பிறைசூடன் வாக்கு கொடுக்க வேண்டும் என்றதும் மற்ற இருவரும் புரியாமல் பார்த்தனர். மதுவந்தி அவர் என்ன கேட்டாலும் ஒப்புக் கொள்ளத் தயாராக இருந்தாள்.
"அங்கிள் எதுவென்றாலும் கேளுங்கள் ,ஆன்ட்டிக்காக அவர்களின் இந்த குடும்பம் நல்லாயிருக்கவேண்டும் என்பதற்காக என்னுயிரை கேட்டாலும் தருவேன். நீங்க வெறும் வாக்கு தானே கேட்கிறீர்கள். தருகிறேன் அங்கிள்" என்றதும்
பெரியவர்கள் இருவரும் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.
"எங்களின் உயிரை நீ உன்னுயிராக ஏற்றுக் கொள்ள வேண்டும் மது” என்று மதுவந்தியை அதிர வைத்தார்.
"அங்கிள் என்ன பேச்சு இது அபத்தமாய்?? விட்டேன் என்று சொல்லுங்கள் ப்ளீஸ்! "என்று பதற்றத்துடன் கூற சந்திரமௌலி மர்ம புன்னகையுடன் பேசாது
இருக்க, மனம் படபடக்க, "அப்பா பாருங்க இந்த அங்கிள் பேசுவதை… மதுவந்திக்கு வார்த்தை வராமல் தடுமாறினாள்.!
"எங்கள் உயிர் என்றால் எங்கள் உயிரேவா மது? எங்கள் உயிர் எங்கள் மகன் தானே? அவனை மணந்து கொண்டால் பிறகு உன்னுயிர் அவன்தானே? என்றார் நமட்டுச் சிரிப்புடன்.
சினிமாவில் ஸ்டில் சீனில் எல்லாம் ஒருகணம் செயலற்றுப் போகுமே அது போல செயலற்று நின்றாள் மதுவந்தி.
"எங்கேயும் உதவி செய்கிறவர்கள் தான் வாக்கு கேட்பார்கள். ஆனால் இங்கே கொஞ்சம் உல்டா ஆகிவிட்டது அவ்வளவுதான். நீ எங்களுக்கு செய்கின்ற உதவிக்காக இந்த வாக்கு கேட்கவில்லையம்மா. முறையாக பெண் கேட்ட உரிமையில் நீ மறுக்க மாட்டாய் என்ற உறுதியில் கேட்கிறேனம்மா" ஆனால் ஒரு விஷயம் மதும்மா, இது கட்டாயம் இல்லையம்மா, காரணம் இது உன் வாழ்க்கை. அதில் முடிவெடுக்க பூரண உரிமை உனக்கு உண்டு. யோசிச்சே பதில் சொல்லலாம் மதும்மா. உனக்கு அதில் நாட்டமில்லை என்றாலும் நீ எப்போதும் உன் ஆன்ட்டிக்கு பிரியமான மதுவாகவே இருக்கலாம் என்றார் பிறைசூடன்.
மதுவந்தி சிலைக்கு உயிர் வந்தது, "உங்கள் பிள்ளையிடம் முதலில் கேட்டுக் கொள்ளுங்கள் அங்கிள்". என்று தன் சம்மதத்தை சொல்லாமல் சொன்னாள்.
சந்திரமௌலியின் முகம் மலர்ந்தது.
பிறைசூடன் ஓ,,,ஹோஹோ,,,என்ற நகைத்துவிட்டு, "அவன் தான் எப்பவோ சொல்லி விட்டானேம்மா. அம்மா காட்டுற பெண்ணைத்தான் கட்டுவேனென்று அதனால் நீ கவலைப்படாதே. புறப்பட வேண்டிய ஏற்பாட்டை செய்துவிட்டு நாளைக்கு தகவல் சொல்கிறேனம்மா! சார் அப்போ நான் போய் வருகிறேன் என்று விடைபெற்றவரிடம்,
"இன்னும் சார் எதற்கு? சம்பந்தி என்றே சொல்லுங்கள்" என்று சந்திரமௌலி கூற வெட்கத்துடன் மதுவந்தி தன் அறைக்குள் ஓடி மறைந்தாள்.பின்னோடு பெரியவர்களின் சிரிப்பொலி கேட்டது. நீண்ட நாட்களுக்கு பின் அந்த இருவருமே மன இறுக்கம் தளர்ந்தாற் போல உணர்ந்தனர்.
