Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

24. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
26
Points
28
Location
India
மலர்வதனி அத்தானிடம் பேசிய பிறகு குளிக்கச் சென்றாள். அவள் இதற்குமுன் இந்த அறைக்கு வந்ததில்லை. எப்போதும் இந்த அறை பூட்டிக் கிடக்கும். உள்ளே குளியல் தொட்டியை பார்த்தவளுக்கு அதில் குளிக்க தோன்றவில்லை. இதுபோன்ற குளியல் அறையை திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறாள். இன்றைக்கு தான் நேரில் பார்க்கிறாள். தண்ணீர் பிடித்து குளித்துவிட்டு அங்கிருந்த பெரிய துண்டு ஒன்றை எடுத்து கட்டிக்கொண்டு உடைமாற்றும் அறைக்கு வந்தாள். இளம் ரோஜா வண்ணத்தில் கருநீல பூக்களை இறைத்தார் போல இருந்த சேலையை கட்டிக்கொண்டாள். அப்படியே குளியலறையை விட்டு வெளியே வந்தாள். ஈரம் ஆகிவிட்ட தலைமுடியை எப்படி உலர்த்துவது என்று யோசித்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அப்போது தான் நிதானமாக அந்த அறையை நோக்கினாள். அடே அப்பா எவ்வளவு பெரிய அறை?குளியலறையை ஒட்டினாற்போல பெரிய ஜன்னல் இருந்தது. அதன் வழியாக அந்த வீட்டை சுற்றிலும் இருந்த வயல் வரப்பு தெரிந்தது. சற்று நேரம் அதை ரசித்து விட்டு மீண்டும் அவளது கவனம் உள்ளே திரும்பியது. அந்த அறை நடுவே மெத்தையுடன் பெரிய கட்டில், தலைமாட்டில் அழகான இயற்கை காட்சி. அறைக்குள் நுழையும் இடத்தில் சுவரை ஒட்டியவாறு நீளமான சோபா போடப்பட்டிருந்தது. கட்டிலுக்கு எதிர் சுவரில் பொருத்தியிருந்த பெரிய டி வி., அதன் கீழே மியூசிக் சிஸ்டம், கட்டிலின் இடது புறம் சாப்பிடுவதற்கு சின்ன மேஜை நாற்காலி. அறையின் மூலையில் படிப்பதற்கான விளக்கோடு மேஜை. அதிலேயே கணினியும் இருந்தது. அத்தோடு முடியவில்லை. அந்த அறையில் பெரிதாக சிட் அவுட் உடன் கூடிய பால்கனி இருந்தது. அங்கே குறு மேசையும் அதைச்சுற்றி வாகாக அமர்வதற்கு சோபாக்களும் போடப்பட்டு இருந்தது. மூளைகளில் பூஞ்செடிகளோடு தொட்டிகளும், தூண்களில் வண்ண மலர்க்கொடிகளும் படர்ந்திருந்தது. பால்கனிக்கு வந்து நின்று வெளியே பார்த்தால்,அது வீட்டின் முன்புறம் உள்ள தோட்டமும் கார் ஓடும் பாதையும் தென்பட்டது. "ட" வடிவில் காணப்பட்ட அந்த பால்கனி இரண்டு அறைகளுக்கு பொதுவாக இருந்ததை கவனித்தாள். ஆனால் நடுவே ஒரு கண்ணாடித் தடுப்பு காணப்பட்டது, அது கதவாகவும் பயன்படுத்த முடியும் என்று தோன்றியது. அந்த அடுத்த அறை அத்தானுடயது என்று புரிய மலர்வதனியின் இதயம் வேகமாக துடித்தது. அப்படி என்றால் அவளை அந்த வீட்டுப் பெண் என்று அத்தான் சும்மா வாய் வார்த்தைக்காக சொல்லவில்லை. ஏன்? ஏன்? திடுமென இந்த அனாதை மேல் பாசம் காட்டுகிறான்? எதற்காக? அத்தை தவறாக எண்ணி விடக்கூடாது என்பதற்காகவா? அல்லது இரக்கப்பட்டுத் தான் இது எல்லாம் செய்கிறானா? என்று எண்ணும்போதே மனம் வலித்தது. ச்சு... எதுவானாலும் அவளுக்கு ஒன்றுமில்லை. அத்தையின் மன அமைதிக்காக வந்திருக்கிறாள். அதை மறந்து இந்த வசதிகளை பார்த்து மயங்கி விடக்கூடாது. அவ்வளவுதான்.

