ரவீந்திரனை கைபேசியில் தந்தை பிறைசூடன் தான் அழைத்திருந்தார்.
அவன் வந்த வேலை எந்த அளவில் இருக்கிறது. எப்போது கிளம்பி வரட்டும் என்று வினவினார். வீடு பார்த்து விட்டு சொல்வதாக தெரிவித்தவன் மேலும் குடும்பத்தினர் பற்றி விசாரித்துவிட்டு பேச்சை முடித்தான். சாப்பிட்ட தட்டுக்களை எடுக்க வந்த சுந்தரத்திடம் ரவீந்தரன் விபரத்தை சொல்லி தனக்கு வீடு தேவை என்று சொன்னான்.
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல ரவீந்தரனே விஷயத்தை சொல்லிவிட்டான். அந்தப் பணியாள் சுந்தரம் பாத்திரங்களை கொண்டு போகும் வழியில் தென்பட்ட வேறு ஒரு பணியாளிடம் தந்துவிட்டு நேரே மதுவந்தியின் அறைக்குச் சென்றார்.
"வாங்க சுந்தரம், விபரம் ஏதும் தெரிந்ததா? என்று வினவினாள். அதை சாதாரணம் போல காட்ட பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.
“நான் கேட்காமலே அவரு சொன்னாருங்கம்மா. அவரோட அம்மாவிற்கு மனநலம் சரியில்லையாம். நிறைய வைத்தியம் பண்ணியும் பிரயோசனமில்லையாம். கடைசில இங்க இருக்கிற சித்தவைத்திய சாலையில் காட்டினா குணமாகும்னு யாரோ சொன்னாங்களாம். அங்கே இன்னிக்கு அனுமதி வாங்கியாச்சாம். இப்ப இங்க தங்கிக்க ஒரு வீடு தேவப்படுதாம். புரோக்கர் யாரையாவது தெரியுமான்னு கேட்டாரும்மா. நா விசாரிச்சு சொல்றேனு சொல்லிட்டு வந்தேனுங்கம்மா" சுந்தரம் சொல்லி முடித்த போது மதுவந்தி திகைப்பில் இருந்தாள்.
"அம்மா நான் போகட்டுங்களா" என்று சுந்தரம் இரண்டாம் முறையாய் கேட்கவும் தான் நிகழ்வுக்கு திரும்பி, இயந்திரமாய் தலையசைத்தாள் மதுவந்தி.
மனோகரிக்கு மனநிலை சரியில்லை என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. கதறி அழவேண்டும் போல இருந்த உணர்வை கட்டுபடுத்திக் கொண்டு முகத்தை தண்ணீர் அடித்து கழுவினாள். சற்று நேரம் வெளியே தெரிந்த இயற்கையை பார்த்தவாறு நின்றிருந்தவளின் மனம் தீவிர யோசனையில் இருந்தது .மனோகரி ஒரு தாயைப் போல காட்டிய பாசமும் பரிவும் வாழ்வில் அவளுக்கு கிடைத்த வரம். எதிர் பார்ப்பு இல்லாமல் கொடுத்த அன்பு அது. அந்த அன்புக்கு கைமாறு செய்யும் நேரம் இதுதான். ஒருவாறு முடிவு செய்துவிட்டு சுந்தரத்தை அழைத்துச் சில விஷயங்கள் சொல்லி அனுப்பினாள். அதன் பிறகே சற்று மனம் அமைதி அடைய, வேலையில் கவனமும் சென்றது.
இரவில்...
சாப்பாட்டு கூடத்தில் சந்திரமௌலியிடம் தன் யோசனையைச் சொன்னாள் மதுவந்தி. அவரும் மறுக்காமல் உடனே ஒப்புக் கொண்டார்.
ரிசார்ட்டில்...
இரவு உணவைக் கொண்டு சென்ற சுந்தரத்திடம், "நான் கேட்டேனே புரோக்கர் முகவரி. கிடைச்சதா ஐயா? என்று ரவீந்தரன் வினவினான்.
