Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

03. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
26
Points
28
Location
India
அதிகாலையில் கண்ட பேரழகியின் முகவரி அறியாமல் சக்திக்கு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. ஆகவே நேராக மளிகை கடை வைத்திருக்கும் தன் பால்ய நண்பன் அன்பரசனை தேடிச் சென்றான்.

" அடடே , என்னப்பா சக்தி அதிசயமா இந்தப்பக்கம் ? என்று அன்பரசு வரவேற்றான்.

ஆர்வத்தில் வந்துவிட்டவனுக்கு, அது வியாபார நேரம் என்பது அங்கிருந்த கூட்டத்தை காணவும் தான் புரிந்தது. அதனால் சற்று தயக்கத்துடன் "உன்கிட்ட கொஞ்சம் பேசனும்டா, இப்ப வர முடியுமா?" என்று வினவினான்.

காரணம் இல்லாமல் சக்தி அவனை அந்த வேளையில் தேடி வரமாட்டான் என்று அறிந்திருந்த அன்பரசன்,

" அவ்வளவுதான? இதுக்கு ஏன்லே, சங்கடப்படுதே? வாடான்னா வந்துட்டுப் போறேன்", என்றவன் கடையில் கணக்குப்பிள்ளையிடம் பொறுப்பை விட்டு நண்பனுடன் கிளம்பிவிட்டான்.

அன்பரசின் பைக்கில் இருவரும் சக்தியின் தென்னந் தோப்பிற்கு சென்றனர். அங்கே கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்த போது காவல்க்காரன் ஓடிவந்தான்.

அவனை இரண்டு இளநீர் வெட்டி வரச்சொல்லி அனுப்பிவிட்டு சிலகணங்கள் அங்கே பலத்த மொளனம் நிலவியது.

பொதுவாக சக்தி அதிகம் பேசுகிறவன் இல்லை என்றாலும் சொல்லவேண்டியதை சொல்லி விடக்கூடியவன். ஒரு பெண்ணை பற்றி அவனுக்கு யாரிடமும் பேசி பழக்கமில்லை. அதுவும் பழகிய நண்பனிடத்தில் ரொம்பவே கூச்சமாக இருந்தது. அவன் எதுவும் தன்னை தப்பாக எண்ணிவிடக்கூடாது என்ற கலக்கம்.. ஆகவே பொதுவான விஷயமென்று எண்ணி, "வீட்டில் எல்லாரும் சௌக்கியமா அன்பு? மகள் பள்ளிக்கூடம் போறாளா? என்று விசாரிக்க,

"சௌக்கியத்துக்கு என்னாலே குறைச்சல்? எல்லாம் நல்லாதா இருக்காக... அதெல்லாம் சந்தோசமா போகுது..தோப்பை சுற்றிலும் நோட்டம் விட்டவண்ணம் நண்பன் கேட்டதற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தவன், சட்டென பேச்சை நிறுத்தி நண்பன் முகத்தை பார்த்து....

"ஏலேய், என்கதை பேசவா கடையில யாவாரம் பார்த்துட்டு இருந்தவன, இங்கன கூட்டியாந்தே? என்னாலே விசயம்? வீட்டுல கண்ணாலம் பேசி முடிச்சுட்டாகளா? அல்லது நீ ஏதானும் பொண்ணை பார்த்து வச்சிட்டியா" என்று அன்பரசு கேட்டான்.

அன்பரசனுக்கு படிப்பு குறைவென்றாலும் அடுத்தவர் மனதை சிலசமயம் சட்டென்று பிடித்துவிடுவான். சக்தி நண்பனின் அந்த கேள்வியில் ஒருகணம் திடுக்கிட்டு, சுதாரித்து "சே, சே அதெல்லாம் இல்லைடா, வந்து நீ என்னை தப்பா நினைக்க கூடாதுடா" என்று தயங்கவும்,

"உன்னை எனக்கு தெரியாதாலே, என்னாலே இது, எதுன்னாலும் நறுக்குதெறிச்சாப்ல பேசுற சக்திக்கு இன்னிக்கு இவ்ளோ சுணக்கமா? என்னாலே விசயம்?" கேட்ட அன்பரசனுக்கு சுவாரசியம் உண்டாயிற்று.

