Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

11. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
சாரு, ஒருபுறம் தன் வேதனையில் கிடக்க,சித்ரஞ்சன் ஒருபுறம் வேதனையும் தவிப்புமாய் யோசனையில் இருந்தான். முந்தைய தினம் அவனுக்கு ஒரு சில விஷயங்கள் தெளிவாகிவிட்டிருந்தது. சாரு, அவனை மறக்கவில்லை. மருத்துவமனையில் அது அவனுக்கு தெளிவு. பெயர் மாற்றத்திற்கும் காரணம்கூட இருக்கலாம். அவளே சொல்லும் சமயம் வந்துவிட்டது. இன்னமும் ஒரு விஷயம் அங்குதான் அவனுக்கு உறுதி தேவைப்பட்டது. அது மட்டும் தெரிந்து விட்டால் அவனுக்கு பூரண நிம்மதி கிடைத்துவிடும். அதையும் அவள்தான் தெளிவு படுத்த வேண்டும். ஆனால் இத்தனை ஆத்திரம் கொள்ள என்ன காரணம்?

குழந்தை மஞ்சரி தோட்டத்தில் வண்ணத்துப் பூச்சிக்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்தாள், அவளுக்கும் தான் அப்பா யார் என்று சொல்லப்படவில்லை. அவன் யோசித்தபடியே குழந்தையை பார்த்திருக்க பணிப் பெண் வந்து காலை உணவிற்கு அழைத்தாள்.

சாருவிற்கு அவளது சாப்பாட்டை அறைக்கே கொண்டுபோய் கொடுக்கச் சொல்லிவிட்டு மஞ்சரியுடன் சாப்பாட்டு அறைக்கு சென்றான் சித்ரஞ்சன். அவள் இப்போது இருக்கும் மனநிலையில் சாப்பிட அழைத்தால் வரமாட்டாள், முன்தினமும் சரியாய் சாப்பிட்டிருக்கமாட்டாள் என்று அவனுக்கு தோன்றியது.

சாருவிற்கும் நல்ல பசிதான். ஆனால் அவனை சந்திப்பதை அவள் விரும்பவில்லை. வேலைக்காரிக்கு நன்றி சொன்ன போது அவள் விஷயத்தை சொன்னாள்! அவனுக்கு அவளிடம் அக்கறை இருப்பது மருத்துவமனையில் அவள் உணர்ந்திருந்தாலும் இதை எதிர்பார்க்கவில்லை.

குழந்தை மஞ்சரி சித்ரஞ்சனிடம் சமத்தாய் சாப்பிட்டாள். அம்மாவைத் தேடியவளிடம் "அம்மாவிற்கு கொஞ்சம் ஜுரம் அதனால் அவளை தொந்தரவு செய்யக் கூடாது என்று சொல்லி மகிளாவுடன் காரில் வெளியேசுற்றிபார்க்க அனுப்பி விட்டு சித்ரஞ்சன் சாருவை அழைத்து வருமாறு அடுத்த பணியாளிடம் பணித்தான்.

யாருக்கும் அவர்கள் பேச்சு கேட்காத வகையில் கீழே இருந்த கோடி அறையில் காத்திருந்தான். அவள் அநேகமாக ஆத்திரத்தில் வரமாட்டாள் என்றே எண்ணியிருந்தான். ஆனால் அவளுக்கும் தான் பேசிவிட்டால் கொஞ்சமேனும் பாரம் தீரும் என்று இருந்ததால் உடனேயே வந்து விட்டாள்!

அறைக்குள் அவள் நுழைய கதவைத் தாழிட்டு அவளுக்கு ஒரு இருக்கையை காட்டிவிட்டு தானும் ஒரு இருக்கையில் அமர்ந்தான் சித்ரஞ்சன்.

சற்று நேரம் மௌனம் நிலவியது. ஆத்திரத்தில் இருந்தவளால் பொறுக்க முடியவில்லை.

"சொல்லுங்கள் ரஞ்சன் ஏன் அப்படி செய்தீர்கள்? என்னை எதற்காக நம்ப வைத்து மோசம் செய்தீர்கள். வெளிநாடு போவதாக ஏன் பொய் சொன்னீர்கள்? என் மனதில் கனவுகளை வளர்த்துவிட்டு .. கடைசியில் இப்படி பண்ணிவிட்டீர்களே?? கண்ணில் நீரும் உள்ளத்தில் வேதனையும் வார்த்தையில் கனலுமாய் சாரு, பேச பேச அதிர்ந்துபோனான் சித்ரஞ்சன்.

"இதென்ன அநியாயக் குற்றச்சாட்டு? என்ன பேசுகிறாய் என்று புரிந்துதான் பேசுகிறாயா? நான் உன்னை ஏன் மோசம் செய்ய வேண்டும்? இந்த நிமிடம் வரையிலும் என் உயிர் இருக்கிறது என்றால் அது உனக்காகத்தான். உன்னை நான் தேடாத இடமில்லை. திடுமென உன்னை சென்னையில் பார்த்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனால் பெயர் மாற்றத்தினால் உன்னிடம் நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் நான் பட்ட அவஸ்த்தை எனக்குத்தான் தெரியும். நான் வெளிநாடு போகவில்லை என்று யார் சொன்னது? நான் அங்கே போன இரண்டாம் நாளே எனக்கு விபத்து ஏற்பட்டு காலில் இந்த ஊனம் உண்டாயிற்று" அந்த நினைவில் பேச்சை ஒருகணம் நிறத்த,

சாரு, குழப்பத்துடன் அவனை நம்பாத பார்வையுடன் பார்த்தாள்.