"சொல்லியிருக்கேங்க, சார் காலைல தகவல் வரவும் நான் உங்களுக்கு சொல்லுறேன்" என்று சுந்தரம் சொன்னார். பல வருடங்களாக அங்கே பணிபுரிபவர் சுந்தரம். எல்லாரையும் மேற்பார்வை பார்ப்பவர். முதலாளிக்காக இன்று தானே சாப்பாடு கொண்டு வரும் பணியை ஏற்றுச் செய்தார். மற்றவர்களும் கேள்வி கேட்கவில்லை. காரணம் ரவீந்தரன் தங்க வைக்கப்பட்ட அறை அப்படிபட்டது. அது குடும்பத்தினர் அல்லது முக்கியமானவர்கள் வந்தால் தங்கவைக்கப்படும் அறை. சுந்தரம் சென்றதும் இரவு உணவை சாப்பிட அமர்ந்தவன் மீண்டும் வியந்தான். அவனது விருப்பமான வட இந்திய சப்பாத்தி ரைத்தா, கத்திரிக்காய் கறி, கூடவே பழத்துண்டுகள் சாலட். எப்படி இது? தற்செயலாக என்றால் ஒரு வேளை நடக்க வாய்ப்பு இருக்கிறது. இரண்டுமுறை நடக்குமா என்ன? தனக்குள்ளே கேள்வி எழ யோசனையோடு சாப்பிட்டு முடித்தான்.
மறுநாள் காலையில்....
மதுவந்தி சற்று சீக்கிரமே வந்துவிட்டாள். ரவீந்தரனுக்கான சாப்பாடையும் எடுத்துக் கொண்டு. அவளைப் பொறுத்தவரை ரவீந்தரனை திருமணம் செய்து கொள்கிறாளோ இல்லையோ, இப்போது அவனுக்கு உதவி செய்வதை தன் கடமை என்று எண்ணினாள். யார் கண்டது ரவீந்தரனுக்கு ஒரு வேளை திருமணம் முடிந்திருக்கவும் கூடும். நினைக்கும் போதே மனது வலிக்கத்தான் செய்தது. ஆனால் இப்போது முன்னால் இருக்கும் பிரச்சனையை முதலில் பார்க்க வேண்டும் என்று எண்ணியவள் தனது அறைக்கு சென்று சுந்தரத்தை உள்ளிடப் பேசியில் தொடர்பு கொண்டாள். சுந்தரம் வரவும் சாப்பாடைக் கொடுத்து, விபரம் சொல்லி அனுப்பி வைத்தாள், மதுவந்தி.
ரவீந்தரனுக்கு காலையில் எழும் போதே அறையை அன்று மாலைக்குள் காலி செய்ய வேண்டுமே என்று நினைவு வந்தது. அவன் இருந்த அறையை அப்போதுதான் நன்றாக கவனித்துப் பார்த்தான். சிட்டவுட் சின்னதாக ஹால் தவிர ஒரு தனி படுக்கை அறை குளியலறை இணைப்புடன் இருந்தது. இதன் வாடகை அதிகமாகவே இருக்கும் என்று தோன்றியது. அத்தோடு சாப்பாட்டிற்கும் கூட அதிகமாகத்தான் கட்டணம் இருக்கும் என்று எண்ணினான். அதிக நாள் இத்தனை செலவு செய்ய இப்போதைக்கு இயலாது. இன்று ஏதேனும் வீட்டை வாடகைக்கு பிடித்தே ஆகவேண்டும், மனதுக்குள் முடிவு செய்தவனாய் குளியலறைக்குள் நுழைந்தான்.
மதுவந்தியின் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்வானா ரவீந்திரன்.....?? மனோகரிக்கு ஏன் மனநிலை பாதிக்கப் பட்டது என்பதை மதுவந்தி எப்படி அறிந்து கொள்ளப் போகிறாள்...???