வடிவுக்கரசி மகனைப் பற்றி சந்தேகம் என்றதும் சத்யமூர்த்தி அவளை யோசனையுடன் பார்த்துவிட்டு,"நம்ம ரஞ்சியை பற்றி உனக்கு என்ன சந்தேகம் வடிவு? என்றார்.
"அது என்றவள், சுற்றுமுற்றும் பார்த்து விட்டு,"என்னங்க இங்கே பேச வேண்டாம். வாங்க பின்னாடி தோட்டத்திற்கு போய்விடலாம். நீங்கள் ஜூஸை குடிச்சிட்டு இருங்கள். நான் மலர்கிட்ட செய்ய வேண்டியதை சொல்லிவிட்டு வாரேன்" என்று வடிவுக்கரசி சமையல் அறைக்குள் சென்றாள்.
சத்யமூர்த்திக்கு மனம் படபடத்தது. அப்படி அவருக்கு தெரியாமல் என்னவாக இருக்கும்? ஒருவேளை அவரைப் போலவே அதே சந்தேகம் தானோ? என்று எண்ணியவாறு வேகமாக பழரசத்தை குடித்து முடித்தவர், முன் தினம் தோட்டத்தில் பார்த்த பாம்பு நினைவுக்கு வர,
ஒருகணம் உடல் சிலிர்க்க, அங்கே வேலை செய்வது வேறு விஷயம். இப்போது தான் ஒரு கண்டத்தில் இருந்து தப்பியிருக்கிறாள். தெரிந்தே அங்கே போய் எதற்கு பேசுவது? என்று நினைத்தவர், மலர்வதனியிடம் சமையல் பொறுப்பை விட்டுவிட்டு, திரும்பி வந்த மனைவியிடம், "தோட்டம் வேண்டாம் வடிவு, யார் காதுலயாவது விழுந்தால் பிரச்சினை ஆகிவிடும். அதனால் இங்கேயே பேசலாம்" என்றதும் "அதுவும் சரி தாங்க"என்றாள் வடிவுக்கரசி .
"இப்ப சொல்லு வடிவு, ரஞ்சி மேல உனக்கு என்ன சந்தேகம்?"
சமையல்கட்டு பக்கம் ஒரு பார்வை பதித்தபடி வடிவுக்கரசி சொல்லத் தொடங்கினாள்."அது நேற்று அந்த பொண்ணோட நம்ம ரஞ்சி வெளியே கிளம்பி போனான் இல்ல? நான் கூட எங்கேயோ சுத்தி பார்க்க போறாங்கன்னு நினைச்சேன். ஆனா அவங்க இரண்டு பேரும் நம்ம மலருக்கு வேண்டிய புது துணியை எல்லாம் வாங்கிட்டு வந்திருக்காங்க. என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லல. அந்த பொண்ணு போயி மலரோட அறையில் எல்லா துணியையும் அடுக்கி வச்சு இருக்கு. காலையில மலர் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணினாள், அப்ப நான் வேலையா இருந்தேன். நம்ப ரஞ்சி சாப்பிட வந்தவன், என் போனை எடுத்து அவகிட்ட பேசிட்டு,என்கிட்டயும் விவரம் சொன்னான். எனக்கு ஒரே ஆச்சர்யம், சந்தோஷமா இருந்துச்சு. ரஞ்சி தான் பணம் குடுத்து இருக்கான், என்றாலும் அந்த பொண்ணு இவனை கட்டிக்க போறவ, அவ ஏன் மலருக்காக புது உடை எல்லாம் வாங்கணும்? சரி அது எதுக்கு இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு இருப்பாள் என்று நெனச்சு வாங்கிக்கொடுத்தான் வச்சுக்கலாம். ஆனா காலையில அவளை ஆஸ்பத்திரியிலிருந்து கூட்டிட்டு வந்தது அவன் தான். எதுக்குன்னு காரணம் நான் கேட்கல,என்னோட உடம்பு சரியில்லாம போனதால மலரை வீட்டுக்குள் கூட்டி வந்ததாக நெனச்சேன். ஆனால் அவளுக்காக என்னோட பக்கத்து அறையை தயார் செய்து, உள்ள எல்லாம் புதுசு புதுசா வாங்கி போட்டு இருக்கான். இன்னைக்கு காலைல நானும் அவனும் மலர் அறைக்கு அவளோட பிளஸ் 2 மார்க் சர்டிபிகேட் வாங்க போனோம். அப்போதுதான் எல்லாம் பார்த்தேன். மலர் சோபாலே ஒடுங்கி படுத்து தூங்கிக்கிட்டு இருந்தா, உடனே ரஞ்சி போய் அவளை தூக்கிட்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தான். எனக்கு அவன் செய்யறத பார்க்க பார்க்க ஒரே சந்தேகம் வருது. இந்த பையன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்குறான்னு தெரியல. அதுதான் உங்ககிட்ட சொல்ல வந்தேன்" என்று வடிவுக்கரசி முடிக்க, சத்தியமூர்த்திக்கு இருந்த சந்தேகம் இப்போது அது இன்னும் வலுப்பெற்றது. கூடவே, மனைவியிடம் நேற்று நடந்தது சொல்வதா வேண்டாமா என்று சில கணங்கள் யோசித்தார். ஒருவேளை மகன், மாமன் மகளை இத்தனை நாள் ஒதுக்கி வைத்ததற்கு பிராயச்சித்தம் பண்ணுகிறானோ என்னவோ? நாம் இவளிடம் நடந்ததை சொல்லி, அவள் வேறு கற்பனையை வளர்த்துக் கொண்டால் பிறகு அதை மாற்றுவது கஷ்டமாகிவிடும், அதனால் இதை சொல்லாமல் இருப்பதே நல்லது என்று விட்டுவிட்டார்.
