Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

04. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
26
Points
28
Location
India
காலையில் மழையில் நனைந்ததும், பயத்தில் மயங்கியதுமாக அன்று பின் மாலையில் நிரஞ்சனாவிற்கு நல்ல காய்ச்சல். கைவைத்தியம் செய்தும் கேட்கவில்லை. சிந்தாமணி கிழவி இரவிற்காக குழைந்த சாதமும், பூண்டு ரசமும் செய்து வைத்துவிட்டு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தவளை எழுப்பலாம் என்று வந்தவளுக்கு அவள் உடம்பு நெருப்பாய் கொதிப்பதை உணர்ந்து கவலையுடன் கண்கலங்கினாள்.

அவளது தொடுகையில் தூக்கம் கலைந்த நிரஞ்சனா கலக்கத்துடன் இருந்த பாட்டியைப் பார்த்துவிட்டு மெல்ல எழுந்து அமர்ந்தாள். "பாட்டி, காய்ச்சல் நிற்கலைன்னு கவலைப் படாதீங்க, அங்கே மேசை மேலே ஏதாவது ஒரு தாளையும் பேனாவைவும் எடுத்து வாங்க என்று சுவரில் சாய்ந்து அமர்ந்தாள். சிந்தாமணி வேகமாய் எடுத்து வந்து நீட்டியதை, ஜுர வேகத்தில் என்னவென்று கூட பாராமல் கிழித்து அதில் வெற்றுப் பக்கத்தில் மளமளவென்று எழுதிக் கொடுத்து, இதை மருந்துக்கடையில் கொடுங்க , மருந்து தருவாங்க. வாங்கிட்டு வாங்க, "என்றவள் அப்படியே படுக்கையில் சரிய, வேகமாய் கதவை வெளிப்புறத்தில் பூட்டிவிட்டு ஓட்டமும் நடையுமாக விரைந்தாள் சிந்தாமணி.

இரவு நேரம் லேசாய் தூறிக் கொண்டிருந்தது. உணவை முடித்துவிட்டு சக்தி சுந்தரம் அவனது அன்னைக்காக தைலம் வாங்க வந்திருந்தான். அந்தக் கிராமத்தில் சின்ன கடைதான். அந்த மருந்தகம் வைப்பதற்கு அவன்தான் யோசனை சொன்னான். அவன் ஈரோட்டில் கல்லூரியில் படித்தபோது பழக்கமானவன் சங்கர். பெற்றோர் இல்லாமல் காப்பகத்தில் வளர்ந்து படித்துவிட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருந்தவனுக்கு இந்த யோசனை பிடித்துவிட்டது. பண உதவியும் சக்தி ஏற்பாடு செய்து கொடுத்ததால் எப்போதும் அவன் மீது தனி மரியாதை.

மருந்து வாங்கிக் கொண்டு உடனே கிளம்பாமல் நின்று பேசிக்கொண்டிருந்தான். அப்போதுதான் சிந்தாமணி மருந்து வாங்க அங்கே வந்து சேர்ந்தாள்.

அதற்கு முன்பு அவளை சங்கர் பார்த்தது இல்லை."என்ன பாட்டி ஊருக்கு புதுசா? விலாசம் கேட்க வந்தீங்களா?" என்று அவள் நீட்டிய தாளை வாங்கினான்

"இந்த ஊருதான் தம்பி, கொஞ்ச நாள் என் மகன் வூட்ல இருந்துட்டு வந்தேன்"என்றுவிட்டு, சீக்கரம் மருந்தை கொடு மழை வந்துட்டாக்க கஷ்டம்"என்று அவசரப் படுத்தினாள்.

"அப்படியா நான் உங்களை பாரத்ததேயில்லையே,"என்று பார்வையை தாளில் ஓடவிட்டவனின் புருவம் சுருங்க, "என்ன பாட்டி இந்த மருந்து வேணுமா?" என்றவன் மீண்டும் அந்த தாளில் பார்வையை பதிக்க, அதை கவனித்துவிட்டு

"என்னாச்சு அண்ணா? மருந்து தப்பா எழுதியிருக்காங்களா?" யாரு நம்ம டாக்டரா? "என்று விசாரித்தான் சக்தி.