மனதோடு முடிவு செய்துவிட்ட பிறகு சற்று நிம்மதியாக உணர்ந்தாள். கீழே இருந்த போது தலையை உணர்த்த இத்தனை சிரமமாக இல்லை. இப்போது வேறு வழியில்லை. மொட்டை மாடியை நோக்கி சென்றாள். இதுவரை மலர்வதனி அங்கு சென்றது இல்லை. மேலே வந்தவளுக்கு அந்த இடம் மிகவும் பிடித்து போய்விட்டது. சற்று நேரம் வெயிலில் நின்று முடியை உதறி உலர்த்தினாள். அதன் பிறகு அந்த சிமெண்ட் பெஞ்சில் சென்று அமர்ந்தாள். ஏனோ உடனே அங்கிருந்து எழுந்து செல்ல மனம் வரவில்லை. ஊஞ்சலை கண்டதும் உட்கார ஆசை வந்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டு சற்று நேரத்திற்குப் பிறகு எழுந்து அவளது அறைக்கு வந்தாள். நேராக உடைமாற்றும் அறைக்கு சென்று தலையை வாரி தளர பின்னல் இட்டாள். அதற்குள்ளாக யாரோ கதவைத் தட்டினார்கள்.

மலர்வதனி அவசரமாக தலையைப் பின்னி முடித்துவிட்டு வந்து கதவை திறந்தாள். காலை உணவுடன் மஞ்சுளா வந்திருந்தாள்.

"உள்ளே வா மஞ்சு"என்று வரவேற்றாள். உணவு தட்டை மேசை மேல் வைத்துவிட்டு,"மலர் சாப்பிட்டு முடிச்சதும் நீ கீழ வர வேண்டாம். கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்கணுமாம் பெரியம்மா சொல்ல சொன்னாங்க"என்று அவள் போய்விட்டாள். இந்த அத்தை ஏன் தான் இப்படி செய்கிறார்கள்? பாட்டியின் பெயரை சொல்லி அவளை வரவிடாமல் செய்வது எல்லாம் எத்தனை நாளைக்கு செல்லுபடியாகும்? ஒரு நாள் பாட்டியை எதிர்கொண்டு தானே ஆக வேண்டும்? இது ஏன் அத்தைக்கு புரியவில்லை? என்று யோசித்தவாறு சாப்பிடப் போனாள்.

மலர்வதனி சாப்பிட்டதும் சற்று நேரத்தில் அங்கே சிட் அவுட்டில் போடப்பட்டிருந்த ஷோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள். இதமாக வீசிய காற்று அவளை அறியாமல் கண்ணை சுழற்றியது. ஏனோ கட்டிலில் சென்று படுக்க மனம் வரவில்லை. அதனால் அமர்ந்திருந்த சோபாவிலேயே படுத்துக்கொண்டாள். அது அவளது உயரத்திற்கு போதுமானதாக இல்லை, ஆனாலும் உடலை குறுக்கிக்கொண்டு படுத்துவிட்டாள். அதன் பிறகு கண்களை திறந்தபோது, இதமான ஏசி காற்று தழுவ மெத்தை மீது உறங்கிக் கொண்டிருப்பதை அறிந்து பதறி எழுந்து அமர்ந்தாள். அவள் எப்படி அங்கே வந்து படுத்தாள் என்று குழம்பினாள். சுவரில் இருந்த கடிகாரத்தை பார்த்தாள். மணி 12ஆகி இருந்தது. மெதுவாக இறங்கி ஆடையை திருத்தி, தலை முடியை சரி செய்து கொண்டு, கண்ணாடியில் ஒரு முறை தன்னை பார்த்துவிட்டு கீழே சென்றாள்.

