Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

07. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
ஜாஸ்மினை நட்சத்திர உணவு விடுதியில் இறக்கி விட்டு திரும்பும் போது அந்த வழியில் மருத்துவமனைகள் ஏதும் கண்ணில் படவில்லை.

நிரஞ்சனுக்கு வண்டியை செலுத்துவதே மிகுந்த சிரமமாக இருந்தது. பேசாமல் வீட்டிற்கு சென்றுவிடலாம் என்று தோன்ற பிரதான சாலைகளில் ஓட்டுவதை தவிர்த்து, குறுக்கு வழியில் வண்டியை திருப்பினான். போக்குவரத்து நெரிசல் இல்லாததால் சற்று இலகுவாக வண்டியை செலுத்த முடிந்தது.

அப்போது தான் அந்த பெரிய மருத்துவமனையை கவனித்தான். வெறும் காய்ச்சலுக்காக உள்ளே சென்றால் கண்டபடி தீட்டி விடுவார்களோ என்று ஒருகணம் தயங்கினான். ஆனால் பாதி இரவில் ஜுரம் அதிகரித்து எல்லோரையும் தொந்தரவு செய்வதற்கு செலவு ஆனாலும் பரவாயில்லை இங்கேயே காட்டி விடலாம் என்று வண்டியை மருத்துவமனைக்குள் செலுத்தி பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இறங்கியவனின் கால்கள் தடுமாற சட்டென்று அருகில் இருந்த வாகனத்தை பற்றிக்கொண்டு நின்றான்.

"தம்பி நீங்கள் தானா? என்ற குரலில் நிமிர்ந்தான். அவர்கள் வீட்டு காரோட்டி சங்கரன் தான் நின்றிருந்தார். அவனது சிறு வயது முதல் வேலை செய்து கொண்டிருப்பவர் அவர் .

நிரஞ்சனுக்கு நிற்க முடியாமல் தலையில் பாரமாக இருந்தது. அவரைப் பார்த்து புன்னகைக்க முயன்று தோற்றான்.

சங்கரன் தொடர்ந்து பேசினார், "உங்களை மாதிரி இருக்கிறதே என்று தான் வந்தேன். தகவல் கேள்விப்பட்டு வந்தீர்களா தம்பி?"

" என்.. என்ன தகவல்? குரல் தடுமாற கேட்டவன் அப்படியே மயங்கி சரிந்தான், பதறிப்போன அந்த ஓட்டுனர் சட்டென்று அவனை தாங்கிப் பிடித்து, "தம்பீ என்னாச்சு உங்களுக்கு? என்றவர், அங்கே இருந்த இன்னொரு ஓட்டுனரை உதவிக்கு அழைக்க, நிரஞ்சனை இருவருமாக தூங்கிக்கொண்டு மருத்துவமனைக்குள் சென்றனர்.

நிரஞ்சனை அட்மிட் செய்துவிட்டு, சங்கரன் அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்றார்.

அங்கே...

மலர்வதனி செவிலியர் சீருடைக்கு மாறியிருந்தாள். அத்தைக்கு இப்படி ஆனதற்கு காரணம் அவள்தான் என்று எண்ணினாள். கடவுளே என் அத்தைக்கு எதுவும் ஆகாமல் காப்பாற்று. எனக்கு அவர்களை விட்டால் வேறு நாதியில்லை, என்று வேண்டியபடி தவிப்புடன் நின்றிருக்க, சத்யமூர்த்தியும் அப்படித்தான் குற்ற உணர்வுடன், மனைவியை காப்பாற்றும்படி கடவுளிடம் வேண்டியவாறு, கவலையோடு வடிவுக்கரசிக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்த அறையை நோக்கியிருந்தார்.

"பாப்பா", என்று மலரை மெல்ல விளித்து விவரம் சொல்ல, அதிர்ச்சியில் சிலகணங்கள் அவளுக்கு எதுவும் தோன்றவில்லை. ஒருவாறு சுதாரித்துக்கொண்டு,"மாமா இங்கேயே இருங்கள். இதோ வந்து விடுகிறேன்" என்று சங்கரனுடன் சென்றாள்.

அதற்குள்ளாக மருத்துவர் நிரஞ்சனுக்கு சிகிச்சை தொடங்கியிருந்தார்.

"மன்னிக்கனும் டாக்டர், இவர் எனக்கு தெரிந்தவர், இவருக்கு என்னாச்சு? ஏதும் பயப்படற மாதிரி இல்லையே? என்று வினவினாள்.

"Nothing serious மலர், viral fever தான். ஊசி போட்டிருக்கிறேன். கொஞ்சம் நேரத்தில் fever குறைஞ்சிடும். அவர் வீட்டுக்கு போகலாம். உனக்கு தான் இந்த fever க்கு என்ன உணவு சாப்பிடுவது என்று தெரியுமே? So Pls take Care" என்று விட்டு போனார்.