ஆகவே சற்று முன் அவர் நினைத்ததையே மனைவியிடம் சொன்னார்."நீ சொல்றதெல்லாம் கேட்க கேட்க எனக்கும் ஆச்சரியமாத்தான் இருக்கு, ஆனா இவ்வளவு நாள் நாம் மலரை ஒதுக்கி வைத்திருந்தோம் இல்லையா? அதற்காக பிராயச்சித்தம் செய்கிறானோ என்னவோ? அதனால் நீ பாட்டுக்கு எதையாவது தேவையில்லாமல் கற்பனை செய்யாதே வடிவு"என்று முடித்து விட்டார்.
வடிவுக்கரசியின் முகம் சட்டென்று ஒளியிழந்து போயிற்று. அதை கண்டும் காணாதவர் போல் எழுந்து கொண்டு "சரி வடிவு நான் கொஞ்சம் வெளியில போயிட்டு வரேன். நீ போய் சமையலை பாரு"என்று நகர்ந்து விட்டார்.
வடிவுக்கரசியின் ஆசை கொண்ட மனம் கணவனின் பேச்சை நம்ப மறுத்தது. ஆனாலும் கணவர் சொல்வதுபோல் மகன் அந்த எண்ணத்தில் தான் இத்தனையும் செய்கிறான் என்றால்... அவளுடைய மருமகளிடம் இதையெல்லாம் கூறாமல் இருப்பதே நல்லது என்று தோன்ற ஒரு பெருமூச்சுடன் எழுந்து கீழே சென்றாள்.
☆☆☆
நிரஞ்சன் தீவிரமான சிந்தனையில் இருந்தான். காரில் மௌனம் நிலவியது. சற்று நேரம் தன் கைப்பேசியில் யாருடனோ சேட்டிங் செய்து கொண்டிருந்த ஜாஸ்மின் நிகழ்விற்கு வந்து போனை அனைத்து கைப்பையில் போட்டுவிட்டு, அருகில் இருந்தவனின் தோளை தொட்டு, " என்ன நிரஞ்ச்? வண்டியில் ஏறினதுல இருந்து பார்க்கிறேன். ஒன்னுமே பேசக்காணோம். ஏதாவது பிரச்சனையா? என்று விசாரித்தாள்.
"பிரச்சனை எல்லாம் இல்லை ஜாஸ் பேபி. நேற்று நாம் வெளியே போகிற அவசரத்தில் உன்கிட்ட சொல்ல மறந்துவிட்டேன். மாமா போன் பண்ணினார். பாட்டி வதனியை சத்தம் போட்டதில் பாதி பேச்சில் முடித்து விட்டேன். இன்றைக்கு திரும்ப அழைத்தால் லைன் கிடைக்கவில்லை. அவர் என்னவோ சொல்ல வந்தார். அதைத்தான் யோசித்து கொண்டிருக்கிறேன்.
"ஓ! அவசியம் என்றால் திரும்ப அவரே அழைப்பார் நிரஞ்ச், நீ எதுக்கு அதை நினைச்சு கவலைப்படறே? என்றவள் "மலர் கட்டியிருந்த சேலை சூப்பராக இருக்கில்லே? அவளோட நிறத்துக்கு நல்லா பொருந்துகிறது"என்றவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு,
"தற்பெருமை தற்கொலைக்கு சமம்னு ஒரு சொல் வழக்கு இருக்கு ஜாஸ் பேபி, என்றான் கிண்டலாக"
"என்ன என்ன சொல்றே நிரஞ்ச்? எனக்கு புரியவில்லை, நான் எங்கே பெருமை பேசினேன்? நான் சேலை பற்றி அல்லவா பேசிக்கொண்டு இருக்கிறேன்?
