு இருந்த வடிவுக்கரசிக்கு விஷயம் விளங்கிவிட்டது. பல வருஷங்களாக இந்தப் பக்கமே வராமல் இருந்த செந்திரு, திடீரென்று எப்படி வந்தாள் என்று. ஆக இதெல்லாமும் மாமியாரின் கைங்கரியம்தானா? ஏதேதோ கற்பனையில் அவளுக்கு மனது படபடத்தது. முகமெல்லாம் வியர்த்து போயிற்று. .
மலர்வதனிக்கு அத்தையை பார்த்து பயம் வர, சட்டென்று அவளது கையை இறுகப் பற்றி,"அத்தை, அமைதியாக இருங்க, பாட்டி சொல்கிறபடி எதுவும் நடக்காது அத்தை. அத்தான் அவர் விரும்புகிற பெண்ணைத்தான் கட்டுவார். எத்தனை தைரியசாலி நீங்க, இப்படி வாய்ப் பேச்சுக்கெல்லாம் பதறலாமா?" என்றவள், சொக்கியிடம் அடுத்த சுற்றுக்கு உணவை கொண்டு செல்லும்படி சைகை செய்துவிட்டு, தோட்டத்திற்கு வடிவுக்கரசியை அழைத்துப் போய் அங்கே பின்புறமாக மாடிக்குப் போகும் படிக்கட்டில் அமரவைத்துவிட்டு, மஞ்சுளாவிடம் நிறைய சர்க்கரையிட்டு டீ கொண்டு வரச் சொன்னாள். அத்தையின் முகம் தெளியாதது கண்டு "இருங்க நான் உடனே அத்தானை வரச் சொல்கிறேன்"என்று அத்தையின் கைப்பேசியில் நிரஞ்சனை தொடர்பு கொண்டாள்.
நிரஞ்சன் கைப்பேசியை எடுத்துப் பார்க்க, அது வடிவுக்கரசியின் எண்கள். அதைப் பார்த்ததும் முகத்தில் புன்னகை தவழ, சாப்பிட வருவதாகச் சொன்ன மகனைக் காணவில்லை என்று அழைத்திருக்கிறாள் போலும் என்று எண்ணியவாறு எடுத்தான்.
ஆனால். ..
அன்னையின் குரலை எதிர்பார்த்தவன், "அத்தான் எங்கே இருக்கீங்க? என்ற மலர்வதனியின் குரலில் சற்று திகைத்தவன், ஒருவாறு சுதாரித்துக்
கொண்டு,"ஏன், என்னாச்சு? அம்மா ஃபோனில் இருந்து பேசுகிறாயே? அம்மா.... ஹேய் வதனி அம்மாவுக்கு ஒன்றுமில்லையே? என்றான் பதற்றமாக..
"உங்கள் பாட்டி, என்றவள் ச்சு, எல்லாத்தையும் ஃபோனில் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி வந்து சேருங்க. உங்களை பார்த்தால் தான் அத்தை நிம்மதியாக இருப்பார்கள் போலிருக்கிறது, சரி, வண்டியை ஓட்டிக்கிட்டே பேசாதீங்க, அப்புறம் உங்களை தேடிட்டு நாங்க வரவேண்டியதாகிவிடும், ஃபோனை கட் பண்ணிவிட்டு சாலையில் கவனத்தை வைங்க, நானும் கட் பண்ணிடறேன்"என்று மலர்வதனி இணைப்பை துண்டித்தாள்.
அவளது பேச்சினால் உண்டான சிரிப்புடன்,"மாமன் மகள் ஒன்றுமறியாத அப்பாவி பொண்ணு என்று நினைத்தால் என்ன போடு போடுகிறாள்? ம்ம்... ஆனாலும் அத்தை மகன் மீது ரொம்ப அக்கறையும் இருக்கிறதே! முகத்தை பார்த்து பேசும்போது மட்டும் அத்தான் வரமாட்டேங்குதே, மறைவில் என்றால் சர்வசாதரணமா வந்து விழுதே அந்த மர்மம் என்ன? தனக்குள் எண்ணியபடியே கவனத்துடன் வளைவில் வண்டியை திருப்பினான்....