"நம்பிக்கை இல்லையா? விபத்துக்கு அப்புறமாய் நான் பழையை நினைவுகளயும் இழந்துவிட்டேன். அந்த நிலையில் தான் அப்பா என்னை இந்தியா அழைத்துவந்தார். வீட்டில் நான்கு சுவருக்குள் ஆறுமாதங்கள் வரை இருந்தேன் அப்புறமும் இந்த ஊனம் காரணமாய் நான் வெளி உலகையே வெறுத்துக் கிடந்தேன். என் அப்பாதான் எனக்கு ஒரு நண்பனாக இருந்து என்னை மறுபடியும் மனிதனாக மாற்றினார். நான் அப்புறமாக உன்னை தேடத் தொடங்கியபோது கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலே ஆகியிருந்தது. அதுவும் ரகசியாமாய்.... குரல் கரகரக்க அவன் சொல்ல

"ரஞ்சன் அப்படியானால் என் சாருவின் வாழ்வை பாழாக்கியது யார்? ஆனால் உங்கள் விசிட்டிங் கார்டுதான் அவள் பெட்டியில் தேடியபோது கிடைத்தது" என்றவளின் குரலில் இப்போது ஆத்திரம் மறைந்து குழப்பம் கூடியிருந்தது.

"என்னது என் கார்ட்டா? எப்படி ? ஆங்.. உனக்கொரு தங்கை இருப்பதாகச் சொன்னாயல்லவா? அது இப்பொழுது தான் நினைவு வருகிறது . அவள் பெயர்தான் சாருமதி இல்லையா? அவளை நான் பார்த்தது கூட இல்லையே லதா? கருப்பா சிகப்பா கட்டையா? நெட்டையா? எதுவும் தெரியாமல் அவள் வாழ்வை நான் எப்படி பாழாக்க முடியும்?

"இல்லை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் ரஞ்சன்" என்றாள் அழுத்தமாக.

"No,way! லதா! நான் விரும்பிப் பார்த்தது உன்னைத்தான் லதா" என்று மறுத்தான்.

"அன்று பரீட்சை ஹாலுக்கு லிப்ட் கொடுத்தது அவளுக்குத்தான், எனக்கில்லை. அதுவும் எனக்கு பின்னால் அவளது டயரியில் தான் தெரிந்தது.

"நாங்கள் இரட்டையர்கள்" என்றாள் லதா என்கிற சாருலதா இறுகிய குரலில்.

ஓ! "என்று வியந்த சித்ரஞ்சனுக்கு இப்போது மறுபடியும் குழப்பமாகிவிட்டது. அப்படி என்றால் அன்று பசங்க துரத்திட்டு வந்தது யாரை?? என்று யோசிக்கையிலேயே அவனுக்கு விடை கிடைத்துவிட்டது. அன்றைக்கு முன் பின் அறியாதவளாய் நடந்துகொண்டது நினைவிற்கு வந்தது. அன்று தான் இருவருக்குமே முதல் சந்திப்பு என்று புரிந்தது. சாருமதி, சாருலதா இருவருக்கும் இருந்த உருவ ஒற்றுமையால் நேர்ந்த குழப்பம் என்றாலும் அவன் மனதில் உண்டான அன்பிற்கு எதிரொலி தந்தவள் லதாதான். அவன் தன் மனதை வெளிப்படுத்தியதும் அவளிடம்தான். அதில் அவனுக்கு குழப்பமில்லை. ஆனால் சாருமதியின் வாழ்க்கை அவனால் பாழாயிற்று என்பதுதான் குழப்பமாக இருந்தது. எழுந்து அறையின் குறக்கே யோசனையுடன் நடந்தவன அங்கே இருந்த பீரோவின் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்து அப்படியே ஒருகணம் அசைவற்று நின்றுவிட்டான்.

இவ்வளவு சீரியஸான விஷயம் பேசுகையில் இவனுக்கு அழகு பார்க்க தோனுகிறாதா என்று உள்ளூர எரிச்சலுற்ற சாருலதா,"எனக்கு பதில் சொல்லுங்க ரஞ்சன்" என்றாள் பொறுமை இழந்தவளாய். .

"இங்கே வா லதா"என்றழைத்து கண்ணாடியை காட்டினான். அவளும் பார்த்தாள். அருகருகே ஜோடியாய் பார்த்தவளுக்கு ஒருகணம் பேச்சே எழவில்லை. அவனுக்கும் அதற்கு மேல் பேச்சு நின்று போயிற்று. இருவருமே கண்ணாடியில் மற்றவரைத்தான் பார்த்திருந்தனர்.
 
Back
Top