Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

06. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
167
Reaction score
50
Points
28
Location
India
மகதியின் முடிவை ஏற்பதை தவிர வேறு வழி தெரியவில்லை. மிருதுளாவிடம் அவள் மகளை கேட்டு வாங்கியது நினைவில் வந்தது. இப்போது அவளுக்கு என்ன பதில் சொல்வது? எல்லாவற்றையும் மீறி அந்த மகளை பிரிந்து அவள் எப்படி இருப்பாள். அம்மா என்ற அங்கீகாரம் கொடுத்தவள், அவளது வாழ்க்கையை ஒளிமயமாக்கியவள் இன்று அவள் ஒரு குடும்பத் தலைவியாக நாலுபேர் மதிக்க வலம் வரக் காரணமாய் இருந்தவள் இந்த மகள் அல்லவா?? அவளை பிரிய வேண்டும் என்பதை எண்ணும்போதே மனம் வலித்தது.

இரண்டு தினங்கள் இயந்திரமாய் கழிந்தது..

ஊர் திரும்பிய கணவனிடம் விவரத்தை தெரிவிக்கையில் மாலதி உள்ளூர வேதனையிலும், ஒருவிதமான சங்கடத்திலும் இருந்தாள். அவள் எத்தனைதான் பாசத்துடன் வளர்த்திருந்தாலும் இன்றைக்கு அந்த மகளை வேறு இடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லும் போது கணவன் தன்னை தவறாக எண்ணி ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அவளால் தாங்கமுடியாது.

மதனகோபாலுக்கு மனைவி சொன்ன விஷயங்களை கேட்டதும் சின்ன மகள் இது போல குணம் கெட காரணமான முத்தரசியின் மீது மிகுந்த ஆத்திரம் உண்டாயிற்று. கூடவே இனி அவளை வீட்டினுள் சேர்க்க கூடாது என்று தீர்மானித்தார். ஆனால் பெரிய மகளை பிரிவதை அவரால் தாங்க முடியவில்லை. மகதியிடம் அவரும் பேசிப் பாத்தார். ஆனால் அவள் அவரையும் சமாதானம் செய்து விட்டாள்.

மிருதுளாவிடம் விஷயத்தை சொன்னதும் அவள் சில கணங்கள் ஒன்றும் சொல்லவில்லை. அதன் பிறகு, " மகதி விடுமுறைகளில் என்னோடு இருக்கட்டும். மதுரை கல்லூரியில் சேர்த்து படிக்க வையுங்கள். படிப்பு முடிந்த பின்னும் திருமணம் ஆகும்வரை அவள் என் பொறுப்பு." என்று கூற மாலதி குரல் தழுதழுக்க.. "அக்கா நான் கொடுத்த வாக்கை மீறிவிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க" என்றபோது அழுகை வெடித்தது.

"மாலதி நான் அப்படி நினைக்கவில்லை. உண்மை அறிந்த பிறகும் மகி உன்னிடத்தில் இன்னமும் அன்பாகத்தானே இருக்கிறாள். அம்மா என்று அழைப்பதையும் நிறுத்தவில்லை. ஆக உன் பாசம் ஜெயித்திருக்கிறது. இப்போதும் கூட அவள் உனக்காகத்தான் இந்த முடிவை எடுத்திருக்க கூடும் என்பது என் கணிப்பு. நடப்பது நன்மைக்காக என்று எண்ணுவோம்" என்று முடித்துக்கொண்டாள் மிருதுளா.

அவளது பேச்சு மாலதிக்கு மிகுந்த ஆறுதலை தந்தது. மதனகோபால் மறுநாள் காலையில் மகதியை கொடைக்கானலில் விட்டு வந்தார்.

அதே நேரம் பக்தி சுற்றுலா சென்ற முத்தரசி ஓரிடத்தில் வழுக்கி விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக தகவல் கிடைக்க, மனைவி மற்றும் சின்ன மகளை அழைத்துக்கொண்டு அங்கே சென்றார். ஆனால் அவர்கள் சென்று சேருமுன்பாக உயிர் பிரிந்துவிட, அங்கேயே ஈமச்சடங்ககுகளை முடித்துவிட்டு ஊர் திரும்பினர்.

அதன் பிறகு மதுமதியிடம் அமைதி காணப்பட்டது. மகதி மதுரை கல்லூரியில் சேர்ந்தாள். இரண்டு சகோதரிகளும் அன்றைக்கு பிறகு விழா, பண்டிகையில் மட்டுமே சந்தித்துக் கொண்டனர். முன்பு போல மதுமதி எந்த விவகாரமும் பண்ணவில்லை. ஒரேடியாக ஒதுங்காமல் பட்டும்படாமல் பேசிக்கொண்டனர். மகதி கல்லூரி படிப்பை முடித்து பிறகு மேற்படிப்பை தபால் வழியில் படித்தபடி எஸ்டேட் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தந்தாள், மிருதுளாவிற்கு உதவியாகவும் இருந்தாள். ஆறு மாதங்களுக்கு முன் அவளது மேற்படிப்பும் மதுமதியின் கல்லூரி படிப்பும் முடிந்துவிட்டது.

