Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

04. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
மதுவந்தி வழக்கம் போல கல்லூரிக்கு சென்றாள். மனோகரி வீட்டிற்கு செல்வதை தேர்வை காரணம் காட்டி குறைத்துக் கொண்டாள். ஆனாலும் மனோகரியின் மீது உண்மையான பாசம் வைத்துவிட்டதால் அவளை காணாமல் இருக்கமுடியவில்லை.
கூடவே எப்போது இவள்தான் என் மருமகள் என்று மனோகரி எவளையாவது அறிமுகப்படுத்தி விடுவாளோ என்று மனதில் ஒரு பரிதவிப்புமாக மதுவந்தி இருவித உணர்வில் தத்தளித்தாள்.

அன்று வெள்ளிக்கிழமை படிப்பிற்கான விடுமுறை என்பதால் மதுவந்தி வீட்டில் இருந்தாள். மாலையில் கோயிலுக்கு போகலாம் என்று மனோகரி சின்னவளை அழைத்திருந்தாள். கூடவே, அங்கே அவளுக்கு ஒரு நல்ல செய்தி சொல்வதாக சொல்லி மனதில் கலக்கத்தையும் உண்டு பண்ணிவிட்டிருந்தாள். வருவதாகச் சொல்லிவிட்ட பிறகு பின்வாங்கினால் நன்றாக இராது என்று கிளம்பினாள்.

மாலையில்__

மாம்பழக் கலரில் பச்சை பூக்கள் இறைத்த சேலையில் அழகாய் வந்து நின்றவளை விழிகள் விரிய ஒருகணம் பார்த்துவிட்டு கணவரை பார்த்தாள் மனோகரி, பிறைசூடனும் ஆமோதிப்பாய் தலையசைத்தார். அவர்களது பார்வை பறிமாற்றத்தை கவனியாத மதுவந்தி பூஜை கூடையை தாயார் செய்வதில் முனைந்திருந்தாள்.

அங்கே நிசப்தம் நீடிக்கவும் நிமிர்ந்தவள் இருவரும் பார்வையாலேயே விவாதிப்பது தெரிய,"என்னாச்சு ஆன்ட்டி, ஏதும் பிரச்சனையா??" என்று வினவினாள்.

"அட அதெல்லாம் இல்லைம்மா மது, இது எங்களுக்குள்ள எப்பவும் உள்ளதுதான் நான் சரின்னா அவர் வேணாம்னு சொல்வார். சரி நீ தயார் பண்ணிட்டினா வா போகலாம் என்றவள்," நீங்க வீட்டை பூட்டிட்டு வாங்க என்று கணவரிடம் பணித்துவிட்டு சின்னவளின் கைப் பற்றி வாசலுக்கு நடந்தாள் மனோகரி.

கோவில் நெருங்க நெருங்க மதுவந்திக்கு மனம் திக்திக் என்று வேகமாய் அடித்துக் கொண்டது. காரிலிருந்து இறங்கக்கூட முடியாதபடி உடம்பெல்லாம் ஒருவித இறுக்கம் உண்டாயிற்று.

"மது,இறங்குமா, என்னாச்சும்மா? உடம்பு சரியில்லையா உன் முகமே சரியில்லையேம்மா?", பரிவுடன் கேட்டாள்.

நிகழ்விற்கு திரும்பி, "அது.. அதெல்லாம் ஒன்னுமில்லை ஆன்ட்டி. நான் நல்லாதான் இருக்கேன் வலிய வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன் அவசரமாய் இறங்கினாள்!

கோயிலில். ..

வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒருவாறு அர்ச்சனையை முடித்துக் கொண்டு பிரஹாரத்தில் அமர்ந்தனர்.

சிலகணங்கள் அங்கே மௌனம் நிலவ மனோகரி அதை கலைத்தாள்.
" மது, நான் நல்ல விஷயம் சொல்றேன்னு சொன்னேன்ல, என் பிள்ளை நான் பார்த்து வச்சிருக்கிற பெண்ணை கட்டிக்கிறேன்னு சொல்லிட்டான். எங்க பெண்ணோட பிரசவம் முடிஞ்சதும் கல்யாணத்தை வச்சுக்கலாம்னு நாங்க முடிவு பண்ணிருக்கோம்" என்று அவள் சொல்ல சொல்ல மதுவந்தி பேச்சற்று போனாள்.

"என்னம்மா மது, நான் எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்றேன், ஏன்மா நீ எதுவும் பேசமாட்டேங்கிற??" நானும் கிளம்புனதுல இருந்து கவனிச்சுட்டுதான் இருக்கேன் நீ சரியாவே இல்லை. என்ன விஷயம்மா? ஆன்ட்டிக்கிட்ட சொல்லும்மா"

" அப்படில்லாம் ஒன்னுமில்லை ஆன்ட்டி. நைட் எல்லாம் ரொம்ப நேரம் படிச்சேனா அதுதான் கொஞ்சம் சோர்வா இருக்கு. நல்லா தூங்கி ஓய்வெடுத்தா சரியாய் போகும் என்றவள் தொடர்ந்து,"நல்ல விஷயம் ஆன்ட்டி வாழ்த்துக்கள்!"

"வாழ்த்தெல்லாம் இருக்கட்டும் மதும்மா, உனக்கு தெரியுமா என் பிள்ளை இன்னும் பெண்ணைக் கூட பார்க்கலை! போட்டோ அனுப்புறேன்னு சொன்னேன். ஆனா அவன் என்னடான்னா "அம்மா உனக்கு பிடிச்சா போதும் நான் பெண்ணை நேர்ல வந்து பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டான்."

"உங்க பிள்ளை கிரேட் ஆன்ட்டி, உங்களுக்கு மருமகளா வரப்போற பொண்ணு லக்கி" புன்னகையுடன் மதுவந்தி சொல்ல

"அவள் லக்கி இல்லைம்மா நாங்கதான் அவளை மருமகளா அடைய ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணிருக்கோம்",என்றபோது

"மனோ, நேரமாச்சும்மா, கிளம்பலாம்" என்று பிறைசூடன் எழுந்து கொள்ள மற்ற எழுந்து கொண்டனர்.

பிறைசூடனுக்கு இந்தப் பேச்சு பிடிக்கவில்லை என்று மதுவந்திக்கு தோன்றியது. ஏதோ மனோகரி சொல்லவந்ததை சொல்லவிடாமல் தடுக்கும் முயற்சி போலத் தோன்றியது.
அப்படி என்ன சொல்லிவிடப் போகிறாள் ஆன்ட்டி??

யோசனையுடன் காரில் ஏறிக் கொண்டவள் வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசவில்லை. அதற்கு ஏற்றாற் போல் மனோகரி கணவரிடம் மும்பைக்கு போவதற்கான பேச்சில் ஈடுபட்டிருந்தாள். நம்மைப் போல பிறரும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கமுடியுமா??
 

Attachments

  • 20201209_093413.jpg
    20201209_093413.jpg
    324.1 KB · Views: 0
Back
Top