Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

03. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
பெங்களூர்...

சித்ரஞ்சன் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து காரில் திருமணத்திற்கு கிளம்பியிருந்தான். செல்லும் வழியில் ஏதோ ஊர்வலம் குறுக்கிட்டது. அப்போது தான் சில கல்லூரிப் பெண்கள் லிப்ட் கேட்டனர். "பரீட்சைக்கு நேரமாகிறது சார் கொஞ்சம் எங்களை ட்ராப் பண்ணிவிடுங்கள் என்று" அவனால் எப்படி உதவ முடியும் ஊர்வலம் நகர்ந்தால் அல்லவா சாத்தியம்.? அதை சொல்லவும் செய்தான்.

அப்போதுதான் அவள் முன்னால் வந்து பேசினாள்,"சார், நாங்கள் வந்த ஆட்டோ ஏதோ காரணத்தினால் பழுதடைந்து விட்டது. நடந்து செல்லவும் முடியாது காலை நேரம் என்பதால் வேறு வாகனமும் கிடைக்கவில்லை. இந்தப் பக்கம் கிளைப்பாதை இருக்கிறது. ஊர்வலத்தை கடக்க அது ஒன்றுதான் வழி. எங்களுக்கும் அந்த வழியாக தான் செல்ல வேண்டும். கொஞ்சம் உதவி செய்யுங்கள் சார். இல்லாவிட்டால் பரீட்சைக்கு தாமதமாகிவிடும்" என்றாள்.

பெங்களூரு அவனுக்கு கொஞ்சம் பழக்கம்தான். ஆனால் இந்த இடம் சற்று புதிது. ஹோட்டலில் வழி எல்லாமும் சொல்லியிருந்தார்கள். இப்போது இவர்கள் சொல்லும் வழியில் அந்த திருமண மண்டபம் வருமா என்று தெரியவில்லை. ஆனால் தேர்வு மிக முக்கியமானது. உதவித்தான் ஆகவேண்டும், திருமணத்திற்கும் போயாக வேண்டும். சரி என்று அவர்களை ஏறச் சொன்னான். அவள் முன் புறம் ஏறி அவனருகில் அமர்ந்து கொள்ள மற்ற இருவரும் பின்னால் ஏறிக் கொண்டனர். போகும் வழியை அவள்தான் சொன்னாள். கூடவே அவன் எங்கே போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அதற்கும் எளிதாக வழி சொன்னதோடு நில்லாது, வரைபடமே போட்டுத் தந்துவிட்டாள்.

அவர்களை தேர்வு எழுதும் மையத்தில் இறக்கி விட்டுவிட்டு திருமண மண்டபத்திற்கும் முன்னதாகவே போய் சேர்ந்தான் சித்ரஞ்சன். காரிலிருந்து இறங்கும் போதுதான் அவளது ஒரு புத்தகம் விட்டுப் போயிருந்ததைப் பார்த்தான். அதை திறந்து பார்த்த போது அதிலிருந்து ஒரு சீட்டு கீழே விழ, எடுத்துப்பார்த்தவன், அது ஹால் டிக்கட் என்று புரிந்தது.

அவனுள் லேசாய் பதற்றம் தொற்றிக் கொள்ள மணி பார்த்தான்,தேர்விற்கு இன்னும் அரைமணி நேரம் பாக்கி இருந்தது. காரை கிளப்பிக் கொண்டு விரைந்தான். பரீட்சை ஹாலுக்குள் செல்லும் மணி அடிக்கப்பட்டு மாணவ மாணவிகள் உள்ளே சென்று கொண்டிருந்தனர். தோழிகளுடன் அவள் கண்ணீருடன் கைகளைப் பிசைந்தபடி நின்ற தோற்றம் அவனுக்கு கஷ்டமாக இருக்க.. விரைந்து சென்று டிக்கெட்டை அவளிடம் நீட்டவும், அவளது கண்ணீர் நின்று பளிச்சென்று முகம் மலர்ந்து விகசித்தது. அந்த முகம் அப்படியே சித்ரஞ்சனின் மனதில் பதிந்து போயிற்று

***

திருமண மண்டபத்திற்கு திரும்பி அவன் உள்ளே நுழைய அப்போது தான் மணமகளை மணவறைக்கு அழைத்து வந்தனர்.

ஏதோ ஒருவித திருப்தி மனதில் குடிகொண்டது. மணமக்களை சாங்கியம் செய்ய சொல்லிக்கொண்டிருந்தார் ஐயர். திடுமென அவனும் சற்று முன்ன பார்த்த மாணவியும் மணவறையில் அமந்திருப்பது போன்ற காட்சி மனதில் தோன்ற திடுக்கிட்டுப் போனான். என்ன அசட்டுத்தனமான கற்பனை என்று தன்னையே கடிந்து தலையை உலுக்கிக் கொண்டான். இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிலும் அந்தப் பெண் இப்போது படித்துக் கொண்டிருக்கிறாள். இப்படி நினைத்தது தெரிந்தாலே அவள் அதிர்ந்து போவாள். மனதுக்குள் எதை எதையோ எண்ணிக் கொண்டிருக்க,"கெட்டி மேளம் கெட்டி மேளம்" என்ற குரலில் மண்டபம் மேள தாளத்தின் சத்தத்தில் அதிர சுய உணர்விற்கு வந்தான்.