***
*அத்தியாயம் – 27*
செந்திருவும் அவள் மகளும் சாப்பிட்டு முடித்ததும் அவர்களை ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி அனுப்பிவிட்டு அவளுடைய அறைக்கு சென்று விட்டாள் காந்திமதி.
தோட்டத்தில்..
வடிவுக்கரசிக்கு இனிப்பான தேநீரை குடிக்க வைத்த பிறகு அவளை பின் புறமாகவே மாடிக்கு அழைத்துச் சென்று அவளது அறையில் மாத்திரையை கொடுத்து படுக்க வைத்தாள் மலர்வதனி. அதன் பிறகு கீழே வந்தபோது சத்தியமூர்த்தி வந்தார்.
"மாமா, கை கால் கழுவிவிட்டு வாங்க, சாப்பிடலாம்" என்று உணவு வகைகளை கொணர்ந்து வைத்து இரண்டு தட்டுகளையும் வைத்தாள்.
"இல்லேமா மலர், கொஞ்சம் ரசம் சாதம் கரைச்சு கொடும்மா போதும்" என்றுவிட்டு பக்கவாட்டில் இருந்த குழாயடியில் சென்று கைகால்களை கழுவிவிட்டு, வந்தவரிடம்
"ஏன் மாமா என்ன ஆச்சு? உடம்பு எதுவும் சரியில்லையா" என்று கவலையுடன் கேட்டவாறு அவர் சொன்னபடி ரசத்தைவிட்டு சாதத்தை கலந்து கரைத்து வைத்தாள்.
"அப்படி எல்லாம் ஒன்றும் இல்லைமா வெளியில போய் இருந்தேன்,அப்போ என் பால்ய சிநேகிதனை பார்த்தேன். அவன் வீட்டுக்கு கூட்டிப்போனான். அங்க வீட்டுல கேக்,பப்ஸ், கூல்ட்ரிங்க்ஸ் கொடுத்தாங்க. நான் வேணாம்னு எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. சாப்பிட்டுதான் அகணும்னு வற்புறுத்தினாங்க. அதெல்லாம் எண்ணெய் பலகாரம் ஆச்சா, வயிறு ஒரு மாதிரி இருக்கு, அதுதான் என்றபடி மலர்வதனி கரைத்துக் கொடுத்த ரசம் சாதத்தை சாப்பிட தொடங்கினார்.
சில கணங்களில், மலர் வதனியின் கைபேசி ஒலித்தது பார்த்தால் அது நிரஞ்சனின் எண். இப்போது என்ன ஆயிற்று? வீட்டுக்கு வர சொன்னால் போனில் அழைக்கிறானே என்று எண்ணிக்கொண்டு உயிர்ப்பித்தாள். ஆனால் எதிர்முனையில் பேசியது நிரஞ்சன் இல்லை. யாரோ ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
அதனால் சற்று விலகி வந்து பேசினாள். குழப்பத்துடன்,"ஹலோ நீங்க யாருங்க? இது என்னோட அத்தானுடைய போன். உங்களிடம் எப்படி ?என்றாள்.
"அட அத சொல்றதுக்கு தானமா கூப்பிட்டேன். நான் இந்த ஹாஸ்பிடல் நர்ஸ் பேசுகிறேன். உங்க வீட்டுக்காரர் வந்த வண்டி ஆக்சிடன்ட் ஆயிடுச்சு. அவரை ஆபத்தான நிலையில் கொணர்ந்து சேர்த்து இருக்கிறாங்க, டாக்டர் செக் பண்ணிட்டு இருகாங்க, உடனே கிளம்பி வாங்க"
மலர்வதனிக்கு சட்டென்று கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது, ஒருகணம் பேச்சு வராமல் துக்கம் தொண்டையை அடைத்தது. ஆனால் இப்போது அழுவதற்கான சமயமில்லை என்று ஒருவாறு தன்னை சுதாரித்துக் கொண்டு எந்த ஹாஸ்பிடல் என்று விவரம் கேட்டுக் கொண்டவள், முகத்தை அவசரமாக கழுவிவிட்டு சத்தியமூர்த்தியிடம் சென்றாள்.
