Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

14. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
சாருமதி ப்ரியரஞ்சனை அடுத்து பார்த்தது ஒரு ஓவியக் கண்காட்சியில். அநேகமாய் அவள் போகும் இடங்களில் தன்னை காட்டிக் கொண்டான். சில சமயம் அவளை கண்டும் காணாதவனாய் நடந்து கொண்டான். அவனைப் பார்த்தாலே அவள் முகம் பளிச்சென்று மலர்ந்த விதம் அவனுக்கு அடுத்த கட்டம் செல்ல உதவியது. நாலு நாட்கள் அவள் கண்ணிலேயே படவில்லை. ஆனால் அவள் இவன் கண்காணிப்பில் தான் இருந்தாள்!

அடுத்த நாள் கல்லூரியின் முன்னால் இருந்த காபி ஷாப்பில் அவள் வரும் நேரம் காத்திருந்தான் ப்ரியரஞ்சன். சாரு அவனை அங்கே பார்த்ததும் ஓடோடி வந்தாள்,

"ஐயோ நீங்கள் தானா சார்? என்றாள், கண்ணும் முகமும் பளபளக்க.

" ஏன் பேபி என்னை எதற்காவது தேடினாயா? என்றவன் முதலில் நீ உட்கார் பேபி, என்று அவளை அமரச் சொல்லவும் அவன் எதிரே அமர்ந்தாள்.

"அது.. அது இல்லை சார் , உங்கள் பெயர் கூட கேட்காமல் விட்டுடேன் . அதுதான் அடுத்த முறை உங்களப் பார்ப்பேனோ மாட்டேனோ என்று நினைத்தேன். பார்த்தால் ஞாபகமா பெயரை கேட்டுடனும்னு நினைச்சிட்டே வந்தேனா, நீங்களே இங்கேயே இருக்கிறீர்கள அதுதான் ஆச்சர்யம் ஆகிட்டது சார்"

"ம்,ம்.. நான் கூட ஒரு நிமிஷம் ரொம்ப சந்தோசப்பட்டுட்டேன் பேபி"என்றான் முகத்தை சோகமாய் வைத்தபடி.

"எ..என்ன.. சார்?என்றாள், குழப்பத்துடன்.

"நாமதான் இந்தப் பொண்ணையே நினைச்சிட்டு இருக்கோம்னு நினைச்சா, நம்மள இந்தப் பொண்ணும் நினைச்சிருக்காளேன்னு ஒரு செகண்ட் சந்தோசப்பட்டேன்.... ம்ஹூம்.... நீயானால் இல்லைன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டே பேபி" என்று ஏற்ற இறக்கத்துடன் சொல்ல...

சாருவிற்கு மனம் படபடத்தது.முகம் லேசாய் சிவக்க... "நிஜமாவா சார்? என்றாள் தடுமாற்றத்துடன்.

"பின்னே நான் என்ன பொய்யா சொல்றேன்? உன்னைப் பார்க்கத்தானே சென்னையில் இருந்து ஓடிவந்திருக்கேன். அதுவும் எதுக்காக இந்த ஷாப்பிற்கு வந்தேன் என்று நினைக்கிறாய்?? உனக்காகத்தான் பேபி"

அவன் வீசிய கணை சரியான இலக்கில் தாக்கிற்று. சாருமதிக்கு பேச்சு தடைபட்டது. இதயம் வேகமாய் அடித்துக்கொள்ள கனவா நனவா என்று இனிய குழப்பம். ஆண்களிடம் அதிகம் பேசி அறிந்திராதவளுக்கு அவன் சொல்வது மெய்யா பொய்யா என்று அறியும் வல்லமை இல்லை. அவன் முதலில் சொன்னதை ஜீரணிக்க முயன்று கொண்டிருக்க, அடுத்த கணையாக,"நிஜம் பேபி, என்னால் உன்னை மறக்க முடியவில்லை. அதனால்தான் போட்டது போட்டபடி ஓடிவந்தேன். உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும், பட் அதை இங்கே சொல்ல இஷ்டமில்லை. அதனால் நாளை கல்லூரி முடந்ததும் வேறு ஒரு இடத்தில் சந்திக்கலாமா? "உனக்கு விருப்பம் இல்லை என்றால் சொல்லிவிடு பேபி. நான் இனி உன் திசை பக்கம்கூட வரமாட்டேன்" ப்ரியரஞ்சன் சொல்ல கடைசி வரியில் சாருமதி சரணடைந்தாள்.

*******

மறுநாள்....

காரில் வந்து அவளை ஒரு பெரிய நட்சத்திர உணவு விடுதிக்கு அழைத்துப் போனான். அவளுக்கு அதுதான் முதல் முறை. பிரமிப்புடன் சிறுமி போல சுற்றிப் பார்த்தாள். அந்த அரை இருட்டில் ஓரமாய் இருந்த அந்த மேசை அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சாருமதிக்கு ஏதோ கனவு லோகத்திற்குள் நுழைவது போலிருந்தது. அவளை இளவரசியாக உணர வைத்தான் ப்ரியரஞ்சன். ரோஜா பூ ஒன்றை தந்து ஆங்கிலேய பாணியில் அவளை காதலிப்பதாகச் சொன்னான். அவளுக்கு மனமெங்கும் பரவசமாக இருந்த்து. அவன் பணத்தை தாரளமாய் செலவழித்ததைப் பார்த்து தனக்கு ஒளிமயமான வாழ்க்கை அமையப் போவதாக கனவு காணத்

தொடங்கினாள். பாடத்தில் கவனம் குறைந்தது. அவனையே நினைக்க வைத்தான். அடிக்கடி காரில் அழைத்துக் கொண்டு சுற்றினான். தொட்டு பேச மட்டும் அவள் அனுமதிக்க வில்லை. ஆதனால் அவனது நோக்கம் எளிதாக நிறைவேறவில்லை. மனதார காதலிப்பவனுக்கு காதலியுடன் இப்படி சுற்றுவது சுகமாக இருக்கும். அவனோ ஒரு நோக்கத்தோடல்லவா சுற்றுகிறான். தவிர அவனுக்கு தொடர்ந்து ஒரே இடத்தில் இருந்து பழக்கமில்லை. இங்கேதான் இரண்டு மாதம் தங்கிவிட்டான். ஆதனால் நாடகத்தை சீக்கிரமாய் முடிவிற்கு கொண்டுவர எண்ணி அவன் ஒரு திட்டம் போட்டான் அன்று தனக்கு பிறந்த நாள் என்று பொய் சொல்லி அவளை கல்லூரிக்கு மட்டம் போட வைத்தான் ப்ரியரஞ்சன். அன்று முழுதும் தன்னோடு அவள் இருக்க வேண்டும் என்று கேட்டிருந்தான். அவளும் சம்மதித்து அவனோடு சென்றாள்.

பெங்களூரில் எப்போது மழை பெய்யும் எப்போது வெய்யில் அடிக்கும் என்று கணிக்க முடியாது. வெய்யிலைப் பார்ப்பதே சில சமயம் அரிதான விஷயமும் கூட . அன்று காலையில் நல்ல வெயில்தான் அடித்துக் கொண்டிருந்தது.

ஆனால் பிற்பகலில் மழை வெளுத்து வாங்கத் தொடங்கியது. பூங்கா ஒன்றில் அமர்ந்திருந்த இருவரும் தெப்பலாய் நனையத் தொடங்கினர்....

தன் வாழ்க்கை அன்று திசை தப்பிய படகாய் மாறிப் போகும் என்று சாருமதி உணரவில்லை..
 
Back
Top