☆☆☆

மலர்வதனி கீழே இறங்கியபோது பின்னோடு காலடிச்சத்தம் கேட்டது. அது யாராக இருக்கும் என்று எண்ணியபடி திரும்பி மேலே நோக்கினாள். அங்கே ஜாஸ்மின் மாடிப்படிகளை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவளுக்கு பின்புறம் நிரஞ்சன் வந்து கொண்டிருந்தான். இருவரையும் பார்த்த மலர்வதனிக்கு ஒரு கணம் திகைப்பு உண்டான போதும், சட்டென்று அதை மறைத்துக் கொண்டு மடமடவென்று கீழே இறங்கி சமையல் கட்டுக்குள் நுழைந்து கொண்டாள்.

சில கணங்கள் கழித்து அங்கே தாயைக் காண வந்த மகன்,"அம்மா,நான் ஜாஸ்மினுடன் சற்று வெளியில் சென்று வருகிறேன். சற்று தாமதமானாலும் மதிய சாப்பாட்டிற்கு வந்து விடுவேன். ஆனால் எனக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம். சாப்பாட்டு மேஜையில் வைத்து விடுங்கள் போதும். நாங்கள் வருகிறோம்"என்றதும் மகனிடம் கண்ணால் ஏதோ கேட்டாள். அவனும் கண்ணாலேயே பதில் சொன்னான். அதன் பிறகு வடிவுக்கரசி தலையசைத்து விடை கொடுத்தாள். அதை பாராதது போல் பார்த்தபடி, அம்மாவின் பின்னால் நின்று கொண்டு இருந்த மலர்வதனியை ஒரு கணம் தீவிரமாக பார்த்துவிட்டு வேகமாக சென்று விட்டான் நிரஞ்சன்.

"என்ன அத்தை எனக்கு தெரியாமல் உங்கள் பிள்ளையோடு ரகசியம் பேசுகிறீர்களே? என்றாள் மலர்வதனி குறுகுறு வென்று அத்தையை பார்த்து கேட்டாள்.

"ரகசியம் ஒன்றும் இல்லையடி, எல்லாமும் போகப்போக உனக்கு தெரியும்"என்றவள்"சரி சொல்லு இன்றைக்கு என்ன செய்யலாம் என்று சமையலைப் பற்றி பேசலானாள். மலார்வதனிக்கு கொஞ்சம் மனத்தாங்கல் தான். ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அத்தையுடன் சமையலில் ஈடுபட்டாள். கூடவே உள்ளுர அவளை யார் கட்டிலுக்கு தூக்கிப் போய் படுக்க வைத்து இருப்பார்கள் என்று சிந்தனை ஓடியது. அத்தையிடம் கேட்பதா வேண்டாமா என்று யோசிக்கையில்...

அதே நேரம் சாப்பாட்டு அறைக்குள் வந்த காந்திமதி,"ஏய் சொக்கி குடிக்க கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா" என்று ஏவினாள். சமையல் அறையில் இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் அவசரமாக பார்த்துக்கொண்டனர். அதற்குள்ளாக சொக்கி தண்ணீரைக் கொண்டு போய் பாட்டியிடம் கொடுத்தாள்.

