மாமன் மகள் மலர்வதனியை அந்த வீட்டிற்குள் சேர்க்காமல் அந்நியப்படுத்தி வைத்திருப்பதை அறிந்தது முதல் நிரஞ்சனின் மனம் குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருந்தது. அதை போக்கவும் மலர்வதனிக்கு உரிமை அளிக்கவும் அவளை வீட்டிற்குள் வரவழைக்க,பாட்டியின் எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் துணிந்து நடவடிக்கைகளை மேற்கொண்டான். அதன்படி அவளுக்கு அன்னையின் அறைக்கு அருகில் உள்ள அறையை ஒதுக்கி, அவனது அறையைப் போன்றே எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருந்தான்.
ஆனால் அதன் பிறகும் அன்னை தம்பி மகள் வீடு வந்ததை எண்ணி மகிழாமல், சற்று வருத்தமும் ஆதங்கமுமாக பேசியது அவனை வேதனைக்குள்ளாக்கியது. ஆகவே காரணத்தை கேட்டான்.
"சொல்லுங்க அம்மா. இன்னும் உங்கள் தம்பி மகளுக்காக நான் என்ன செய்யட்டும்?"
வடிவுக்கரசியின் விழிகளில் வேதனை படர,"ம்ம்.. நீதான் அவளை வீட்டிற்குள் அழைத்து வந்தது, அதை நானும் மறுக்கவில்லை. அவள் இந்த வீட்டிற்குள் வருவதற்கு என்னோட உடல்நலம் கெட்டது ஒரு காரணமாக அமைந்து விட்டது. இல்லாவிட்டால் என்ன சொல்லி அவளை வீட்டிற்குள் கூட்டி வரமுடியும் ரஞ்சி?ஆனால், என் தம்பி மகளுக்காக இதற்கு மேல் நீ என்ன செய்துவிட முடியும்? உன் அப்பாவும் அந்த காரணத்திற்காகத் தான் பாட்டியிடம் பரிந்து பேசினார் என்று எனக்கு தெரியும். ஆனால் நீ சொன்னது போல் அவள் உரிமையுள்ளவளாக வரவில்லை ரஞ்சி. என் உறவுக்காரியாக மட்டும் தான் வந்திருக்கிறாள் என்று கசப்புடன் நிறுத்தினாள், தொடர்ந்து, "என் மருமகள் தனியாக இருந்தாலும் ஒருவகையில் மகிழ்ச்சியோடுதான் இருந்தாள். ஒருபோதும் அவள் வருந்தியிருந்து நான் பார்த்ததில்லை. அவளுக்காக நான் வருத்தப்படும் போதெல்லாம்,"அத்தை கிடைத்ததை கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டுமே தவிர கிடைக்காததற்கு வருத்தப்படக்கூடாது"என்று புத்திமதி சொல்வாள். இப்போது எனக்கும் அந்த வகையில் சந்தோஷம் தான்" என்றாள்
நிரஞ்சனுக்கு அன்னை பேசப் பேச அவன் பேச்சில் மாமா மகள் என்று சொல்லாது, உங்கள் தம்பி மகள் என்று குறிப்பிட்டது தான் அவளது வருத்தத்திற்கான காரணம் என்று விளங்கிப் போயிற்று. அந்த கோபத்தில் தான் மலர்வதனியை அவளது உறவுக்காரி என்று குறிப்பிடுகிறாள் என்றும் புரிந்தது. மாமன் மகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் தான் அவன் வேலை விஷயத்தை எடுத்துப் பேசியதே. ஆனால் அம்மா, அவளது உடல்நலம் கெட்டதை காரணமாக கொண்டு தான் தம்பி மகளை வீட்டிற்குள் கூட்டிவந்திருப்பதாக தவறாக புரிந்து கொண்டு அவன் மீது கோபப்படுகிறாள். அப்படி அம்மாவுக்காக மட்டும் என்றால் விருந்தினர் அறையில் அல்லவா தங்கச் செய்திருப்பான்? ஏனோ அன்னையின் கோபத்தை காண்கையில் சிறுபிள்ளைத்தனமாக தோன்றியது. உள்ளூர சிரிப்பு வந்தது, மலர்வதனியின் மனம் அந்த வீட்டில் பொருந்தச் செய்துவிட்டால், அதுவே அம்மாவை சாந்தப்படுத்திவிடலாம்,
"வதனி இந்த வீட்டுப் பெண் என்றேனே அம்மா, அப்படி என்றால் அவள் உங்களுக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் அனைவருக்கும் உறவுக்காரிதான். உரிமைக்காரியும் தான். எப்படி நிகிதா என் அத்தை மகளாக இங்கு உரிமையோடு வந்து போகிறாளோ அதே போலத்தான் வதனியும் என் மாமன் மகள் என்கிற உரிமையுடன் இந்த வீட்டோடு இருக்க வேண்டும் என்று அவளுக்கு உங்கள் அருகில் அறையை தந்ததும். ப்ளீஸ் அம்மா எதை எதையோ எண்ணி உங்களை வருத்திக் கொள்ளவேண்டாம். இத்தனை காலம் வருந்தியது போதும், இனி உ.. இல்லை, நம்ம வதனியோடு சந்தோஷமாக நேரத்தை கழியுங்கள். எனக்கும் அதுதான் மகிழ்ச்சியாக இருக்கும் அம்மா"என்று புன்னகையுடன் தாயின் கைகளை எடுத்து தன் கன்னங்களில் பதித்து நேராகப் பார்த்தான்.