“இல்லை, சக்தி மருந்து சரிதான், கைஎழுத்தும் டாக்டரோடது போலத்தான் இருக்கு. ஆனால் இது மருந்து சீட்டு இல்லை. அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு"
என்ற சங்கர் "ஆமா பாட்டி இதை யார் எழுதிக் கொடுத்தது?"

"ஒரு கணம் திகைத்து பின் சமாளித்த சிந்தாமணி,"நான் பட்டணத்துல இருந்தப்போ அங்கன பக்கத்துவூட்ல டாக்டர் பொண்ணு இருந்துச்சி அதுதான் எழுதிக் கொடுத்துச்சி" என்றாள்.

ஏதோ முரண்பாடு இருப்பதை உணர்ந்து அவளையே பார்த்திருந்த சக்திக்கு அப்போதைக்கு அது என்னவென்று புரியாவிட்டாலும் அவளது முக மாற்றத்தை கவனிக்க தவறவில்லை,

சங்கர் கையில் இருந்த தாளை வாங்கிய சக்தி," மருந்து சரிதான் என்றால் கொடுத்து அனுப்புங்க அண்ணா" என்று தாளின் மறுபுறம் பார்த்தான். அது ஒரு திருமணம் அழைப்பிதழின் உறை. மணமக்களின் பெயர்கள் மணமகன் பெயர் இருந்தது. மணமகன் - Aravindhan M. மணமகள் பெயர் இருந்த இடத்தில் Abaranji M என்று இருந்தது. இருவரின் பட்டமும் கிழிக்கப்பட்ட பகுதியில் போய்விட்டது போலும். பெண்ணின் பெயர் அவனுக்கு கேள்விப்பட்டதாக தோன்றியது.

அதில் இருந்த தேதிப்படி பார்த்தால் திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும். அவனுக்கு ஏனோ அந்த பாட்டி சொன்னதில் தவறு இருப்பதாக தோன்றியது. ஆனால் என்ன யோசித்தும் அது விளங்கவில்லை.

"சக்தி தம்பி " என்று சங்கர் உரக்க அழைக்க தலையை குலுக்கிவிட்டு" சொல்லுங்க அண்ணா" என்றான் அவசரமாய்

"என்ன தம்பி கண்ணைத் திறந்துட்டே கனவு காணுறியா?" என்று கேலியாய் கேட்டு சிரிக்க,

முகம் சிவக்க, "அய்யோ அதெல்லாம் இல்லை அண்ணா, இந்தப் பேப்பரைப் பார்த்துட்டு இருந்தேன்", என்று அவசரமாய் சொல்ல,

"ஓ! அப்படியா? சரி ,சரி தம்பி மழை வலுக்கிறதுக்குள்ள விரசா வீடு போய் சேரு. நானும் கடையை சாத்தனும் இதுக்கு மேல் இந்த மழைல யாரு வரப்போறாங்க? " என்று கடை மூடுவதில் முனைந்தான் சங்கர்.

சக்தி விடைபெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான். சிந்தாமணியை அவன் ஊருக்குள் பார்த்த நினைவில்லை. திடுமென யார் இவள்? எங்கே இருக்கிறாள்? பட்டணத்தில் இருந்த போது என்று ஏதோ சொன்னாளே? அவனுக்கு மனம் பரபரத்தது. ஒரு வேளை காலையில் கண்ட அழகி இவளுக்கு சொந்தமோ? ஆனால் இவளுக்கும் அவளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. யோசித்தவாறு வீடு வந்த சக்தி அந்த முகத்தை நினைவிற்கு கொண்டு வந்து பார்த்தான். நிழல் படம் போல, திடுமென அந்த முகத்தை எங்கோ பார்த்த ஞாபகம் வந்தது. எங்கே....??

 

Attachments

  • IMG-20220111-WA0024.jpg
    IMG-20220111-WA0024.jpg
    86.6 KB · Views: 0
Back
Top