"எங்கேடி அத்தையும் மருமகளும் காணோம்? என்று காந்திமதி சொக்கியிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

"அது அது.... பாட்டி உள்ளே தான் சமைச்சிட்டு இருக்காங்க, என்று சொக்கி தடுமாறியபடி பதில் சொல்ல,

"ஓஹோ,சரி சரி நீ போய் உன் வேலையை பாரு" என்றவள் தொடர்ந்து,"இந்த வீட்டில ஆளாளுக்கு நாட்டாமையா போச்சு. இல்லன்னா அந்த சிறுக்கி வீட்டுக்குள் வருவாளா? என் மகனுக்கும் மதி கெட்டு போச்சு. இத்தன வருஷமா என் சொல்லுக்கு மறு சொல்லு சொல்ல மாட்டான். அப்படிப்பட்டவன் இன்னிக்கு என்னையே எதிர்த்து பேசுறான். இந்தச் சின்னப் பையன் என்னன்னா எவளையோ கூட்டிட்டு வந்து வீட்டுக்குள்ள வச்சுட்டு ஒரு விவரமும் சொல்ல மாட்டேங்குறான். அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னானே அவள பத்தி எதையாவது சொன்னானா? அப்பனும் ஆத்தாளும் அவன கண்டுக்கறதே இல்ல. தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால் என்ன? பிள்ளை இல்லையா? கேட்க உரிமை தான் இல்லையா? தொழிலை சாமர்த்தியமா நடத்துறதால அவன் செய்வதெல்லாம் சரியா இருக்கும்னு எப்படி நினைக்கலாம்? தெரியாத தேசத்துல போய் பிள்ளையை தொழில் செய்ய விட்டது தப்ப போச்சு. ஹும்ம், இப்ப அதனோட பலனை அனுபவிச்சு தானே ஆகணும்? இருக்கட்டும் எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவேன்"என்று காந்திமதி புலம்பிக் கொண்டிருக்க.
அப்போது சத்தியமூர்த்தி அங்கே வந்தார்."என்னம்மா என்ன பிரச்சனை? என்றவாறு ஒரு இருக்கையில் அமர்ந்தார்.

"எல்லாமே பிரச்சனை தான் டா. நான் எது சொன்னாலும் பொல்லாதவளா தான் தெரிவேன். ஆமா மகன் கூட்டிட்டு வந்து இருக்கிறானே அந்த பொண்ண பத்தி ஏதும் விசாரிச்சியா? அவ யாரு எந்த ஊரு ஏதாவது கேட்டியா அவங்கிட்ட?

"கேட்கணும் அம்மா. அவன்தான் வீட்டிலேயே இருக்கிறது இல்லையே, நேத்து ராத்திரி வெளியே போய் விட்டான். காலையில பேசலாம் நெனச்சேன். சீக்கிரமா கிளம்பி எங்கேயோ போயிட்டான். சரி சாப்பிடும்போது பேசலாம்னு பார்த்தேன். அவனைக் காணோம். எனக்கு வெளியே வேலை இருந்துச்சு போயிட்டு இப்பதான் வாரேன். வரும்போது பார்த்தேன் அந்த பொண்ணோட போயிட்டு இருக்கான். சரி வெளிய போற பையன் கிட்ட என்னத்த பேசனு வந்துட்டேன்" என்றவர் உள்ளே பார்த்து, “ மலர் எனக்கும் பாட்டிக்கும் குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா"என்றார்.

"எதையாவது சொல்லி என் வாயை அடைச்சிடுடா என்ற காந்திமதி, "எனக்கு ஒன்றும் வேண்டாம்"என்று எழுந்து கூடத்திற்கு சென்று விட,

வடிவுக்கரசி பழரசம் கொணர்ந்து வைத்துவிட்டு அருகில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தாள்."ஏங்க எனக்கு ஒரு சந்தேகம்"என்றாள்.

"என்ன சந்தேகம் சொல்லு?"என்றபடி பழரசத்தை கையில் எடுத்தார்.

"நம்ம ரஞ்சி பத்தி தாங்க, என்ற வடிவுக்கரசியின் குரல் வெகுவாக தணிந்திருந்தது.

முன்தினம் அவருக்குப் ஏற்பட்டதுபோல் அவளுக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்குமோ என்று யோசனையுடன் மனைவியை பார்த்தார் சத்தியமூர்த்தி.
 

Attachments

  • 462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    49.7 KB · Views: 0
Back
Top