Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

07. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
26
Points
28
Location
India
சிந்தாமணி கிழவிக்கு நிரஞ்சனாவை பார்க்க பார்க்க இன்னும் எத்தனை நாள் இந்த பெண்ணை தன்னால் பாதுகாக்க முடியும் என்ற கவலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. நடந்துவிட்டதை இன்னமும் அவளால் நம்பக்கூட முடியவில்லை. எத்தனை ஆசைகள்? எத்தனை கனவுகள்? யார் கண்பட்டதோ..

எல்லாமும் நொடியில் சரிந்து விட்டதே! எப்படி இருந்திருக்க வேண்டிய பெண், எல்லாமும் கண்மூடி திறக்கு முன் நிகழ்ந்து விட்டதே? ...இன்றைக்கு இப்படி யாரும் அறியாமல் இந்த குடிசையில் மூன்று மாதமாக ஒரு சுணக்கம் காட்டாமல் இருக்கிறாளே. இவளை உரிய இடத்தில் சேர்க்க வேண்டும். ஆனால் எப்படி என்று வழி தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறாள்.

"என்ன பாட்டி என்னை பத்தின கவலையா?? என்றாள் அதுவரை தன் லேப்டாப்பில் படித்துக் கொண்டிருந்த நிரஞ்சனா.

"ஹூம் இந்த கட்டைக்கு வேறென்ன கவலைடிம்மா?? அன்னிக்கு நீ அப்படி ஒரு முடிவு சொய்து இருக்கலைன்னா இந்நேரம் கண்காணாத தேசத்துல ராணி மாதிரி வாழ்ந்துட்டு இருந்திருப்பே.. நானும் நிம்மதியா இங்கன கஞ்சி குடிச்சிட்டு என் பாட்டை பார்த்துக்கிட்டு கிடந்திருப்பேன்...

"பாட்டி, இன்னிக்கு தான் கடைசி. இனி ஒருமுறை இந்த பேச்சு பேசினா நான் சொல்லாமல் கிளம்பி எங்கேயாவது போயிடுவேன். என்னை பத்தி தெரியுமில்லே? சிறு அழுத்தமும் உள்ளடக்கிய கோபமுமாக நிரஞ்சனா கூற, பதறிப் போனவளாய்

"இல்ல இல்ல தாயீ இனிமே பேசலை கண்ணு.. என்று சிந்தாமணி கூற சற்று இரக்கத்துடன் பார்த்துவிட்டு," மனசுக்கு பிடிக்காத காரியத்தை என்னால செய்ய முடியாது பாட்டி, தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க, என்றவள் சரி வாங்க பாட்டி சாப்பிடலாம்" என்று தட்டு எடுத்து வைத்தாள் நிரஞ்சனா.

அன்று இரவு...

அண்ணன் குடும்பத்திற்காக என்று தடபுடலாக சமைத்ததிலும் கடைசியில் அண்ணனின் பொடிவைத்த பேச்சை கேட்டு என்றுமில்லாது கொஞ்சம் கோபத்துடன் பேசிவிட்ட அழகம்மைக்கு, கூடவே நடந்தது எல்லாமும் நினைவுக்கு வந்துவிட்டதில் தலையை வலித்தது. அதனால் மாத்திரையை போட்டு படுத்தவுடன் தூங்கிப் போனாள்.

ஆனால் கல்யாண சுந்தரம் இரவு தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தார். அவருக்கும் நடந்து போன சம்பவங்கள் நினைவில் ஓடியது. அடுத்து அடுத்து பெற்றவர்களின் மறைவும் தந்தையின் நிழலாக வாழ்ந்திருந்த கல்யாண சுந்தரம் பண்ணையம் செய்ய ரொம்பவும் திணறித்தான் போனார். ஏதோ அந்த காலம் தொட்டு பண்ணையில் வேலை பார்த்தவர்களின் ஒத்துழைப்பும் விசுவாசமும் அவருக்கு பெரும் பலத்தை அளித்தது. இல்லாது போயிருந்தால் அவர் நிலை மோசமாகிப் போயிருக்கும். அதில் இருந்து மீண்டு வர மகன் சக்தியும் ஒரு காரணம். படிப்பில் சிறந்து விளங்கினான். மற்ற பையன்கள் போல இல்லாமல் விடுமுறையில் தந்தையுடன் சிறு பிராயத்திலிருந்து பண்ணைக்கு செல்வதை வழக்கமாக்கி வைத்திருந்தான். பள்ளி படிப்பை முடித்து விவசாய படிப்பை தேர்வு செய்தபோது தன் பெற்றோர் அதை பார்க்க உயிருடன் இல்லையே என்று வருந்தியிருக்கிறார். படித்தபின் மேல் படிப்புக்காக வடநாட்டுக்கு போய் வந்தான். எல்லோரும் அவன் ஒரு வெள்ளைக்காரியை கூட்டி வருவான் என்று ஆருடம் சொன்னதை பொய்யாக்கி அவருக்கு மகனாகவே வந்தபோது பெருமைப்பட்டார். அப்புறம் கல்யாணப் பேச்சை எடுத்தபோது அவசரமென்ன என்றுவிட்டான்.

