Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

07. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
அன்று இரவு. ..சித்ரஞ்சனுக்கு தூக்கம் பறிபோயிற்று. மஞ்சரியை பார்த்தது முதல் மனது ஒரு நிலையில் இல்லை. அழகாய் இருந்த அந்தக் குழந்தை மனதிலேயே நின்றாள். அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது. அதுவும் சாருவுடன் அந்தக் குழந்தையைப் பார்த்ததில் அவனுக்கு பெரும் அதிர்ச்சிதான்.

அவனுடைய லதா அப்படி எளிதில் மனம் மாறக் கூடியவளா? அவனால் நம்பமுடியவில்லை. என்றாலும் அது மறுக்க முடியாத உண்மை என்று உயிருள்ள சாட்சியாய் குழந்தை இருக்கிறதே ? அவனால் அதைத்தான் ஜீரணிக்கவே முடியவில்லை. அவள் மீது கோபமும் வரவில்லை. மாறாக பரிதாபம்தான் உண்டாயிற்று.

அவன் தகவல் சேகரித்தவரையில் கணவர் என்ற நபர் இதுவரை அங்கே வந்த அறிகுறி இல்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அவள் கணவர் வெளிநாட்டில் ஏதோ குறைந்த சம்பளத்தில் வேலையில் இருப்பதாகவும் அடிக்கடி வந்து போக முடியாத நிலையில் இருப்பதாகவும் தகவல். ஆனால் சித்ரஞ்சனுக்கு அதில் கொஞ்சம் சந்தேகம் தான் அவளைப் பற்றி தகவல் சேர்த்தவர்கள் தந்த அறிக்கையில் நிறைய முரண்பாடுகள் இருந்தது.

அவளது நடவடிக்கையை தெரிய படுத்த ஆள் போட்டிருந்தான். அதனாலேயே அவளை தொடர்ந்து மாமல்லபுரம் வரை செல்ல முடிந்தது. தவறான எண்ணத்தில் அதை அவன் செய்யவில்லை. அவள் மகிழ்ச்சியாய் இருக்கிறாளா இல்லையா என்ற ஐயம் அவனுக்கு. அதை தெளிவு படுத்திக் கொள்ள நினைத்தான். கண்ணால் ஒரு முறை கண்டுவிட்டால், பிறகு அவளை தொந்தரவு செய்யாமல் விலகிப் போக முடிவும் செய்திருந்தான்.

ஆனால் இருக்கும் நிலையைப் பார்த்தால் அவள் சந்தோஷமாக இல்லை என்பதைவிட அவளுக்கு யாருமே இல்லை என்ற முடிவிற்குதான் வரமுடிந்தது. மாமல்லபுரத்தில் இருந்த அவ்வளவு நேரமும் கிட்டத்தட்ட பலமணி நேரங்களில் ஒருவர்கூட அவளை கைப்பேசியில் தொடர்பு கொள்ளவில்லை. அவளும் யாருக்கும் பேசவில்லை. அதுவும் இன்றைய தொலைத் தொடர்பு சாதனங்களில் உள்ள வளர்ச்சியில் எல்லாருமே போனும் கையுமாகத்தானே இருக்கிறார்கள். அவள் பேருக்குக்கூட கைபேசியை எடுக்கவில்லை. மாறாக மகளிடம் தான் கேம் விளையாடத் தந்தாள். இதுதான் அவனது சந்தேக்தை வலுப் படுத்தியது.

இவள் என்ன வாழ்க்கை வாழ்கிறாள்? எதற்காக இப்படி ஒரு வாழ்க்கை? அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்போல அர்த்தமற்ற வாழ்க்கை எதற்கு? சித்ரஞ்சன் யோசனையின் முடிவில் ஒரே ஒரு பதில்தான் கிடைத்தது. ஆனால் அது மேலும் அவனுக்கு துன்பத்தைத்தான் தந்தது. அப்படி இருக்கக்கூடாது என்று மனமுருகி இறைவனை வேண்டிக் கொண்டான்.

எல்லாவற்றிற்கும் அவளிடம்தான் விடை கிடைக்கும். அதை கூடிய சீக்கிரம் அறிந்து கொள்ள முதல் நடவடிக்கை ஒன்றை எடுத்தான் சித்ரஞ்சன்.

அதே நேரத்தில்....

அங்கே சாருவும் பழைய நினைவிலும் நிகழ்கால நினைவிலுமாக உழன்று கொண்டிருந்தாள்.

சில கணங்கள் தான் என்றாலும் அவன் கையணைப்பில் இருந்தபோது உண்டான பாதுகாப்பான உணர்வு, அதை இழந்துவிட்டதை எண்ணி பெரும் தவிப்பு உண்டாயிற்று, அதே கணத்தில் ஆத்திரமும் உண்டாக முழுதாய் அவனை வெறுக்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளியாய் துடிக்க, அவள் மனம் நிலை கொள்ளாது ஊஞ்சலாடியது.