"தாத்தா, நீங்கள் இவர் கூடவே இருங்கள். கண் விழிச்சதும் எனக்கு போன் பண்ணுங்க. அப்படியே சூடாக குடிக்க வாங்கி கொடுங்கள், நான் வர்றேன்" என்று சொல்லிவிட்டு அத்தையை காண ஓடினாள் மலர்வதனி.

☆☆☆

அவசர சிகிச்சை பிரிவில் அப்போது தான் தலைமை மருத்துவர், துணை மருத்துவர்களுடன் வெளிப்பட்டார்.

"என் மனைவி எப்படி இருக்கிறாள் டாக்டர்? அவளுக்கு என்ன? என்றார் சத்யமூர்த்தி.

"அவங்களுக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக், சரியான நேரத்தில் கொணர்ந்ததால் இப்போது அபாயம் இல்லை. இனி அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இன்றைய இரவு அவர்கள் எங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். காலையில் நான் வந்து பரிசோத்தபின் டிஸ்சார்ஜ் செய்வது பற்றி சொல்கிறேன் என்று நகர இருந்தவரிடம், "நாங்கள் அவங்களை பார்க்கலாமா டாக்டர்" என்று மலர் வினவினாள்.

"அவரை தொந்தரவு செய்யாமல் ஒவ்வொருவராக போய் பார்த்து விட்டு வரலாம். மற்றபடி ஹாஸ்பிடல் ரூல்ஸ் உனக்கே தெரியும் அல்லவா மலர் "என்று மருத்துவர் சென்று விட, சத்யமூர்த்தி முதலில் உள்ளே சென்றார்.

அப்போது சங்கரனிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வர, மலர் அங்கே விரைந்தாள். நிரஞ்சன் அவளை இப்போது தான் பார்க்கப் போகிறான். ஆனால் அவள் ஏற்கனவே அத்தை மூலமாக புகைப்படம் வீடியோவில் பார்த்திருக்கிறாள். இப்படி ஒரு சூழ்நிலையில் அவனை சந்திக்க நேர்ந்ததில் அவளுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. கூடவே லேசாக படபடப்பும் உண்டாயிற்று.

நிரஞ்சன் விழிப்பும் களைப்புமாக தெளிவற்ற நிலையில் படுத்திருந்தான்.

மலர் அங்கே சென்றதும் சங்கரன் அவனுக்கு குடிக்க டீ வாங்கி வரவும் சரியாக இருந்தது.

இருவருமாக சேர்ந்து நிரஞ்சனை தூக்கி அமர வைத்தனர். மலர் அவனுக்கு டீயை பருக உதவி செய்தாள். டீ குடித்த பின் சற்று தெம்பு ஏற்பட அப்படியே சாய்ந்து அமர்ந்தவன், Thank you nurse என்றான்.

"தம்பி, இது நம்ம வீட்டு பாப்பா, மலர். அடையாளம் தெரியலையா?? இங்கே தான் வேலை செய்யுது"

வீட்டுக்குள் நடப்பதை அறியாத அந்த மனிதர், எதார்த்தமாக சொல்ல, நிரஞ்சன் முகம் பிரகாசமாயிற்று, விழிகளில் வியப்புடன் அவளை ஏறிட்டுப் பார்க்க, மலர், தர்மசங்கடத்துடன் நின்றாள்.

"தாத்தா, நீ..நீங்கள் இங்கே இருங்கள், கொஞ்சம் பொறுத்து நான் வருகிறேன்." என்று நகரப் போனவளிடம்,

"தம்பியை பார்த்த பதற்றத்தில், சின்னம்மா பற்றி விசாரிக்க மறந்துவிட்டேன் பாப்பா. டாக்டர் என்ன சொன்னார்? பயப்படுறாப்ல ஒன்னுமில்லையே? என்று சங்கரன் வினவ,

விழிகள் சட்டென்று கலங்க,"அத்.. அவங்களுக்கு ஹார்ட் அட்டாக், ஆனால் இப்போது உயிருக்கு ஆபத்து இல்லை"என்று டாக்டர் சொன்னார் என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைக்க, அங்கிருந்து வேகமாக ஓடினாள் மலர்வதனி.

நிரஞ்சன் அதிர்ந்து போனவனாக எழுந்து அமர்ந்தான். அவனது அம்மாவிற்கு மாரடைப்பா?? அப்படி என்ன நடந்தது? ஹூம் இன்னும் என்ன நடக்க வேண்டும். எல்லாம் அவன் செய்து வைத்த கூத்தால் தான். அவன் ஏதோ ஒரு திட்டம் போட்டு ஒரு நல்லது செய்வதாக நினைத்து இப்போது பெற்றவளின் உயிருக்கே அது உலை வைத்துவிட்டது" தன்னையே நொந்தபடி மெல்ல எழுந்து நிற்க முயல, சங்கரன் அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டார்.

"தாத்தா, என்னை அம்மா இருக்கிற அறைக்கு அழைத்துக்கொண்டு போங்கள்" என்றான் நிரஞ்சன்.
 

Attachments

  • 462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    49.7 KB · Views: 0
Last edited:
Back
Top