Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

23. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
பிறைசூடன் கொடைக்கானல் திரும்புவதற்குள்ளாக அங்கே சில சம்பவங்கள் நடந்தேறிவிட்டது.

எப்போதுமே நிழல் போல கூடவே இருந்த பிறைசூடனை காணததால் மனோகரிக்கு எதையோ இழந்துவிட்ட தவிப்பு. அதைச் சொல்ல முயன்றால் வார்த்தை வரவில்லை மாறாய் அழுகைதான் வந்தது. திடுமென அழும் தாயை கண்டு காரணம் புரியாமல் ரவீந்தரன் திகைத்தான்.

வழக்கமாய் குழந்தை படங்கள் கண்டால்தான் மனோகரி அழுவாள். இப்போது இங்கே வந்து சிகிச்சை தொடங்கிய பிறகு அவளது நடவடிக்கையில் லேசான மாற்றம் உண்டாகியிருந்தது. எந்நேரமும் எதையேனும் வெறித்துக் கொண்டிருந்தது மாறி தோட்டத்தில் வலம் வந்தாள். அழகு மலர்களை ரசனையுடன் தொட்டுப் பார்த்தாள். வாசலில் நின்று தூரத்து மலைகளின் இயற்கையை ஆவலாகப் பார்த்தாள். இவை ஒரே சமயத்தில் நிகழவில்லை, இந்த இதமான சூழலிலும் சிகிச்சையாலும் மனோகரியிடம் சிறு சிறு மாற்றங்கள் தெரிந்தது. பிறைசூடனுக்கும்கூட முன்னதாகவே இது போன்ற சூழலுக்கு அழைத்து வந்திருக்கலாமோ என்று தோன்றி இருந்தது. மனைவியின் இந்த மாற்றங்கல் சிறுதெம்பை அளிக்கவே அவர் இரண்டு நாட்கள் பயணத்தை மூன்று நாட்களாக்கி மும்பையில் மதுவந்தியின் ஐயங்களை தீர்த்து அந்த வீட்டின் நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொடுத்த பின்னர் கிளம்பினார்.

அந்தப் பிரிவே இன்னும் ஒருபடி முன்னேற்றத்தை தரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

பிறைசூடன் கிளம்பிய மறுநாள் காலையில் கண்விழித்த மனோகரி எதிரே வழக்கம் போல் காபியை பருகியபடியே பத்திரிக்கை படிக்கும் நபரைக் காணமல் திடுக்கிட்டாள். அவசரமாய் எழுந்து வீடு முழுதும் தேடிவிட்டு தோட்டத்திலும் அவரை காணாமல் போய்விட அழத்தொடங்கினாள்.

ரவீந்தரனுக்கு ஒன்றுமே புரியவில்லை! “அம்மா என்னாச்சும்மா? ஏன்மா அழறீங்க? பாப்பா வந்துவிடும்மா. சுமதி அக்கா பாப்பாவைக் கூட்டி கொண்டு சீக்கிரமே வந்துவிடுவாள் அம்மா. "அவனுக்கு தெரிந்தவாறு தேற்ற முயன்று கொண்டிருந்த போது, அங்கே காலை பணிக்காக வந்த பௌர்ணமி சிலகணங்கள் மனேகரியின் செயலை உற்று கவனித்தாள். மனோகரியின் விழிகள் அங்கே மாட்டப்பட்டிருந்த குடும்பப் புகைப்படத்திற்கும் வாசல் மற்றும் வீடு முழுதுமாய் வலம் வருவதும் குழந்தை போல அழுவதையும் கண்டவள்,

"ஐயாவை தேடுறாங்க போல தம்பி" என்றாள்.