அவர் அப்போதுதான் சாப்பிட்டு முடித்துக் கொண்டிருந்தார்."மாமா" என்ற போதே குரல் நடுங்கியது.
"என்னம்மா மலர் யாரு போன்ல? ஏன்மா உன் முகம் சரியில்லையே என்ன ஆச்சு? என்று பதற்றமாக கையை கழுவியவாறு வினவினர்.
"அது, ..அது மாமா அத்தான்... அத்தானுக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு... ஆயிடுச்சுன்னு போன் வந்துச்சு மாமா. உடனே கிளம்புங்க மாமா," என்றபோது அவளது கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
"அச்சச்சோ என்னம்மா சொல்றே எந்த ஆஸ்பிட்டல்?ஐயோ உங்க அத்தை கிட்ட என்ன எப்படி சொல்றது? பாட்டிகிட்டேயும் சொல்ல முடியாதே என்ன செய்யலாம்?" பதற்றத்துடன் அவர் இருதலைக்கொள்ளி எறும்பாக, தவித்தார்.
"மாமா இப்போ பேசுறதுக்கு நேரமே இல்ல, உடனே கிளம்புங்க மாமா, நம்ம ரெண்டு பேருமே போகலாம். அத்தை கேட்டால், ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கலாம்" என்றாள் பதற்றமாக.
"நீயும் என்னோட வந்துட்டா உன் அத்தைக்கு சந்தேகம் வருமே மா? நீ இங்கேயே இரு மா. நான் மட்டுமாக கிளம்புறேன்"
"இல்லை, ப்ளீஸ் நானும் உங்களோட வரேன் மாமா. உங்களுக்கும் சுகர் பிரஷர் எல்லாம் இரு. இந்த நிலைமையில் உங்களை தனியா அனுப்ப முடியாது மாமா. நீங்க போய் சீக்கிரம் தேவையான பணம் எடுத்துட்டு வாங்க மாமா. நான் போய் சங்கரன் தாத்தாகிட்ட காரை எடுக்க சொல்லுறேன்"என்று மலர்வதனி வேகமாக வெளியே ஓடினாள். அப்படி ஓடும்போதே அத்தை எழுந்து அவளைக் கேட்பாளே என்று தோன்ற, உடனே
மஞ்சுவை கைப்பேசியில் அழைத்து,"அத்தை கேட்டால் அவளுக்கு ஹாஸ்பிட்டலில் இருந்து அழைப்பு வந்ததால், உடனே கிளம்பி விட்டதாகவும்,அத்தான் வர தாமதமாகும் என்று என்னிடம் சொன்னதாக சொல்லிவிடு, அத்தையையும் கொஞ்சம் கவனித்து கொள். அப்படி ஏதும் அவசியம் என்றால் எனக்கு ஃபோன் செய்"என்ற சொல்லி முடித்துவிட்டு, சங்கரனை அழைத்து வண்டியை ஸ்டார்ட் செய்ய சொல்லி ஏறி அமர, அதற்குள் பின்னோடு சத்தியமூர்த்தியும் வந்து ஏறிக்கொள்ள வண்டி கிளம்பியது.
☆☆☆
மருத்துவமனை...
வரவேற்பறையில் சென்று விவரம் கேட்டாள் மலர்வதனி. அதன் பிறகு இருவரும் தீவிர சிகிச்சை பிரிவிற்கு விரைந்தனர். அப்போதுதான் மருத்துவர் சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.
"என் பையன் எப்படி இருக்கிறான் டாக்டர்? என்று தவிப்புடன் கேட்டார் சத்தியமூர்த்தி.
"கொஞ்சம் சீரியஸ் தான். ரொம்ப ரத்தம் சேதமாகி இருக்கு. எங்களிடம் இருந்ததை செலுத்திக் கொண்டு இருக்கிறோம். இன்னும் தேவைப்படுகிறது,உடனே தேவையான ரத்தத்தை ஏற்பாடு செய்யுங்கள்"
"அவருக்கு என்ன குரூப் ரத்தம் டாக்டர்" என்று கேட்டாள் மலர்வதனி.
