Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

06. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
ஞாயிறு அன்று...

தந்தைக்கு ஓய்வு நாள் என்பதால் மதுவநதி அன்று மதிய சமையலில் ஈடுபட்டிருந்தாள்.

வாசல் புறத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தார் மதுவந்தியின் தந்தை மாணிக்கம்.

பிறைசூடன் அவரை சந்திக்க வந்திருந்தார். அவருக்கு மோர் கொண்டு கொடுக்கச் சென்றவள் அவர்களது பேச்சில் தன் பெயர் அடிபடவும் ஒருகணம் தயங்கினாள்.

"மதுவோட கல்யாணத்தை பத்தி என்ன முடிவு பண்ணிருக்கீங்க மிஸ்டர் மாணிக்கம்?" பிறைசூடன் வினவினார்.

"சார் என்னோட நிலமை உங்களுக்கு நல்லா தெரியும். மதியை நல்ல இடத்திலே கட்டிக் கொடுக்கனும்கிறதுதான் இப்ப இருக்கிற என் ஒரே ஆசை. அவள் படிப்பு முடியவும் தூரத்து சொந்தத்துல இருக்கிற என் தங்கை மகனுக்கு கட்டித் தரனும்னு நினைப்பு. கடவுள் நாட்டம் எப்படின்னு தெரியலை" என்றவர் ஏதோ தோன்ற,

"ஆமா நீங்க இப்ப ஏன் சார் மது கல்யாணத்தைப் பத்தி கேட்கிறீங்க ?? என்றார் சற்று பதற்றமாக.

கேட்டுக் கொண்டிருந்த மதிவந்திக்கும் கூட அறிய ஆவலாகத்தான் இருந்தது. ஆனால் தந்தையின் பதற்றத்திற்கான காரணம் புரியவில்லை. கூடவே அடுப்பில் குக்கர் வேறு சத்தம் கொடுத்துவிட மோரை கொண்டு கொடுத்துவிட்டு சமையலறைக்கு விரைந்தாள்.

அடுப்பை அணைத்து விட்டு அவசரமாய் வாயிற்புறம் ஓடினாள் மதுவதனி,அங்கே..

"நீங்க நினைக்கிறாப்ல ஏதும் இல்லை சார். மது தங்கமான பொண்ணு. நான் பேச வந்த விஷயம் வேற, ஆனால் எனக்கு ஒரு விஷயம் தெளிவாக சொல்லுங்கள் சார், மதுவை உங்கள் உறவுக்காரப் பையனுக்கு கொடுப்பதாக வாக்கு தந்துவிட்டீர்களா?"

"அதெல்லாம் இல்லை சார். அவன் அம்மா கேட்டிருக்கிறாள், நான் படிப்பு முடியட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறேன் அவ்வளவுதான். தவிர ,மதுக்கிட்டே கேட்காம நான் வாக்கு கொடுக்க முடியாது. அது அவள் வாழ்க்கை இல்லையா? வாழப் போறவ அவதானே சார்?".

"சரியாச் சொன்னீங்க சார். பெத்து வளர்த்து விட்டாலும் அவர்கள் விருப்பத்துக்கும் நாம் மதிப்பு கொடுக்கணும் தான். சரி சார், நான் நேரா விஷயத்திற்கு வர்றேன், எங்களுக்கு ஒரு பெண் ஒரு பையன். பொண்ணு கல்யாணமாகி மும்பையில் இருக்கிறாள். பையனும் இப்போதைக்கு அங்கேதான் வேலை செய்றான், கூடிய சீக்கிரமா மாறுதல் வாங்கிட்டு இங்கே வந்துருவான். அவனுக்கு உங்க பொண்ணு மதுவை கல்யாணம் பண்ணித் தர உங்களுக்கு சம்மதமா? இது பையன் விசிட்டிங் கார்ட். இது அவன் போட்டோ. நீங்க உடனே முடிவு சொல்லனும்னு அவசரம் இல்லை சார். நாங்க அடுத்த வாரம் பொண்ணு பிரசவத்திற்காக மும்பை கிளம்பறோம். அதுக்குள்ள சொல்லுங்க போதும்"

பிறைசூடன் சொல்ல சொல்ல மதுவந்திக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை, அந்த நிமிடம் வரை இருந்த விரக்தி நிலை மாறி மனதும் உடம்பும் பரபரத்தது. இதெல்லாம் கனவா? நனவா? அல்லது அவளது ஆசை கொண்ட மனதின் கற்பனையா??

