Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

12. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
சாருவிடம் விளக்கம் கேட்க எண்ணி சித்ரஞ்சன் தனியறைக்கு அழைத்துப் பேசினான். அவளோ அவனை குற்றம் சாட்டினாள். அதை அவன் மறுக்க ஆதாரம் கேட்டாள் சாரு, எப்படி அவளை நம்பச் செய்வது என்று யோசனையுடன் அறையின் குறுக்கே நடந்தவன் ஆளுயரக் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை கண்டதும் அவளை அழைத்துக் காட்டினான்.

ஆனால்...

அவனருகே தன்னை சேர்த்து பார்த்த சாரு, வார்த்தை வராமல் தடுமாற, சித்ரஞ்சனுக்கும் சுற்றுப்புறம் மறந்து இருவர் மட்டும்மே கருத்தில் பதிய பேச்சற்று நின்றான். சுவர்க்கடிகாரம் ஓசை எழுப்ப தன்னிலை உணர்ந்த சாரு,"இங்கே எதை காட்ட அழைத்தீர்கள் ?" என்றாள் கரகரத்த குரலை செருமி சரிசெய்தபடி.

அவனுக்கும் கூட குரல் தகராறு செய்ய, "என்னைப் போல என் தம்பியும் இருப்பான் என்பதை இப்போது கண்ணாடி பார்த்ததும் தான் நினைவிற்கு வந்தது லதா! நாங்கள் ரெட்டையர்கள் அல்ல என்னை விட இரண்டு வயது சின்னவன். ஆனால் இரட்டையர்களாத் தான் தெரிவோம். வீட்டில் அம்மாவே குழம்பி விடுவார்கள். குழப்புவதில் தம்பி ரொம்ப கைதேர்ந்தவன்" ஒருவாறு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு உணர்ச்சியற்ற குரலில் உரைத்தான்

சாருவிற்கு நம்ப கடினமாக இருந்தது. அவள் அவனிடம் சொல்லியிருந்தது போல அவன் சகோதரன் பற்றி சொல்லியிருக்கவில்லை. தான் தப்பிக்க பொய் சொல்கிறானோ என்று உறுத்தலாக இருந்தது. அவனிடம் கேட்க தயங்கினாள். தேவையின்றி சந்தேகப் படுகிறோமோ என்றும் நினைத்தாள். இவ்வளவிற்கு கைக்கு எட்டும் தூரத்தில் வந்து விட்ட வாழ்கையை விட்டுவிடவும் அவள் தயாரில்லை. அதே சமயம்,உண்மை அறியாமலும் அவளால் நிம்மதியாக இருக்க முடியாது.

அவளது மனதை ஊகித்தவனாய்,"புரிகிறது லதா எனக்கொரு தம்பி இருக்கிறான் என்று என்னால் எப்போதுமே பெருமையாக வெளியே சொல்லிக் கொள்ளும்படியாக அவன் நடந்து கொண்டதில்லை. அதிலும் என் பெயரை சொல்லி என்னை மாட்டிவிட்டு அவன் தப்பித்துக் கொள்வது அவனுக்கு வழக்கம். அதனாலேயே நான் அவனிடமிருந்து விலகி இருந்தேன். எனக்கு அப்பா அம்மாவை பெருமைப்படுத்த வேண்டும் என்ற ஆசை. அதை செயல்படுத்தவும் செய்தேன். அவனை விட்டு ஒரேடியாய் விலகும் முயற்சியில் தான் நான் பெங்களூர் வந்தேன். எல்லாமும் கூடிவந்து நான் அது சம்பந்தமாக வெளி நாடு சென்றேன். ஆனால் விதி சதி செய்துவிட்டது" என்று ஒரு பெருமூச்சுடன் சித்ரஞ்சன் நிறுத்தினான்.

லதாவிற்கும் வருத்தமாக இருந்தது. ஆனால் அவள் இழப்பும் அன்று பட்ட வலியும் அவமானமும் இல்லை என்றாகிவிடுமா? இன்னமும் அவனுக்கு தம்பி இருக்கிறான்” என்று ஆதரத்துடன் அவன் நிரூபித்து விடவில்லை தான். மேலும் அவன் பொய் சொல்வதாகவும் தெரியவில்லை.