ரவீந்தரனுக்கும் அப்போதுதான் ஓருவாறு விஷயம் விளங்கியது. முகம் மலர, “அப்பா ஊருக்கு அக்காவைப் பார்க்க போயிருக்கிறார் அம்மா. சீக்கிரமா வந்துடுவார். நீங்க நல்ல பிள்ளையாய் நான் சொல்றபடி கேட்டு நடக்கனும் சரியா? குழந்தையிடம் சொல்வது போலச் சொல்லவும் மனோகரியின் அழுகை மந்திரம் போட்டதுபோல மெல்ல மெல்ல நின்றுவிட்டது. இரண்டு நாட்களும் நல்லபடியாய் வீட்டை வலம் வந்து சற்று உற்சாகமாகவே காணப்பட்டாள்.

அன்று மூன்றாம் நாள் மனோகரியை சிகிச்சைக்காக அழைத்துப் போகவேண்டிய நாள். அப்பா வரவில்லை என்று தகவல் தந்துவிட்டிருந்ததால் சந்திரமௌலியின் ஆலோசனைப்படி பௌர்ணமியை துணைக்கு அழைத்துக் கொண்டு தாயுடன் கிளம்பினான் ரவீந்தரன். சிகிச்சை முடித்து களைத்துப் போய் இருந்த மனோகரி அந்த மருத்துவ கூடத்திலிருந்து சரிவான மண்ணிலேயே படிகளைப் போல் உருவாக்கிய பாதையில் ஏறிவர மிகவும் சிரமப்பட்டாள். அதிக தூரமில்லை சாதாரணமானவர்கள் பத்து நிமிடத்தில் கடக்கக்கூடிய தூரம்தான். மழை பெய்து ஈரமான தரை என்பதால் பௌர்ணமி ஒருபுறம் ரவீந்தரன் ஒருபுறமாய் அவளின் கையைப் பற்றியவாறு உடன் வந்து கொண்டிருந்தனர். லேசாய் தூறிக்கொண்டிருந்தது.

மற்ற சமயம் என்றால் விரைவாக ஏறிவிடலாம், ஈரத்தில் நடப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. கிட்டத்தட்ட ஏறிமேலே வந்துவிட்டிருந்த போது மனோகரி மயங்கிச் சரிய சமாளித்துப் பிடிக்குமுன் பிடிவிலக மனோகரி உருளத்துவங்க நல்ல வேளையாய் அந்த வழியாய் வந்த மருத்துவகூடத்து ஊழியர்கள் மளமளவென்று ஏறி மேலும் உருளாமல் தாங்கிப் பிடித்துக் கொள்ள ரவீந்தரன் நிம்மதிப் பெருமூச்சுடன் அவர்களை நெருங்கி நன்றி தெரிவித்துவிட்டு மனோகரியை மறுபடியும் கூடத்தினுள் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தான்.

மனோகரிக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கசிந்தது, கொஞ்சம் முன்னேற்றம் காணத் தொடங்கியிருந்த தாயின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்றபட்டு விடுமோ என்று ரவீந்தரன் பதற்றத்துடன் உட்காரமுடியாது நடந்து கொண்டிருந்தான். அதற்குள் பௌர்ணமி மூலமாய் தகவல் அறிந்து சந்திரமௌலி வந்து சேர்ந்தார். மருத்துவரும் சிகிச்சை அறையிலிருந்து அப்போதுதான் வெளியே வர சந்திரமௌலி அவரிடம் விவரம் கேட்டார்.

"பயப்பட ஒன்றுமில்லை. தலையில் அடிபட்டதற்கு சிகிச்சை பண்ணிருக்கிறோம். மயக்கத்தில் இருக்காங்க. கண்முழிச்சதும் எதற்கும் ஒருதடவை பரிசோதனை பண்ணிப் பார்த்துவிட்டு அப்புறம் தான் எதையும் சொல்லமுடியும். நீங்கள் காத்திருங்கள் என்று இருக்கையை காட்டிவிட்டு உள்ளே சென்றுவிட, ரவீந்தரனுக்கு உள்ளுக்குள் மீண்டும் தவிப்பு உண்டாகிவிட்டது.

சற்று நேரத்தில் மருத்துவர் அழைப்பதாக செவிலி வந்து கூற இரண்டு ஆண்களும் விரைந்தனர்.

