மாப்பிள்ளை வீட்டார் திருமண தேதி குறித்து விட்டு வருவதாக சொல்லி போனதில் மாலதிக்கு நிம்மதியும் சந்தோஷமும் உண்டான போதும் சின்ன மகள் மதுமதியின் மீது மிகுந்த ஆத்திரம் இருந்தது. அன்று இரவு அவள் வீட்டிற்கு வரவில்லை. அவளது தோழி ஒருத்தி தன்னுடன் இருப்பதாக தகவல் சொன்னாள். அப்போது இருந்த மனநிலையில் மாலதிக்கு துருவிக் கேட்க மனமும் இல்லை. அவள் திட்டமிட்டு செய்திருக்கிறாள் என்பது தெளிவாக தெரியும். அத்தோடு அவள் இப்போது வீடு வந்தால், மகதி வந்திருப்பது தந்தைக்கு தெரிந்து போகும் என்றுதான் அவள் வீட்டிற்கு வரவில்லை என்பது புரிந்தது.
கணவர் மதனகோபால் சரி சரி என்று விட்டுக் கொடுக்கிறவர் தான். ஆனால் பிடித்துவிட்டால் லேசில் விடக்கூடியவர் இல்லை. அதிலும் சின்ன மகளின் இந்த குணம் அவருக்கு அறவே பிடிக்காத ஒன்று. இன்றைக்கு இரு மகள்களின் உருவ ஒற்றுமை சமயத்தில் கை கொடுத்தது . ஆனால் கணவர் அதை அறியும்போது எப்படி மாறுவாரோ என்று கலக்கமாக இருந்தது. அவரிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்வது என்று மனதுக்குள் பலவாறு ஒத்திகை செய்து பார்த்தவளுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. அன்றைய இரவு அவளது தூக்கம் பறிபோயிற்று.
இன்னொருபுறம் மகதி.... சகோதரி இருக்க வேண்டிய இடத்தில் அவள் இருக்க சேர்ந்ததை எண்ணி ஆத்திரமும் ஆதங்கமுமாக தூக்கம் வராமல் புரண்டிருத்தாள். அவளை மீறி நடந்து போனவற்றை ஜீரணிக்க இயலவில்லை. இனிமே
ல் அவள் இந்தப்பக்கமே வரகூடாது என்று தீர்மானித்த பிறகு ஒருவாறு தூங்க தொடங்கினாள். ஆனால் சற்று நேரத்தில் கனவில் வந்த முகம் அவளை பதறி எழவைத்தது. ஏன் இப்போது வந்தது? இதற்கு என்ன அர்த்தம்? ? அவன் யாரோ எவரோ? அன்றைக்கு கொடைக்கானல் கண்காட்சியில் பார்த்தபின், மறுபடி அவனை பார்க்ககூட இல்லை. அவளது மனதில் இருந்த உறுதி காரணமாக அவனை பற்றி திரும்ப எண்ணி பாரத்ததுகூட இல்லை. அப்படி இருக்க, இன்றைக்கு அத்தனை துல்லியமாக அந்த முகம் தோன்ற காரணம் என்ன என்று குழம்பிப் போனாள் மகதி.
அதே நேரம்...
மகேந்திரனின் வீட்டில்...மொட்டை மாடியில் தூக்கம் வராமல், உலவிக்கொண்டிருந்த மகேந்திரன் அன்று மாலை நடைபெற்ற நிகழ்வுகளை மனதுக்குள் திரும்ப திரும்ப ஓட்டி பார்த்துக்கொண்டு இருந்தான்.
மகள் சம்மதம் தெரிவித்ததாக அன்னை மாலதி வந்து தெரிவிக்கவும் எல்லோருக்குமே மட்டற்ற மகிழ்ச்சிதான். எதற்கும் இருக்கட்டும் என்று முன்னேற்பாடாக எடுத்து சென்ற வைர அட்டிகையை அவன் முன்பாகத்தான் மங்களம் அவளது கழுத்தில் மாட்டினாள். வழக்கமாக இதுபோன்ற தருணத்தில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் ரகசியமாக பார்த்துக்கொள்ள ஆசைப்படுவார்கள்.