"ஏ1 பாசிட்டிவ் ரத்தம், கொஞ்சம் சீக்கிரம் ஏற்பாடு செய்யுங்கள்" என்றதும்
"என்னோட குரூப் அதுதான் டாக்டர் எவ்வளவு வேணுமோ எடுத்துக்கொள்ளுங்கள். ப்ளீஸ் எப்படியாவது அத்தானை காப்பாற்றுங்கள்"என்றாள் கண்ணீரோடு..
அவளை கருணையோடு பார்த்தவர்,"நான் பொய்யான வாக்குறுதி தருவதற்கில்லைமா. எங்களால் முடிந்தவரை சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் அவருக்கு தலையில் அடிபட்டிருக்கிறது, அதனால் ஸ்கேன் ரிப்போர்ட் வந்தபிறகு தான் எதுவும் சொல்ல முடியும்," என்றவர், உடன் இருந்த நர்ஸிடம் அவளை அழைத்துச் செல்லும்படி கைகாட்டிவிட்டு நகர்ந்தார் மருத்துவர்.
மலர்வதனியை அவர்கள் வீட்டில் நடத்திய முறையையும், அவளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் போனதற்கும் அவரும் ஒரு வகையில் காரணம் என்று எண்ணி சத்தியமூர்த்தி எத்தனையோ முறை வருந்தியிருக்கிறார். அந்த உறுத்தல் மகனின் புண்ணியத்தில்
இப்போது தான் சற்று குறைந்திருக்கிறது எனலாம். இப்போது அந்த மகனே உயிருக்கு போராடும் நிலையில் கிடக்கிறானே, டாக்டர் உறுதியாக சொல்லாதது வேறு அவருக்கு மிகுந்த கலவையை அளித்தது. இந்த விஷயத்தை மனைவியிடம் எப்படி சொல்வது? இன்றைக்கு தான் அவள் சற்று எழுந்து நடமாடுகிறாள். அவளுக்கு மட்டும் தெரிந்தால் அந்த நிமிடமே உயிரை விட்டுவிடுவாள். மகனுக்கு ஒன்று என்றால் இருவராலும் தாங்க இயலாது, அவரது யோசனையை தடை செய்வது போல கைப்பேசி ஒலிக்க, எடுத்துப் பார்த்தால் வடிவுக்கரசி தான். ஒருகணம்,"அவளிடம் என்ன சொல்வது என்று செய்வதறியாது திகைத்தவர்
மணி அடித்து ஓயவும், மீண்டும் மணி ஒலிக்க, மிகுந்த பிரயத்தனம் செய்து தன்னை கட்டுபடுத்தியபடி, எடுத்துப்பேசினார்.
"சொல்லும்மா வடிவு"
"என்னங்க ரஞ்சி இன்னும் வீட்டுக்கு வரலைபோல, நான் அவன் செல்லுக்கு பத்து நிமிஷமா முயற்சி பண்ணுறேன், ஸ்விட்ச் ஆப் என்று வருகிறது. எனக்கு என்னவோ ஏதோ என்று ரொம்ப பயமாக இருக்குங்க, அந்தப் பொண்ணு அவ பேரு என்ன? ஆங்... ஜாஸ்மின். அவள் நம்பர் இருக்கா உங்ககிட்ட? இருந்தால் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க," என்றாள் தவிப்புடன்.
"ஃபோன் சார்ஜ் தீர்ந்து போயிருக்கும் வடிவு. அந்த பொண்ணு நம்பர் என்கிட்ட இல்லையே, அவள் கூடத்தானே போயிக்கிறான். கவலைப்படாதே வந்துடுவான்"
"நீங்க சொன்னப்புறம் தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு, என்றவள், ஆமாம் நீங்களும் என்ன,சாப்பிடக்கூட வராமல் எங்கே போயிட்டீங்க?
"நான் வந்து சாப்பிட்டேன் வடிவு. நீ நல்லா தூங்கிட்டு இருந்தே, அதுதான் தொந்தரவு பண்ணவேணாம்னு விட்டுட்டேன். அப்புறம் யாருக்கோ ரத்தம் கொடுக்கணும்னு மலருக்கு ஆஸ்பத்திரியில் இருந்து அழைப்பு வந்துச்சு. என்கிட்ட மாமா என்னை கொண்டு போய் விடுறீங்களான்னு கேட்டாள், அதுதான் கூட வந்திருக்கிறேன்".