"நம்ம ஊருக்கு புதுசா ஏதும் பொண்ணு வந்திருக்குதா?" சக்தி கேட்டு முடிக்கவும்,

"அப்படி போடு அறுவாலே, நான் நினைச்சேம்ல, பய எதுக்கு இப்படி பம்முதான்னு", சரி, சரி கோவப்படாதலே, நீ விசயத்தை முழுசா சொல்லு"

"நான் சொல்றது இருக்கட்டும்டா, நீ முதல்ல சொல்லு பொண்ணு வந்திருக்கா ? உனக்கு தெரியுமா? "

"எனக்கு தெரியல சக்தி, நீ பார்த்தியா?" என்றான் ஆர்வமாய்.

‘’ஆமா, என்றவன் நண்பனின் கண்களில் தெரிந்த ஆவலை கண்டுவிட்டு, "கனவுல பார்த்தேன்டா, நம்ம ஊருக்கு ஒரு பொண்ணு வந்திருக்காப்ல, அதான் உன்கிட்ட விசாரிக்கலாம்னு வந்தேன்"

"ம்க்கும், சும்மா கதை விடாதே மாப்ளே, நிசத்தை சொல்லு", எங்கே பார்த்த அந்த பொண்ணை?"

"நிஜமாதான்டா, கனவுல பார்த்ததுல இருந்து கட்டினா அவளைத்தான் கட்டனும்னு முடிவே பண்ணிட்டேன். அதுதான் உனக்கு நம்ம ஊர்ல யார் புதுசா வந்தாலும் தெரியாம போகாதுன்னு விசாரிக்க வந்தேன்"

"ம்க்கும், அவனவன் கண்ணால பார்த்து, பேசி பழகியே கடைசில ஊத்திக்குது, நீ கனவுல பார்த்தவள கண்ணாலம் பண்ணிக்க நினைக்கிறியே, இதெல்லாம் சினிமாலதான்லே நடக்கும் நிசத்துல நடக்காது என்ற அன்பரசு," நிசத்தை சொல்லு மாப்ளே, அந்த பொண்ண எங்கன பார்த்தே?" சந்தேகமாய் கேட்டான்.

"அட, பார்த்திருந்தா அவ பின்னாடியே போய் கண்டு பிடிச்சிருக்க மாட்டேனா? உன்கிட்ட வந்து ஏன் கேட்கப் போறேன் ?ஆனால் அவளை தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் "

"ஏலேய், நீ கனவுல பார்த்தவளைத் தான் கட்டிக்கிடனும்னா ஊர்ல எவனுக்கும் கண்ணாலமே அவதுலே, பார்த்துலே அது ஏதாவது மோகினி பிசாசா இருக்கப்போவுது ஜாக்கிரதை " அன்பரசு கிண்டலாய் சொல்ல ஒருகணம் உள்ளூர திடுக்கிட்டுப் போனான் சக்தி, உடனேயே அந்த முகம் மனதில் தோன்ற தலையை உலுக்கிக் கொண்டவனாய், "நீ பொறுத்திருந்து பாருடா, நான் சொன்னதை செய்றேனா இல்லையானு?" சவால் போல சொன்னான்.

"பார்ப்போம்லே, சரி நான் கடைக்குப் கெளம்றேன். அந்தப் பொண்ணு கிடைச்சா சொல்லுலே" அன்பரசு விடைபெற்று எழவும் தன்னை களத்துமேட்டில் விட்டுவிடுமாறு சொல்லி அவனுடன் கிளம்பினான் சக்திசுந்தரம். வழிநெடுகிலும் ஏதேதோ அன்பரசன் பேசிக்கொண்டு வந்தது எதுவும் அவன் மனதில் பதியவில்லை. களத்துமேட்டில் இறக்கியபின் நண்பனை வினோதமாக நோக்கிவிட்டுப் போனான் அன்பரசன்.

சக்திக்கே சற்று வியப்பாகத்தான் இருந்தது. யாரோ ஒரு பெண்ணைப் பற்றி அறிந்து கொள்ள தவிப்பது அவன்தானா?? யோசனைகளுடனே வேலையில் இறங்கினான்.

சக்தி நிரஞ்சனாவை சந்தித்து விடுவானா ?? யாரவள் சக்தியை தன் பின்னோடு அலைய வைக்கும் மங்கை ??
 

Attachments

  • IMG-20220111-WA0024.jpg
    IMG-20220111-WA0024.jpg
    86.6 KB · Views: 0
Back
Top