Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

01. கா.நீ! கா.நா!

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
நெல்லைச் சீமையிலே அது ஒரு சிறு விவசாய கிராமம். பருவம் தப்பாமல் அந்த ஆண்டு பெய்து கொண்டிருந்த மழையால் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அதன் விளைவாக திரும்பிய பக்கமெல்லாம் பசுமை கண்களை குளிர்வித்தது....

நிரஞ்சனா, அதிகாலை பனியையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் துணிகளை துவைத்து, குளித்துவிட்டு அருகில் இருந்த பாழடைந்த மண்டபத்தில் அவசரமாய் உடைகளை அணிந்து முடித்த போது வெளியே தூறல் ஆரம்பித்து விட்டது.

அதே சமயம் யாரோ ஓடி வந்து மண்டபத்தில் நுழைவதை கண்டவள் சட்டென்று ஒரு தூணின் பின்னால் மறைந்து, யார் என்று அறிய எட்டிப் பார்த்தாள். அந்த உருவத்தைக் கொண்டே அந்த ஊரின் பெரும்பாலான நிலபுலன்களுக்கு சொந்தக்காரரான கல்யாண சுந்தரத்தின் மகன் சக்தி சுந்தரம் என்று புரிய மனம் லேசாய் படபடத்தது.

அந்த மண்டபம் இரண்டு கிராமத்தின் நடுவே எல்லையில் ஆற்றங்கரையில் இருந்தது.

அகன்ற தூண்களுடன் பராமரிப்பு இன்றி ஆங்காங்கே செடி கொடிகளால் சூழப்பட்டு இருந்தது.

கூடவே ஆலமரம் ஒன்று அந்த மண்டபத்தை அரவணைத்தாற் போல தன் விழுதுகளால் மறைப்பு அமைந்திருந்தது. அதனாலேயே தயக்கமின்றி உடை மாற்ற அந்த இடத்தை அவள் தேர்வு செய்திருந்தாள்.

கைக்குட்டையால் முகத்தை துடைத்தவாறு வெளிப்புறம் பார்த்தவனின் நாசியில் சந்தன சோப்பின் நறுமணம் நுழைய வியப்பு எழுந்தது.

இந்த ஆளரவமில்லாத இடத்திற்கு பகலில் கூட யாரும் தனியே வரத் தயங்குவார்கள்.

அதுவும் இந்த அகால வேளையில் யார் வரக்கூடும்? யோசனையாய் மண்டபத்தில் பார்வையை ஓட்டினான்.

அதற்குள்ளாக ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்க, தன்னிடம் இருந்த சிறு டார்ச்சை உயிர்பித்தவாறு அந்த தூணை நோக்கி விரைந்தான் சக்தி.

எப்போதும் நிரஞ்சனா மண்டபத்தின் உட்புறம் சென்றதே இல்லை. இன்றைக்கு வேறு வழியின்றி சென்றவள், மேலிருந்து ஆலம் விழுது ஒன்று காற்றில் அசைந்ததும் அது பாம்பு என்று எண்ணி அரண்டு அலறி மயங்கி விழுந்தாள்.

சக்தி டார்ச் ஒளியில் மயங்கிய நிலையில் இருந்தவளைப் பார்த்து ஒருகணம் பிரமித்துப் போனான்.

எந்த ஒப்பனையுமின்றி பேரழகியாக தோன்றினாள். சட்டென்று சுதாரித்து ஒடிச்சென்று மழை நீரை கையில் பிடித்து வந்து அவள் முகத்தில் தெளித்தான்.

மெள்ளக் கண்விழித்தவள் சக்தியை அருகே காணவும் வாரிச்சுருட்டியபடி எழுந்தவள் துவைத்த துணிகளை அள்ளிக் கொண்டு கண்சிமிட்டும் நேரத்தில் அங்கிருந்து ஒடி மறைந்தாள் நிரஞ்சனா.

சில கணங்கள் ஒன்றும் புரியாமல் திகைத்துப்போய் நின்றான் சக்தி சுந்தரம்.

எங்கோ இடி ஒன்று திடுமென முழங்க நிகழ்விற்கு வந்தவன் தலையை உலுக்கிக் கொண்டான்.

யார் இவள்? இந்த நேரத்தில் இத்தனை தைரியமாய் இங்கே குளிக்க வந்திருக்கிறாள்.

பகலில் கூட யாரும் இங்கே அதுவும் பெண்கள் வருவதில்லை.

மண்டபத்திற்கு அப்பால் அடர்ந்த காடு தொடங்குகிறது. அதற்குள் சுள்ளி பொருக்க பெண்கள் மாற்று வழியில் தான் செல்வார்கள்.

காட்டின் ஊடாகத்தான் அந்த ஆறு அவர்களது கிராமத்திற்கு வருகிறது. சில நேரத்தில் காட்டு மிருகங்கள் கூட வரும் என்பதால் பாதுகாப்பான இடமில்லை.

அப்படி இருக்க எப்படி அந்தப் பெண் இங்கே வந்தாள்? ஊருக்குப் புதிதாக வந்தவள் என்றாலும் வர தயங்குவாள்.

நன்கு இந்த இடத்தைப் பற்றி அறிந்தவள் கூட வர பயப்படுவாள். ஆனால் இவளோ வெகு துணிச்சலாக அதுவும் இருள் விலகாத அதிகாலையில் வருகிறாள் என்றால் இது அவளுக்கு தினசரி வழக்கமாகத்தான் அவனுக்கு தோன்றியது. அது எப்படி சாத்தியம்??

வெளியே மழையின் தாக்கம் குறைய யோசனையுடன் அந்தப் பெண் ஓடிய பாதையில் இறங்கி நடக்கலானான்..

அது ஆற்றோரமாய் அவனது கிராமத்திற்கு செல்லும் குறுக்கு வழி...மண்டபத்தை அடுத்து மண்டிக்கிடந்த புதர்கள் காரணமாக.. பெரும்பாலும் அதை யாரும் உபயோகிப்பது கிடையாது... அவள் மட்டும் எப்படி ??

வழிநெடுகிலும் சிந்தனை அலைக்கழிக்க.. கதிரவன் இருளை விலக்கி வெளிச்சத்தை பரவ விட....வீட்டை நோக்கி நடையை எட்டி போட்டான் சக்தி சுந்தரம்.
 

Attachments

  • FB_IMG_1685123904600.jpg
    FB_IMG_1685123904600.jpg
    60.7 KB · Views: 0
Back
Top