மதுவந்தியின் நிலையை எழுத்தால் வடிக்க முடியாது. உச்சப் பட்ச மகிழ்ச்சியில் அவளது மனம் துள்ளியது. தந்தையின் பதிலை அறியும் ஆவலுடன் காத்திருந்தாள், பதறிய நெஞ்சை அழுத்தியபடி.

"என்ன சொல்கிறீர்கள் சார்? உங்கள் அந்தஸ்து எங்கே நான் எங்கே?" என்று மாணிக்கம் தடுமாறினார்.

"அதெல்லாம் உழைத்தால் எல்லாருமே அடையக்கூடியதுதான் சார். எங்களுக்கு மதுவை பிடித்திருக்கிறது. அப்படி ஒரு பெண்ணைத்தான் நாங்கள் இத்தனை நாளாய் தேடிக் கொண்டிருந்தோம். என் மனைவி தானும் வந்து பேசுவதாக கூறினாள். உங்கள் அபிப்ராயம் கேட்டுக் கொண்டு வருவதாக நான் மட்டுமாக வந்தேன் சார்". பிறைசூடன் சொல்லவும்

"நான் என்ன சொல்லப் போகிறேன் சார். ஆனால் சீர் செனத்தினு நான் அதிகமா சேர்த்து வைக்கலை. இந்த வீடு மட்டும் தான் என் ஒரே சொத்து. அதைத் தவிர வேற... என்று அவர் மேலும் தொடருமுன்பாக பிறைசூடன் குறுக்கிட்டார்.

"அடடா சார், நாங்க அதெல்லாம் எதுவுமே எதிர்பாக்கலை. என் பையனுக்கும் இதெல்லாம் சுத்தமாக பிடிக்காது. உங்கள் பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும் சார். நீங்கள் மதுவிடம் கலந்து பேசிவிட்டு முடிவு சொல்லுங்கள்."

"நாங்கள் கொஞ்சம் வெளியே செல்ல வேண்டியுள்ளது. அப்புறம் சந்திப்போம் சார்" என்றவர் "மது, உன் மோருக்கு தாங்க்ஸ்மா" என்று குரல் கொடுத்துவிட்டு விடை பெற்றுச் சென்றார்.

மாணிக்கம் சாப்பிட வந்து அமர்ந்தார். அவராக சொல்வார் என்று மதுவந்தி பொறுமையை கடைபிடித்தபடி தானும் சாப்பிட அமர்ந்தாள்.

ஆனால் தீவிர யோசனையில் சாப்பிட்டு முடித்த மாணிக்கம் பிறைசூடன் சொன்னது பற்றி பேசவே இல்லை. ஒருவேளை படிக்கும் பெண்ணிடம் எப்படி திருமண விஷயம் பேசுவது என்று எண்ணுகிறாரோ? மதுவந்திக்கு தந்தையின் மௌனம் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

ஆனால் தந்தையிடம் எப்போதுமே சகஜமாய் பேசியறியாததால் அவளாகச் சென்று கேட்க முடியவில்லை. எதுவாக இருந்தாலும் அவரே சொன்னது போல இது அவளது வாழ்க்கை அவளிடம் கேட்டுத்தானே ஆகவேண்டும். அதுவரை பொறுத்துதான் ஆக வேண்டும், கூடவே இப்போது முன்னால் இருக்கும் தேர்வுக்கு படிப்பது நல்லது என்று புத்தகத்துடன் அறையனுள் புகுந்து கொண்டாள்.

ஆனால்.. ஊமை கண்ட கனவு யாருக்கு தெரியும்??..
 
Back
Top