"அடக் கடவுளே ,ஏங்க அவள்தான் சொன்னாள் என்றால் நீங்கள் ஏன் அவளை அழைச்சிட்டுப் போனீங்க? அவள் சரியாக சாப்பிடறது இல்லை. முன்னைக்கு இப்ப மெலிந்து போயிருக்கிறாள், இன்றைக்கு மதியம் கூட உங்ககூட சாப்பிடுறேன்னு சொன்னாள், சாப்பிட்டாளோ என்னவோ?என்று ஆதங்கப்பட்டவள்,
"சரி, நிறைய பழரசம் வாங்கி கொடுத்து குடிக்க வச்சு அப்புறமாக வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க"
மனைவி சொன்னதை கேட்டு துணுக்குற்றார். அவரோடு அவள் சாப்பிடவில்லையே, தட்டை எடுத்து வைத்த மாதிரி இருந்தது, அதற்குள் தான் ஃபோன் வந்துவிட்டதே, என்று யோசனை ஓட, மனதுக்குள் வருந்தியவர்"சரிம்மா, அப்படியே செய்கிறேன், வச்சிடவா?"
"இருங்க,இருங்க உங்க பெரியம்மா மகள் செந்திருவும் அவள் மகள் வந்தனாவும் வந்திருக்காங்க. எல்லாம் உங்க அம்மா வேலை தான் போல, என்றாள் கடுப்புடன்.
"ஓ! சரிம்மா, விடு, ரொம்ப வருஷம் ஆச்சு அவள் வந்து போய், நீ எப்பவும் போல நடந்துக்கோ, நாலு நாளில் கிளம்பிடுவாள், உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை வடிவு, என்றபோது குறுக்கிட்டு,
"ம்க்கும், இப்படியே பேசி கவுத்துருவீங்களே, சரி சரி நான் சொன்னபடி பழரசம் கொடுத்து கூட்டிட்டு வாங்க, நான் போய் சாயந்தரத்துக்கு, ஏதாவது செஞ்சி வைக்கிறேன், என்றதும்,
"ரொம்ப மெனக்கெட வேண்டாம் வடிவு, என்ன இருக்கோ அதை வச்சு சமாளிச்சிடு. இல்லைன்னா, சாமியப்பன்கிட்டே ஏதாவது வாங்கி வச்சு கொடுத்திரு என்ன?"என்று பேச்சை முடித்தவர், பெருமூச்சை வெளியிட்டார்.
நல்ல வேளையாக மலர்வதனி உடன் வந்தாள். இல்லாவிட்டால் அவரால் இந்த அளவிற்கு சூழ்நிலையை சமாளித்திருக்க முடியாது, ஆனாலும் எத்தனை பொய்கள். கடவுளே என் பிள்ளையை எங்களுக்கு நல்லபடியாக திருப்பிக் கொடுத்துவிடு, எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சரி அவன் விரும்புகிறவளையே அவனுக்கு கட்டி வைக்கிறேன், அத்தோடு புதுமணத் தம்பதிகள் கையால் ஏழைப் பிள்ளைகளுக்கு அன்றைக்கு மூன்று வேளையும் சாப்பாடு போடுகிறேன்"என்று கண்ணீர் மல்க வேண்டிய போது, மலர்வதனியை நர்ஸ் ஒருத்தி கைத்தாங்கலாக அழைத்து வந்தாள்.
அவசரமாக கண்களை துடைத்துக் கொண்ட சத்யமூர்த்தி,"இப்படி உட்கார்மா மலர், நான் இதோ வந்துவிடுகிறேன்"என்றவர் வேகமாக வெளியே சென்று சற்று நேரத்தில் திரும்பியவரின் கையில் உணவுப் பொட்டலம் இருந்தது. அவரை தொடர்ந்து வந்த சங்கரனின் இரு கைகளிலும் பழரசம் ததும்பிய குவளைகள் இருந்தது. அதை அவளுக்கு அடுத்திருந்த நாற்காலியில் வைத்தார்.