மகனின் பேச்சிலும் செய்கையிலுமாக வடிவுக்கரசியின் மனச் சுமை வெகுவாக குறைந்து போயிற்று எனலாம். விழிகளில் கண்ணீரும் இதழ்களில் புன்னையுமாக,"நிச்சயமாக கண்ணா, என்றவளுக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை.
"ம்.. அப்புறம் ஒரு விஷயம் அம்மா, வதனியை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து படிக்க வைப்பது என் பொறுப்பு, இப்போது அவளிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம் அம்மா, நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு சொல்கிறேன். அதன்பிறகு சொல்லுங்க சரிதானா? "
"இல்லை ரஞ்சி, அவள் இனி படிக்கத் தொடங்கினால் ஐந்தாறு வருடங்கள் ஆகும் முடிப்பதற்கு. அதனால் அவள் இந்த வேலையை தொடர்ந்து செய்யட்டும்" என்ற வடிவுக்கரசி, எங்கேயோ போக வேண்டும் என்று சொன்னாயே ரஞ்சி, நீ கிளம்பு நான் கொஞ்சம் ஓய்வெடுக்கிறேன்"என்றதும் மேற்கொண்டு பேசாமல் குழப்பத்துடன் வெளியேறினான் நிரஞ்சன்.
மருத்துவமனையில்...
மலர்வதனி அன்று காலை முதல் நடந்தவற்றை எண்ணிக் கொண்டிருந்தாள். அத்தை மகன் வந்து இரண்டு நாட்கள் முடியுமுன்பாக எத்தனை திருப்பங்கள்? இந்த அத்தான் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்? மருத்துவமனையில் ஆகட்டும் வீட்டில் ஆகட்டும் அவன் ஆட்டி வைக்கிறபடி எல்லோரையும் ஆட்டி வைத்துக்கொண்டு இருக்கிறான். அவளிடம் ஒரு வார்த்தை கேளாமல் அவளது அறையை மாற்றி வைத்திருக்கிறான். பாட்டி கூட அத்தானை கண்டதும், அவளை திட்டுவதை நிறுத்தி கொண்டாளே! அது வேறு ஒரு சமயம் வெடிக்கும் என்பது தெரிந்ததுதான். அந்த வகையில் பேரனுக்கு பாட்டி சற்று அடங்கித்தான் இருக்கிறாள். நிரஞ்சனின் நினைவு வேறு ஒன்றை ஞாபகப்படுத்த அவளது முகம் லேசாக சிவந்தது. கூடவே மனது குழம்பவும் செய்தது. அவளைப் பற்றி அக்கறையற்று இருந்த அத்தானுக்கு திடுமென அத்தனை பாசம் எங்கிருந்து முளைத்தது? அவன் பாம்பு கதை சொன்னது நிஜமா? அப்படியே பாம்பு மரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தாலும் அவளுக்கு குரல் கொடுத்து சொல்லி இருக்கலாம். அல்லது அவளைப் பிடித்து தள்ளி விட்டிருக்கலாம், அதை விட்டு,இந்த அத்தான்.. என்று நினைக்கையில் அந்த காட்சி மனதில் தோன்ற, உடலும் மனமும் ஒருகணம் சிலிர்த்தது. கூடவே அவளுக்கு அத்தான் மீது இருந்த கோபம் நமத்துப் போனது போல தோன்றியது. ஏன்? அப்படி அவள் மனம் குளிரும்படி என்ன செய்துவிட்டான் அவன்? ஒன்றுமே இல்லை. அந்த வீட்டிற்குள் கூட்டிப் போனது அவனது அன்னையின் மன அமைதிக்காகத் தானே தவிர அவனுடைய மாமன் மகளாக கருதி அல்லவே. பாட்டியிடம் மாமா பேசியதற்கு கூட அவரது மனைவியின் உடல் நலம் பேணுவதற்காகத் தானே? ஆக, அவரவருக்கு ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவளது அத்தை மட்டும் தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவள் மீது உண்மையான அன்பை பொழிபவள். அந்த அன்புக்காக அவள் எதையும் தாங்கிக் கொள்ளலாம்"மனதுக்குள் முடிவு செய்துவிட்டாலும் அதை நடைமுறையில் கடைப்பிடிக்க சிரமப்படத்தான் வேண்டியிருந்தது.
