Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

15. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
மாலை வரை வெளியே சுற்றிவிட்டு இருட்டும் சமயத்தில் ஹோட்டலுக்கு அழைத்துப் போய் தனி் அறையில் கேக் வெட்டி கொண்டாடி.. அப்புறமாய் உடையில் குளிர் பானம் கொட்டி விட்டு... இப்படித்தான் ப்ரியரஞ்சன் திட்டம் போட்டு வைத்திருந்தான்.

ஆனால் அதற்கு அவசியமில்லாமல் மழை பெய்து அவனது சதிக்கு வழி வகுத்துவிட.. அவளை அழைத்துக்கொண்டு தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு சென்றான்.

அப்போதும்கூட சாருமதி இணங்கக்கூடும் என்று ப்ரியரஞ்சனுக்கு நம்பிக்கையில்லை. அதனால் அந்த வேலை செய்தான். அந்த வேலையால் நேரப் போகும் அபாயத்தை அவன் அப்போது அறியவில்லை.

ஈரம் போக தலையைத் துவட்டிக்கொண்டிருந்தாள் சாருமதி. அவன் கீழே உள்ள காம்ப்ளக்சில் அவளுக்காக ஒரு புது உடை வாங்கி வந்தான். உள் அறையில் அவள் உடை மாற்றும் போது ஆர்டர் செய்திருந்த டீயும் சிற்றுண்டியும் வந்தது. டீயில் மயக்க மாத்திரையை கலந்து வைத்தான்.

அவள் வந்ததும் சாப்பிடக் கொடுத்தவன்,"கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகிற வழக்கமெல்லாம் எனக்கு இல்லை பேபி, பட் இது எனக்கு மறக்க முடியாத பிறந்தநாள். உன்கூட இன்னிக்கு பூரா இருக்கனும்னு நினைச்சேன் ,மழை கெடுத்திருச்சு. நீ இதை குடிச்சதும் வீட்டுக்கு கிளம்பு பேபி" என்றதும் சாருவிற்கு மனம் உருகிப் போயிற்று

"இல்லை, நான் கொஞ்சம் நேரம் இருந்துட்டு அப்புறமா கிளம்புறேன். ஹாஸ்டலுக்கு போன் பண்ணிச் சொல்லிடுறேன்"என்று அவள் தொலைபேசியில் தகவல் சொல்லிவிட்டு டீயை அருந்தலானாள்.

"தாங்க்யூ பேபி" என்றவன் டிவிடியில் அவளுக்குப் பிடித்த சினிமாவைப் போட, அதைப் பார்க்கையிலேயே, சாருவிற்கு தலை சுற்றலாயிற்று.

"ரஞ்சன் எனக்கு ஒரு மாதிரி மயக்கமா வருது "குழறலாய் சொல்ல" அடடா என்னாயிற்று பேபி படுத்துக் கொள்கிறாயா?"என்று கைத்தாங்கலாய் அவளை அழைத்துப் போனான் ப்ரியரஞ்சன்.

சாருமதி கண்விழித்தபோது ரஞ்சன் கவலையுடன் அமர்ந்திருந்தான்,"எனக்கு என்ன ஆச்சு ரஞ்சன் ? ஏன் நீங்கள் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள் ?? சாரி ரஞ்சன் உங்க பிறந்தநாள் மூடை கெடுத்துட்டேன்" என்று வருந்தினாள்.

"சாரி பேபி, நான் கன்ட்ரோல் மிஸ் பண்ணிட்டேன். ஐ'ம் எக்ஸ்ட்ரீம்லி சாரி" பட் நீதான் என் வைஃப். அதில் மாற்றமே இல்லை பேபி" !

சாருமதிக்கு விஷயத்தை கிரகிக்க அவகாசம் கொடுத்து தொடர்ந்தான். " ப்ளீஸ், பேபி அப்படி பார்க்காதே, வெரி சாரி டார்லிங்"தப்புத்தான் பட், ஐ லவ் யூ சோ மச் பேபி" என்றவன் தன் கழுத்தில் கிடந்த சங்கிலியை கழற்றி அவள் கழுத்தில் மாட்டினான். அவளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தான்.

சாருமதி சற்று நேரம் அழுதவள் அவனது இந்தச் செய்கையால் ஒருவாறு நம்பிக்கை பெற்றாள்.

அன்றைக்குப் பிறகு ப்ரியரஞ்சன் அங்கே செல்வதை குறைத்துக் கொண்டான். அவள் ஃபோன் செய்தால் பிஸி என்றான். சாருமதியை பிரிந்து வந்த பிறகு வீட்டோடு இருந்தான். காரணம் அப்போது சித்தரஞ்சன் சுயநினைவின்றி நாலு சுவற்றுக்குள் இருந்தான். அவனை பழிவாங்க என்று ஒரு உலகம் அறியாத சின்னப் பெண்ணின் வாழ்வை கெடுத்துவிட்டோமே என்று உள்ளம் சுட்டது. அப்போதுதான் அன்று வரை அவன் வாழ்ந்த வாழ்க்கை பற்றி சிந்திக்க முடிந்தது. அவனது தவறுகள் எல்லாம் புரிந்தது மூன்று மாதங்கள் கழிந்த பின் அவன் சாருமதியை தேடிச் சென்றான். ஆனால் அவளைப் பற்றி ஒருதகவலும் அறிய முடியவில்லை. உடன் பிறந்த ஒரு சகோதரி தான் அவளது ஒரே சொந்தம். முக்கியமாக அவளுக்கு வீடு என்று ஒன்றும் இல்லை. விடுதியில் அவளது அக்காவுடன் தான் தங்கிப் படித்துக்கொண்டு இருந்தாள் என்று விவரம் அவனை மேலும் கலங்கடித்தது.

அதன் பிறகு அவன் ஒரு துப்பறியும் நிறுவனத்தை அணுகினான். அவர்கள் மூலமாக சாருமதியைப் பற்றி கிடைத்த தகவல் அவனை சித்திரவதை செய்தது. ஆகவே “எனக்கு வாழப்பிடிக்கவில்லை. நான் ஒரு உலகம் அறியாத பெண்ணின் வாழ்வை குலைத்து, அவள் மரணத்திற்கும் காரணமாகிப் போனேன். அதனால எனக்கு வாழ தகுதியே இல்லை. அண்ணனுக்கு சுயநினைவு திரும்பியதும் நான் மன்னிப்பு கேட்டதாக சொல்லுங்கள். என் தவறுகளை நீங்களும் முடிந்தால் மன்னித்து விடுங்கள்” என்று எழுதி வைத்துவிட்டு விஸ்கியில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டான்.

வாய்மை தானே வெல்லும்??
 
Back
Top