அவன் எப்படி அங்கே வந்தான்? ஒருவேளை அவன் மனைவி மக்களோடு வந்திருப்பானோ? ஆனால் மனைவியை வைத்துக் கொண்டு மடியில் மற்றவளை வைத்திருக்க முடியாதே? ஏனோ சித்ரஞ்சன் மீது இருந்த கோபத்தின் அளவு முன் போல தீவிரமக இல்லை ஏன் ?

இதற்கு ஒரு முடிவில்லையா? யார் முடித்துவைப்பார்கள? இப்போதே அவளால் தாளமுடியவில்லை. இப்படி எத்தனை சந்தர்ப்பத்தில் சமாளித்து வெளிவர முடியும்?? வேறு வேலைதான் தேட நேருமோ? இதுவரை அவன் அவளது சொந்த விஷயத்தைப் பற்றி ஏதும் கேட்கவில்லை. இப்போது மஞ்சரியைப் பார்த்துவிட்டபின் அவன் சும்மா இருக்க மாட்டான் என்று தோன்றியது. சாரு அவன் தன்னை அணுகும் நேரத்திற்காக காத்திருந்தாள்.

ஆனால்… சித்ரஞ்சன் அணுகியவிதத்தில் சாருதான் சற்று திணறிப் போனாள்...!

மறுநாள்

பணிக்கு சென்றபோது முன்தினம் அவளை சந்தித்ததை அடியோடு மறந்தவனைப் போல நடந்து கொண்டான் சித்ரஞ்சன். தன்னிடம் வருவான் விபரம் அறிய வருவான் என்று எதிர்பார்த்திருந்த சாருவிற்கு ஏமாற்றமே!

ஆனால் தினமும் பிற்பகலில் காணமல் போனான். அவனது உதவியாளர் அவள்தான் என்ற போதும் அவளிடம்கூட அது பற்றி அவன் தெரிவிக்கவில்லை. முக்கியமான வேலை என்றுவிட்டு அவளுக்கான வேலைகளை பணித்துவிட்டு போய்விடுவான். அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலையோ என்று உள்ளே குமைந்தாலும்.. தனக்கிட்ட பணிகளை செவ்வனே முடித்துவைத்து அவன் திரும்ப வரும்வரை இருந்து கை எழுத்து பெற்ற பிறகே வீடு சென்றாள் சாரு,

ஆரம்பத்தில் 3:30மணிக்கு பள்ளிவிட்டதும் குழந்தை எங்கே போவாள் என்று சாரு மலைத்தபோது அந்த ஆயா ஞானம் தானாக முன்வந்து மஞ்சரியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். பள்ளி முடிந்ததும் பக்கத்தில் உள்ள கிரட்ச்சில் விட்டுவிடுவாள். இப்போது காலதாமதாமாய் செல்ல நேர்வதால் அங்கே தகவல் சொல்லிவிட்டு பதற்றமின்றி சென்று மகளை அழைத்துக் கொள்ள வசதியாயிற்று. சித்ரஞ்சன் அதிக வேலை இருக்கும், தாமதமாக வீடு திரும்ப நேரும் என்று முன்னதாக தெரிவித்துவிட்டதால் அவள் மகளுக்கு அந்த ஏற்பாட்டை செய்திருந்தாள் சாரு.

கிட்டத்தட்ட 5நாட்கள் அப்படியே கழிய... மறுநாள் சித்ரஞ்சன் எங்கும் போகவில்லை. வழக்கமான நேரத்தில் அவளை கிளம்பச் சொல்லிவிட்டான்.

மகளை அழைத்துக் கொண்டு வீடு வரும் வழியில் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்கிக் கொண்டு மகளுக்கு பிடித்த 5Star சாக்லேட் பார் வாங்கி கையில் கொடுக்க "வேணாம் அம்மா, நிறைய சாக்லேட் சாப்பிட்டா பல் கெட் போயிடுமாம்." என்றதும் உள்ளூர வியப்புதான்.

"ஓஹோ !அப்படியா பெரிய மனுஷி ? என்று புன்னகையுடன் நெற்றியில் முத்தமிட்டு, "இதை நாளைக்கு சாப்பிடலாம் சரியா குட்டிமா? மஞ்சரி ஒருகணம் ஏதோ யோசித்து விட்டு சரிம்மா"என்றாள் குழந்தை.

அன்று இரவு பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தபோது,"அந்த அங்கிளை பார்க்கணும் போல இருக்கும்மா"என்றாள் மஞ்சரி. சாருவிற்கு ஒன்றும் விளங்கவில்லை. "எந்த அங்கிள் மா?" என்றாள்.

"அதான் அன்னிக்குகூட நான் தண்ணில விழுந்தப்போ பார்த்தோமே பாவம் அவங்க கால்ல கூட அடிபட்டிருந்துச்சே அந்த அங்கிள்மா" என்று ஆர்வமாய் சொல்ல சாரு, துணுக்குற்றாள். இதென்ன அந்தச் சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கழித்து அவன் நியாபகம் ? ?