"நீங்க வீட்டுக்கு கிளம்புங்க சங்கரன். வீட்டில் கேட்டால் மலரோட ஆஸ்பத்திரியில் எங்களை விட்டு வந்ததாக சொல்லுங்க. தயவுசெய்து... என்றவரின் பேச்சில் குறுக்கிட்டு,
"இதெல்லாம் நீங்கள் சொல்லணுமா சின்னய்யா? தம்பிக்கு எதுவும் ஆகாது. நானும் அந்த சாமியை வேண்டிக்கிட்டு இருக்கிறேன். கவலைப்படாதீங்க. நான் கிளம்பறேனுங்க" என்று சங்கரன் கிளம்பியதும்
சோர்வுடன் சரிந்து கிடந்தவளின் அருகில் அமர்ந்து அவரே பழச்சாறை பருக வைத்தார். முதலில் மறுத்தவள், பசியை உணர்ந்தாள், வெறும் வயிற்றோடு இருந்தால், அவளும் ஒரு படுக்கையில் படுத்துக் கொள்ளும்படி ஆகிவிடும் என்று உணர்ந்தவளாக, பழரசத்தை வாங்கி பருகினாள். அடுத்த குவளையையும் குடித்து முடித்தாள்.
"ஏன்மா மலர், மதியம் நீ ஏதாவது சாப்பிட்டியா?"
"புன்னகைக்க முயன்று தோற்றவளாய், தலையை குனிந்து கொள்ள,
"சரி சரி முதலில் நீ இந்த சாப்பாட்டை சாப்பிடு, என்று பையில் இருந்து உணவை எடுத்து வைக்க,
"இ..இல்லை மாமா, எனக்கு ஒன்றும் வேண்டாம். இந்த ஜூஸ் குடிச்சுட்டேன்ல, அது போதும்" என்றாள்.
"ஏன்மா இன்னும் என்னை பாவியாக்க பார்க்கிறாய்? உனக்கு நான் பண்ணியதெல்லாம் போறாதா? இப்படி நீ பட்டினி கிடந்தால் அந்த பாவமும் எனக்குத் தானம்மா"என்றவரின் குரல் தழுதழுத்தது.
"ஐயோ, என்ன மாமா நீங்கள்? பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக் கொண்டு, ப்ளீஸ் மாமா என்னை வற்புறுத்தாதீங்க, இந்த ஜூஸ் கூட குடித்திருக்க மாட்டேன் மாமா. ஆனால் நானும் படுத்துவிட்டால் உங்களுக்கு யார் துணையிருப்பார்கள் என்று நினைத்து தான் குடித்தேன். அ... அத்தான் கண் முழிக்கிறவரைக்கும் என் தொண்டையில் சாப்பாடு இறங்காது மாமா",என்றவள் அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி, குலுங்கி அழுதாள் மலர்வதனி.
சத்யமூர்த்திக்கு ஒருவாறு விஷயம் விளங்க, அப்படியே பிரமித்து போனார்.
☆☆☆
கணவரிடம் பேசிவிட்டு தொடர்பை துண்டித்த வடிவுக்கரசிக்கு, மகன் நினைப்பாகவே இருந்தது. அவன் குரலை கேட்டுவிட்டால் சற்று நிம்மதியாக இருக்கும் என்று தோன்ற, அவனது எண்ணுக்கு தொடர்பு கொண்டாள். ஆனால் மீண்டும் அதே பதில் வரவும் அவளுக்கு மனதுக்குள் படபடத்தது. சே, இப்படியா பொறுப்பில்லாமல் இருப்பான். தாமதமானாலும் வந்துடுறேன்னு சொன்னோமே, அம்மா நம்மளை காணாமல் தவிப்பாளேன்னு நினைப்பு வேண்டாம்? கடவுளே என் பிள்ளைக்கு ஏதும் ஆகிடாமல் நல்லபடியாக கொண்டு வந்து சேர்த்து விடு. அவனுக்கு கல்யாணம் ஆனதும் பத்து ஏழைகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்"என்று மனமுருகி வேண்டிக்கொண்டது அந்த தாயின் உள்ளம்!