மதிய உணவிற்காக பௌர்ணமி அழைக்க வந்தபோது தான், ரவீந்தரனின் நினைவு வந்தது. கைபேசியை எடுத்து பானுவை அழைத்து பேசினாள் மதுவந்தி. பானுவுக்கு மீண்டும் ஆச்சர்யம். மதுவந்தி ரவீந்தரனுக்கான மெனுவை சொன்னதுதான். பொதுவாக மதுவந்தி ஆண்கள் என்றால் ஒதுங்கிப் போகிறவள். அவர்களது விடுதியில் தங்கவென்று பெரிய இடத்துப் பையன்கள் வந்து தங்கியிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. ஆனால் வந்திருக்கும் ரவீந்தரனுக்கு அறை, சாப்பாடு எல்லாம் அவளே முன்வந்து ஏற்பாடு செய்ய சொல்வதைப் பார்த்தால் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் தனக்கிட்ட பணியை செய்தாள், பானு.
வெளியே சென்றுவிட்டு களைத்துப் போய் வந்த ராவீந்தரனுக்கு சாப்பிடும் எண்ணமே இல்லை. ஆனால் அவன் சாப்பிடாமல் இருப்பதால் இருக்கும் நிலை சீராகிவிடுமா? அப்படி ஆகும் என்றால் பட்டினி கிடக்க அவன் தயார்தான். ஆனால் அவன் அம்மாவிற்க்கு மகன் சாப்பிடாவிட்டால் மனது தாங்காதே. சாப்பாடை அறைக்கு அனுப்பச் சொல்லிவிட்டு உடைமாற்றி முகம் கழுவிவிட்டு வந்தவனுக்கு அன்று போய்வந்த காரியம் ஒருவாறு நல்லபடியாக முடிந்ததில் திருப்திதான். ஆனால் இப்போது இங்கே தங்குவதற்காக ஒரு வீட்டைப் பார்க்க வேணும். அது உடனே எப்படி கிடைக்கும்? அவன் யோசிக்கையில் கதவு தட்டப்பட்டது.
உணவை வைத்துவிட்டு பணியாள் சென்றுவிட மனமின்றி சாப்பிட அமர்ந்தவனுக்கு சற்று வியப்பும் அம்மாவின் நினைவும் வந்தது. இது எல்லாம் அவனுக்கு பிடித்த உணவு வகைகள். பார்த்ததும் பசியை தூண்ட சாப்பிட்டான். வெகு நாட்களுக்குப் பிறகு அவன் நன்றாக சாப்பிட்டான் என்றுதான் சொல்லவேண்டும். அன்னையின் உடல்நிலை பாதித்தபின் சாப்பாடு தூக்கம் எல்லாமும் தான் இழப்பாகிப் போயிற்று.
வருத்தத்துடன் ஜன்னல் ஓரமாய் நின்று வெளிப்புற இயற்கையை வெறித்தவாறு நின்றவனின் கவனம் காரின் ஹார்ன் ஒலியில் கீழே சென்றது.
“என்னாச்சும்மா மது, சாப்பிடாம என்னம்மா யோசனை சந்திர மௌலி வினவினார். "இன்னிக்கு நம்ம விடுதியில் ரவீந்தரனைப் பார்த்தேன் அப்பா".
"ஓ! என்றவர், நீ போய் பேசுனியாம்மா?" என்றார் மகளின் முகத்தை ஆராய்ந்தபடி.
"எப்படி அப்பா முடியும்? அவருக்கு என்னைத் தெரியுமோ என்னவோ? "ஆனால் மனோகரி ஆன்ட்டிக்கு வைத்தியம் பார்க்கவென்று இங்கே வந்திருப்பதாக அவர் சொல்லிருக்கார். எனக்கு அவங்களை நினைச்சுத்தான் ரொம்ப கவலையா இருக்கு. இவரும் ரொம்ப வாடிப் போய் இருக்கார். எனக்கு எப்படி அந்த விபரத்தை தெரிஞ்சுக்கிறதுன்னு தெரியவில்லை அப்பா".
"நியாயமான கவலைதானம்மா. எப்படியும் தெரிஞ்சுக்கலாம்மா. நீ முதலில் சாப்பிடும்மா. பௌர்ணமி பாப்பாக்கு கூட்டு வைம்மா"என்றவர் சிலகணங்கள் யோசித்துவிட்டு கூடத்திற்கு சென்று போனில் யாருடனோ பேசினார்.
" மதும்மா,நீ விடுதிக்கு கிளம்பு. சுந்தரம் உனக்கு அந்த விபரம் சொல்லுவான். அப்புறமா நாம எப்படி உதவலாம்னு முடிவு செய்யலாம் சரிதானேம்மா.
"நெகிழ்வுடன் தந்தையைப் பார்த்து, நன்றி அப்பா. வேற சொல்லத்தெரியலைப்பா" என்றாள் குரல் கரகரக்க... மகளின் தலையை ஆறுதலாய் வருடினார் பெரியவர்.
ரவீந்தரன் அசுவாரசியமாய் கீழே வந்து நின்ற காரைப் பார்த்திருந்தான். காரிலிருந்து மதுவந்தி இறங்கினாள். காரின் சாவியை பணியாளிடம் தந்துவிட்டு அவள் ஏதோ கேட்க அவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் தலையை அசைத்து பதில் சொல்ல தானும் விடைபெறும் விதமாய் தலையசைத்து நடந்தவளின் முகத்தை பார்க்க இயலவில்லை. அவள்தான் இந்த விடுதியின் உரிமைக்காரி என்று புரிந்தது. அவன் மும்பையிலும் சென்னையிலும் எத்தனையோ விதமான பெண்களை பார்த்திருக்கிறான் தான். அழகும் அறிவுமான பெண்களை கூட பார்த்திருக்கிறான் தான். ஆனால் இவளிடம் இந்தக் காலப் பெண்கள் போல நடை உடை பாவனை இன்றி வித்தியாசமாய் தோன்றினாள்....!
ரவீந்திரனுக்கு ஏனோ திடும் என அவள் முகத்தை பார்க்கும் பேராவல் உண்டாக திடுக்கிட்டுப் போனான். தலையை உலுக்கிக் கொண்டவனாய் வந்த வேலையை விட்டு இதென்ன விடலைப் பையனைப் போல தன்னைத்தானே கடிந்து கொண்டவனின் செல் ரீங்காரம் செய்தது...
இருவரும் சந்திப்பார்களா?