சித்ரஞ்சன் தொடர்ந்து, "உனக்கு காட்ட இப்போ என்கிட்ட ஆதாரம் ஏதும் இல்லை லதா. காரணம் தம்பி இப்போது உயிருடன் இல்லை”என்றதும் லதா அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

“அப்போது எனக்கு விபத்து நேர்ந்து வீட்டோடு இருந்தேன். அவனுக்கு சாருமதி நியாயம் கேட்டு வராமல் ஒரேடியாக காணாமல் போனதும் அவளை பற்றி அறிந்து கொள்ள முயன்று அவளது இறப்பு பற்றி தெரிந்திருக்க வேண்டும். அந்த குற்ற உணர்ச்சி காரணமாகத் தான் அவன் அந்த முடிவை எடுத்திருக்கிறான் என்று இப்போது புரிகிறது என்ற சித்தரஞ்சன் வருத்தமான குரலில்,தொடர்ந்து,

"ஹூம்... அவன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டான்..ம்ம்... இப்போதுதான் அவன் அதில் குறிப்பிட்ட உலகம் அறியாத பெண் யார் என்று விளங்குகிறது. அவன் கோழை அல்ல. தோல்வியை எப்போதும் தாங்கிக்கொள்ள மாட்டான், உல்லாசமாக இருப்பான். என்னை வீட்டில் புகழ்வது அவனுக்கு பிடிக்காது. அதனாலேயே என்னையும் பிடிக்காமல் போய்விட்டது. இயல்பில் அவன் கெட்டவன் இல்லை. தாத்தா பாட்டி அவனுக்கு வைத்துவிட்டுப் போன அதிக பணம் காரணமாக அவன் அப்படி ஆகிவிட்டான்” என்றான் ஒரு பெருமூச்சுடன்

ஒருவரின் இழப்பில் நிம்மதியோ, மகிழ்ச்சியோ அடைவது தவறு என்ற உணர்ந்திருந்த போதும் தங்கைக்கு செய்த அநியாயத்திற்கு பிரியரஞ்சன் தன்னை அழித்து நியாயம் செய்துவிட்டதாக சாருமதிக்கு தோன்றியது.


&&&

ப்ரியரஞ்சன்,பெயரில் ப்ரியத்தை வைத்து விட்டதாலோ

என்னவோ மனதில் பிரியமே இல்லாமல் இருந்தான். பெற்றவர்களுக்கு எந்த நேரம் அவன் எந்த பிரச்சனையோடு வருவான் என்ற கவலைதான் தினம் தினம்!

அதிலும் பாரில் குடித்துவிட்டு ரகளை செய்து அடிதடி என்று சேதம் செய்வது அவனது பொழுது போக்காகவே மாறிப்போயிற்று. அளவில்லா சொத்து தந்த தைரியம். அவன் பிறந்தபின் இரண்டு வருடம் கழித்து மீண்டும் கருவுற்று அது கலைந்து போனதில் உடல் நிலை கொஞ்சம் சரியில்லாமல் இருந்தாள் அன்னை கருணாகரி. அதனால் அவனை தந்தை வழிப் பாட்டி மரகதம், தான் கவனித்துக் கொள்வதாக பொறுப்பேற்றுக் கொண்டார். சித்ரஞ்சன் அவரிடம் ஒட்டவே இல்லை. அதற்கு நேர்மாறாக சின்னவன் பாட்டி செல்லம் ஆனான். அவன் கேட்டது கிடைத்துவிடும். கண்டிப்பு என்பது பெயருக்கு கூட இல்லை. ஒரு அளவிற்கு மேல் அவன் பிடிவாதமும் கோபமும் கூடிக் கொண்டே போயிற்று. போதாக்குறைக்கு பாட்டி தாத்தாவின் தாராளமான பணம் வேறு, இப்படியே விட்டால் மகன் கெட்டுப் போவான் என்று எண்ணிய தந்தை பிரபஞ்சன் அவனை வெளியூரில் விடுதியில் சேர்த்து படிக்க அனுப்பினார். அங்கே அவனுக்கு பெற்றோர் அறியாமல் பணம் அனுப்பி வைத்தனர் தாத்தா பாட்டி வேறு! கெட்ட சகவாசமும் உண்டாகிவிட அவன் இன்னமும் கட்டுக்கு அடங்காமல் போனான். படிப்பில் மட்டும் அவன் சோடை போகவில்லை. காரணம் எதிலும் அவனுக்கு தோற்க பிடிக்காது. தோல்வி உண்டானால் அவன் மதம் கொண்ட யானையாய் மாறி விடுவான். அல்லது அதில் சித்ரஞ்சனை மாட்டிவிட்டு அவன் தப்பித்துக்கொள்வான். சின்னவனின் கவனம் இளம் பெண்களிடம் தாவியிருந்தது. அவன் கோடீஸ்வரன் எனபதாலேயே பல பெண்கள் அவனைச் சுற்றத்தான் செய்தார்கள்.

