மருத்துவர் சற்று யோசித்துவிட்டு எதற்கும் உங்கள் தந்தை வரும் வரை அவர்கள் இங்கே இருக்கட்டும் ரவீந்தரன். இந்த நேரத்தில் அவரால் தான் சரியான முடிவு எடுக்க முடியும். மனைவியின் குணம் பற்றி நன்கு அறிந்தவர். இப்போது நீங்கள் தனியே அழைத்துப் போனால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக உங்களால் பதில் சொல்ல முடியாது. அது தேவையற்ற மன உளைச்சலைத்தான் உண்டு பண்ணும். இங்கே என்றால் தலையில் அடிபட்டிருப்பதால் 24மணி நேரம் எங்கள் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்று சொல்லிவிடலாம், அதற்கு அவர்கள் பணிந்து விடுவார்கள் அல்லவா?? மருத்துவரின் கூற்றை ஆமோதிப்பதைத் தவிர ரவீந்தரனுக்கும் வேற வழி தெரியவில்லை.
மனோகரியிடம் சொல்லும் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டார் மருத்துவர். சந்திரமௌலிக்கும் மருத்துவரின் கருத்து ஒப்புதலாக இருந்தது. மனோகரி முதலில் வீட்டுக்குப் போக வேண்டும் என்று அதிலேயே நின்றாள். பிறைசூடனுக்கு ரவீந்தரன் தகவல் தெரிவித்திருந்ததால், அவரே மனோகரியிடம் தான் வரும் வரை மருத்துவர் சொல்படி கேட்டு நடக்கும்படி செல்லவும் ஒருவாறு அவள் பணிந்தாள். சற்று நேரம் ரவீந்தரனிடம் பேசியிருந்துவிட்டு சந்திரமௌலி பௌர்ணமியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.
பிறைசூடனின் பயணத்தில் சிறு தடங்கலாக விமானத்தில் கோளாறு என்று தாமதமாகிவிட்டது. அடுத்த விமானத்திற்காக காத்திருந்து மதுரை வந்து சேர்ந்தபோது இருட்டி விட்டது. மறுநாள் காலையில்தான் கொடைக்கானலுக்கு புறப்பட முடிந்தது. அப்படியும் போய்ச் சேர மதியம் ஆகிவிட்டது. நேரே வீட்டிற்கு சென்று சந்திரமௌலியிடம் சற்று நேரம் கலந்து ஆலோசித்துவிட்டு தான் மருத்துவமனைக்கு சென்றார். உள்ளுர இந்த சூழலை எப்படி கையாள்வது என்ற ஒரு சிறு பதற்றம் அவருக்கு. மனைவியின் நினைவு திரும்பியதில் பெரும் ஆறுதலும் மகிழ்ச்சியும் ஏற்பட்டிருந்த போதும், இப்போது அவள் எந்த அளவில் நினைவுகளோடு இருக்கிறாளோ என்ற யோசனை. மருத்துவமனையிலும் கூட மனைவியை காணும் ஆவலை கட்டுப்படுத்திக் கொண்டு மருத்துவரிடம் சென்றார். ராவீந்தரனும் உடன் சென்றான். மருத்துவரின் ஆலோசனையையும் கேட்டுக் கொண்டார்.
மகனிடமும் மனைவியைப் பற்றி விவரம் அறிந்தபின் மனோகரியை காண சென்றார்.
“என்னங்க வந்துட்டிங்களா? என்று மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மனைவியின் குரலை கேட்டவருக்கு தொண்டை அடைத்தது.
“ஆமா, நாம ஏன் இங்கே வந்திருக்கோம். சுமதிக்கு பிரசவ நேரம், நாம எப்படி இங்கே வந்தோம்? நாம மும்பைக்கு தானே கிளம்பினோம்?
எனக்கு எப்படி தலைல அடிபட்டுச்சின்னு தெரியலை. நம்ம ரவி வெளிநாட்டுல இருந்தவன் எப்போ வந்தான்? எதுவுமே புரியலைங்க குழப்பமா இருக்கு. எனக்கு தெரியாம எதையும் மறைக்கிறீங்களா? மனைவியின் குரல் கேட்ட பரவசத்தையும் மீறி அவளது கேள்விகள் தான் பிறைசூடனை திணறவைத்ததது.
