சக்தி சுந்தரம் அந்த அழகியை மண்டபத்தில் கண்டு விட்டு வீடு வந்து குளித்து சாப்பிட அமர்ந்தான். ஆனால் மனம் யோசனையில் இருந்தது. எல்லாவற்றையும் மீறி அவளது பேரழகு அவனை மிகவும் கவர்ந்தது. இதுவரை அவன் அழகிய பெண்களை பார்த்திருக்கிறான் தான், ஆனால் இவள் போல பார்த்ததில்லை.
பக்கத்து கிராமம் ரொம்ப சிறியது தான். சொல்லப் போனால் அவனுக்கு அக்கம் பக்கம் இருந்த கிராமங்களில் பெரும்பாலும் எல்லா குடும்பத்தினரும் அறிமுகமானவர்கள் தான். பெரும்பாலான மக்களின் வாழ்வாதரமே அவர்களது தோட்டத்தில் தான்.
அந்த கிராமத்தில் படித்த பெண்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். இப்போது தான் அரசாங்கத்திடம் போராடி மேல்நிலை பள்ளியே உருவாகியிருக்கிறது.
பெண்களுக்கு கல்வி அவசியம் என்று இப்போது அவன் எடுத்துச் சொல்லி ஓரளவு பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புகிறாரகள்.
அதனால் அவள் இந்த கிராமத்தை சேர்ந்த பெண்ணாக தெரியவில்லை. அவளை எப்படி கண்டுபிடிப்பது? அவனுக்கு அவளைப் பற்றி அறிந்து கொள்ளாவிட்டால் நிம்மதியாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை. சட்டென நண்பன் அன்பரசு நினைவுக்கு வந்தான். அவன் அறியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஒரு முடிவிற்கு வந்தவனாக சாப்பிட முனைந்தவனிடம்,
"மகனே, எந்தக் கோட்டையை பிடிக்க இம்பூட்டு யோசனை ? போன காரியம் என்னாச்சு?" என்றவாறு அவனது தந்தை கல்யாண சுந்தரம் வந்தமர்ந்தார்.
ஒரு கணம் அவர் எதைப் பற்றி கேட்கிறார் என்று புரியாமல் திகைத்தவன் சட்டென்று சுதாரித்து, "அதெல்லாம் நல்லபடியா முடிஞ்சது அப்பா," என்று அவசரமாக தோசையை சாப்பிட்டு கை கழுவி எழுந்தான் சக்தி.
"அட, என்ன தம்பி அடுத்த தோசை எடுத்தாரதுக்குள்ள கைய கழுவிட்டியே?" என்று அவசரமாக வந்த அன்னை அழகம்மை வருந்தினாள்.
"போதும்மா, நான் அன்பரசை பார்த்துவிட்டு அப்படியே களத்துமேட்டுக்கு போகணும். மதிய சாப்பாட்டை அங்கேயே அனுப்பிடுங்க"என்றவன் மேற்கொண்டு நில்லாமல் வெளியேறினான்.
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். "என்னடி ஆச்சு இவனுக்கு? வழக்கமா வெளியே போய் வந்தா எல்லாத்தையும் ஒப்பிச்சிட்டு தான் மறு வேலை பார்ப்பான். இன்னிக்கு ஏதோ மந்திரிச்சு விட்டாப்ல இருக்கானே?"
"ம்க்கும் இப்ப கவலைப்படுங்க , சீக்கிரமா அவனுக்கு ஒரு கண்ணாலத்தை முடிக்கலாம். ஒரு நல்ல பொண்ணை பாருங்கனு நானும் சொல்லிட்டுதான் இருக்கேன். நீங்கதான் காதுலேயே வாங்க மாட்டேங்கிறீக" என்று அங்கலாய்த்தாள்.