விருந்து முடிந்து அவன் விடைபெற்று ஹோட்டலுக்கு திரும்பியபின்னும் அந்தப் பெண்ணை அவனால் எளிதில் மறக்கமுடியவில்லை. இது என்ன விசித்திரமான பழக்கம் என்று எரிச்சல் உண்டாயிற்று. இரவு சென்னை திரும்ப வேண்டும். சற்று நேரம் ஓய்வெடுத்தால் நன்றாக இருக்கும் போலத் தோன்ற படுத்துவிட்டான். அரையடிக்கு அமுங்கும் சொகுசு மெத்தையில் படுத்ததுமே தூக்கம் கண்களைத் தழுவியது.

சித்தரஞ்சன் ஊர் திரும்பிய பின்னும் அந்தப் பெண்ணின் முகம் அவ்வப்போது மனதில் வந்து கொண்டுதான் இருந்தது. வேலைப் பளுவில் கொஞ்சம் கொஞ்சமாய் மறக்கவும் செய்திருந்தான்.

மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் தொழில் சம்பந்தமாய் பெங்களூர் செல்ல வேண்டிய நிர்பந்தம். கூடவே அங்கேயே தங்கியிருந்து பார்க்க வேண்டிய வேலை என்பதால் ஹோட்டலில் தங்கினால் கட்டுப்படி ஆகாது என்று எண்ணினான். அங்கே இருந்த நண்பனிடம் உதவி கேட்ட போது அவன் தன் வீட்டில் தற்சமயம் யாருமில்லை என்றும் மனைவி பிரசவத்திற்கும் பெற்றோர் பக்தி சுற்றுலாவிற்கும் சென்று இருக்கிறார்கள். பிரசவத்திற்கு நாள் நெருங்குவதால் அவனும் கூட இரண்டு நாளில் மனைவியை காண செல்வதாக இருப்பதால் 10 நாட்கள் தாராளமாய் தங்கிக் கொள்ளச் சொன்னான். சித்தரஞ்சனுக்கு தங்கும் இடம் பிரச்சனையின்றி முடிந்தது என்று நிம்மதி உண்டாயிற்று.

இரண்டு நாள் கழித்து நண்பனும் கிளம்பிச் சென்றுவிட சித்ரஞ்சன் பணியை முடித்துக் கொண்டு அது பற்றிய சிந்தனையோடு நண்பனின் வீட்டிற்கு திரும்பினான். அது புறநகர் பகுதி என்பதால் 8 மணிக்குள்ளாகேவ அந்த பிராந்தியம் முழுதும் ஒருவித மாயான அமைதியில் முழ்கியிருந்து. அவனும் சற்று மெல்லத்தான் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.

ஆகவே திடுமென ஒரு சந்தினுள் இருந்து ஓடி வந்த இளம்பெண்ணை கடைசி வினாடியில் பார்த்து வண்டியை பிரேக்கிட்டு நிறுத்தி விட்டிருந்தான். அப்படியும் வந்த வேகத்தில் அந்த இளம்பெண்அவன் காரின் மீது மோதி கீழே விழுந்தாள். பதறிப் போனவனாய் காரிலிருந்து இறங்கினான்.

அவளை துரத்திக் கொண்டு வந்த இரண்டு பேரும் கல்லூரி மாணவர்கள் போல தோன்றினர். குடித்திருப்பார்கள் போலும் சிறு தடுமாற்றத்துடன் அங்கே வந்து சேர்ந்தனர். அவனது உயரமும் உறுதியுமான தோற்றத்தில் பின் வாங்கி வந்த வழியே காணாமல் போயினர். கீழே விழுந்தவளை நெருங்கி வண்டியின் முன் வெளிச்சத்தில் பார்த்த சித்தரஞ்சன் வெகுவாய் அதிர்ந்து போனான்.

அவள் ! அன்று லிப்ட் கேட்டவள்.

பெங்களூர் வந்தது முதல் அவள் நினைவு வரத்தான் செய்தது, ஆனால் அவள் யாரோ எவரோ? ஏதோ இக்கட்டில் உதவி செய்ய நேர்ந்தது. அத்தோடு அவளுக்கும் தனக்கும் அதற்கு மேல் எந்த சம்பந்தமும் இல்லை அதனால் இனி அவளைப் பற்றி நினைக்ககூடாது என்ற முடிவிற்கு வந்திருத்தான்.

ஆனால் தலையில் அடிபட்ட நிலையில் அவளை காணவும் ஒருகணம் அசைவற்றுப் போனான். ஒரு தவிப்பு இன்னதென்று உணரமுடியாமல் உண்டாயிற்று. சட்டென்று அவளை அள்ளித் தூக்கி காரில் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்... சித்ரஞ்சன்.

அங்கே.....
 
Back
Top