மறுநாள் காலையில் மலர்வதனி பணி முடிந்து மருத்துவமனையை விட்டு பிரதான வாயிலுக்கு வந்தபோது அவள் முன்பாக அந்த க்ரீம் நிற கார் வழுக்கியபடி வந்து நிற்க, பதறிப்போய் சட்டென்று பின்னடைந்தாள். அவள் புறமாக இருந்த காரின் கதவைத் திறந்துவிட்டு, "ஏறிக்கொள் வதனி"என்ற நிரஞ்சனை பார்த்து மேலும் திகைத்துப் போனாள்.
இவன் எதற்காக அவளை அழைத்துப் போக
வந்திருக்கிறான்? என்று யோசனை ஓடியது. அதற்குள் அடுத்து ஒரு வாகனம் வர,"வதனி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடுமுன் சீக்கிரம் ஏறு" என்று அவசரபடுத்தினான் நிரஞ்சன். வேறு வகை தெரியாமல் அவள் சட்டென்று ஏறிக்கொள்ள, கார் சாலையில் மற்ற வாகனங்களோடு கலந்து வேகமெடுத்தது. மனதுக்குள் ஏன் எதற்கு என்ற கேள்வி விடாமல் எழ, ஒன்று தோன்றவும், ஒருகணம் திடுக்கிட்டுப் போனாள். ஒருவேளை அத்தை... அத்தைக்குத்தான் ஏதும் ஆகிவிட்டதோ? என்று பதறிப்போனவளாக,"அத்தைக்கு என்னவாயிற்று அத்தான்? அ... அவங்க நல்லா தானே இருக்கிறாங்க?" என்று வினவ, வியப்பும் திகைப்புமாக, அவளை நோக்கியவனுக்கு, ஒருவாறு விஷயம் விளங்க,
"அடடா உன் அத்தை நன்றாக இருக்கிறார்கள். டீ போட்டு கொடுத்துவிட்டுத் தான் கிளம்பி வந்தேன்" என்றதும் சற்று ஆசுவாசமானவள்,
"பின்னே நீங்கள் என்னை எதற்காக அழைத்து போக வந்தீர்கள்?"என்றாள்.
"அதென்ன பதறும் போது மட்டும் "அத்தான்" வருகிறது. மற்ற சமயங்களில் அது காணாமல் போகிறதே? என்றான் கிண்டலாக.
அவள் என்ன கேட்டுக்கொண்டு இருக்கிறாள். இவன் எதைப் பற்றி பேசுகிறான் என்று ஆத்திரம் உண்டாயிற்று. ஆனாலும் அடக்கியபடி,"ச்சு, நான் கேட்டதற்கு முதலில் பதில் சொல்லுங்க." என்றாள்.
"எங்கள் வீட்டு பெண் நீ எதற்காக பஸ்ஸில் பயணம் செய்து கஷ்டப்பட வேண்டும் ? அதுவும் வீட்டில் கார்கள், பைக்குகள் எல்லாம் இருக்கும் போது, இன்றைக்கு சங்கரன் தாத்தாவிற்கு கொஞ்சம் முடியவில்லை அதனால் தான் நானே அழைத்து போக வந்தேன்"
"என்ன பைத்தியக்காரத்தனம் என்று உள்ளுர தோன்றியதை சொல்ல முடியாமல்,"நான் கஷ்டப்படுவதாக உங்களிடம் சொன்னேனா? நான் ஒரு சாதாரண நர்ஸ் வேலை செய்கிறவள். இப்படி பெரிய காரில் தினமும் போக வர இருந்தால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?" ஆத்திரத்தை அடக்க முயன்றபடி கேட்டாள்.
"அதெல்லாம் சொல்லித்தானா தெரியவேண்டும் வதனி, நர்ஸ் பணியை சாதாரணம் என்று சொல்லாதே மா, அது எவ்வளவு உன்னதமான சேவை என்று தெரியாதா உனக்கு?அத்தோடு,நான் சொன்னதை நீ சரியாக கவனிக்கவில்லை போலும், எங்கள் வீட்டுப் பெண் பஸ்ஸில் போக வர இருந்தால் எங்களைப் பற்றி எல்லோரும் என்ன நினைப்பார்கள் சொல்லு? இன்றைக்கு போல தினமும் என்னால் வர இயலாது என்பதால் உனக்கு போக்குவரத்துக்கு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்யப் போகிறேன்" என்று அவன் சொல்லும்போதே மலர்வதனி குறுக்கிட்டாள்.
"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், என்று தொடங்கி தொடர்ந்து படபடவென்று பேச, வண்டியை அவசரமாக சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு சிலகணங்கள் உறைந்து போனான் நிரஞ்சன்.