Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

13. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
ப்ரியரஞ்சன் யோசித்தபடியே அவளிடம் பேசினான். "பெங்களூரில் லிப்ட் கொடுத்தேன்தான். அதற்கு என்ன? என்றதும் சாருமதிக்கு முகம் கன்றிவிட்டது.

"அதற்கு ஒன்றுமில்லை சார். நாங்கள் கல்லூரி சுற்றுலாவிற்கு வந்தோம். நாளை மதுரைக்குப் போறோம். இங்கே உங்களைப் பார்த்ததும் சும்மா பேசலாமே என்று வந்தேன் சார். அவ்வளவுதான். ஓகே பை சார்" என்று விலகிச் சென்றவளை,

"நில்லு பேபி! நீ, சின்னப் பொண்ணு இப்படிலாம் தனியா இருக்கிற ஆண்கள்கிட்ட பேசக் கூடாது பேபி, யாராவது பார்த்தால் உன் எதிர்காலம்தான் கேள்விக்குறியாகிவிடும். உன் நல்லதற்குத்தான் சொல்றேன் ! பார்த்துப் போ"என்றான்.

பளிச்சென்று முகம் மலர,"ஓ! ஓ!நீங்கள் சொல்வது சரிதான் சார், ஆனால் நான் அப்படி எல்லாம் எளிதில் யாரிடமும் பேச மாட்டேன் சார். நீங்கள் அறிமுகம் ஆனவர் என்று தான் நான் பேச வந்தேன். ஒகே,பை சார் அங்கே என்னை தேடுவார்கள். நான் போகிறேன்" சாருமதி கிளம்ப,

"பை பேபி் கீதா"என்றவனிடம் "ஐயோ என் பேரு கீதா இல்லை சார், சாருமதி"என்றுவிட்டு வேகமாய் சென்று விட்டாள்.

விஷமப் புன்னகையோடு அவள் போவதை பார்த்திருந்தான் ப்ரியரஞ்சன்.

சாருமதி தானாக பேச வந்திருந்தால் அவனுக்குப் பெருமையாய் இருந்திருக்கும். ஏன் திருமண செய்யும் எண்ணமே இல்லாதிருந்தவன் அவளைப் பார்த்த கணத்தில் மெய்மறந்து இப்படி ஒருத்தி அவனுக்காகவே கிடைத்தால் வாழ்நாள் எல்லாம் சொர்க்கம் தான் என்று எண்ணினான். மனித மனம் நொடியில் கற்பனையில் சஞ்சரிக்கும் வல்லமை படைத்தது அல்லவா? பெண்களை பொழுது போக்காய் எண்ணியவனுக்கே கூட அவளை கண்டதும் துணையாய் ஏற்றுக் கொள்ளும் ஆசை வந்தது விசித்திரம்தானே??

ஆனால் வந்தவளோ அண்ணனுக்கு ஏற்கனவே அறிமுகமானவள் என்று அறிந்ததும் அவனுக்கு பெருத்த ஏமாற்றம். அதனாலேயே அவனுக்கு சாருவிடம் வெறுப்பு உண்டாயிற்று. இப்போதும் அவள் அண்ணனின் நினைவில் தானே அவனிடம் பேச வந்திருக்கிறாள் என்று உள்ளூர கடுப்புதான். உண்மையில் அந்த உருவ ஒற்றுமை அவனுக்கு எத்தனையோ தருணத்தில் அனுகூலமாக இருந்த போதும் பல சமயங்களில் பாதகமாகத்தான் இருந்திருக்கிறது. அதனாலேயே அதையும் வெறுத்தான். இப்போதும்கூட, அவனுக்கு சித்ரஞ்சன் மீதுதான் ஆத்திரம். ஏதோ அவனுக்கு கிடைக்க இருந்தவளை சித்ரஞ்சன் பறித்துவிட்டதாக எண்ணம். அவனைப் பழிவாங்க சாருமதி பகடையானாள்.

சிறு வயது முதலே எதிலும் அவன் முதலாக இருக்க வேண்டும் . இரண்டாவதாய் பிறந்ததையே அவனால் ஏற்க முடியவில்லை. காரணம் சித்ரஞ்சன் வீட்டின் முதல் வாரிசு என்று நிறைய சலுகைகள் கிடைக்கப் பெற்றான். அவன் உபயோகித்தது இவனுக்கு வந்ததை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் பாட்டியிடம் அவனுக்குத்தான் எதிலும் முதல் இடம் கிடைத்தது. அதனாலேயே அவனுக்கு பெற்றவளை விட பாட்டிதான் பிடிக்கும். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் காழ்ப்புணர்ச்சியை எண்ணெய் வார்த்து வளர்த்துவிட வீட்டில் இருக்கும் ஒரு சில பெரியவர்களால் தான் தங்கள் எதிர்காலத்தை பாழாக்கி உறவுகளிலும் விரிசல்களும் உண்டாகிறது.

சாருமதி சென்ற ஊர்களுக்கு ப்ரியரஞ்சன் பின் தொடர்ந்தான். அவன் இது போல எல்லாம் போய் பழக்கம் இல்லை. பொதுவாக அவனது பணத்திற்காக வரும் பெண்களே அதிகம். அதிலும் இந்த சாரு ரொம்பவே வித்தியாசமாய் அவனை கவர்ந்தாள். அழகான பல பெண்களிடம் ஒரு கர்வம் ஆணவத்தை பார்த்தே பழகியிருந்தவனுக்கு அவள் புதிதாய் தெரிந்தாள். சாருவோ அவன் பின் தொடர்வதை அறியவேயில்லை. பெங்களூருக்கு திரும்பிய பிறகு சாருவை அவளது கல்லூரி விடும் சமயத்தில் ஏதேட்சையாகப் போவது போல சந்தித்த போது அவள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

பின்னர் ஒரேடியாக அழப்போவதை அந்தப் பேதை அறியவில்லை.
 
Back
Top