அவசரமாய் யோசித்து, “நீ ஏன் மனு எதை எதையோ நினைச்சி மனசை குழப்பிக்கிறே?" மும்பைக்கு தான் கிளம்பினோம் மழையால ப்ளைட் எல்லாம் கேன்சல். சுமதிக்கு பிரசவம் ஆக இன்னும் ஒரு வாரத்திற்கு மேல அவகாசம் இருக்கிறது என்று மாப்பிள்ளை சொன்னார். ரவியோட நண்பனுக்கு கொடைக்கானில் கல்யாணம். ரவி முதல்ல வரமுடியாதுன்னு சொல்லி நம்மளை போகச்சொன்னான் நியாபகம் இருக்கா? நாம சுமதியை பார்க்க போகனும்னு சொல்லிட்டோம்ல? இப்போது ப்ளைட் கான்சல் ஆகிட்டதால வீட்டுல சும்மா இருப்பதற்கு கல்யாணத்திற்கு போய் வரலாம் என்று வந்தோம். மலைப்பாதையில் நடக்கிறப்போ நீ கீழே விழுந்துட்டே நாலு நாளா கண்முழிக்கலை. ரவி டிரெயினிங் முடிஞ்சதும் நேரா இங்கே வந்துட்டான். நான் சுமதியை ஒரு எட்டு பார்த்துட்டு வந்தேன். இப்போ என்னோட ஸ்கூல் மேட் சந்திரமௌலியோட கெஸ்ட் ஹவுஸ்ல தான் தங்கியிருக்கோம், பிறைசூடன் கோர்வையாய் சொல்ல மனோகரி குழப்பத்துடன் கணவரை ஏறிட்டாள்.
"எனக்கு ரவியோட நண்பன் கல்யாணம் மட்டும் நியாபகம் இருக்கு. மற்றது எதுவும் நியாபகம் இல்லையேங்க" என்றாள் மனோகரி. அவள் சொல்லும் போதே மருத்துவர் உள்ளே வந்தார்.
“என்னம்மா சாப்பாடு ஆயிற்றா? மருந்து எல்லாம் சரியா சாப்பிட்டீர்களா? என்றவாறு கையை பற்றி நாடித்துடிப்பை பரிசோதிக்க....
"ஆச்சு டாக்டர். ஆனால் எனக்கு இவர் சொல்றது எதுவும் நியாபகத்திற்கு வரமாட்டேன் என்கிறதே? எனக்கு என்னாயிற்று?? என்றாள் குழப்பமும் கவலையுமாய்
"உங்களுக்கு ஒன்னுமில்லை நார்மலாதான் இருக்கீங்க சில சமத்தில் இப்படி மறதி வரிறது சகஜம்தான். கீழே விழுந்து அடிபட்டதில்லையா அந்த சமயத்தில் பேசியது நடந்தது நியாகபத்துக்கு வராது. அது ஒன்றும் பெரிய பிராப்ளம் இல்லைம்மா. அதற்கு முன்னாடி உங்க பொண்ணு மாசமா இருக்கிறது நியாபகத்தில் இருக்கிறதில்லலயா?
"ஆமா டாக்டர்"
“விபத்து நடந்தது மனசுல பதியவில்லைம்மா. ஆனால் மற்ற எல்லாம் நியாபகம் இருக்கில்லையா. அதனால என்ன ஆச்சுனு ஞாபகப்படுத்திக்க முயற்சி செய்யாதீங்க அது உங்கள் உடல் நிலையை பாதிச்சிரும். இப்போதைக்கு என்ன செய்யனுமோ அதை மட்டும் நினைச்சுப் பாருங்க. அதைப் பற்றி கலந்து பேசுங்க என்ற மருத்துவர் ரவீந்தரனைக் காட்டி உங்க பிள்ளை நேற்று எப்படி இருந்தார்? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க? என்றார்.
முன்தினம் எதையோ பறிகொடுத்தாற் போலிருந்த மகன் இன்று புதுப்பொலிவுடன் தோன்றுவதை பார்த்தாள் மனோகரி. அப்போதுதான் பிறைசூடனும்கூட அதை கவனித்தார்.
லேசாக முறுவலித்து" சரி டாக்டர் நான் நீங்க சொன்னபடியே நடந்துக்கிறேன். இதை முதலில் சொல்லுங்க நான் எப்போ வீட்டுக்கு போகலாம்? "என்று வினவினாள் மனோகரி. எல்லாருடைய முகத்திலும் இறுக்கம் தளர முறுவல் அரும்பியது.
இன்னும் ஓர் நாள் இங்கே இருந்து ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா வீட்டுக்குப் போகலாம்மா" என்றுவிட்டு விடைபெற்றார்.
"அப்பா நீங்க பேசிட்டு இருங்கள் நான் வீடுவரை போய் மதிய சாப்பாடு வாங்கிட்டு வர்றேன் "என்று ரவீந்தரனும் கிளம்பிச் சென்றான்.
ஏதோ யோசனை வந்தவளாய்,” என்னோட போன் எங்கேங்க? என்றாள்.