இன்று மைத்துனன் மறைமுகமாய் மகனிடம் பேசியதில் அவருக்கும் கோபம்தான். ஆனால் இப்போது யோசிக்கையில் அதில் தப்பு இருப்பதாக தோன்றவில்லை. மகனது வயதை ஒத்தவர்கள் எல்லோரும் திருமணமாகி குழந்தை குட்டியோடு இருப்பதை அவரே பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார். ஒருவேளை மைத்துனன் சொன்னது போல யாரையேனும் விரும்புகிறானா? அப்படியே இருந்தாலும் அவர் அதற்கு மறுப்பு சொல்லப் போவதில்லை. அவரின் பெற்றோர் கூட காதல் திருமணத்திற்கு எதிரானவர்கள் இல்லைதான். அதை புரிந்து கொள்ளாமல் முன்பு நிகழ்ந்து போன சம்பவத்தை மறுபடியும் நடக்க விடமாட்டார்.

திடுமென அவருக்கு வேறு ஒரு பயம் தோன்றியது. மகனுக்கு பெண்களே பிடிக்கவில்லையா? அல்லது ஏதேனும் காதல் தோல்வியா? அதனால் தான் திருமணம் என்றாலே நழுவுகிறானோ? அப்படியே இருந்தாலும் கூட அது என்ன என்று பேசிவிடவேண்டும். இனியும் தள்ளிப்போடக் கூடாது ஒருவாறு முடிவு செய்தபிறகே நிம்மதியாக உறங்கத் தொடங்கினார் கல்யாண சுந்தரம்.

அந்த இரவில் தூக்கம் வராமல் தவித்த இன்னொருவன் சக்தி சுந்தரம். அவனுக்கு வெகு நேரமாகியும் தூக்கம் வரவில்லை. நிரஞ்சனா பேசியதும் தாய் பேசியதும் அவனை குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. யார் அவள்? பட்டணத்தில் படித்த பெண் என்றாலும் தனியாக ஒரு அந்நிய ஆணிடம் மாட்டிக் கொண்டால் நடுங்கிவிடுவாள்.

ஆனால் இவள்... ஏதோ பல காலம் அவனை அறிந்தவள் போல தயக்கமின்றி பேசுகிறாள். கூடவே அவனுக்கு அடிபடக்கூடாது என்ற கரிசனம். அதுதான் இன்னும் குழப்பியது. இதை எல்லாம் ஓரம்கட்டியது தாயின் மறைபொருள் பேச்சு.

என்ன சொன்னாள்.. அன்றைக்கு என்று ஏதோ முன்பு நடந்து போன விசயத்தை குறிப்பிட்டு இன்றைக்கு அப்படி நடக்காது என்றாளே?? அது என்னவாக இருக்கும்? தெளிவு பிறக்காமலே புரண்டுவிட்டு ஒருவாறு தூங்கத் தொடங்கினான்...!

மறுநாள். ..

காலை உணவு முடிந்த கையோடு ஊருக்கு கிளம்பிய மாமனிடம் ,அவர் மகளை மனைவியாக ஒருபோதும் பார்த்ததில்லை என்பதையும் அவளுக்கு எப்போதும் ஒரு நல்ல உடன்பிறவா சகோதரனாக இருப்பேன் என்றும் வாக்கு கொடுத்தான் சக்தி சுந்தரம். அவரும் அவனது கையை தட்டிக் கொடுத்துவிட்டு, " சந்தோசம் மருமகனே, எனக்கு சம்பந்தம் பண்ண முடியலன்னு வருத்தம் இல்லை. அவளுக்குனு இனிமேலா பிறக்கப் போறான்.? நீ சீக்கிரம் கல்யாண சேதி சொல்லு மாப்பிள்ளை, குடும்பத்தோட இரண்டு நாள் முன்னாடி வந்து இருந்து கலந்துக்கிறேன்". என்றவர் அக்காள் கணவரிடமும்,

"அத்தான் நான் உங்க மனசு நோக பேசியிருந்தா, என்று மன்னிப்பு கோர முயன்றவரை தடுத்து...

"தப்பில்லை மச்சான். நான் கேட்க வேண்டியதைத்தான் நீ கேட்டே. அதை எல்லாம் விடு, ஆமா இதென்ன இத்தனை வருசம் கழிச்சு வந்துவிட்டு உடனே கிளம்பறே? இன்னும் நாலு நாள் இருந்துட்டு போகலாமில்லை?" பாப்பாவுக்கும் படிப்பு முடிஞ்சு போச்சே அவளையாவது இங்கே விட்டுப் போகலாமில்லையா மச்சான்"என்று உரிமையோடு வினவினார் கல்யாண சுந்தரம்.

"இல்ல அத்தான் நாங்க இவ பக்கத்து சொந்தக்காரங்க கல்யாணத்துக்காக வந்தோம். அப்படியே இங்கேயும் வந்தோம், அக்கா மகனுக்கு கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டு இருக்கவும் நான் இந்த யோசனை சொன்னேன் அவ்வளவுதான். நாளை மறுநாள் நான் வேலையில் இருக்கனும். மல்லி விரும்பினால் இருக்கட்டும். ஒரு வாரம் கழிச்சு அனுப்பி வைங்க,, என்றவர், மகளிடம் "என்னம்மா சொல்றே என்று வினவினார் சிதம்பரம்.

மல்லிகா என்ன சொல்லியிருப்பாள்.

 

Attachments

  • IMG-20220111-WA0024.jpg
    IMG-20220111-WA0024.jpg
    86.6 KB · Views: 0
Back
Top