"அட மக்கு, அவளுக்கு நல்லா இருக்கும் என்று அந்த சேலையை நீதானே நேற்று செலக்ட் பண்ணினே? இப்ப அவளது சேலையை புகழ்ந்தால் என்ன அர்த்தம். உன்னை நீயே பாராட்டுகிற மாதிரி தானே? என்றான் கண்ணில் சிரிப்புடன்.
"அட பாவமே, நாம் நினைத்தது போல அவளுக்கு நல்லா இருக்குன்னு தானே சொன்னேன். இதுக்கு இவ்வளவு பேச்சாக்கும்? என்றவள், "அதுசரி அவள் வார்ட்ரோப் பார்த்து ஆன்ட்டிக்கிட்டே கேட்டிருப்பாளே? அவங்களுக்கே சஸ்பென்ஸ் எனும்போது ஆன்ட்டி உன்னிடம் வந்திருப்பார்கள்! நான் சொல்வது சரிதானே?"
அதை ஆமோதிப்பது போல் தலையை அசைத்த நிரஞ்சன், காலையில் மலர்வதனி அம்மாவிற்கு போன் செய்ததையும், அவன் பதில் அளித்ததையும், சொன்னவன், தொடர்ந்து, அதன்பிறகு அம்மாவிடம் விவரம் சொல்லி, வதனி கேட்டால் அவர்கள் தான் வாங்கியதாக சொல்லிவிட சொன்னதையும் தெரிவித்து நகைகக்க அவனோடு ஜாஸ்மினும் சேர்ந்து கொண்டாள். முடிந்ததும் சிறிது முடிந்ததும் சிரிப
"அப்புறம் நான் சொன்னேனே அந்த விஷயம் உன்னோட பொறுப்பு ஜாஸ். சீக்கிரம் எனக்கு ரிசல்ட் சொல்லு".
"நீ கவலையே படாதே நிரஞ்ச், அந்த விஷயம் முடிஞ்சது போலத்தான். நீ கொடுத்த சர்டிபிகேட் எல்லாம் பாத்துட்டேன். கண்டிப்பா கிடைக்கும்"
ஜாஸ்மின் சொல்லும்போது நிரஞ்சனின் கைபேசி ஒலித்தது. யாரென்று பார்த்தால், சற்று முன் அவன் சொன்ன மாமாவிடமிருந்து தான் வந்திருந்தது.
உடனே காரை ஒரு ஓரமாக பார்க் செய்துவிட்டு ஃபோனை ஸ்பீக்கரில் போட்டு அழைப்பை ஏற்று பேசினான் "ஹலோ மாமா சொல்லுங்க என்ன விஷயமா நேத்து கால் பண்ணுனீங்க?"
"நீ அனுப்பியது எல்லாம் பார்த்தேன். நான் உடனே அங்கே கிளம்பி வரலாம் என்று நினைத்தேன். ஆனால் இரண்டு நாட்களாக இங்கே ஒரே மழை அதனால் கிளம்ப முடியவில்லை. மழை நின்றதும் நான் அடுத்த பிளைட்டில் கிளம்பி விடுவேன், அதை சொல்லத்தான் இப்போ கூப்பிட்டேன் மாப்பிள்ளை" என்றார் மாமா.
"I'm sorry to ask this மாமா, இங்கே எப்படி மாமா எங்க தங்குவீங்க?? வீட்டுக்கு உங்களை கூப்பிட முடியாது. பாட்டி சும்மாவே ஜாஸ்மினை பார்த்ததுல ரொம்ப கோவத்துல இருக்காங்க என்ன செய்யலாம் சொல்லுங்க?"
"அதெல்லாம் எனக்கு தெரியாதா மாப்பிள்ளை? முடிந்தால் ஒரு வீட்டை வாடகைக்கு பார்த்து வைத்துவிடு. அதுவரை நான் ஹோட்டலில் சமாளித்துக் கொள்வேன்,"என்றார் மாமா.
"நீங்கள் அவசரப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன் மாமா", anyways நீங்க வாங்க மாமா, மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம், நீங்க சொன்னபடி ஒரு வீட்டை பார்த்து வைக்கிறேன், வேற ஏதாவது சொல்லனுமா மாமா?"
