Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

20. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
சந்திரமௌலி எல்லாம் கேட்டவர் பிறைசூடனின் கையைப்பற்றி ஆறுதலாக தட்டிக் கொடுத்து விட்டு,வருத்தப் படாதீங்க சார், சிஸ்டர் சீக்கிரமா குணமாகிடுவாங்க என்று சொன்னார்.

"உங்க வாக்கு பலிக்கட்டும் சார் என்றவர் நீங்க தனியாவா இருக்கீங்க?" என்று வினவினார்.

"இல்லை சார் என்கூட பொண்ணு இருக்கிறாள். வேலைக்குப் போயிருக்கிறாள்" என்றார் சந்திரமௌலி.

"ஓ! நல்லது சார், என்றவர் ஏதோ யோசனை வந்தவராய் “இருங்க சார் இதோ வர்றேன் என்று சமயலறைக்குச் சென்றார். காரணம் புரிந்தவராக ,"இல்லை சார் நான் இடையில் காப்பி டீ, எல்லாம் குடிக்கிறது இல்லை. வந்து உட்காருங்க" என்று மறுக்கவும் வந்து அமர்ந்தார் மற்றவர்.

"ஆமா உங்கள் பெண்ணிற்கு இப்போது குழந்தை இருக்கிறதா சார்? என்று வினவினார் சந்திரமௌலி.

"இப்போ மறுபடி உண்டாகியிருக்கா சார். இப்ப நிறைமாசம். பாவம் மாப்பிள்ளை அங்கே தனியா கஷ்டப்படடுகிட்டு இருப்பார், இப்போ அதுதான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. குழந்தை பிறந்துட்டா ஒரு பெண் துணை ரொம்ப அவசியம். இப்பவும் கூட அவளைப் பார்த்துக்க வீட்டோட ஆள் வைக்க யோசனயா இருக்கு சமையலுக்கும் மற்ற வேலைக்கும் ஒரு பொண்ணு வந்து செய்யுறா. அதுக்கப்புறம் மத்த நேரம் அவளுக்கு யாராவது கூட இருக்கனும்ல. அதான் ரவியை அங்கே போகச் சொன்னேன். அவன் ரெண்டு மனசா. இங்கேதான் எல்லாம் செட்டாகிடுச்சே நீங்க எல்லாம் பக்கத்தில இருக்கீங்கனு சொல்லி ரவியை சம்மதிக்க வச்சிருக்கேன் சார்"

"நாங்க இருக்கோம் சார் நீங்க தைரியமா ரவியை அனுப்பி வைங்க."என்றார் சந்திரமௌலி.

“ரொம்ப நன்றி சார். என்றார் பிறைசூடன் குரல் கரகரக்க

"நன்றி எல்லாம் எதுக்கு சார்?? இது மனுசனுக்கு மனுசன் செய்யவேண்டிய கடமைதானே?" என்றவர் மணியை பார்த்துவிட்டு நான் வந்து நேரமாச்சு சார். போய்ட்டு வர்றேன்" என்று விடைப்பெற்று கிளம்பினார்.

மாலை

வீடு திரும்பிய மதுவந்தியிடம் எல்லாமும் சொல்லி முடித்தார் சந்திரமௌலி.

கண்கள் கலங்க சற்று நேரம் பேசாமல் ஏதோ தீவிரமாக யோசித்தபடி இருந்தவள் "அப்பா நான் ஒரு யோசனை சொன்னா ஏத்துப்பிங்களா??" என்று தயக்கத்துடன் கேட்டாள் மதுவந்தி.

"சொல்லும்மா நீ நல்லதைதான் யோசிப்பேனு எனக்கு தெரியும். என்ன விஷயம்மா தயங்காம சொல்லு"

மதுவந்தி தன் யோசனையை சொன்னாள். அதைக் கேட்டுவிட்டு சற்று நேரம் மௌனமானார்.

“என்னப்பா சரிவராதா? என்றாள்.

“எப்படி இதை செயல் படுத்தறதுன்னு யோசிக்கிறேன்மா மது. இதை நாம மட்டுமா முடிவு செய்ய முடியாதே. பிறைசூடன்கிட்ட கலந்து பேசனும். அவர் சொல்ற பதிலில் தான் நாம் மேற்கொண்டு எதையும் திட்டம் போட முடியும். சரிம்மா நாளைக்கு சந்திரமௌலியை இங்கே வரச் சொல்றேன். நீயே பேசிடு சரிதானா? என்றார்

"அப்பா நானா? என்றாள் பதற்றமாய்.

"நீயேதான் பேசனும் அப்போதான் ஒருவேளை பிறைசூடன் உன் யோசனையை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கு மது"

"சரிப்பா, நீங்க எதையும் காரணமில்லாம சொல்லமாட்டிங்க. நானே பேசுறேன். ஆனால் அவர் பையனுக்கு இது விஷயமா எதுவும் தெரிய வேணாம்ப்பா” என்று கேட்டுக் கொண்டாள் மதுவந்தி.