ஆனால்.., இந்த பெண்ணோ மறந்தும் கூட அவன் புறமாக விழிகளை நகர்த்தவில்லை. சொல்லப்போனால் அவனை அவள் ஏறெடுத்தும் பார்க்கவே இல்லை என்பது அவனுக்கு நிச்சயம். அவன் பாராத வேளையில் அவள் பாரர்த்திருக்கலாம் என்று சொல்வதற்கில்லை. அவன் அங்கிருந்த அத்தனை நேரமும், தன் பார்வை வட்டத்துக்குள் தானே அவளை வைத்திருந்தான். தங்கையின் கணவன் கூட.. "என்ன மச்சான், விட்டால் இப்பவே தாலியை கட்டி கூட்டி போயிருவீங்க போலிருக்கிறது " என்று கை அலம்பும்போது கேலி செய்தான். எல்லாவற்றையும் விட அவனுக்கு பெண்ணின் பெயர் தான் சற்று முரண்பாடாக தோன்றியது.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு கொடைக்கானலில் அவளை முதல் முதலாக அவன் பார்த்த நாள் அப்படியே நினைவு வந்தது. அவன் தன் வியாபார விஷயமாக ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தான். அன்றைக்கு கடைசி நாள், அவரவர் தங்களுக்கு விருப்பமாக கழித்துக் கொள்ளவென்று வெளியே சென்றனர். அவனும் ஒரு கண்காட்சிக்கு சென்றிருந்தான். அங்கே பிளாஸ்டிக்கை புறகணித்து தேங்காய் நார், மட்டை, மற்றும் சணல் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த பொருட்கள் பிரதானமாக இருந்தது. தங்கைக்கு இதிலெல்லாம் மிகுந்த ஈடுபாடு. அவளுக்கு ஏதேனும் பரிசு பொருள் வாங்கலாம் என்று நுழைந்தான். அங்கே ஓர் இடத்தில் இளம்பெண்கள் குழுமியிருந்தனர் கல்லூரி மாணவிகள் போல தோன்றினர், எல்லோரையும் விட சற்று உயரமான அவள் அவனை கவர்ந்தாள். இன்றைய நாகரீக யுகத்தில் அவள் நீளமான கூந்தலை தளர பின்னலிட்டு, காதோரம் ஒற்றை மஞ்சள் ரோஜா வைத்து, சின்ன சின்ன புள்ளிகளாய் சரிகை சிதறல்களுடன் அடர் பிங்க் நிற சேலையில் தேவதையாகவே தோன்றினாள்.
அவளும் அவனை ஏதேட்சையாக பார்த்து உடனே விழிகளை திருப்பி அருகில் இருந்தவளுடன் தீவிரமாக பேசலானாள். இதழில் புன்னகை விரிய அவனும் தன் பார்வையை விலக்கிக் கொண்டு தேவையானதை தேர்வு செய்துவிட்டு, பில்லிங் பிரிவுக்கு சென்றான். பணத்தை செலுத்தி பொருட்களை சரி பார்த்து வாங்கியவனின் பார்வை மீண்டும் அந்த பெண்ணிடம் செல்ல, தன் தோழிகளுடன் அவளும் அங்கே வர, நேருக்கு நேர் காண நேர்ந்தது. ஒருகணம் இருவரின் பார்வையும் மோதிக்கொள்ள அவசரமாக இருவருமே விழிகளை திருப்பி கொண்டனர்.. மகேந்திரன் அங்கிருந்து அவசரமாக கிளம்பிவிட்டான். காரில் செல்லும்போது அவனுக்கு உள்ளூர சற்று வியப்புத்தான். ஏனோ சின்னப் பையன் போல மனதுக்குள் குதூகலம் உண்டாயிற்று. அவன் பார்த்த பெண்களில் இவளைப் போல யாரும் அவன் மனதை கவரவில்லை. ஒருவேளை மற்ற பெண்களில் இருந்து அவள் வித்தியாசமாக இருந்ததால் இருக்கலாம். கல்லூரியில் படிக்கையில் அவனை நிறைய பெண்கள் அணுகத்தான் செய்தார்கள். அப்போதும் கூட அவனுக்கு சுய தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கி இருந்தது. பொதுவாகவே பெண்களை ஆராய்ந்து பார்க்கும் பழக்கமற்றவன் அவன். முதலில் அதற்கெல்லாம் அவனுக்கு நேரம் இருக்கவில்லை. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சொந்தமாக தொழில் தொடங்க எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதத்தில் தந்தையின் நிறுவனம் நஷ்டத்தை நோக்கி சரியவும், அவர் ஸ்ட்ரோக் வந்து படுத்துவிட, மகேந்திரன் தான் பொறுப்பேற்று நிறுவனத்தை, போராடி முன்னுக்கு கொணர்ந்தான். ஆனால்