"வேறு ஒன்றுமில்லை மாப்பிள்ளை. ஜாஸ்மினை கேட்டதா சொல்லு. அவகிட்ட நான் அப்புறம் பேசுறேன். Bye"
ரஞ்சன் யோசனையோடு வண்டியை கிளப்பினான்."டாடி இங்கே வந்தால் என்ன பிரச்சனை நிரஞ்ச்"என்று வினவினாள் ஜாஸ்மின்.
"பிரச்சனை என்று இல்லை ஜாஸ், நாம இன்னும் பாதி கிணறு கூட தாண்டவில்லை. அதற்குள்ளாக Melo drama எல்லாம் வேண்டாம் என்றுதான் யோசித்தேன். அத்தோடு பாட்டி இப்போது வேண்டுமானாலும் அமைதியாக இருக்கலாம். Maybe நேற்று கூட அவங்க அப்பாவே வந்து விசாரிக்கவும் கொஞ்சம் shock ஆகிவிட்டார்கள். கூட நானும் இருந்ததால் தான் அவங்க அப்போதைக்கு பேசாமல் போனது. ஆனால் எந்த நேரமும் பாட்டியை நாம் எதிர்ப்பு கொள்ள தயாராக இருக்க வேண்டும். அத்தோடு வேறு விதமான இக்கட்டும் நேரலாம் ஜாஸ், என்று கவனத்தை சாலையில் பதித்தான்.
"அப்படி என்ன இக்கட்டு வரும் என்று நினைக்கிறாய் நிரஞ்ச்?" புரியாமல் வினவினாள் ஜாஸ்மின்.
"பாட்டி என் மீது கோபமாக இருந்தாலும் அவர்களுக்கு என் மீது பாசம் அதிகம் அதனால்தான் உன்னை அந்த வீட்டுக்குள் அனுமதித்திருக்கிறார்கள். அதுவே பாரு, அம்மாவின் தம்பி மகள் வதனி. சொல்லப்போனால் அவள் ரத்த பந்தம்கூட, ஆனால் பாட்டி அவளை வீட்டுக்குள் சேர்க்க மறுத்துவிட்டார்கள். நான் அதற்கான காரணத்தை அம்மாவிடம் கேட்டுக் கொள்ளவில்லை. அம்மாவிற்கு பாட்டியை பற்றி என்னிடம் பேசுவதற்கு இன்னமும் தைரியம் வரவில்லை. தவறு என் மீதும் இருக்கிறது,என்றவன் ஒரு பெருமூச்சுடன், தொடர்ந்து, "இப்போது அவள் உள்ளே வந்ததை பாட்டியால் பொறுக்க முடியவில்லை. நான் ஏதும் கேட்டால் விளக்கம் கொடுக்க வேண்டியதிருக்கும் என்று மௌனமாகி விட்டார்கள். நீ கூட நினைக்கலாம், நான் எந்நேரமும் வீட்டிலா இருக்க போகிறேன்? என்று, ஆனால் இப்போது முன்பு போல அம்மாவிடம் நான் பாராமுகமாக இல்லாததால் வீட்டில் எது நடந்தாலும் அம்மா என்னிடம் சொல்லி விடுவார்கள் என்று பாட்டிக்கு புரிந்திருக்கும். அதற்காக அவர்கள் சும்மா இருந்து விடுவார்கள் என்று அர்த்தமில்லை. அது என்றோ ஒரு நாள் வெடிக்கத்தான் போகிறது. அதற்குள்ளாக நாம் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். அதனால் தான் உன்னிடம் அவசர படுத்துகிறேன். இங்கேயே அருகில் என்றாலும் சரி, சற்று தூரத்தில் என்றாலும் சரி. செய்தே ஆக வேண்டும். மாமா வேறு வந்து விட்டால், எல்லாம் கெட்டுவிடுமோ என்று கொஞ்சம் கலக்கமாக இருக்கிறது...
"நீ சொல்வது எல்லாமே சரிதான் நிரஞ்ச், ஆனால் நீ சொன்ன இக்கட்டு என்னவென்று இன்னும் சொல்லவில்லை" என்றாள் ஜாஸ்மின்.
"ம்..சொல்கிறேன், பாட்டிக்கு என் மீது பாசம் இருப்பதாக சொன்னேன் இல்லையா?"
"ஆமாம்"
"அந்தப் பாசத்தில் அவர்கள் ஏதேனும் முடிவு எடுத்து விட்டால் என்னால் மீற முடியாது, அவர்களாக முடிவு எடுக்கும் முன்பாக நாம் முந்திக் கொள்ள வேண்டும். உனக்கு நான் சொல்ல வருவது புரிகிறது இல்லையா?
ஜாஸ்மின், மனம் பட படக்க, விழிகள் விரிய அவனை பார்த்தபடி இருந்தாள்.