"எனக்கு அந்த அங்கிளை ரொம்ப பிடிச்சிருக்கும்மா. டெய்லி வருவாங்க எனக்கு சாக்லேட் எல்லாம் வாங்கித் தருவாங்கம்மா சோ ஸ்வீட் அங்கிள்மா" சாரு பேச்சின்றி மகளை வெறித்தாள்.

ஆக, அங்கே இவளுக்கு வேலை கொடுத்துவிட்டு அவன் இந்த வேலைதான் பார்த்தானா? அதுவரை ஆண்கள் யாருடனும் பழகி அறியாத பிஞ்சு மனம் திடீரென அப்படி ஒருவன் அவளை கொஞ்சியதில் அவன் மீது பாசம் வைத்துவிட்டாள் போலும்? எத்தனை திண்ணக்கம் இருந்தால் அவன் இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பான். ஆனால் இத்தனை நாள் அதை இந்த குட்டியும் அல்லவா மறைத்திருக்கிறாள் எல்லாவற்றையும் ஒப்பிக்கும் மகள் இதை எப்படி மறைத்தாள்?

தாயின் பார்வையில் எதை உணர்ந்தாளோ,"சாரி அம்மா நான் உங்ககிட்ட சொல்லலாம்னு தான் நினைச்சேன். அங்கிள் தான் அம்மாக்கு சஸ்பென்ஸ் கொடுக்கலாம்னு சொன்னாங்க. ஆனால் நேற்றும் வரலை.. இன்னிக்கும் வரலைம்மா" குழந்தை மெல்ல மெல்ல வருத்தமாய் சொல்ல...

சாருவிற்கு ஆத்திரம் உண்டாயிற்று. என்ன மனிதன் இவன்? எப்பவும் இதுதான் இவன் வழக்கமா? நம்பியவர்களை மோசம் செய்வதே தொழிலா? கண்ணை இறுக முடித்திறந்து தன்னை சமனப்படுத்திக்கொண்டவள்.

"அவர் இனிமே வரமாட்டார் கண்ணம்மா. அவர் குட் அங்கிள் இல்லைடா" என்று மகளின் மனதிலிருந்து அவனை விலக்க முயன்றஎன்றாள்.

"ம்ஹும்...நோ அம்மா, குட் அங்கிள் தான். காரில் கூட்டிப் போனாங்க சாக்லேட் ஐஸ்க்ரீம் டெய்லி சாப்பிட்டா பல் கெட்டுடும்னு சொன்னாங்க. எனக்கு பாடம் கூட சொல்லிக் கொடுத்தாங்க. என்னை குட் கேர்ள் சொன்னாங்க. அம்மா சொல்றபடி கேட்டு நடக்கனும்னு சொன்னாங்க" அப்படின்னா அவர் குட் அங்கிள் தானே ? என்றது குழந்தை.

கடவுளே, இந்தக் குழந்தை மனதை வசியம் செய்து இப்போது வாட வைக்கிறானே! இதற்கு எப்படி சமாதானம் சொல்வது? சாரு, உள்ளூர வெகுவாக கலங்கினாள்.

"அம்மா அங்கிளை பார்க்கணும் போல இருக்கு நாளைக்கு வரச் சொல்றீங்களா?" என்று சாருவை அதிரவைத்தாள்

"அவர் நம்பர் எனக்கு தெரியாதே கண்ணம்மா" பொய்தான். வேறு வழியில்லையே என்று நினைக்கையில் "இதோ இருக்கிறது அம்மா" என்று நோட்டில் அவன் எழுதியதைக் காட்டினாள் குழந்தை.

சாருவிற்கு மூச்சு முட்டுவது போலிருந்தது. என்ன நினைத்து இந்த குழந்தையுடன் பழகினான் அந்த ராஸ்கல்? அவளாகப் போய் ஏன் செய்தாய் என்று கேட்டால் மட்டும் பதில் சொல்லி விடுவானா என்ன? அல்லது என் பெண் உன் மேல் பைத்தியமாக இருக்கிறாள். அவளை வந்து பார் என்றுதான் கேட்க முடியுமா?? ஏற்கனவே செய்த குற்றத்திற்கு இன்னமும் அவன் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்க முடியவில்லை. எந்த குற்றத்திற்கும் ஆதாரமல்லவா கேட்கிறது சட்டம்?

பொய்யை எளிதாக ஏற்றுக் கொள்ளும் சமூகம் மெய்யை நிரூபிக்க சான்றல்லவா கேட்கிறது? பெண்களுக்கு இது ஒரு சாபக் கேடு போலும் சாரு, மனம் குமுற பேச்சின்றி அந்த எண்களையே பார்த்திருக்க..

"அம்மா நம்பர் இருக்கிறதே போன் பண்ணி வரச் சொல்றீங்களா? ஏஞ்சலுக்கு உங்களை பார்க்கணம்னு சொல்லுங்க அம்மா" என்றாள் சிறுமி!

இப்போது இவளை சாமளிப்பது அல்லவா கஷ்டமாக இருக்கிறது. ஓசையின்றி பெருமூச்சு விட்டாள் சாரு! மனம் பழைய நினைவில் வலித்தது.
 
Back
Top