மகனின் மீது பெரிய பொறுப்பை சுமத்தி விட்ட குற்றவுணர்வில் குமைந்து நல்ல சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் பலனின்றி அவர் இறந்துவிட்டார். தொழிலை ஒருவாறு நிலைநிறுத்தி தங்கைக்கு திருமணம் செய்து வைத்துவிட்டான். அதன்பிறகும் அவன் கடுமையாக உழைத்தான். அது தவிர அவனுக்கு வேறு சிந்தனையே இருக்கவில்லை. அன்னை மங்களம், அவ்வப்போது திருமண பேச்சு எடுக்கையில் தட்டிகழித்து விடுவான். மகதியை பார்த்த பிறகு அவனுக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் உண்டானது. ஆனால் அவள் யார் என்ன என்று எதுவும் தெரியாமல் எப்படி அணுகுவது? என்ற யோசனை ஒருபுறம், உண்மையில் அவளை அவனுக்கு பிடித்திருக்கிறதா? அல்லது இது கவர்ச்சியால் உண்டான ஆசையா?? என்று குழப்பம் ஒருபுறம். ஆகவே அப்போதைக்கு அந்த எண்ணத்தை ஒதுக்கி தன் அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தினான்.
ஆனால் திடுமென அவ்வப்போது அவள் முகம் மனக்கண்ணில் தோன்றிக் கொண்டே இருந்தது. தன் வாழ்க்கை துணை அவள்தான் என்று அவனுக்கு நிச்சயமாகிப்போயிற்று. ஆனால் அவளை எங்கே என்று தேடுவது ? என்று மீண்டும் யோசனை ஓடியது. அந்த சமயத்தில் தான் இரண்டாவது முறையாக மதுரையில் அவனது தந்தை வழி உறவில் நடந்த திருமண விழா ஒன்றில் அவளை காண நேர்ந்தது. சன்னமாக ஜரிகை கரை வைத்த, ஆகாய வண்ணத்தில், கருநீல பார்டருடன் சில்க் காட்டன் சேலையும், கண்களை உருத்தாத மெல்லிய நகைகளுமாய் அன்றும், தனித்து தெரிந்தாள் அவள். மணப்பெண்ணுக்கு தோழி என்று புரிந்தது.
உறவினரோடு பேசும்போது அவனது பார்வை சென்ற திசையை கவனித்த அந்த பெரியவர், "அந்த பெண் நம்ம பாப்பா கூடத்தான் படிச்சது. ரொம்ப நல்ல பொண்ணு தம்பி. இங்கே ஹாஸ்டலில் தான் தங்கி படிச்சது. சென்னையில் அவளோட அப்பா மதனகோபால் ரெஸ்டாரென்ட் நடத்தறார். இங்கேயும் கிளை இருக்கு. மனோரமா ரெஸ்டாரென்ட் கேள்விபட்டிருப்பியே?"
" ஓ! ஆமா தெரியும், நல்ல பிரபலமான ரெஸ்டாரென்ட் அது" என்றவன் மேற்கொண்டு வேறு பேசத் தொடங்கினான். அங்கிருந்து கிளம்பும் முன் அவளறியாமல் படம் பிடித்து கொண்டான்.
ஊர் திரும்பியதும், உடனடியாக அந்த விஷயத்தை பற்றி தொடங்க முடியாமல் நிறுவனத்தில் பணிகள் காத்திருந்தது. எல்லாம் முடித்து நிமிர்ந்த பிறகு வீட்டில் சொல்லி, பெண் பார்க்கும் படலம் நிறைவேறியது. மதனகோபால் பெண்ணின் பெயர் மதுமதி என்றார்.
ஆனால் அன்று திருமண மண்டபத்தில் அவளை யாரோ மகதி என விளித்தது போல் நினைவு. ஒருவேளை அது அவளை அல்லவோ?
திருமணத்தை நிச்சயித்து விட்டபின், உண்டாகக்கூடிய திருப்தியோ சந்தோஷமோ அவனுக்கு ஏற்படவில்லை. ஏன்? புரியாமல் தவித்தான் மகேந்திரன்