மாலதி வரன் பார்க்க ஆரம்பித்து சில மணமகன்களின் புகைப்படங்களை கொணர்ந்து காட்டி தேர்வு செய்யும்படி சொல்ல, மகதி தனக்கு திருமணம் வேண்டாம் என்றுவிட்டாள். அதுபோலவே மதுமதியும் தனக்கு திருமணம் எல்லாம் இப்போதைக்கு வேண்டாம் என்றுவிட,சற்றுவிட்டு பிடிக்கலாம் என்று ஆறப்போட்டாள்.

மகதியை பிரிந்தது முதலே மனதுக்குள் கவலை கொண்டிருந்த மதனகோபாலுக்கு சற்று கவனம் சிதற, தொழிலில் சின்ன சரிவு ஏற்பட்டது, எல்லாமாக சேர்ந்து அவருக்கு மாரடைப்பு வந்துவிட்டது. மருத்துவர் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதிர்ச்சியான விஷயம் ஏதும் சொல்லக்கூடாது என்றுவிட்டார்.

அந்த நிலையில் தான் திடுமென தரகர் வந்து மகேந்திரன் பற்றி தெரிவிக்க, மதனகோபால் அவனை பற்றி விசாரித்ததில் திருப்தியாக இருந்தது. ஆனால் பெரியவள் முன்பே திருமணம் வேண்டாம் எனறு மறுத்துவிட்டிருந்ததால், தோழிகளுடன் சுற்றுலாவிற்கு சென்றிருந்த மதுமதியிடம் கேட்க அவளும் ஒப்புதல் கொடுத்துவிட, உடனே, பெண் பார்க்க வரச்சொல்லி விட்டார்.

ஆனால் நடந்தது வேறு. மதுமதி சில காலமாக சுமூகமாக நடந்து வருவதால் முன்பு போல ஒதுக்கம் காட்டாமல் மகதி சென்னை வந்து போய் இருக்கிறாள். அதிலும் தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு இரண்டு பெண்களும் சச்சரவின்றி இருந்தனர். வெளியிடங்களுக்கு கூட போய் வருவதை வழக்கமாக்கியிருந்தனர். மாலதியின் பிறந்தநாள் வந்தபோது மதுமதி மகதியை இப்படித்தான் யாரும் அறியாமல் வரச்சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்தாள். எல்லோருக்கும் குறிப்பாக மாலதிக்கும் மிருதுளாவிற்கும் பெரும் அளவில் நிம்மதி உண்டாயிற்று.

அதேபோன்று இப்போது பெண் பார்க்கும் விஷயத்தை மறைத்து மகதியை வரச்சொல்லவும் அவளுக்கு சந்தேகப்பட தோன்றவில்லை. வந்தால் அவளுக்கு தான் பெரும் அதிர்ச்சியாகி போயிற்று.

மகதிக்கு இன்னமும் மதுமதி ஏன் அப்படி செய்தாள் என்பது விளங்கவில்லை. அவள் இருக்க வேண்டிய இடத்தில் தன்னை இருக்க வைத்தால் அப்பாவிற்கு வேண்டுமானால் தெரியாமல் போகலாம். ஆனால் அம்மா? அவளுக்கு தன் மகள்களை அடையாளம் தெரியாதா? அல்லது இவள் தான் சொல்லாமல் விட்டுவிடுவாளா என்ன?? திருமணம் வரை போகாது என்று எண்ணி இப்படி செய்தாளா? திருமணம் என்று முடிவானாலும் அவள் தானே மணவறையில் அமரவேண்டும். அம்மா விடமாட்டாளே? பல்வேறு கேள்விகள் குழப்பங்களுடன் கொடைக்கானல் போய் சேர்ந்த மகதியை வரவேற்ற புது விருந்தாளியை கண்டு திகைத்து நின்றாள் .

மதுமதிக்கு மகதியை சிக்க வைத்ததில் உள்ளூர திருப்தியாக இருந்தது. ஆனால் வீட்டிற்கு போனால் அம்மா அர்ச்சனை செய்வாளே என்று கொஞ்சம் பயமும் இருந்தது. அப்பா வரை விஷயத்தை கொண்டு செல்ல மாட்டாள். ஆனால் கண்டிப்பாக எச்சரிக்கை செய்வாள். அதற்கெல்லாம் அவள் பயந்துவிடுவாளா என்ன? அவள் போட்ட திட்டத்தை நிறைவேற்றாமல் விட்டு விடுவாளா??நெவர்.. நெவர். ஆத்திரத்துடன் சூளுரைத்துக் கொண்டாள்.
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top