“உன்னோட போன் கீழே நீவிழுந்தப்போ பல்லதில் விழுந்து உடைஞ்சு போச்சும்மா, உனக்கு புது போன் வாங்கிக்கிட்டா போச்சு’’என்று சமாதானம் செய்தார்.
“அய்யோ அதுலதானே மது நம்பர் இருக்கு. நல்லா ஞாபகத்துல வசிச்சிருந்தேன். இப்போ மறந்துடுச்சு”. என்றாள் வருத்தமும் தவிப்புமாக.
பிறைசூடனுக்கு மனது திக் திக் என்று அடித்துக் கொண்டது. மனைவியின் தவிப்பைக் காணவும் பாவமாக இருந்தது.“ஞாபகம் வர்றப்போ பேசிக்கலாம்மா. இல்லைன்னா அவளே கூப்பிடுவாள். என் கார்டு கொடுத்திருக்கேன்ல அவளோட அப்பாக்கிட்டே... என்று சமாதானப்படுத்த முயன்றதில் வேறுவிதமாய் அவள் ஆதங்கப்பட்டாள்.
"ஆமா நம்பர் கொடுத்து எவ்வளவு நாள் ஆச்சு? அந்த மனுஷன் ஒருவார்த்தை சம்மதம் சொன்னாரா பாருங்க? ரவிக்கு என்ன குறைச்சல்? இவ்வளவு நாளா அப்படி என்னதான் யோசிக்கிறாரோ?? சுமதி பிரசவம் முடியட்டும் நானே போய் நேரா இவதான் என் மருமகள்னு நிச்சயம் பண்ணிடுறேன். அப்புறம் என்ன செய்யறார்னு பார்க்கிறேன்." மனோகரி பேசப் பேச மதுவந்தி அவள் மனதில் எத்தனை ஆழமாய் பதிவாகிவிட்டிருக்கிறாள் என்று தெள்ளத் தெளிவாய் புரிந்தது.
அதே போலவே மனோகரியும் மதுவந்தியின் மனதில் பதிந்து போயிருப்பதை கண்டிருக்கிறாரே! ரத்த சம்பந்தமே இல்லாத இருவர் இத்தனை பிரியாமாக இருப்பதை எண்ணி வியப்பாகத்தான் இருந்தது!
"என்னங்க என்ன பலமான யோசனை நான் கேட்டது கூட காதுல விழாத அளவுக்கு? மனோகரி வினவ,
"ஒன்னுமில்லை மனோ நீ எ..என்ன கேட்டே?
"மும்பைக்கு போறதுக்கு முன்னாடி மதுவை பார்த்துட்டு போகலாமான்னு கேட்டேன்" என்று அவரை அதிரவைத்தாள்.
"இப்போதைக்கு முடியாது மனு. சுமதியை பார்த்துக் கொண்டிருந்த பக்கத்துவீட்டு மாமி வெளிநாடு கிளம்பிட்டாங்க, அதான் நான் அவளுக்கு துணைக்காக நாம அங்கே போகிறவரை இருக்கட்டும்னு ஒரு பொண்ணை வீட்டோட இருக்க ஏற்பாடு செயவதற்காகத்தான் உன்னை ரவிக்கிட்டே விட்டுவிட்டு அங்கே அவசரமா போனேன். உனக்கு ட்ரவல் பண்ண முடிஞ்சா நாம் உடனே அங்கே போயிடறது நல்லது மனோகரி ஒப்புக்கொண்டாள். ஆனாலும் அவளுக்கு மதுவந்தியை பாராமல் செல்வதில் வருத்தம்தான் என்று பிறைசூடன் உணர்ந்தார்.
மதிய உணவைக் கொணர்ந்த பௌர்ணமி, ரவீந்தரன் அவசரமாய் மும்பைக்கு கிளம்பிச்சென்றதாக தெரிவித்தாள். தொலைபேசி இணைப்பு கிடைக்காததால் தகவல் சொல்லும்படி அவளைக் கேட்டுக் கொண்டதாக கூறினாள்.
பிறைசூடனே மகனை அன்று மும்பை அனுப்பத்தான் திட்டமிட்டிருந்தார். மனோகரி குணமாகிவிட்டதால் அவனை அங்கே அனுப்பினால் உதவிகரமாய் இருக்கும் என்று எண்ணினார். அதைவிடவும் முக்கியமான காரணமும் ஒன்று இருந்தது.
அங்கே மும்பையில் மதுவந்தியும் ஒரு இக்கட்டில்தான் இருந்தாள். சுமதியை விட்டு வரவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
இக்கட்டு என்னவா இருக்கும்??