Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

03. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
மனோகரி அவளை பார்த்துவிட்டாலே முகம் மலர வரவேற்பது வழக்கம்தான். ஆனால் அன்று அவளது முகம் மலர்ந்து விகசித்தது. என்ன விஷயமாக இருக்கும்? ஆர்வமாய் மதுவந்தி கூடத்திற்கு சென்றால்...

அங்கே டிவி திரையில் ஏதோ விழாவை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். இல்லை அது சிடி என்று மனோகரி தெரிவித்தாள்.

மகனின் நிறுவனத்தில் அவனுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கும் விழாவின் தொகுப்பு அது என்று தெரிவித்து திரையில் தெரிந்த மகன் ரவீந்தரனை காட்டினாள் மனோகரி.

அன்றுதான் மதுவந்தி முதல் முறையாய் அவனை பார்த்தாள். ஆறடி உயரத்தில் சினிமா கதாநாயகன் போல அழகும் கம்பீரமுமாக திரையில் தெரிந்தவனை பார்த்தவளுக்கு கண்ணை சட்டென விளக்கிக் கொள்ள இயலவில்லை.
அவள் ஒருவாறு மனோகரியின் பேச்சில் சுதாரித்துக் கொண்டு திரும்பிய போது தட்டில் சிற்றுண்டியை கொணர்ந்து தந்தாள் பெரியவள்.

"எப்படி என் பிள்ளை ?? ராஜா மாதிரி இருக்கான்ல? இவனுக்கு ஏத்த ராஜகுமாரியைத் தான் நான் இவ்வளவு நாளாய் தேடிக் கொண்டிருந்தேன்மா மது".

தேடிக் கொண்டிருந்தேன் என்றால் இப்போது கண்டுபிடித்தாயிற்றா? எண்ணும்போதே ஏனோ தொண்டையில் அடைத்தது. ஆயினும் சமாளித்து," இ..இப்போது கண்டுபிடித்து விட்டீர்களா ஆன்ட்டி?" தடுமாறாமல் கேட்டு முடித்தாள் மதுவந்தி

"ஆமா மது" இன்னும் சுமதி (மகளின் பெயர்) அப்பாக்கிட்ட சொல்லலை. அவர் அபிப்ராயம் கேட்டுட்டு அப்புறமா ரவிக்கிட்ட பேசனும் என்றவளின் முகத்தில் மர்மப்புன்னகை.

மதுவந்திக்கு என்ன சொல்வது என்று புரியாத நிலை, ஆனால் நல்ல வேளையாய் மனோகரியே மேலும் பேசினாள்.

"மது,பொண்ணு யாருன்னு நீ கேட்கலையே" என்று மனதை மீண்டும் திடுக்கிட வைத்தாள்.

"யா..யாரு ஆன்ட்டி? உங்க உறவுக்காரப் பெண்ணா?" கோர்வையாய் கேட்டுவைத்தாள்.

"இல்லைம்மா மது. பொண்ணு இந்த ஊர்தான். அதான் சொன்னேன்ல உன் அங்கிள் பச்சை கொடி காட்டட்டும் உன்கிட்ட சொல்லிடுறேன். அங்கிள் மறுக்க மாட்டார் தான் இருந்தாலும் கேட்கவேண்டியது கடமையில்லையா? அவள் பீடிகை போடப் போட மதுவந்திக்கு உள்ளம் கலங்கியது.

அது நாள் வரை மனோகரி மகனைப் பற்றி சொல்லி சொல்லி மதுவந்திக்கு அவளறியாமலே ரவீந்தரனிடம் ஒரு லயிப்பு உண்டாகிவிட்டிருந்தது. ஆனால் இன்னதென்று தெரியாமல் இருந்த அந்த உணர்வு இன்று மனோகரியின் திருமணப் பேச்சில் விளங்கிப் போயிற்று. ஆனால்....என்ன பயன்??

மனோகரியின் பேச்சினால் மனம் தவித்தபோதும், தன்நிலையை ஒருகணம் எண்ணிப் பார்த்தவளுக்கு ரவீந்திரனை வாழ்க்கை துணையாய் அடைய தனக்கு எந்த தகுதியும் இல்லை என்ற முடிவிற்குத்தான் வரவேண்டியிருந்தது.

அந்தஸ்திலும் படிப்பிலும் அவனுக்கு அவள் கிட்டே கூட போகமுடியாது. ஏதோ தாயில்லாப் பெண் என்று பரிவாக நடத்துகிறாள் என்பதற்காக அவளை மருமகளாக மனோகரிதான் ஏற்றுக் கொள்வாளா என்ன??

படிப்பை முடித்தால் வேலை கிடைக்கும் தரம் கொஞ்சம் உயரும் தான். ஆனால் அந்த வீட்டிற்கு மருமகளாக வாய்ப்பேஇல்லை, என்பதை உணர்ந்தபின் மதுவந்தியின் மனம் சற்று சோர்வுடன் அமைதியுற்றது.

"என்னம்மா சாப்பிடாம அப்படியே வச்சிருக்கே? உனக்கு பிடிக்குமேனுதான் கேசரி செய்தேன். அப்படி என்ன தீவிரமான யோசனை??"

மனோகரியின் குரலில் கலைந்தவள், "அது காலேஜ்ல சிநேகிதி ஒருத்திக்கு உடம்பு சரியில்லை ஆன்ட்டி. இந்த செமஸ்டர்ல கலந்துக்குவாளோ மாட்டாளோன்னு கவலையா இருக்கு." என்றுகேட்டதற்கு பதில் சொல்லவேண்டுமே என்று தடுமாறாமல் மதுவந்தி சொன்னாள்.

உண்மையில் தோழி ஒருத்தியின் நிலை அப்படித்தான் இருந்தது. இப்போதைக்கு அது ஞாபகத்திற்கு வந்து கை கொடுத்தது. இன்னும் அதிக நேரம் அங்கே தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணியவளாய் இரண்டு வாரத்தில் தொடங்கவிருந்த பொது தேர்வை காரணம் காட்டி மதுவந்தி வீட்டிற்கு வந்துவிட்டாள்.

வீட்டில் எந்த வேலையும் ஓடவில்லை. ஆனாலும் தினமும் செய்யும் வேலைகளை செய்யாமலும் இருக்க முடியாதே. இயந்திர கதியில் சமையல் மற்றும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். மனதை ஒருமுகப் படுத்தி படிக்கத் தொடங்க சற்று நேரத்தில் அதில் மூழ்கிப் போனாள்.

இரவில் தாமதமாக வந்த தந்தையுடன் சாப்பிட்டு சமையலறை வேலைகளை முடித்து படுக்கையில் விழுந்தபோது ரவீந்தரனின் சிரித்த முகம் மனதில் விரிந்தது. முதல் முறையாய் வாழ்வில் நிராசையும் துக்கமும் ஒருசேர அவளை கண்கலங்க வைத்தது....!

நினைப்பதெல்லாம்நடந்துவிடுமா என்ன??

 

Attachments

  • 20201209_093413.jpg
    20201209_093413.jpg
    324.1 KB · Views: 0
Back
Top