அடுத்த இரண்டு நாட்களில் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துவிட்டு… பிறைசூடன் மகனிடம் மும்பை கிளம்புவதாக தெரிவிக்க..
"என்னப்பா சொல்றீங்க? திடீர்னு எதுக்கு நீங்க மும்பைக்கு கிளம்பறீங்க? அக்கா நல்லா இருக்கானு மாமா ராத்திரிகூட போனில் சொன்னாரே? ரவீந்தரன் குழப்பத்துடன் கேட்க
ஏற்கனவே யோசித்து வைத்ததை பிறைசூடன் சொன்னார், "அது பிரசவத்துக்கு நாள் நெருங்குகிறது இல்லையா ரவி, யாராச்சும் ஒரு பெண் துணை சுமதிக்கு ரொம்ப அவசியம். சந்திரமௌலி சார்கிட்ட சொல்லிட்டு இருந்தேன். அவர்தான் இங்கே அவருக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு நல்லா படித்த ஹிந்தி பேசத் தெரிந்தவளாம், அவளை கூட்டிப்போய் விடுங்க அவள் எல்லாம் பார்த்துக் கொள்வாள் என்று சொன்னார். அதான் டிக்கெட் போட்டாச்சு. நீ ரெண்டு நாள் அம்மாவை பத்திரமா பார்த்துக்கொள். நான் போய் அவளை விட்டுவிட்டு வந்து விடுகிறேன்" என்று கோர்வையாக கூறவும்,
"அட அதுக்கு நீங்க எதுக்குப்பா போகனும் நான் கொண்டு விடமாட்டேனா? என்றான் ரவீந்தரன்.
திடுக்கிட்டுப் போனார். பிறைசூடன்,கெட்டதே குடி என்று எண்ணியவர் வேகமாய் யோசித்து,அவர்கள் வீட்டில் நான் தான் போவதாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். இப்போது உன்னை அனுப்பினால் அவர்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை கெட்டுவிடாதா? என்று கூறவும் ரவீந்தரன் சரிப்பா போயிட்டு வாங்க" என்றுவிட்டான். மகன் நம்பினானா இல்லையா என்று அறியமுடியவில்லை.
அப்பாடி தப்பித்தோம் என்று எண்ணியவராக பிறைசூடன் வரவழைத்த டாக்ஸி வரவும் அதில் ஏறிப் புறப்பட்டுவிட்டார்.
உண்மையில் ரவீந்தரனுக்கு அப்பா சொன்னதில் நம்பிக்கை இல்லை. அக்காவிற்கு துணையாக இருக்கப் போகும் பெண்ணை அவனுடன் அனுப்ப மறுத்து அவரே உடன் செல்லுவது என்றால் மகனை நம்பாமல் இல்லை என்பது ரவீந்தரனுக்கு தெளிவுதான். இதில் வேறு ஏதோ விஷயம் இருக்கிறது. அது அவனுக்கு தெரியக்கூடாது என்று அப்பா நினைக்கிறார். அப்படி என்ன சிதம்பர ரகசியம்?? தனக்குள்ளே கேட்டுக் கொண்டான்.
மும்பையிலும்கூட மதுவந்தியை தமிழ்ப் பெண்ணாக அல்லாது வடநாட்டுப் பெண்ணாக உடை மாற்றித்தான் வீட்டிற்கு அழைத்துப் போனார் பிறைசூடன்.
மதுவந்தி சரளமாய் ஹிந்தி பேசுவதைப் பார்த்து அவ்வாறு செய்தார். தமிழ் தெரிந்த வடநாட்டுப் பெண் என்று அவளை அறிமுகம் செய்தார். அதற்கு ஏற்றவாறு தலையிலும் முக்காடு போட்டிருந்தாள் மதுவந்தி.
பெயரை மாற்ற இருவருக்குமே மனமில்லை. சுமதிக்கு ஏனோ அந்தப் பெயரை எங்கோ கேட்டது போல ஒரு எண்ணம். அது எங்கே என்றுதான் நினைவிற்கு வரவில்லை. மதுவந்தி வந்ததில் எந்த சந்தேகமோ குழப்பமோ இல்லாமல் இயல்பாக பெரும் பாரம் இறங்கியவனாக இருந்தவன் நிகிலன் மட்டுமே!
சுமதி கண்டு பிடிப்பாளா?