மனோகரியிடம் அசைவு தெரியவும் மருத்துவரை அழைத்து வந்தாள் செவிலிப்பெண். மெல்ல கண்விழித்து சுற்றிலும் பார்வையை செலுத்திவிட்டு "நான் ஏன் இங்கே இருக்கிறேன்? எனக்கு என்ன ஆச்சு, எப்படி அடிபட்டது? சுமதிக்கு எந்த நேரமானாலும் பிரசவமாகிடும்னு டாக்டர் சொல்லியிருக்கார். நான் உடனே அங்கே போயாகனும் என்று எழமுயன்ற போது உள்ளே வந்த புதல்வன் விரைந்து தாயை அரவணைத்துக் கொள்ள சிலகணங்கள் கழித்து விலகி அமர்ந்தான். வழக்கமாய் அவன் வெளியூர் சென்று திரும்பினால் நடப்பது தான். அப்படித்தான் மனோகரி எடுத்துக் கொண்டாள், என்று அவள் தொடர்ந்து பேசியதிலிருந்து புரிந்தது.

"டேய் ரவி நீ எப்போதடா வந்தே? லீவ் இல்லை அடுத்த வாரம்தானே வர்றேனு சொன்னே? இது என்ன இடம்டா? நாம ஏன் இங்கே வந்திருக்கோம்? ஆமா அப்பா எங்கேடா? என்று படபடத்த தாயிடம்

“அம்மா அமைதியா இருங்கள். நான் டாக்டரை பார்த்துவிட்டு கொஞ்சம் நேரத்தில் வந்துவிடுகிறேன்" என்று பக்கத்திலிருந்த செவிலிப் பெண்ணிடம் பார்த்துக் கொள்ளுமாறு சைகை செய்துவிட்டு மருத்துவருடன் பேசச் சென்றான்.

“மிஸ்டர் ரவீந்தரன் உங்கள் அம்மாவிற்கு முன்பு அடிபட்ட சம்பவம் நினைவில் இல்லை. அதற்குமுன் இருந்த நிலையில்தான் இப்போது இருக்கிறார்கள். சிலருக்கு மனதிற்கு பிடிக்காத நிகழ்வுகள் மனதில் பதியாமல் போய்விடுவது உண்டு. அது போலத்தான் மிஸஸ் மனோகரிக்கும் அந்த சம்பவம் நினைவிற்கு வரவில்லை. நிறைமாதமான தன் பெண்ணை உடனே காணும் ஆவலில் இருக்கிறார்கள். இப்போது உங்கள் சகோதரி கர்ப்பிணியாக இல்லாமல் இருப்பதை அவர்கள் பார்த்தால் நிச்சயம் தாங்கமாட்டார்கள். அதுதான் என் கவலை ரவீந்தரன். எப்படியும் அவர்களை வேறு எது சொல்லியும் நீங்கள் திசை திருப்ப முயன்றால் அது அவரது மனதை பாதிக்கலாம்." என்று மருத்துவர் தெரிவிக்கவும் ரவீந்தரன் கவலை அகன்றவனாக,

"அது ஒன்றும் பிரச்சனை இல்லை டாக்டர், இப்போது என் அக்கா மறுபடியும் நிறைமாத கர்ப்பிணியாகத்தான் இருக்கிறாள். அப்படி என்றால் நாங்கள் அம்மாவை மும்பைக்கு அழைத்துப் போகலாமா டாக்டர்” என்று ஆவலுடன் வினவினான்.

அதே சமயத்தில் பிறைசூடன் மும்பையிலிருந்து கிளம்பி வந்து கொண்டிருந்தார்.

மருத்துவரின் ஆலோசனை என்னவாக இருக்கும்? பிறைசூடன் அந்த சுழ்நிலையை எப்படி கையாளப் போகிறார்?
 

Attachments

  • 462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    106.5 KB · Views: 0
Back
Top