மறுநாள்

மனோகரியை வைத்தியசாலைக்கு அழைத்துப் போய்விட்டு வெகுநேரம் கழித்தே மூவரும் திரும்பினர். மாலையில் மதுவந்தி சற்று முன்னதாய் வீடு வந்து சேர்ந்தாள். பௌர்ணமிடம் சொல்லி அனுப்பி பிறைசூடனை வரவழைத்தார் சந்திரமௌலி. வாசலுக்கு வந்து வரவேற்றவளைப் பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டார் பிறைசூடன்.

"என்னாச்சு சார் அப்படியே திகைச்சு நின்னுட்டிங்க? உள்ளே வாங்க! என்றார் சந்திரமௌலி.

"இது இந்தப் பெண்" என்று தடுமாறினார் பிறைசூடன்.

"ஆமா சார். இவள் அந்த மதுவந்தியேதான். நீங்க சந்தேகமே படத்தேவையில்லை. உள்ளே வாங்க எல்லாம் சொல்கிறேன்"என்றவர் மாடியில் உள்ள அறைக்கு மற்ற இருவரையும் அழைத்துப் போனார். யார் ஆரம்பிப்பது என்ற தயக்கத்தில் சிலகணங்கள் மௌனமாய் கழிய,சந்திரமௌலி பேச ஆரம்பித்து

" மதுவந்தி பற்றிச் சுருக்கமாக விவரம் சொல்லி முடித்தார்.

"ரொம்ப கஷ்டமா இருக்குமா மதுவந்தி. நீ ஏன்மா மும்பைக்கு வரலை? விலாசம் கொடுத்துட்டுதானே போனோம்?" என்றார் பிறைசூடன் வருத்தமான குரலில்.

"ஆமா அங்கிள். ஆனால் நான் எந்த உரிமையில் அங்கே வருவது? அப்படியும் நான் ஆன்ட்டிக்கூட பேசிட்டுதான் இருந்தேன். அப்பா தவறினதை ஆன்ட்டிக்கு தெரியப்படுத்த நான் முயற்சி செஞ்சேன் பலமுறை. தொடர்புல இல்லைன்னு வந்துச்சு. அதுக்குள்ள அவனும் பிரச்சனையை ஆரம்பிச்சுட்டான். எனக்கும் வேற வழி தெரியலை. நல்ல வேளை என் தோழியும் அவ அப்பாவும் உதவியா இருந்தாங்க..அப்புறமா இந்த அப்பா எனக்கு கிடைச்சார்."

"ஹும்ம், நீ சொல்வதும் சரிதானம்மா. சரியாக அந்த சமயம் தான் அங்கேயும் இந்த களேபரம் நடந்துச்சு. எல்லாம் நேரம்தான். வேற என்னத்த சொல்ல? என்று பெருமூச்சு விட்டார்.

"கடவுள் போடுற கணக்குதான் சார் இது. நான் மகளை இழந்துட்டு வந்தப்ப, இந்த மகளை அனுப்பிவச்சான். எங்கேயோ இருந்த உங்களை இங்கே வரவச்சு இவளையும் உங்களையும் சந்திக்க வச்சான். எல்லாம் நன்மைக்குனு எடுத்துக்கனும் சார். தற்காலிக கஷ்டங்கள்கூட இல்லைன்னா நாம கடவுளை நினைக்கக்கூட மாட்டோம். அதனால போனதை விட்டுட்டு இப்ப நடக்க வேண்டியதை பார்ப்போம்" என்றார் சந்திரமௌலி

அதவும் சரிதான் என்று ஆமோதித்தார், பிறைசூடன்.

பௌர்ணமி எல்லாருக்கும் சூடான பானங்களை கொணர்ந்து கொடுத்துவிட்டுச்செல்லவும் சந்திரமௌலி, "சொல்லுமா மது என்று எடுத்துக் கொடுத்தார்.

மதுவந்தி தன் யோசனையை சொல்லவும் திகைப்பும் வியப்புமாய் பார்த்தவரின் விழிகள் கண்ணீரில் குளமாகியது..!! கூடவே புரியாத சில விஷயங்களும் புரிந்தது. பிரமிப்பாக இருந்தது. இந்த பெண்ணை மனோகரி ஒன்றும் சும்மா தேர்வு செய்து விடவில்லை இவளது குணம் புரிந்துதான் தன் பிள்ளைக்கு தேர்வு செய்திருக்கிறாள். கூடவே இருக்கும் உறவுகள்கூட கஷ்டப்படும் காலத்தில் கண்டும் காணமல் போகும்போது கொஞ்ச நாளே, பழகிய இந்தப் பெண்ணிற்குதான் மனோகரியின் மீது எவ்வளவு பாசம்! உள்ளுர வியந்து போனார்.
 

Attachments

  • 462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    106.5 KB · Views: 0
Back
Top