அதற்கு நேர்மாறாக சித்ரஞ்சன் பெண்கள் என்றால் அரைகாத தூரம் விலகிப் போனான். அப்படியும் ஓரிரண்டு பெண்கள் சித்ரஞ்சன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் கொடுத்தார்கள். அந்தப் பெண்கள் தம்பியிடம் பணம் வாங்கிக் கொண்டு அப்படி சொன்னார்கள் என்று அப்புறமாய் விசாரிக்கையில் தெரிய வந்தது.

சித்ரஞ்சன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். அதன்பின் தன் நடை உடை பாவனைகளில் அதிக கவனம் செலுத்தி தனக்கென ஒரு அடையளத்தை வகுத்துக் கொண்டு தொழிலே கதியாக ஒதுங்கிவிட்டான். அதனால் ப்ரியரஞ்சன் சகோதரனை மாட்டிவிடுவது குறைந்து போயிற்று.

மாதம் பத்து நாட்கள் ப்ரியரஞ்சன் ஊரில் இருக்க மாட்டான். அந்த சமயங்களில் அவன் கேட்கும் பணத்தை வங்கியில் போட்டுவிட்டு நிம்மதியாக இருப்பார் தந்தை பிரபஞ்சன். அப்படித்தான் சித்ரஞ்சன் வெளிநாடு கிளம்பிய நேரத்தில் சின்னவன் ஊர்சுற்ற தென்மாவட்டங்களுக்கு கிளம்பியிருந்தான்.

அதே சமயத்தில் தான் சாருலதாவின் தங்கை சாருமதியும் கல்லூரி மாணவிகளுடன் சுற்றுலாவிற்கு கிளம்பியிருந்தாள். கட்டிடக்கலை படிக்கும் மாணவிகள் என்பதால் மாமல்லபுரம் தஞ்சை, மதுரை போன்ற சிற்பக்கலைக்கும் கட்டிடக்கலைக்கு பேர் பெற்ற இடங்களுக்கு சென்றிருந்தனர்.

தஞ்சையில் தான் சாருமதி, ப்ரியரஞ்சனைப் பார்த்தாள். கொஞ்சம் ஸ்டைலாக இருந்தான். ( அவள் சந்தித்தது சித்ரஞ்சனை) முன்பு பார்த்ததை விட இன்று அவளுக்கு அழகாய் தெரிந்தான். அன்று முதல் பார்வையில் பிடித்திருந்தாலும் அவன் பிடி கொடாது பேசிவிட்டுப் போனதிலும் அன்றைய தேர்வு பரபரப்பிலும் அதற்கு பிறகான இந்த சுற்றுலா பேச்சிலுமாக அவனை சுத்தமாக மறந்தே விட்டிருந்தாள். இப்போது அவனது தோற்றத்திலும் அடிக்கடி அவர்கள் புறமாய் ஓடிய பார்வையிலுமாக திடம் பெற்றவளாய் தோழிகளிடம் கூட சொல்லாமல் அவன் புறமாய் சென்றாள். அவன் தனியாகத்தான் அமர்ந்திருந்தான்.

"ஹலோ சார்" என்றாள் சாருமதி. ஏற்கனவே அறிமுகமானவன் என்ற தைரியத்தில்!

"ஹூ? மீ? என்றான் கீழ்க்கண்களால் அவளை அளந்தவாறு.

"யா! என்னை நியாபகமில்லையா சார்? "என்றாள் புன்னகையோடு. அது அவனை வசீகரித்திட....

சுவாரஸ்யம் உண்டாகி, "நாம மீட் பண்ணிருக்கோமா? இஸிட்? ஐ, குட்னாட் ரிமெம்பர் யூ பேபி?" என்றான்

"ஓ மை காட் ! பெங்களூர்ல எனக்கு எக்ஸாம் ஹாலுக்கு போக லிப்ட் கொடுத்தீங்களே சார்? மறந்துட்டீங்களா? என்றாள்.

"ஓ! பெங்களூர்" என்றவன் சுதாரித்தான். ஓஹோ அண்ணாத்தை ஊருக்குள்ளதான் சாமியார் போல? வெளியூர்ல கட்டுபாடெல்லாம் இல்லையோ? லட்டு போல பிகரை பிக்கப் பண்ணிருக்கானே? ஆனால் இன்னும் பிள்ளையார்சுழி கூட போடலை போலிருக்கே? நாம காவியமே பாடிவிடுவோம். வலிய வர்றத விடலாமா? என்ன கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். நாம மாட்டிக்கவே கூடாது. மவனே சாமியார் வேஷமா போடுறே? உனக்கு வைக்கிறேன்டா ஆப்பு! மனதுக்குள் அவசரமாக கணக்கும் போட்டு திட்டமும் தீட்டினான்.

அது ஏதும் அறியாமல் அவன் வலையில் விழுந்தாள் அந்தச் சின்னப் பெண்.!

 
Back
Top