"ஏன்டி, நான் என்ன மாட்டேன்னா சொல்லுறேன். அவன் தான் இப்ப கல்யாணமே வேணாம்கிறானே. "நான் என்ன செய்ய? கட்டிக்கப்போறவன் அவன்தானேடி? அவனுக்கு இஷ்டமில்லைன்னா நான் ஒன்னும் பண்ண முடியாது" என்றார் சற்றே எரிச்சலுடன்.
"சரி, சரி நீங்க சாப்பிடுங்க, இருங்க முட்டை தோசை ஊத்தியிருக்கேன், கைய கழுவிடாதீக" என்று சமையல்கட்டினுள் நுழைந்தாள் அழகம்மை.
கல்யாணசுந்தரம் மேலே பேசாமல் யோசனையுடன் சாப்பிடலானார்.
☆☆☆
முன்தினம் அடுத்த கிராமத்தில் பெரியவர் ஒருவர் அவனை அழைத்திருந்தார்.
சக்தி ரசாயன உரம் பயன்படுத்துவதில்லை. முன்னோர்கள் செய்திருந்த இயற்கை உரத்தை பயன்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறான்.
ஆகவே அங்கிருப்பவர்களுக்கு அதன் செய்முறைகள் மற்றும் பயன்பாடு பற்றி விளக்கமளிக்கும்படி வேண்டியிருந்தார் அவர்.
பிற்பகலில் தான் அங்கே செல்ல நேரம் வாய்த்தது. எல்லாம் முடிந்தபின் அவன் கிளம்பும் சமயம் மழை தொடங்கிவிட்டது.
பெரியவர் அவனை ராத்தங்கியிருந்து செல்லும்படி கேட்டுக் கொள்ளவும் வேறு வழியின்றி தங்கிவிட்டு அதிகாலையில் தன் இருசக்கர வாகனத்தை கிளப்பினால் அது மழையின் காரணமாக நகர மறுத்தது.
அதனாலேயே அவன் குறுக்கு வழியில் வர நேர்ந்தது. அப்போதுதான் அவளை பார்த்தான் சக்தி சுந்தரம். மனம் காலை நிகழ்விலேயே சஞ்சரிக்க...
நேராக அவனது பால்ய நண்பன் அன்பரசனிடம் சென்றான் சக்தி.
அன்பரசன் அவனுடன் பள்ளியில் 10வது வரை படித்தான். அதற்கு மேல் படிப்பு வரவில்லை.
அதனால் தந்தையின் மளிகைக் கடையில் சேர்ந்துவிட்டான். இன்று கடையை நன்றாக நடத்தி முன்னேற்றமும் கண்டுவிட்டான்.
எந்த பொருளையும் டவுனிற்கு போய் வாங்க வேண்டிய அவசியமின்றி எல்லாமும் அவனிடமே கிடைக்கும்படி செய்தான். கொஞ்சம் கொஞ்சமாக கடையை பெரிய கடையாக மாற்றவேணும் என்று முயன்று கொண்டிருப்பவன்.
அன்பரசு பெரும்பாலும் கடையில் இருப்பதால் அவனுக்கு அந்த ஊரில் இருக்கும் பெரும்பாலான பெண்களை அறிந்து வைத்திருந்தான்.
அத்தை, சித்தி, பாட்டி, என்று அநேகமாய் உறவுக்காரர்கள் தான் அதிகம். வெளியூரில் இருந்து மணமுடித்து வரும் பெண்கள் அவன் கடைக்கு வரத் தவறுவதில்லை. அதனால் அவனுக்கு தெரிந்திருக்கும் என்று சக்தி நம்பினான்.
பக்கத்து கிராமத்தினர் இந்த கிராமத்தை கடந்துதான் எந்த ஊருக்கும் சென்றாக வேண்டும்.
ஆக,அன்பரசு கண்ணுக்கு அவள் தப்ப வழியில்லை எண்ணியவாறு கடையை அடைந்தான்
" அடடே, என்னப்பா சக்தி அதிசயமா இந்தப்பக்கம்? என்று அன்பரசு வரவேற்றான்.
சக்திக்கு பதில் கிடைக்குமா