Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

10. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
128
Reaction score
23
Points
18
Location
India
மறுநாள் காலையில்..

மாணிக்கம் தனி அறைக்கு மாற்றப்பட்டார். கையில் உள்ள காயம் கூட விரைவில் ஆறிவிடும் என்று மருத்துவர் நம்பிக்கை தெரிவித்தார். மதுவந்திக்கு ஆறுதலாக இருந்தது.

அன்று மதியம்....

மாணிகத்தின் முதலாளி நலம் விசாரிக்க வந்திருந்தார். முதலாளிக்கு குளிர்பானம் வாங்கிவரச் சென்ற இடத்தில் சற்று தாமதமாகிவிட்டது. அவள் திரும்பிய போது தந்தை நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்த காட்சியைத் தான் கண்டாள். முதலாளியைக் காணவில்லை. மறுபடியும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றினார்கள்!

நடந்தது இதுதான்,"நலம் விசாரிக்க வந்த முதலாளி, சிகிச்சை முடிந்து திரும்ப எழுந்து நடப்பதற்கு வெகு நாட்கள் ஆகக்கூடும். அதுவரை அவருடைய கடை காத்திருக்க முடியாது. என்றும் கணக்கு பார்த்து அவருக்கு சேர வேண்டியதை அனுப்புவதாக சொல்லியிருக்கிறார். மாணிக்கத்திற்கு அது பெரும் அதிர்ச்சி,வாழ்வாதாரமே இல்லை என்றால் இத்தனை வயதிற்கு பிறகு அவரால் என்ன செய்ய இயலும்?

எவ்வளவு எடுத்து சொல்லியும் முதலாளி ஏற்காமல் கிளம்பிவிட...உலகை நொடியில் வலம் வரும் மனது செய்த பயங்கர கற்பனையில் உடல்நிலை மோசமாகிப் போயிற்று!

முதலாளி பணத்தை அனுப்பிய ஆள் மூலமாக பின்னர் மதுவந்தி அறிந்து உணர்ந்தவை இது. மதுவந்தி கவலையில் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தாள். சரளா மட்டுமாக சாப்பாட்டுக் கூடையுடன் வந்து சேர்ந்தாள். விவரம் அறிந்தவள் "அடக் கடவுளே இது என்ன சோதனை?? என்று அவள் புலம்ப ஆரம்பிக்க..

"ஏம்மா இது I.C.U வார்டு இங்கே இப்படிலாம் சத்தம் போடக்கூடாது". என்று அதட்டிவிட்டுப் போனாள் நர்ஸ்.

சரளா எழுந்து வெளியே சென்றாள், சற்று நேரத்தில் மருதமுத்துவும் வந்து சேர்ந்தான். சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. நர்ஸ்கள் பதற்றமாய் போக வர இருந்தனர். மதுவந்திக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது. உட்காரக்கூட இயலவில்லை. சற்று நேரத்தில் வெளியே வந்த மருத்துவரின் பார்வையில் பச்சாதாபம் தெரிந்தது. ஆவலாய் அவரை ஏறிட்டாள் மதுவந்தி!

"ஸாரிம்மா எங்களால் முடிந்த அளவிற்கு முயன்றுவிட்டோம். காப்பாற்ற முடியவில்லையம்மா. இனிதான் நீ தைரியமாய் இருக்க வேணும் என்று தோளில் தட்டிவிட்டு நகர....அப்படியே மயங்கிச் சரிந்தாள்!

மாணிக்கம் காலமாகிவிட்டார் என்ற செய்தியை மதுவந்தியால் நம்பவே முடிவில்லை. யாருக்கு தகவல் சொல்வது என்றுகூட அவளுக்கு புரியாத நிலை. பிரமை பிடித்தாற் போலிருந்தாள். அப்போது சரளாவும் மருதமுத்துவும் பொறுப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டது ஒன்றுதான் அவளுக்கு ஆறுதல். ஆம் அது மட்டும் தான்.

அப்புறமாய் நடந்தவை யாவும் அவளுக்கு கனவில் நடப்பது போலிருந்தது. மூன்று நாட்கள் கழிந்தது கூட அவளுக்கு தெரியவில்லை. உறவுகள் என்று வந்தவர்கள் எல்லாம் சென்றுவிட அவளோடு சரளாவும் மருதமுத்துவும் மட்டும் தங்கியிருந்தனர்.

கல்லூரி திறப்பதற்கு இன்னும் சில நாட்கள் இருந்தது. ஆனால் படிப்பைவிட இந்த இருவருக்கு பட்ட நன்றி கடனை எப்படி அடைப்பது? திருமணம் என்பதெல்லாம் நடக்காத காரியம். அப்பாவின் உயிரைக் காப்பாற்ற என்றதால் தான் அவள் மௌனம் காத்தாள். ஆனால் இப்போது அதற்கு வாய்ப்பே இல்லை. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கட்டிய பணமும் மேற்படியாக காரியங்களுக்கு செய்த செலவுக்கான பணத்தையும் கொடுக்க முடியுமானால்...அதை கொடுத்தாலும் கூட இவர்கள் போவார்கள் போல தோன்றவில்லை. என்ன காரணம் என்றும் புரியவில்லை. வாய்விட்டு அழக்கூடத் திராணியற்று மூலையில் முடங்கியிருந்தவளின் மனமோ இப்போது தத்தளித்துக் கொண்டிருந்தது. எதிர்காலம் சூனியமாக தெரிந்தது.

நான்காம் நாள் மனோகரிக்கு தந்தை மறைந்த செய்தியை சொல்ல முயன்ற போது தொடர்பே கிடைக்கவில்லை. மறுமுறை முயன்றால் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. அதன்பின் அவள் முயற்சிக்கவில்லை. மனோகரி சென்றது முதல், தினமும் பேசிக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் தந்தை இறந்த அன்று அவள் கைப்பேசி பற்றிய கவனமேயின்றி இருந்ததால் சார்ஜ் ஏற்றாமல் விட்டிருந்தாள். அப்புறமும் கூட ஆட்கள் வரப் போக என்று அது பற்றிய சிந்தனை எழவில்லை.


கல்லூரி விடுமுறை என்பதால் படிப்பு சம்பந்தமாக பேசவென்று அழைக்கும் ஒரு சிலதோழிகள்கூட தொடர்பு கொள்ள முயலவில்லை போலும். மனோகரிக்கு கோபமாக இருக்குமோ என்று மதுவந்திக்கு தோன்றவும். மனம் பதற்றமானது அழுதாலும் தொழுதாலும் மாண்டவர் வருவாரோ? அன்பெனும் பிடிமானத்தை இழந்த பாவை அவள் நிலை... துடிப்பில்லாத படகின் நிலையாயிற்று
 

Attachments

  • 462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    106.5 KB · Views: 0
Back
Top