போர்டிகோவில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு கூடத்தில் அமர்ந்து இருந்த சந்திரமௌலி மணியை பார்த்தார்!
உள்ளுர வியப்பும் சிறு கவலையும் உண்டாக, சோர்வாக உள்ளே வந்த பெண்ணிடம்,"என்னம்மா மது உடம்பு சரியில்லையாம்மா??" என்று பரிவுடன் கேட்டார் !
அதுவரை சிந்தனையிலேயே உழன்றிருந்தவள், சந்திரமௌலியின் கேள்வியில் நிகழ்விற்கு வந்து "ஆ..ஆமாப்பா தலைவலி ! அதான் கொஞ்சம் ஓய்வெடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்", என்றவள் பணிப்பெண்ணிடம் திரும்பி, "பௌர்ணமி ஒரு கப் காபி என் அறைக்கு கொண்டு வாங்க!"என்றவாறு மாடிக்குச் சென்றுவிட்டாள்!
இது புதிது மதுவந்தி இப்படி பேசிக் கொண்டே நில்லாமல் செல்லமாட்டாள்! தந்தையிடம் அமர்ந்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுத்தான் போவாள்! சந்திரமௌலி யோசனையில் ஆழ்ந்தார்!
மாடியில் தன்னறையினுள் நுழைந்த மதுவந்தியும் பழைய நினைவில்தான் ஆழ்ந்திருந்தாள்!
மூன்று வருடங்களுக்கு முன்பு....
மதுவந்தி சென்னையில் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்தாள்!
தந்தை மாணிக்கம் ஒரு ஜவுளிக்கடையில் கணக்கு எழுதி வரும் வருமானத்தில் குடும்ப வண்டி ஓடியது!
பெண் குழந்தையை பெற்ற கையோடு மனைவி போய்ச் சேர்ந்து விட்டாள் பதினைந்து வயது வரை அவரது தாய் பேத்தியை ஆளாக்கிவிட்டு அவரும் சென்றுவிட தந்தையும் மகளுமாக ஒருவருக்கொருவர் ஆதரவாய் வாழ்க்கை தொடர்ந்தது!
மதுவந்திக்கு படிப்பில் அதிக ஆர்வம் நல்ல மதிப்பெண்களால் உதவித் தொகை கிடைத்தது! ப்ளஸ் டூ வில் பள்ளியில் முதலாவதாக வந்தாள் ! அதன்மூலம் கல்லூரியிலும் எளிதாக இடம் கிடைத்தது! இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் மனோகரி பிறைசூடன் தம்பதியர் அவர்களது தெருவில் குடி வந்தனர்!
புதுபித்து கட்டப்பட்டிருந்த அந்த வீட்டின் அருகே தான் மதுவந்தியின் ஓட்டுவீடு இருந்தது!
அது அவர்களது சொந்தவீடு என்றும் இத்தனை வருடங்கள் பிறைசூடனின் பணி நிமித்தமாக ஊர் ஊராக மாறிக் கொண்டிருந்ததால் இந்தவீட்டை வாடகைக்கு விட்டிருந்ததாக பின்னர் ஒரு சமயம் மனோகரி சொல்லித் தெரிந்தது!
மனோகரிக்கு மதுவந்தியை பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்போயிற்று! பக்கத்தில் கோவில் எங்கே இருக்கு?, கடை எங்கே ? இப்படிப்பட்ட தேவைகளுக்காக மதுவந்தி தேவைப்பட்டாள்.
தாயில்லாத பெண்ணாக வளர்ந்ததாலோ என்னவோ தாயின் வயதை ஒத்த மனோகரியை மதுவந்திக்கும் பிடித்துப் போயிற்று! பலகாலம் பழகியது போன்ற உணர்வு உண்டாயிற்று. கல்லூரி நேரம் தவிர பெரும்பாலும் அவள் மனோகரியின் வீட்டில்தான் இருந்தாள். மனோகரியும் மகளைப் போலவே பாசம் காட்டினாள்.
பிறைசூடன் அவள் அளவிற்கு இல்லை என்றாலும் பாராமுகமாக இல்லை. இரண்டொரு வார்த்தை பேசுவார். பெண்கள் இருவரும் பேசுவதை சிறு புன்னகையுடன் பார்த்தபடி ஏதாவது படித்துக் கொண்டிருப்பார்.
மனோகரி - பிறைசூடன் தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன். பெண் திருமணமாகி மும்பையில் இருக்கிறாள்! மகள் சுமதிக்கு திருமணமாகி இரண்டு வருடமாகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது, இப்போது அந்த குறையும் கூட விரைவில் தீரப் போகிறது! மகள் உண்டாகியிருக்கிறாள். அங்கே அவளது பக்கத்துவீட்டுப் பெண்மணி தான் அவளை பார்த்துக் கொள்வதாகவும் இவர்களை சென்னைக்குப் போய் வீட்டில் பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்து விட்டு பிரசவத்தின் போது வரச் சொல்லியிருப்பதாகவும் மனோகரி தெரிவித்தாள்.
மகன் ரவீந்திரனும் அங்கேதான் தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறான். விரைவில் பணிமாற்றம் வாங்கிக் கொண்டு அவனும் சென்னை வருவதாக இருக்கிறான் !
மனோகரிக்கு கேட்க மட்டும் ஓரு காது கிடைத்து விட்டால் போதும் அந்த காது ஓட்டை ஆகிவிடும் அளவிற்கு பிள்ளைகள் புராணம் பாடிவிடுவாள்! இதை அவ்வப்போது பிறைசூடனே கேலியாய் சொல்வதுண்டு!
அன்று கல்லூரியில் கடைசி இரண்டு வகுப்பிற்கு ஆசிரியர்கள் வரவில்லை என்று வீட்டிற்கு மற்றவர்களுடன் மதுவந்தியும் கிளம்பி வந்துவிட்டாள்.
வீட்டிற்கு வந்து உடைமாற்றிவிட்டு அந்த பிற்பகல் வேளையில் மனோகரியின் வீட்டிற்குள் சென்றவளை ஆர்வமாய் வரவேற்றாள் பெரியவள்....ஏன்?