Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

10. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
26
Points
28
Location
India
வருண் தன் வருங்கால மனைவி மகதியை பற்றியும் அவளது தோழியைப் பற்றியும் சொல்ல சொல்ல சக்திக்கு ஏதோ சினிமா கதை போலிருந்தது. ஆனாலும் ஆவல் மட்டும் கூடிக்கொண்டே போயிற்று. ஆகவே, "அந்தப் பெண் இப்போது எங்கே இருக்கிறாள் என்று தெரிவித்தாளா? என்று கேட்டான்

"மகி, எவ்வளவோ கேட்டும் அவள் அதை சொல்லவில்லை. மூன்று மாதங்களுக்குப் பிறகு மகியின் முகநூல் பக்கத்தை பார்த்து விட்டு அழைத்ததாக சொன்னாளாம். அவளுக்கு மகியை தவிர வேறு சினேகிதியே இல்லை அண்ணா"

"எப்போதும் நாங்கள் சந்திக்கும் பொழுது மகி அவள் தோழியைப் பற்றித்தான் அதிகம் பேசுவாள். அவள் அத்தனை அழகு. அவள் வீட்டில் அவளை தனியே எங்கும் அனுப்புவது கிடையாது. கல்லூரியில்கூட அவள் ரொம்ப அமைதி. சக மாணவர்கள் கூட அவளிடம் மரியாதையோடு தான் பழகுவார்கள். இப்படி நிறைய எனக்கே மனப்பாடம் ஆகிவிட்டதென்றால் பாருங்களேன்" என்று வருண் சிரித்தபோது அதில் சிறு பொறாமை தெரிந்தது.

"இந்தக் காலத்தில் இப்படி ஒரு பெண்ணா? அவள் புகைப்படம் இருந்தால் காட்டப்பா. அந்த அதிசயப் பெண்ணை நானும் பார்க்கிறேன்".

"எங்கே அண்ணா? எனக்கும் மகி அவளைப் பத்தி சொல்ல சொல்ல பார்க்கவேண்டும் என்று தோன்றியது. மகியிடம் கேட்டால் அதற்கு ஒருகதை. அவர்கள் வீட்டில் பெண்ண பொத்தி பொத்தி வளர்த்தார்கள். அவள் விரும்பி விட்டாள் என்று வேறு வழியின்றி மருத்துவம் பயில அனுமதித்திருக்கிறார்கள். நான் கூட கேட்டேன், டாக்டர் படித்துவிட்டு அவள் இப்படி மறைந்து வாழ்ந்தால் அவளது படிப்பு வீண்தானே என்று? திருமணம் வரை தான் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம். அப்புறம் அவள் கணவன் பொறுப்பு. இதில் உச்சகட்டம் என்னவென்றால் அவள் வடக்கத்திய பெண்களை போல தலையில் முக்காடு அணிந்துதான் கல்லூரிக்கு வருவாளாம். பெற்றோர் சொல்லை அப்படியே கடைப்பிடிப்பாளாம்.

அவளிடம் பழைய மாடல் Basic Cell தான் இருக்கிறதாம். இத்தனைக்கும் அவள் நல்ல வசதியானவர் வீட்டுப்பெண். மகிக்கு அவளிடம் ஒருவித பிரமிப்பு. ஆனால் எனக்கென்னவோ மகியிடம் அவள் படம் நிச்சயமாக இருக்கிறது. அதை யாரிடமும் காட்ட மாட்டேன் என்று தோழிக்கு சத்தியம் செய்து கொடுத்திருப்பாள் என்று ஒரு யூகம் அண்ணா".

சக்திக்கே அவளை பார்க்கவேண்டும் என்று மிகுந்த ஆவல் உண்டாயிற்று. வருணின் யூகம்தான் சக்திக்கும் தோன்றியது. புகைப்படம் கூட இல்லாமல் எப்படி? அதுவும் அவனவன் கையில் கேமரா செல்லோடு அலைகிற காலம் இது. அவன் எத்தனையோ பேரழகு பெண்களை பார்த்து இருக்கிறான், என்றாலும் நிரஞ்சனா தான் அவனை மிகவும் கவர்ந்தவள்.

இனி எத்தனை எத்தனை பேரழகு பெண்கள் வந்தாலும் அவளுக்கு நிகராக எவரும் இருக்க மாட்டார்கள். ஒருகணமே என்றாலும் முதல் முதலாக நிகழ்ந்த நான்கு விழிகளின் சங்கமம் என்றைக்கும் மறக்காதே. இன்னும் இந்த பெண்ணின் பெயரை வருண் குறிப்பிடாதது நினைவுக்கு வந்தது.

"எதுவும் நம்பும்படியாக இல்லை தம்பி. ஆனாலும் சாட்சியாய் உன் வருங்கால மனைவி இருப்பதால் அதை பொய் என்றும் ஒதுக்க முடியாது. பேரழகி என்றால் அவளுக்கு பெயர் என்று ஒன்று இருக்கும்தானே? அதை நீ சொல்லவே இல்லையே? "

"அவள் பெயர் அபரஞ்சி என்று சொன்னதாக நினைவு. அபி என்று தான் குறிப்பிடுவாள்".

சக்திக்கு சட்டென்று அன்றைக்கு பார்த்த பத்திரிகை நினைவிற்கு வந்தது. அப்போது நினைவு வராத ஒன்று இப்போது நினைவிற்கு வந்தது. "ம்ம்...அழகான பெயர். ஒருவேளை பொருத்தம் என்று வைத்திருக்கலாம்.

ஆனால் இது பழைய காலத்து பெயர். சொல்லப் போனால் என் பாட்டி பெயர்கூட இதுதான்." என்ற சக்தி சட்டென்று நகைத்தான்.

வருண் புரியாமல் என்ன என்பது போல நோக்க, பொங்கிய சிரிப்பை அடக்கி "உன் மகிதான் அபரஞ்சி புராணம் பாடுவாள் என்றுவிட்டு இப்போது நீயும் கூட அவளைப் பற்றிதான் அதிகம் சொல்லியிருக்கிறாய், எனவும் லேசாக புன்னகைத்து அசடு வழிந்தான் சின்னவன்.

"சரி, அண்ணா நீங்க ஓய்வு எடுங்கள். மதியம் சாப்பாட்டுக்கு பிறகு வண்டி ஏற்பாடு செய்து கொடுக்கிறேன். நீங்கள் கொஞ்சம் ஊரை சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்." என்றுவிட்டு வருண் கிளம்பிச் செல்ல.. மெத்தையில் படுத்தவனுக்கு உறக்கம் வரவில்லை.

இன்றைக்கு பெண்கள் நாகரீகம் என்று பெயரில் விதவிதமாக உடை அணிந்து வலம் வருகிற காலத்தில் எப்படி சாத்தியம்? அதிலும் அழகான பெண்கள் தங்களை மறைக்க முற்படுவதில்லை. அவனுக்கு யோசனை ஓடும்போதே ஏதோ பொறி தட்ட...விலுக்கென்று எழுந்து அமர்ந்தான் சக்தி சுந்தரம். அப்படி இருக்குமோ???

அவன் மனம் பரபரத்து......

ஆனால். ...
 

Attachments

  • IMG-20220111-WA0024.jpg
    IMG-20220111-WA0024.jpg
    86.6 KB · Views: 0
Back
Top